Monday 2 January 2012

Online - இல் மாவட்ட கலெக்டரிடம் புகார்

 
தினமும்  நாம் - குடிநீர், சாலை, மின்சாரம், குப்பைகள் என்று - பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.  மேலே குறிப்பிட்டவற்றை விடவும்  அதிகமான பொது பிரச்சினைகள்  இருப்பதை யாராலும்  மறுக்கவியலாது!

வார்டு கவுன்சிலர், அதிகாரிகள் என்று  பிரச்சினைகள் பற்றி எடுத்து சொல்லியும், எவ்வித  முன்னேற்றமுமில்லாமல்  சலித்துத்தான் போய் இருக்கும்.  செல்வாக்கு மிக்கவர்கள் கூட தம் சொந்த பிரச்சினைகளைகளுக்காக அதிகாரிகளுக்கு (அன்பளிப்பாக?)  பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்ளும் காலமிது! ஆனால், ஒரு சாமானிய மனிதனால் இதுபோல் எளிதாக சாதிக்க முடியுமா? 
ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் அந்த மாவட்டத்தின்  கலெக்டர் தான் முதன்மையானவர்.  அவரை நேரடியாக சந்தித்து நம்முடைய புகாரை கொடுக்கலாம்; ஆனால், அதற்கு கால விரயம், அலைச்சல் என்று படாத பாடு பட வேண்டும். இவற்றுகெல்லாம் அஞ்சியே பெரும்பாலானவர்கள் பிரச்சினைகளை கண்டும், காணாததுபோல் இருந்துவிடுகின்றனர்.

தற்பொழுது நம் தமிழக அரசு Online மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது..

அந்த வசதியை கீழே உள்ள link -லிருந்து பெறலாம்.
http://onlinegdp.tn.nic.in/indexe.php
(இதில் தமிழ் மற்றும்  English version உள்ளது)

இதிலிருந்து ...
"இணைய வழி கோரிக்கை பதிவு நடைமுறைப்படுத்தியுள்ள மாவட்டங்கள்" (தற்போதைக்கு 32 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன) என்பதிற்கு கீழே "தேர்வு செய்க" என்பதை  Click செய்து, தேவைப்பட்ட மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும். இப்போது திறக்கும் Window -வில், தேர்ந்தெடுத்த மாவட்டத்தின் மின் அஞ்சல் முகவரி மற்றும்  இணையதள முகவரியும் காணப்படும்.

இதே Window -வில் காணப்படும், "கோரிக்கை பதிவு" என்பதை Click செய்ய,  கோரிக்கை பதிவிற்கான Application திறக்கும்.
இந்த Application - ஐ, உண்மையான விவரங்களை கொண்டு (போலி விவரங்கள் வேண்டாமே!) பூர்த்தி செய்து அனுப்ப,  அந்த கோரிக்கைக்கு ஒரு எண் கொடுப்பார்கள். அந்த எண்ணை  'கோரிக்கை நிலவரம்' பகுதியில் உள்ளீடு செய்வதின்  மூலம் அந்த கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை அறியலாம்.
கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்னும் பட்சத்தில் அந்த கோரிக்கை எண்ணை  வைத்து நீதிமன்றங்களிலும்    மேல்முறையீடு செய்யலாம். 

No comments: