25GB இலவசம்: WINDOWS SKY DRIVE
Computer -ரில் உள்ள File -களை பாதுகாத்து வைப்பதில் பலருக்கும்- பயம் தான்; நம்பகத் தன்மையும் இருப்பதில்லை. காரணம் - Computer Crash, Virus போன்ற பல பிரச்சினைகளினால் முக்கிய File - களை பாதுகாப்பாக வைப்பதில் கூட சிக்கல் தான்! ஆக பாதுகாப்பாக எப்படி வைக்கலாம் என்பதற்கு தீர்வாக சொல்லப்படும் முறை - Cloud Computing (மேக
கணிணியகம்) என்பதாகும். இந்த முறையில் உதவக் கூடியது தான் இணையத்தில்
சேமித்து வைப்பது (Online Storage).
சேமித்து வைக்க பல தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் திருவாளர் Microsoft வழங்கும் சேவை அபரிதமானது! ஆம், Windows Live Skydrive என்ற இந்த சேவை, மற்ற சேவைகளை விட,
பாதுகாப்புடனும் வேகம் கூடியதாகவும் இருப்பதோடு, 25 GB இலவசமாக சேமித்துக்கொள்ளவும் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் தரவில்லை
என்பதும் கவனிக்க தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற
தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப் பட்டிருப்பதால் File -களைத் தரவேற்றுவது,
பார்வையிடுவது போன்றவைகள் சிறப்பாக உள்ளது.
E mail, Live Messenger போன்ற சேவைகளை ஒரே நேரத்தில் உபயோகிக்கலாம் என்பதோடு SkyDrive மூலமாகவும் Computer -ரில் உள்ள file -களை தரவேற்றி Back up செய்து கொள்ளலாம்.
இதைப்
பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி இருக்க
வேண்டும். இல்லாவிட்டால் Signup செய்து புதிதாக மின்னஞ்சலை உருவாக்கிக்
கொள்ளவேண்டும். Hot Mail முகவரியை உபயோகித்து Skydrive.live.com
தளத்தில் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Files, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும்.
Files என்பதில் File -களையும் Photos பிரிவில்
புகைப்படங்களையும் (ஆல்பங்களாக) ஏற்றி வைக்கலாம். மேலும்
Word, Excel, Powerpoint, மற்றும் Access போன்றவைகளையும், புதிய Folder -களையும்
உருவாக்கம் செய்யலாம்.
Profile என்பதில், ஏற்றி வைக்கும் File -களை பாதுகாப்பதற்கான
அமைப்புகளை எளிதில் செய்யலாம்.
Public, Private, Limited போன்ற மூன்று
வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து பைல்களை மற்றவர்கள்
பார்க்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கலாம்.
File -களை குறிப்பிட்ட
நண்பர்களுக்கு மட்டும் Share செய்யவும் முடியும்.
Microsoft -ன் இலவசமான நல்ல சேவை இது!
இணையதளம் : http://skydrive.live.com
25 ஜிபி மட்டும்தானா?! என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு புதிய மின்னஞ்சலை உருவாக்கி கொள்ளுங்களேன்!
No comments:
Post a Comment