Saturday 14 January 2012

Folder -ஐ Task Bar -ல் எப்படி இணைக்கலாம்?

பணியின் காரணமாக, குறிப்பிட்ட ஒரு  Folder -ஐ அடிக்கடி திறந்து  பயன்படுத்த வேண்டி வரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த Folder உள்ள இடத்துக்கு (உதாரணமாக My Computer)   அடிக்கடி சென்று, அந்த   Folder -ஐ தேடி, திறப்பது சற்று கடினமாகவே  இருக்கும். 

அப்படி, அடிக்கடி தேவைப்படுகின்ற Folder-ஐ Task Bar-ல் இணைத்துவிட்டால், அந்த Folder-ஐ பயன்படுத்துவது சுலபமாகி விடும்! 
           
சரி! அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒரு Folder -ஐ Task Bar -ல் எப்படி இணைக்கலாம்? 

Task Bar  -ரின் மேல்  Right Click செய்து Toolbars -ஐ select செய்தபின், அதிலிருந்து  New Toolbar... -ஐ  select செய்ய - ஒரு Window திறக்கும். அந்த Window -வில் எந்த Folder -ஐ Task Bar-ல் இணைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து, OK கொடுக்க, Task Bar -ன் வலது பக்கத்தில் அந்த Folder  இப்போது இணைக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்தே தேவையான File -களை திறந்து வேலைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.

இதை நீக்க வேண்டுமெனில்,  Task Bar  -ரின் மேல் மீண்டும்  Right Click செய்து Toolbars -ஐ தேர்ந்தெடுத்து  அந்த Folder -ரின் அருகிலிருக்கும் Tick - குறியை நீக்கிவிட்டால் அந்த  Folder போயே போய்விடும்!

No comments: