Showing posts with label சுகாதாரம். Show all posts
Showing posts with label சுகாதாரம். Show all posts

Thursday, 31 May 2012

காளான் பிரியரா நீங்க! உஷாரா இருங்க!!




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.


பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.


இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.


மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.


உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.

மாரடைப்பு ஆபத்து

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.


இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.


ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்.

நன்றி: தினகரன்
Engr.Sulthan

Thursday, 5 January 2012

"ஈ" ...... என்னும் நோய் பரப்பி

"ஈ" ...... என்னும் நோய் பரப்பி
ன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள்.  பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும்  அருவெறுப்பு தான்  தோன்றும்.  ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும்உண்ணும் உணவுகளின்  மீதும் உட்காருவது தான்.  ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே.  அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ  குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள், கோழிப்பண்ணைமாட்டுப்பண்ணைமலஜல கழிப்பறை, சுகாதாரம் குறைந்த  குப்பைத்தொட்டிகள்  போன்ற இடங்களில் மிகவசதியாக வாழ்கின்றன.

பெண் ஈ, ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடுமாம்.
ஈக்கள், கொசுக்களைப் போல் நம் இரத்தத்தில் கலக்கக்கூடிய கொடிய நோய்க்கிருமிகளை சுமந்துக்கொண்டு அலைவதில்லை என்றாலும், உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்குமதி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன என்பதே உண்மை!



ஈக்களின் ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன.  இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான, பிசின் போன்ற, ஒரு அமைப்பு உள்ளது.  இந்த பிசின்ஒருவித பசை பொருளாகும்.  கழிவுகளின் மீது, ஈக்கள், உட்காரும்போது கழிவுகளிலுள்ள பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கின்றன.  ஈ, மீண்டும் நம் மீதோ அல்லது உணவின்  மீதோ உட்காரும்போது அந்த பாக்டீரியாக்கள் வெகுஎளிதில் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன.  

pnonazim.blogspot.com
இதன் விளைவால்  வயிற்றுப்போக்குகுடற்புழுஉடல் நமைச்சல்தோல் எரிச்சல்வயிற்றுப்புண்டைபாய்டுதொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் நம்மை தாக்குகின்றன. 'நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல' என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.

தற்போது தமிழகத்தில் நாமக்கல்சேலம்ஈரோடுகரூர் மாவட்டங்களிலும்கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேற்குறிப்பிட்ட இடங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு ஈக்களின் பெருக்கமும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது.  மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் விற்கப்படும்  இடங்களிலும் ஈக்களின் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.

இப்படி பல வகைகளில் தொல்லைகொடுக்கும் ஈக்களிடமிருந்து நம்மையும், நாம் வாழும் சுற்றுசூழலையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது:
-- அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருத்தல்.
-- அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, கிடங்குகளில் தூய்மையை பேணுதல்.
-- வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை தினமும் அகற்றுதல்.
-- உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருளையும் திறந்து வைப்பதை முற்றிலும் தவிர்த்தல்.
-- வீடுகளில் குப்பைகளை சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்தி விடுதல்.
--கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. (இதனால் ஈக்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அழிக்கலாம்).
-- ஈக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தால், மஞ்சள் தூளை நீரில் கரைத்து  அவைகள்  அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால்ஈக்கள் உள்ளே வருவதை தவிர்ப்பதோடு, தொந்திரவிலிருந்தும் சற்று நிம்மதி பெறலாம்.