Source: http://pinnoottavaathi.blogspot.com/2012/01/blogger.html
Well done, Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!
பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!
புத்தாண்டு தினத்தன்று கர்நாடகா-பீஜப்பூர் மாவட்டம், சிந்தகி என்ற ஊரில் அரசு வட்டாட்சியார் அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் உள்ள ஒரு வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருக்க... உடனே, அந்த ஊரில் பதட்டம்..!
பிஜேபி, ஸ்ரீ ராம் சேனை உட்பட்ட தடை செய்யப்படவேண்டிய அனைத்து
RSS-சங்பரிவாரங்களின் ஆதரவோடு... கடைய(உ)டைப்பு, கட்டுப்பாடற்ற ஊர்வலம்,
விஷமகோஷம், வன்முறை முழக்கம், வெறியாட்டம், தீவைத்தல், வாகனங்களை
சேதப்படுத்துதல், சாலை மறியல், தர்ணா, போக்குவரத்து நிறுத்தம், பள்ளி
கல்லூரி கட்டாய விடுமுறை, அலுவலகம் மூடல், அப்பாவி மக்கள் அவதியுறல்,
மாமூல் வாழ்க்கை பாதிப்பு, கலவரம், லத்தி சார்ஜ், பந்த்... எல்லாமே
ஜெகஜ்ஜோதியாக அடுத்தடுத்து திட்டமிட்டபடி மக்கள் விரோத செயல்கள் அரங்கேறின.
பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வழக்கம்போலவே முஸ்லிம்கள் இவர்களால்
'சந்தேகிக்கப்பட்டு'(?) தூற்றப்பட்டனர். உடனே கொடி ஏற்றியவர்களை கைது செய்ய
கலவரக்காரர்களால் காவல் துறையினரிடம் கோரப்பட்டது..!!!
ஆனால், கயவர்களை கண்டுபிடித்து... கைது செய்தவுடன், அவர்களிடம் பேச்சு
மூச்சை காணவில்லை..! அதுவரை அப்படி குதித்தவர்கள் அடங்கிப்போய் ஓடி ஒளிந்து
உட்கார்ந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, "நான் இல்லை நீதான்..."
"...இல்லை ...இல்லை ...நீ தான்..!" "உனக்கும் எனக்கும் சம்பந்தமே
இல்லையே..!" "நீ யார்..?" என்று நேற்றுவரை ஒன்றாக இருந்து கத்தியவர்கள்...
தமக்குள் இன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..!
'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!
'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!
இதற்கு முன் இரண்டு பிளாஷ்பேக்ஸ் பார்த்து விடுவோம்..!
பிளாஷ்பேக் -1 : P.கண்ணப்பன்..!
தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில், தலைப்புச் செய்தியில் "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" கைது செய்யப் பட்டிருக்க, அந்த வழக்கை தன் கையில் எடுத்து... திறம்பட துப்பறிந்து... "தங்கள் அலுவலகத்தில் தாங்களே வெடி குண்டு வைத்துக் கொண்டார்கள், இந்த RSS பயங்கரவாதிகள்" என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த அன்றைய திருநெல்வேலி DIG (பின்னர், மதுரையில் IG) P.கண்ணப்பன் IPS மற்றும் அவருடைய டீமை தமிழ் முஸ்லிம்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. "முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்" என்ற புனையப்பட்ட அவப்பெயரை முதலில் நீக்கியவர். ஆனாலும், இந்திய ஊடகங்கள் இதை துணுக்குச் செய்தியாகக்கூட பகிராமல் மறைத்தன.!
பிளாஷ்பேக் -2 : ஹேமந்த் கார்கரே..!
இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவரை தெரியாமலோ, தெரிந்தோர் மறந்து போயிருக்கவோ வாய்ப்பே இல்லை..! நான் உட்பட இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து தனக்கான குடி யுரிமையுடன் ஜம்பமாக பயங்கரவாதத்தை எதிர்த்து அவைகளுக்கு தடைகோரி பதிவில் எழுத- பொது வெளியில் பேச- முடிகிறது என்றால்... பற்பல குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" சந்தேகத்தின் பேரில் தலைப்புச் செய்தியில் கைது செய்யப் பட்டிருந்தும், அனுதினமும் வந்த காவிகளின் கொலை மிரட்டல்களை பொருட் படுத்தாது அந்த வழக்குகளில் உண்மையை வெளிக் கொணர்ந்த இவரின் நேர்மையான உயிர்க்கு அஞ்சா உழைப்பே காரணம். இவரை நம் நாட்டிற்கு சரியான நேரத்தில் ஈந்த இறைவனுக்கே புகழனைத்தும்.இவர்கள் போல இன்னும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நம் நாட்டிற்கு தரச்சொல்லி, இத்தளத்தில் முன்பொரு பதிவில் இறைவனிடம் நாம் பிரார்த்தித்து உள்ளோம் சகோ..! இவர்கள் போல கர்நாடகா-பீஜப்பூர் சம்பவத்தில் இன்னும் சிலரை காண்கிறோம்.
.
இந்த பாகிஸ்தானிய கொடியேற்று சம்பவம் நடந்த நான்காவது நாள் அதிகாலை (வெறும் மூனே நாள்தான் துப்பு துலக்கல்) "ஹிந்துத்துவ-RSS-சங்பரிவார கும்பலில் ஒன்றான 'ஸ்ரீ ராம் சேனா' வினர்தான் குற்றவாளிகள்" என்று கண்டு பிடிக்கப்பட்டது... நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை அல்லவா..?!
இதை நிகழ்த்தியவர்கள் பற்றி... இவர்களை ஃபோகஸ் பண்ணி பாராட்டி,
தட்டிக்கொடுத்து புகழ்ந்து பேச, ஃபோட்டோ போட்டு எழுத ஏனோ கிட்டத்தட்ட
எவருமே முன்வர வில்லை..! அதனால் என்ன..? நாம் எதற்கு பிளாக் வைத்து
இருக்கிறோம்..? தனிப்பதிவு போட்டு பாராட்டுவோம்..! போதாக்குறைக்கு அவர்
ஒரு பதிவர் (Blogger) வேறு..! விட்டு விடுவோமா..?
மங்களூர் பஃப் மற்றும் காதலர் தின தாக்குதலுக்கு பெயர்போன 'ஸ்ரீ ராம்
சேனா'வின் மாணவர் அணி தலைவனான Rakesh Siddaramiah Mutt (19) என்பவனும்,
அவனோடு படிக்கும் அவ்வமைப்பின் கல்லூரி மாணவர்கள் Sunil Madiwalappa (18),
Anil Kumar (18), Parashuram Ashok (20), Rohit Eshwar (18), Mallanagouda
Vijaykumar (18) 5 பேரும் ( இதில் ஈடுபட்ட Arun Vaghmore (20) என்பவன்
தப்பிவிட்டான்... தேடப்படும் இவன் மட்டும் இன்னும் பிடிபட
வில்லை)....மொத்தம் ஏழு பேர் சேர்ந்து... இரவில் அங்கே கொடியை ஏற்றிவிட்டு
காலையில் வந்து நல்லவர்கள் போல கொடியை ஏற்றியவர்களை உடனே கண்டுபிடித்து
கைது செய்யக்கோரி கோஷம்போட்டு பாகிஸ்தான் கொடியை எரித்து கலவரம் செய்து
இருக்கின்றனர்..!
முதலில் அந்த ஜனவரி 1 இரவில் அந்த அலுவலக வளாகத்தில் இரவு அரைமணி நேரம்
(3:30-4:00) ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததுதான்
முதல் துப்பு. அதை கண்ட ஐ விட்னஸ் சொன்ன தகவலின்படி... அந்த வாகனத்துக்கு
சொந்தக்காரனை, வேறொரு இடத்தில் பார்த்த அந்த ஐ விட்னஸ் அவனை அடையாளம்
காட்ட... அவனை அணுகி விசாரிக்கும் போது தெரியவந்தது என்னவெனில்... பைக்
சொந்தக்காரனான இவனும் இவன் நண்பனும் பிஜப்பூரில் புத்தாண்டு இரவு
கொண்டாட்டங்கள் முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது தம் நண்பர்களை அந்த
அரசு அலுவலக வளாகத்தில் சந்தித்ததாக தெரிவித்தனர். கூடவே அவர்கள் செய்த
காரியமும் இவர்கள் மூலம் வெளிவந்து விட்டது. இவர்களின் மூலம் மற்ற
நண்பர்கள் கண்டறிந்து சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். தப்பிவிட்ட ஒருவன்
மட்டும் இன்னும் சிக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட
பாகிஸ்தான் கொடி சுனில் வீட்டில் தான் செய்யப்பட்டுள்ளது என்பது
விசாரணையில் தெரிய வந்துள்ளது..! புதன்கிழமை, ஜனவரி 4 ம் தேதி அதிகாலை மற்ற
அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பொதுவாக முஜாகிதீன், சிமி, தொய்பா, கொய்தா என்று அனானி ஈமெயிலை ஆதாரமாக
குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் 'தடா பொடா' என்று கைது
செய்யப்படுபவர்கள் கூட, தங்கள் முகங்களை கைகளால் மறைக்க இயலாதவாறு பின்னால்
கட்டப்பட்டு செய்தியாளர்களிடம் முகம் நிமிண்டி காட்டப்படுவது நாம்
அறிந்ததே..!
பாக்.கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனாவின் 'பர்தா' அணிந்த கேடிகள் |
ஆனால், இங்கே... சாட்சி, ஆதாரத்துடன் அகப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட
பின்னரும் கூட... இவர்களுக்கு முகத்தை மறைக்க பிரான்ஸ் நாட்டில் தடை
செய்யப்பட்ட முகம் மறைக்கும் புருகா-நிகாப் சலுகைகள் எல்லாம்
தரப்பட்டுள்ளன..! சபாஷ்..! இந்த "புதிய மாற்றத்தை" நாம் வரவேற்போம்.
அதேநேரம்... நாளை ஒருநாள்... 'குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்பளித்த
பின்னராவது இவர்களின் முகத்தை "நடுநிலை(?) ஊடகங்கள்" நமக்கு காட்டுவார்கள்
என்று நம்புவோம்..!
"ஒரு பக்கம், நாங்கள் குற்றவாளிகள் அல்ல... RSS தான் குற்றவாளி" என்று
கூறும் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கிற்கு கொடுக்கப்படும்
முக்கியத்துவம் கூடவா இந்த உண்மையை கண்டுபிடித்த சாதனையாளர்களுக்கு
இல்லை..? அவனுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அத்தனை ஃபோட்டோக்கள் கூகுளில்
உள்ளன..! ஹேமந்த் கார்கரேவின் வாரிசுகளான இவர்களுக்கு ஒரே ஒரு போட்டோ
எடுப்பதற்குள்...அப்பப்பா 2 நாளாக நான் பட்ட பாடு..! அவர்கள் ஒருவரல்ல
சகோ..! 5 பேர் கொண்ட டீம்..! இந்த ஐந்து பேரில், அதன் டீம் தலைவர்தான் சாதனையாளரான நம் பதிவர்..! கடைசியில், அவரின் ப்ளாக் ப்ரோஃபைல் போட்டாதான் எனக்கு கிடைத்தது..! நியூசில் அல்ல..!
(பிற்சேர்க்கை) மேலேயுள்ள ப்ளாக் ப்ரோஃபைல் லிங்க் இதுதான்....
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/
இவர்தான் ஒரு "special investigation team" ஒன்றை தன்னுடைய DSP - முத்துராஜ் தலைமையில் உடனடியாக ஏற்படுத்தி... அதில் DCIB Police Inspector சித்தேஷ்வர், CPI
சிதம்பர் மற்றும் PSI பாபகவுடா படில் ஆகியோரை இணைத்தார். இவர்கள்தான் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி கலவரத்தையும் கட்டுப்படுத்தி, பந்தையும் அமைதியாக நடக்க அனுமதித்து, இதன் மூலம் முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர்.
நம் நாட்டில் இவரை/இவர் டீமை எவரும் கண்டு
கொள்ளா விட்டாலும் கூட... தான் உண்டாக்கிய தன் டீமுக்கு தானே ரூ.10,000
வெகுமதி வழங்கி கவுரவித்தும் உள்ளார்.
நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..!
நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..!
Well done, Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!
No comments:
Post a Comment