Friday, 20 January 2012

உறைந்து போகின்றதா இணைய தளம்?



பார்த்துக்கொண்டு இருக்கின்ற இணைய தளம்  சில சமயங்களில், உறைந்துபோனதுபோல், அப்படியே நின்றுவிடும்; அதற்கான Error செய்தியை, சில சமயங்களில், காட்டும். பல வேளைகளில் எதுவும் காட்டாமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைபாட்டுக்கு பல காரணங்களை சொல்லலாம்.

1. Session Expired: பார்த்துக்கொண்டு இருக்கும் தளத்தை சில நேரங்களில் அப்படியே விட்டு விட்டு, சற்று நேரம் கழித்து வந்து பார்க்கின்ற போது Session Expired என்ற செய்தியை  திரையில் காணலாம். 

இணையதளத்தை எவ்வித செயல்பாடுமின்றி திறந்து வைத்திருந்தால், குறிப்பிட்ட நிமிடங்களில், தானாகவே மூடிக்கொள்ளும்படி அத்தளத்தை தயாரித்தவர்கள் வடிவமைத்திருப்பதே இதற்கு காரணம்.

இன்னும், முறையாக பதிவு செய்யாதவர்களை சில தளங்கள் சொற்ப நிமிடங்களே பார்க்க அனுமதிக்கும்; குறிப்பிட்ட அந்த நேரம் முடிவுக்கு வரும்போது தளம் தானாகவே மூடப்பட்டு  “Session Expired” செய்தியை காட்டும். இதற்கும் தளவடிவமைப்பே காரணம்.

மேலும், செயற்பாட்டில் இருந்துவரும் Computer -ரின் பின்புலத்தில் சில தளங்கள் அவற்றை சார்ந்த Program -களை எப்பொழுதும் இயக்கிய வண்ணமிருக்கும். அச்சமயம், அந்த Computer -ரின் நேரம், தேதி மற்றும் நாள் இவைகளில்  ஏதும் மாற்றம்/தவறு இருந்தாலும்  “Session Expired” செய்தியை  திரையில் காட்டும்.

2. Cookies: சில தளங்களுக்கான  Cookies (குறுந்தகவல் தொகுப்பு)-களை அனுமதித்தால் தான், மீண்டும் அந்த தளங்களை திறக்கும் போது (முன்னமேயே அனுமதித்திருந்த Cookies உதவியால் செயற்பாட்டிலுள்ள, computer -ரின் விவரங்களை அந்த தளம் அறிந்துக்கொண்டு தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும். இல்லையென்றால் சில நிமிடங்களில் அந்த தளம் தானாகவே மூடப்பட்டு விடும். 
எனவே, Cookies பெறுவதை Internet Explorer -ஐ உபயோகித்தால் :  
Tools > Options > Privacy .... then choose Default ... என்ற முறையில் சென்று, அனுமதிப்பதால்  தொடர்ந்து அத்தளத்தை பார்க்கவும் செய்யலாம்.



3. Firewall: இது ஒரு பாதுகாப்பு வளையம். இணைய தளங்களை பாகுபாடு செய்து, நல்ல தளங்களை பார்க்க அனுமதிப்பதே இதன் நோக்கம். எத்தனையோ தீயதளங்கள் மூலம் System Infection -ஆக வாய்ப்புள்ளதால் அவ்வகையான தளங்களை பார்க்க அனுமதிக்காது. ஒரு வகையில் இது நல்லதுதான் என்றாலும்,  சில நல்ல தளங்களையும் தீயதாக அனுமானம் செய்துக்கொண்டு அத்தளங்களையும் பார்க்க விடாமல் தன்னிச்சையாக அத்தளங்களை மூடி விடும். ஆக இவ்வகையான தளங்களையும் பார்க்கவேண்டுமெனில், Firewall Setting -இல், பார்க்க அனுமதிக்கும் படியாக,  மாற்றம் செய்தாக வேண்டும். 

4. Other Problems: மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சினைக்கும் உட்படாமல், பார்த்துக்கொண்டு இருக்கும்  குறிப்பிட்ட ஒரு இணைய  தளத்திற்கு மட்டும்   Session Expired என்று திரை காட்டுகிறது என்றால், பிரச்சினை அந்த தளத்தில் தான் என்று பொருள் கொள்ள வேண்டும். 

ஆம்! இதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம்:
- குறிப்பிட அந்த தளத்தை புதுப்பிப்பதற்காக நிறுத்தி வைத்திருக்கலாம்; 
- அத்தளத்தை ஏற்றிருக்கும் Server -ரில் ஏதும் பிரச்சினை இருக்கலாம்.

ஆக, Session Expired என்பது  இணைய தளம் மற்றும் அத்தளத்தை ஏற்றிருக்கும் Server -சார்ந்த பிரச்சினையே தவிர, Computer -ரின் Settings, Cookies, Firewall போன்றவற்றை ஏதுசெய்தாலும், எதுவும்  ஆகப்போவதில்லை! இந்த மாதிரியான சமயங்களில் சில நிமிடங்கள் பொறுமை காத்து மீண்டும் முயற்சிப்பதே  சிறந்த வழியாகும்.

2 comments:

Anonymous said...

thanks for this post

kaja nazimudeen said...

Thanks for your support Mr. Anonyous.