Friday, 27 January 2012

பிரபல்யமாகாத Browser -கள்


பெரும்பாலானவர்கள் Internet Explorer -க்கு அடுத்து Fire Fox, Chrome, Opera, Safari போன்றவைகள் தாம்  Internet உலகின் Browsing ஜாம்பவான்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால்,  உண்மை அதுவல்ல; இன்னும் பல  Browser -கள், மேற்சொன்னவற்றை விட, பல விஷயங்களில் மிக நேர்த்தியாக  செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன  என்பதே உண்மை.
அந்த வரிசையில் ....

1. Arora:
Open Source Program  -வகையை சேர்ந்த இது, Windows, Mac, Linux, FreeBSD, Haiku போன்ற  OS -களில் இயங்கக்கூடியது. Chrome தொழில் நுட்பத்தில் செயல்படுகின்ற இதனை, Google -க்கு  ஒரு மாற்று என்றே குறிப்பிடலாம். Blocking Pop Up Ad, Private Browsing போன்ற பல அடிப்படை வசதிகளை தருவதோடு கீழ் காணும் சிறப்பம்சங்களையும் இலகுவாக அளிக்கின்றது.
இலவசமும் கூட!
  • very fast startup
  • integration with desktop environments
  • smart location bar
  • session management
  • privacy mode
  • flexible search engine management
  • Click To Flash plugin
  • download manager
  • Web Inspector, a set of tools for web developers
  • 30 translations
Arora -பற்றி அதன் Screen Shot முகவரி மூலம் மேலும் அறியலாம். 
http://code.google.com/p/arora/wiki/Screenshots


2. Camino:  
Mac OS -ல்  மட்டுமே இயங்குகின்ற இதுவும்  Open Source Program  -வகையை சேர்ந்ததே.  Gecko தொழில் நுட்பத்தில் செயல்படுகின்ற   இது, Mac Platform -ல் இயங்கும் அனைத்து Browser -களுக்கும் ஒரு மாற்று என்றே கூறலாம்.  எளிமையானது. எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கீழ்காணும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.
  • Location Bar Auto Complete
  • Tab Over View 
  • Phishing & Malware Protection  
  • Annoyance Blocking 
  • Key Chain Support 
  • Tabbed Browsing 
  • Apple Script Support 
  • Spell Checking 
  • Feed Detection 
  • Full Content Zoom 
  • Software Update 
  • Recently Closed Tabs 
  • Session Saving 
  • Download Notification  
  • Web Standards 
  • 6 Languages
                                                     


3. K-Meleon:  
இதுவும் Windows OS -ல் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்ட ஓர் Open Source Program ஆகும். Gecko தொழில் நுட்பத்தில் செயல்படுகின்ற, இதனை வசதிக்கேற்றவாறு Set செய்துக்கொள்ளவும் முடியும். மிகவும் வேகமான முறையில் இணையதளங்களை பெற்றுத்தருகின்ற இது, உபயோகிப்பதற்கு மிக எளிமையானது; இலவசமும் கூட.  
Explorer -க்கு மாற்றாக இதை உபயோகப்படுத்தலாம்.
English, Russian மற்றும் ஆறு European மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. கீழ்காணும் வசதிகளையும் உள்ளடக்கியது.
  • Choose Your Desired Bookmarking system  
  • "Tabbed" Browsing  
  • Mouse Gestures  
  • Complete Toolbar, Menu, Context Menu & Keyboard Shortcut Customization  
  • Block Popup Windows 
  • Fast Load Time  
  • Easy Web Searching
  •  Themes & Skins 
  • Macros

4. Maxthon: 
சீன நாட்டில் மிகவும் பிரபல்யமானது. இதனை வடிவமைத்தவர் Changyou என்ற  பெயருடைய ஒரு சீனர். Windows OS -இல் இயங்குகின்ற இதன் வேகம் அதீத அளவில் உள்ளதாக, இதை வடிவமைத்தவர்களே சொல்லி பெருமை கொள்கிறார்கள். எல்லாவித அடிப்படை தேவைகளுடன் கீழ்காணும் வசதிகளையும் உள்ளடக்கியது. இலவசமும் கூட.
  • 200% faster than Google Chrome.  
  • free cloud services watch this video   
  • Reduce Tiresome Typing 
  • Calendar History 
  • Multi-Search 
  • Multiple Sessions in the Same Browser
  • Zoom In/Out 
  • Drag & Drop Commands and Search
  • Mute
  • Pop-up Video
  • Split Screen
  • Easy Screen Grabs
  • External Tool
  • Private Browsing
  • Ad Hunter
  • Avatar
  • Skins
  • 26 Languages 
  • Spell Checker (10 Languages including English)

5. Pale Moon:  
Windows OS -ல்  இயங்குகின்ற இதுவும்  Gecko தொழில் நுட்பத்திலேயே  செயல்படுகிறது. Firefox -ன்  கட்டமைப்பை  கொண்டுள்ளதால் Firefox  -இன்  Extensions, Theams, Personas போன்றவைகள்    இதிலும் செயல்படுகின்ற   விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற  Browser -களைவிட இது 25% கூடுதல் வேகம் கொண்டது  என்று இந்நிறுவனத்தின்  அறிக்கை கூறுகிறது. இலவசமும் கூட.

 சில சிறப்பம்சங்கள்:
  • Highly optimized for modern processors
  • 100% Firefox sourced: As safe as the browser that has seen years of development.
  • Uses slightly less memory because of disabled redundant and optional code
  • Significant speed increases for page drawing and script processing
  • Stability: experience fewer browser crashes.
  • Support for SVG and Canvas, and downloadable fonts including WOFF 
  • Support for HTML5 and WebGL (v4+)
  • Support for Firefox extensions (add-ons), themes and personas
  • Support for OOPP (Out-of-process plugin execution)
  • Able to use existing Firefox bookmarks and settings with this migration tool
6. Flock
தற்சமயம் புழக்கத்தில் இல்லாத, Discontinued செய்யப்பட்டுவிட்ட, இதன் குணாதிசயங்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.
Gecko தொழில் நுட்பத்தில்தான்  செயல்பட்டு வந்தது; Windows, Mac, மற்றும் Linux  OS -களில், Firefox Browser- ரின்  அடிப்படையில்,  இயங்கியும் வந்தது.  ஆக Firefox -ஐ  உபயோகித்தவர்கள் இதனை வெகுஎளிதாக கையாண்டு வந்தார்கள்.

Firefox -ஐ  போன்றே  பாதுகாப்பான Browsing அனுபவத்தை தந்ததோடு, Face Book, Twitter, My Space, You Tube, Flicker, Blogger, G Mail மற்றும் Yahoo Mail போன்றவற்றிற்கு நேரடியான  இணைப்பையும் வழங்கி வந்தது.
Photo Sharing, Updated News, Search Engine போன்றவைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டும் இருந்தது.  
English உட்பட 16 மொழிகளில் இதன் பதிப்புகள் இருந்தன.
Discontinued செய்யப்பட்டது பயனாளர்களுக்கு ஒரு இழப்பே.

ஆக, பிரபல்யம் என்று  பெயர் பெற்றுவிட்ட  Internet Explorer, Fire Fox, Chrome போன்ற  பல பிரவுசர்கள் இன்றைய காலகட்டத்தில்  பலவழிகளில்  Virus  தாக்குதல், இன்னும் பிற இன்னல்களுக்கு உட்பட்டு வருவதை பார்க்கும்போது, மேற்குறிப்பிட்ட பிரபல்யம் ஆகாதவைகளையும்  உபயோகப்படுத்தி பார்த்தால் Virus -களின்  தாக்கமும், இன்னல்களும்  குறைவாகவே  இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

2 comments:

Barakath said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் நஜிமுதீன் அவர்களே உங்கள் பதிவை கொஞ்சம் காலமாக படித்து வருகிறேன் Masha Allah ரொம்ப்ப நன்றாக உள்ளது..

Online money making சமந்தமகா ஒரு நல்ல தெளிவான பதிவை உங்களிடம்இருந்து ஆவலுடன் எடிர் பார்க்கிேறான்..

உங்கள் இந்த பனி தொடர அல்லாஹுவிடம் துவா செய்கிறான்.. சலாம்

kaja nazimudeen said...

Brother Barakath,
வ அலைக்கும் சலாம். எனது பதிவுகளை தொடர்ந்து நீங்கள் பார்த்துவருவது மெத்தமகிழ்ச்சி! நன்றிகளும் கூட!! மேலும் ... ON LINE money making ... பற்றி எழுத தூண்டி இருக்கிறீர்கள். நல்ல விஷயம் தான். முயற்சி செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.