Tuesday, 17 January 2012

போஸ்ட் பிள்ளை (எ) கோவிந்தராஜன்

ஜன. 16: போஸ்ட் பிள்ளை (எ) கோவிந்தராஜன்

 
 

 
 
 
 
 
 
 
 
 
யாதவாள் தெருவில் கோ. இராமச்சந்திரன், கோ. வரதராஜன், கோ. தேவநாதன் ஆகியோரின் தந்தையும்,  ஓய்வு பெற்ற போஸ்ட் மேனுமான போஸ்ட் புள்ளே என்று அறியப்படும் டி. கோவிந்தராஜ் பிள்ளை இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.  அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும்.

தகவல்:  மரு. லெ.பூபதி

#11 Riyadh - Kaja Nazimudeen, M.A. 2012-01-16 21:31
எங்களின் (மூன்று முதலியார்களின் தெருக்கள், யாதவாள் தெரு மற்றும் சாணார முடுக்கு) வட்டாரத்தில் வாழ்ந்து வந்த பெரிய மனிதர்களில் இவரும் ஒருவர். அன்னாரின் இறப்பு செய்தி தெரிந்து மனதுக்கு மிகவும் வேதனை ஆகிவிட்டது. விடுப்பில் ஊர் செல்லும்போதெல்லாம் அன்னாரை, அவர்கள் வீட்டில், சந்தித்து நலம் விசாரிப்பேன்; இந்த முறையும் (2011 - March) பார்த்து பேசிவிட்டு வந்தது .... இன்னும் என் நினைவில் உள்ளது. தொழுவதற்காக பள்ளி வாசல்களுக்கு (ஹவுஸ் பள்ளி / மீரா பள்ளி) சைக்கிளில் செல்லும்போது ... தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பவர், என்னை கவனித்துவிட்டு, 'தொழுகவா .. வாப்பா .... போறீங்க? ... தொழுகை ரொம்ப அவசியம்' என்று பிரியமாக சொல்லுவார். அன்னாரின் இழப்பு எங்களின் வட்டாரத்துக்கே மிகபெரிய இழப்பு. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் , இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
My BLOG: pnonazim.blogspot.com/
 
தகவல்: 
http://mypno.com/index.php?option=com_content&view=article&id=5588:-16----&catid=41:pnodeaths&Itemid=83#comment-2473

No comments: