g mail மூலமாக சிலர் அனுப்புகின்ற e mail -களை திறந்து பார்க்கும் போது யாருக்கெல்லாம் அந்த mail அனுப்பப்பட்டுள்ளது என்று நீளமான பட்டியலே, news paper அளவுக்கு, இருக்கும். அவற்றையெல்லாம் கடந்து ...செய்தியை படிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடும்.
இம்மாதிரியான பட்டியலை எப்படி தவிர்க்கலாம்? அதாவது யாருக்கெல்லாம் அந்தமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை எப்படி மறைப்பது?
Mail -ஐ composing செய்ததும், அதை அனுப்ப வழமையாக To Field -இல் அனுப்பவேண்டியவர்களின் mail ID -க்களை எழுதி Send button -ஐ அழுத்துவோம். அனுப்புவதற்கு இது மட்டுமே வழி அல்ல!
மேலும் ... இரு வழிகள் Cc, Bcc என்ற பெயர்களிலும் உள்ளன.
முதலில் Cc., மற்றும் Bcc., பற்றியும் அவைகளை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.
Cc: ... யின் விரிவாக்கம் ... Carbon copy;
Bcc: ... யின் விரிவாக்கம் ... Blind carbon copy.
Cc: ... Carbon copy -
ஒரு mail -ஐ வெவ்வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்காக அனுப்பும்போது, Cc -ஐ, பயன்படுத்துவது நல்லது.
To field -இல் முதல் நபர் ID- யும்; Cc -யில் மற்றவர் ID யையும் எழுதலாம். இப்படி செய்வதால் mail -ஐ படிப்பவர்கள் இரண்டு (To, Cc) Field -களிலும் உள்ள mail ID -களை காண முடியும்.
இதன் உபயோகம் என்னவென்றால், ஒருவிஷயத்தை குறித்து உயர் அதிகாரிக்கு அனுப்பும் mail -ஐ, சில கீழ்நிலை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியாக வேண்டும் என்கிற பட்சத்தில் To -வில் மேலதிகாரியின் ID -யையும், Cc -யில் மற்றவர்கள் ID -யையும் எழுதுவதால் mail -ஐ படிக்கின்ற எல்லோருமே, (To, Cc என்ற) இரண்டு Field -களிலும் உள்ள mail ID -களை காணுவதால், குறிப்பிட்ட விஷயம் எல்லோருக்கும் தெரியப்படுத்த பட்டு இருப்பதை புரிந்துக்கொள்வார்கள்.
ஆக, Cc -க்கும், To -க்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.
Bcc: ... Blind carbon copy-
இந்த Bcc -யும், Cc -யை போலத்தான்.
இருப்பினும் Bcc -க்கு சிறப்புத்தன்மை ஒன்று உள்ளது.
To field -ல்
ஒன்று அல்லது பல mail ID -கள் கொடுத்து இருந்தால் அவை எல்லாமும், Bcc -யில்
கொடுத்திருந்த பல ID -களில் ..... எவர் அந்த mail -ஐ திறந்து படிக்கின்றாரோ,
அவர் ID மட்டுமே தெரியும். மற்றவர்களின் ID -கள் அவருக்கு தேவை அற்றது என்பதால், அவை தெரியவராமல், மறைக்கப்பட்டு விடும்! இதுவே இதன் சிறப்புத்தன்மை!!
மேலும், இந்த முறையில் அனுப்புவது பாதுகாப்பானதும் கூட; பலருக்கு அனுப்புகின்ற newsletter போன்ற செய்தி மடல்களுக்கு இந்த முறையை பயன்படுத்தலாம்.
மேலும், இந்த முறையில் அனுப்புவது பாதுகாப்பானதும் கூட; பலருக்கு அனுப்புகின்ற newsletter போன்ற செய்தி மடல்களுக்கு இந்த முறையை பயன்படுத்தலாம்.
Bcc -ஐ பயன்படுத்தும் போது To field -இல் எந்தவொரு mail ID -யையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கொடுக்க விரும்பினால் நமது ID -யையே கொடுத்துவிடலாம்.
6 comments:
தங்களின் பதிவுகளுக்கு பாராட்டுக்கள்.
தேதிகளையே தலைப்புக்களாக பக்கவாட்டில் மெனுவில் காட்டுகின்றன.சம்பந்தப்பட்ட தலைப்புக்களையே தனித்தனி பதிவுகளாக பதிந்தால் தேவைப்படும் தலைப்புக்களை திறக்க அணைவருக்கும் பேருதவியாய் இருக்கும்.
நன்றி.
நாயன் கிருபை செய்வானாக
நூர்தீன்
noordheen100@gmail.com
kindly check yourself one time. when i have sent the mail to few friends in bcc and in that i have add my mail id also when i open the mail all id has shown. its not hide another ids
Zasaakkallah Brother
Thanks Mr. Sultan for your support.
நூர்தீன்,
சரியாக சொல்லி திருத்தியமைக்கு நன்றிகள், சகோதரரே! இப்பொழுது சரி செய்துவிட்டேன். தொடர்ந்து உங்களின் வழமையான ஆதரவை நாடும் ....
உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
<<<< kindly check yourself one time. when i have sent the mail to few friends in bcc and in that i have add my mail id also when i open the mail all id has shown. its not hide another ids >>>>
Brother Sadiq,
I appreciated your comment.
It's quite easy for G mail to identify that you're the sender and you've included your ID, too, on Bcc field.
In this case, G mail will listed up all the Bcc field ID's, to you, when you open your mail.
Anyway thanks for your comment.
Post a Comment