Tuesday, 31 January 2012

Doctor in your pocket

Smartphones may be able to diagnose diseases from just a drop of blood or saliva on screen.

  • Mobile phone could diagnose a range of diseases including cancer and diabetes
  • Scientists believe technology could save billions in healthcare costs
    • Mobile phone could diagnose a range of diseases including cancer and diabetes
    • Scientists believe technology could save billions in healthcare costs 
    Breakthrough: South Korean scientists have developed new 
technology which they believe could result in smartphones - such as an 
iPhone - being able to diagnose diseases

  • Mobile phone could diagnose a range of diseases including cancer and diabetes
  • Scientists believe technology could save billions in healthcare costs
  • South Korean scientists Professor Park Hyun-Gyu (left) and researcher Won Byoung-Yeon (right) have developed new technology which they believe could result in smartphones - such as an iPhone - being able to diagnose diseases.
    Excited: Professor Park Hyun-Gyu is one of those working on the new smartphone technology
    Cautious: Researcher Won Byoung-Yeon says more work needs to be done before the technology to diagnose illnesses on smartphones can be perfected



    Incredibly, this could result in instant diagnosis' for illnesses from just a droplet of blood or saliva on a Smartphone's touchscreen. The team believe they are the first to demonstrate that a touchscreen can be used to detect bio-molecules. But researcher Won Byoung-Yeon says more work needs to be done before the technology is perfected.

    And those behind the revolutionary technology say the recognition rate is almost 100 per cent accurate and as effective as conventional medical equipment.
    The technology was developed on the basis of the touchscreen's capacity, called 'capacitive sensitivity', to detect the minute electrical signals generated by a fingertip's touch.

    A team at the Korea Advanced Institute of Science and Technology said when its technology is commercialized, it will revolutionize diagnostic medicine around the world.

    Professor Park Hyun-Gyu says his team's research will enable mobile phones to diagnose a range of diseases from cancer to diabetes. He said biomolecules, like those produced by diseases, transmit similar signals that a touchscreen can recognise.

    Mr Hyun-Gyu said: 'If you have a certain type of DNA or proteins, the touchscreen would react in the same way as a finger's electrical signal is detected.'  

    Friday, 27 January 2012

    File -களினால் குழப்பமா?


    Software -களின் உதவியால், பல வகை Application -களில் இயங்கவல்ல File - கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில்  பலவற்றை   நாமே  அடிக்கடி உபயோகப்படுத்தியும் வருகிறோம். அந்த வகையில், e mail / audio / video போன்று ஏதாவது ஒரு File -ஐ, Download -செய்தப்பிறகு, அந்த File  -ஐ எப்படி, எந்த Application -மூலம்  திறப்பது  போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமல் குழம்பித்தான் போய்விடுவோம்.
    அப்படி, நம்மை நாமே குழப்பிக்கொள்ளாமல் - உதவியாக இருக்கட்டுமே என்று,  சில முக்கிய file வகைகளை   - அவற்றின் துணைப்பெயர்கள் மற்றும் அவற்றைத் திறக்கும்  பொதுவான அப்ளிகேஷன் பெயர்களுடன்  இணைத்து     கீழே தரப்பட்டு உள்ளது. 

    .avi - Video  File.
    Windows Media Player
    - ல்  திறக்கலாம்

    .bmp - Picture  File.
    Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களிலும் திறந்து பயன்படுத்தலாம்.

    .cfg  - Configuration File.
    இதனை திறந்து பயன்படுத்த வேண்டாம்!

    .dat - Data அடங்கிய (தகவல்) File.
    Data - வை   கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனை திறக்கலாம். 

    .doc  - Document File.
    Word தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.

    .exe  - Executable File.
    புரோகிராம் ஒன்றின் முதன்மையான File. இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.

    .gif   - Picture File.
    Paint மற்றும் Adobe Photo Shop  போன்ற படங்களை கையாளும் அப்ளிகேஷன்களிலும் திறந்து பயன்படுத்தலாம்.

    .htm  - இணைய தளத்தில் வைக்கப்படும் Document.
    Internet Explorer உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.

    .html  - இணைய தளத்தில் வைக்கப்படும் Document.
    Internet Explorer உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம். 

    .ini  -  Text Configure File.
    Note Pad - ல் திறக்கலாம்.

    .jpeg/jpg  - Picture File.
    Paint மற்றும் Adobe Photo Shop  போன்ற படங்களை கையாளும் அப்ளிகேஷன்களிலும் திறந்து பயன்படுத்தலாம்.

    .mov  - Movie File.
    Quick Time
    அப்ளிகேஷனில் திறக்கலாம்.

    .mpeg/mpg  - Video  File.
    Quick Time
    மற்றும் Win Amp புரோகிராம்களில் திறக்கலாம்.

    .mp3  - Audio File
    Windows Media Player  மற்றும் Win Amp போன்ற அப்ளிகேஷன்களில் திறக்கலாம்.

    .pdf   - Portable Document File.
    Adobe Reader
    போன்ற PDF File களைத் திறக்கும் எந்த சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்.

    .pps   - Slide Show Presentation File.
    Power Point புரோகிராமில் திறக்கலாம்.

    .ppt  - Slide Show Presentation File.
    Power Point
      புரோகிராமில் திறக்கலாம்.

    .sys  - System File.
    திறக்க வேண்டாமே!

     .txt  - Text File.
    Note Pad - ல் திறக்கலாம்.

    .wav  - Audio File.
    Windows Media Player மற்றும் Win Amp போன்ற Audio புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம்.

    .xls  - Spread Sheet File.
    EXCEL தொகுப்பில் பயன்படுத்தலாம்.

    .zip  -  சுருக்கப்பட்ட File.
    Win Zip
    புரோகிராம் இவ்வகை File களை விரித்துக் கொடுக்கும்.

    பிரபல்யமாகாத Browser -கள்


    பெரும்பாலானவர்கள் Internet Explorer -க்கு அடுத்து Fire Fox, Chrome, Opera, Safari போன்றவைகள் தாம்  Internet உலகின் Browsing ஜாம்பவான்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
    ஆனால்,  உண்மை அதுவல்ல; இன்னும் பல  Browser -கள், மேற்சொன்னவற்றை விட, பல விஷயங்களில் மிக நேர்த்தியாக  செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன  என்பதே உண்மை.
    அந்த வரிசையில் ....

    1. Arora:
    Open Source Program  -வகையை சேர்ந்த இது, Windows, Mac, Linux, FreeBSD, Haiku போன்ற  OS -களில் இயங்கக்கூடியது. Chrome தொழில் நுட்பத்தில் செயல்படுகின்ற இதனை, Google -க்கு  ஒரு மாற்று என்றே குறிப்பிடலாம். Blocking Pop Up Ad, Private Browsing போன்ற பல அடிப்படை வசதிகளை தருவதோடு கீழ் காணும் சிறப்பம்சங்களையும் இலகுவாக அளிக்கின்றது.
    இலவசமும் கூட!
    • very fast startup
    • integration with desktop environments
    • smart location bar
    • session management
    • privacy mode
    • flexible search engine management
    • Click To Flash plugin
    • download manager
    • Web Inspector, a set of tools for web developers
    • 30 translations
    Arora -பற்றி அதன் Screen Shot முகவரி மூலம் மேலும் அறியலாம். 
    http://code.google.com/p/arora/wiki/Screenshots


    2. Camino:  
    Mac OS -ல்  மட்டுமே இயங்குகின்ற இதுவும்  Open Source Program  -வகையை சேர்ந்ததே.  Gecko தொழில் நுட்பத்தில் செயல்படுகின்ற   இது, Mac Platform -ல் இயங்கும் அனைத்து Browser -களுக்கும் ஒரு மாற்று என்றே கூறலாம்.  எளிமையானது. எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கீழ்காணும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.
    • Location Bar Auto Complete
    • Tab Over View 
    • Phishing & Malware Protection  
    • Annoyance Blocking 
    • Key Chain Support 
    • Tabbed Browsing 
    • Apple Script Support 
    • Spell Checking 
    • Feed Detection 
    • Full Content Zoom 
    • Software Update 
    • Recently Closed Tabs 
    • Session Saving 
    • Download Notification  
    • Web Standards 
    • 6 Languages
                                                         


    3. K-Meleon:  
    இதுவும் Windows OS -ல் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்ட ஓர் Open Source Program ஆகும். Gecko தொழில் நுட்பத்தில் செயல்படுகின்ற, இதனை வசதிக்கேற்றவாறு Set செய்துக்கொள்ளவும் முடியும். மிகவும் வேகமான முறையில் இணையதளங்களை பெற்றுத்தருகின்ற இது, உபயோகிப்பதற்கு மிக எளிமையானது; இலவசமும் கூட.  
    Explorer -க்கு மாற்றாக இதை உபயோகப்படுத்தலாம்.
    English, Russian மற்றும் ஆறு European மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. கீழ்காணும் வசதிகளையும் உள்ளடக்கியது.
    • Choose Your Desired Bookmarking system  
    • "Tabbed" Browsing  
    • Mouse Gestures  
    • Complete Toolbar, Menu, Context Menu & Keyboard Shortcut Customization  
    • Block Popup Windows 
    • Fast Load Time  
    • Easy Web Searching
    •  Themes & Skins 
    • Macros

    4. Maxthon: 
    சீன நாட்டில் மிகவும் பிரபல்யமானது. இதனை வடிவமைத்தவர் Changyou என்ற  பெயருடைய ஒரு சீனர். Windows OS -இல் இயங்குகின்ற இதன் வேகம் அதீத அளவில் உள்ளதாக, இதை வடிவமைத்தவர்களே சொல்லி பெருமை கொள்கிறார்கள். எல்லாவித அடிப்படை தேவைகளுடன் கீழ்காணும் வசதிகளையும் உள்ளடக்கியது. இலவசமும் கூட.
    • 200% faster than Google Chrome.  
    • free cloud services watch this video   
    • Reduce Tiresome Typing 
    • Calendar History 
    • Multi-Search 
    • Multiple Sessions in the Same Browser
    • Zoom In/Out 
    • Drag & Drop Commands and Search
    • Mute
    • Pop-up Video
    • Split Screen
    • Easy Screen Grabs
    • External Tool
    • Private Browsing
    • Ad Hunter
    • Avatar
    • Skins
    • 26 Languages 
    • Spell Checker (10 Languages including English)

    5. Pale Moon:  
    Windows OS -ல்  இயங்குகின்ற இதுவும்  Gecko தொழில் நுட்பத்திலேயே  செயல்படுகிறது. Firefox -ன்  கட்டமைப்பை  கொண்டுள்ளதால் Firefox  -இன்  Extensions, Theams, Personas போன்றவைகள்    இதிலும் செயல்படுகின்ற   விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற  Browser -களைவிட இது 25% கூடுதல் வேகம் கொண்டது  என்று இந்நிறுவனத்தின்  அறிக்கை கூறுகிறது. இலவசமும் கூட.

     சில சிறப்பம்சங்கள்:
    • Highly optimized for modern processors
    • 100% Firefox sourced: As safe as the browser that has seen years of development.
    • Uses slightly less memory because of disabled redundant and optional code
    • Significant speed increases for page drawing and script processing
    • Stability: experience fewer browser crashes.
    • Support for SVG and Canvas, and downloadable fonts including WOFF 
    • Support for HTML5 and WebGL (v4+)
    • Support for Firefox extensions (add-ons), themes and personas
    • Support for OOPP (Out-of-process plugin execution)
    • Able to use existing Firefox bookmarks and settings with this migration tool
    6. Flock
    தற்சமயம் புழக்கத்தில் இல்லாத, Discontinued செய்யப்பட்டுவிட்ட, இதன் குணாதிசயங்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.
    Gecko தொழில் நுட்பத்தில்தான்  செயல்பட்டு வந்தது; Windows, Mac, மற்றும் Linux  OS -களில், Firefox Browser- ரின்  அடிப்படையில்,  இயங்கியும் வந்தது.  ஆக Firefox -ஐ  உபயோகித்தவர்கள் இதனை வெகுஎளிதாக கையாண்டு வந்தார்கள்.

    Firefox -ஐ  போன்றே  பாதுகாப்பான Browsing அனுபவத்தை தந்ததோடு, Face Book, Twitter, My Space, You Tube, Flicker, Blogger, G Mail மற்றும் Yahoo Mail போன்றவற்றிற்கு நேரடியான  இணைப்பையும் வழங்கி வந்தது.
    Photo Sharing, Updated News, Search Engine போன்றவைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டும் இருந்தது.  
    English உட்பட 16 மொழிகளில் இதன் பதிப்புகள் இருந்தன.
    Discontinued செய்யப்பட்டது பயனாளர்களுக்கு ஒரு இழப்பே.

    ஆக, பிரபல்யம் என்று  பெயர் பெற்றுவிட்ட  Internet Explorer, Fire Fox, Chrome போன்ற  பல பிரவுசர்கள் இன்றைய காலகட்டத்தில்  பலவழிகளில்  Virus  தாக்குதல், இன்னும் பிற இன்னல்களுக்கு உட்பட்டு வருவதை பார்க்கும்போது, மேற்குறிப்பிட்ட பிரபல்யம் ஆகாதவைகளையும்  உபயோகப்படுத்தி பார்த்தால் Virus -களின்  தாக்கமும், இன்னல்களும்  குறைவாகவே  இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

    Friday, 20 January 2012

    உறைந்து போகின்றதா இணைய தளம்?



    பார்த்துக்கொண்டு இருக்கின்ற இணைய தளம்  சில சமயங்களில், உறைந்துபோனதுபோல், அப்படியே நின்றுவிடும்; அதற்கான Error செய்தியை, சில சமயங்களில், காட்டும். பல வேளைகளில் எதுவும் காட்டாமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைபாட்டுக்கு பல காரணங்களை சொல்லலாம்.

    1. Session Expired: பார்த்துக்கொண்டு இருக்கும் தளத்தை சில நேரங்களில் அப்படியே விட்டு விட்டு, சற்று நேரம் கழித்து வந்து பார்க்கின்ற போது Session Expired என்ற செய்தியை  திரையில் காணலாம். 

    இணையதளத்தை எவ்வித செயல்பாடுமின்றி திறந்து வைத்திருந்தால், குறிப்பிட்ட நிமிடங்களில், தானாகவே மூடிக்கொள்ளும்படி அத்தளத்தை தயாரித்தவர்கள் வடிவமைத்திருப்பதே இதற்கு காரணம்.

    இன்னும், முறையாக பதிவு செய்யாதவர்களை சில தளங்கள் சொற்ப நிமிடங்களே பார்க்க அனுமதிக்கும்; குறிப்பிட்ட அந்த நேரம் முடிவுக்கு வரும்போது தளம் தானாகவே மூடப்பட்டு  “Session Expired” செய்தியை காட்டும். இதற்கும் தளவடிவமைப்பே காரணம்.

    மேலும், செயற்பாட்டில் இருந்துவரும் Computer -ரின் பின்புலத்தில் சில தளங்கள் அவற்றை சார்ந்த Program -களை எப்பொழுதும் இயக்கிய வண்ணமிருக்கும். அச்சமயம், அந்த Computer -ரின் நேரம், தேதி மற்றும் நாள் இவைகளில்  ஏதும் மாற்றம்/தவறு இருந்தாலும்  “Session Expired” செய்தியை  திரையில் காட்டும்.

    2. Cookies: சில தளங்களுக்கான  Cookies (குறுந்தகவல் தொகுப்பு)-களை அனுமதித்தால் தான், மீண்டும் அந்த தளங்களை திறக்கும் போது (முன்னமேயே அனுமதித்திருந்த Cookies உதவியால் செயற்பாட்டிலுள்ள, computer -ரின் விவரங்களை அந்த தளம் அறிந்துக்கொண்டு தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும். இல்லையென்றால் சில நிமிடங்களில் அந்த தளம் தானாகவே மூடப்பட்டு விடும். 
    எனவே, Cookies பெறுவதை Internet Explorer -ஐ உபயோகித்தால் :  
    Tools > Options > Privacy .... then choose Default ... என்ற முறையில் சென்று, அனுமதிப்பதால்  தொடர்ந்து அத்தளத்தை பார்க்கவும் செய்யலாம்.



    3. Firewall: இது ஒரு பாதுகாப்பு வளையம். இணைய தளங்களை பாகுபாடு செய்து, நல்ல தளங்களை பார்க்க அனுமதிப்பதே இதன் நோக்கம். எத்தனையோ தீயதளங்கள் மூலம் System Infection -ஆக வாய்ப்புள்ளதால் அவ்வகையான தளங்களை பார்க்க அனுமதிக்காது. ஒரு வகையில் இது நல்லதுதான் என்றாலும்,  சில நல்ல தளங்களையும் தீயதாக அனுமானம் செய்துக்கொண்டு அத்தளங்களையும் பார்க்க விடாமல் தன்னிச்சையாக அத்தளங்களை மூடி விடும். ஆக இவ்வகையான தளங்களையும் பார்க்கவேண்டுமெனில், Firewall Setting -இல், பார்க்க அனுமதிக்கும் படியாக,  மாற்றம் செய்தாக வேண்டும். 

    4. Other Problems: மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சினைக்கும் உட்படாமல், பார்த்துக்கொண்டு இருக்கும்  குறிப்பிட்ட ஒரு இணைய  தளத்திற்கு மட்டும்   Session Expired என்று திரை காட்டுகிறது என்றால், பிரச்சினை அந்த தளத்தில் தான் என்று பொருள் கொள்ள வேண்டும். 

    ஆம்! இதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம்:
    - குறிப்பிட அந்த தளத்தை புதுப்பிப்பதற்காக நிறுத்தி வைத்திருக்கலாம்; 
    - அத்தளத்தை ஏற்றிருக்கும் Server -ரில் ஏதும் பிரச்சினை இருக்கலாம்.

    ஆக, Session Expired என்பது  இணைய தளம் மற்றும் அத்தளத்தை ஏற்றிருக்கும் Server -சார்ந்த பிரச்சினையே தவிர, Computer -ரின் Settings, Cookies, Firewall போன்றவற்றை ஏதுசெய்தாலும், எதுவும்  ஆகப்போவதில்லை! இந்த மாதிரியான சமயங்களில் சில நிமிடங்கள் பொறுமை காத்து மீண்டும் முயற்சிப்பதே  சிறந்த வழியாகும்.

    Wi-Fi பற்றி தெரிந்துகொள்ள ...

    Wi-Fi logo

    Wi-Fi என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிகக்குறியீடு ஆகும். இத்தொழில்நுட்பம் இன்று பரவலாக  பல இடங்களில் உபயோகத்தில்  இருந்து வருகிறது.   இதன் விரிவாக்கம்  - வயர்லெஸ் ஃபிடெலிடி - Wireless Fidelity -  என்பதாகும். இத்தொழில் நுட்பம் Wi-Fi Alliance  என்பதால் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.   

    இத்தொழில் நுட்பமானது Radio, Television, Computer, Cell Phone என  பலவகைப்படுத்தப் பட்ட சாதனங்களில் பல்வேறு அலைவரிசைகளில் உபயோகப் படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். 

    இந்த Wi-Fi -க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) முதல் 5 கிகா  ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுகிறார்கள். வினாடிக்கு  11 மெகா பைட் (Mega Byte) முதல்   140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தவல்ல  திறன் கொண்டதும் கூட.  

    Wi-Fi Signal logo
    இத்தொழில் நுட்பம் மூலம் Computers, Printers, Laptop மற்றும் Cell Phone போன்றவைகளுக்கிடையே Wireless முறையில் தொடர்பை ஏற்படுத்திட முடிகிறது.

    இணைய பயன்பாட்டிற்காக, Wi-fi Access Point -என்ற சேவையை, பல கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள்  போன்ற இடங்களில் அமைத்திருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

    Wi-Fi access point
    Modem










    மேலும் இணைய இணைப்புக்காக பயன் படுத்தப்படும் Modem களில், கூட, Wi-Fi Router  பொருத்தப் பட்டுத் தான் விற்பனைக்கு வருகின்றன. இவ்வகை Modem -களை தான் சிறு நிறுவனங்களிலும், வீடுகளிலும்  வாங்கி பயன்படுத்துகிறோம்.
     
    இந்திய அளவில், Mysore -நகரம் தான் (2004 -லில்) Wi-Fi - ஐ பெற்ற முதல் நகரமாகவும் (India's first Wi-Fi enabled city); உலகளவில்  ஜெருசலத்துக்கு அடுத்து இரண்டாவது நகரமாகவும் (second in the world after Jerusalem)  அறியப்படுகிறது.

    USB wireless adapter
    சமீப காலங்களில் USB wireless adapter -கள் விற்பனைக்கு வந்து விட்டதால், இவைகளையும் வாங்கி  Computer -ரில் செருகி இணையத்தை பயன்படுத்தி  வருவதும் அதிகமாகி உள்ளது.


    Wi Fi Network

    இத் தொழில் நுட்பம் சிறந்ததாக கருதப்பட்டாலும் சில பாதுகாப்பு குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.  Hacker -கள் இவ்வகையான Network -களை எளிதாக ஆக்கிரமிப்பு செய்து பயன்பாட்டாளர்களின்  தகவல்களை திருடி, நாசவேலைகளில்  ஈடுபடும் சாத்தியக்கூறுகள் நிரம்பவே இருக்கிறது. இந்நெட்வொர்க்கின் எல்லைக்குள்ளாக இருந்தும், கூட,  அந்நெட்வொர்க்கை Hack செய்வது சுலபம். அப்படி Hack செய்வதற்கான Software -களும் இணையத்தில் இலகுவாக கிடைப்பதென்னவோ உண்மை. 

    போலியாக, அதாவது தற்காலிக முறையில், Wi-Fi நெட்வொர்க்கை உருவாக்கியும் அல்லது  எதேச்சையாக  கிடைக்கும் Wi-Fi நெட்வொர்க்கிலும் புகுந்து அண்டை வீட்டு  கணினிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி  தகவல்கள் திருடுவது  போன்ற பல வழிமுறைகளும் கையாளப்படுகின்றன.

    ஆக, Wi-Fi நெட்வொர்க்குகளை, எவரும்  அணுக முடியாமல்  தடுக்க, அதன் Rooter -ரில் Password -ஐ  சற்று  கடினமானதாக அமைப்பது நல்லது. அத்துடன், நெட்வொர்க்கிற்கான Security Setup -ஐயும்  செயற்பாட்டில்   வைத்திருக்க வேண்டியதும் அவசியம். சிறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளில்  பயன்படுத்தப்படும் Modem -களுக்கு  இவை பொருந்தும்.  

    Desk Top, Lap Top, Tablet PC, Printer, Smart Phone போன்றவைகளை, எப்பொழுதும் Wi-Fi நெட்வொர்க்கிலேயே வைத்திருக்க விரும்பினால், அதற்கு ஏற்றாற்போல் Filter -களை அமைத்துக்கொள்வது நல்லது. திறந்தநிலை நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கின்ற (Automatic Access) தானியங்கி அமைப்புகள் செயற்பாட்டில்  இருந்தாலும் அவைகளின்  செயற்பாட்டையும்  நிறுத்தி வைப்பது நலம் பயக்கும். அத்துடன், நெட்வொர்க்குகளுக்கு அவசியமான Firewall போன்ற கூடுதல்  பாதுகாப்பு வளையங்களையும்  ஏற்படுத்துதல் அத்தியாவசியமானது. 

    Tuesday, 17 January 2012

    போஸ்ட் பிள்ளை (எ) கோவிந்தராஜன்

    ஜன. 16: போஸ்ட் பிள்ளை (எ) கோவிந்தராஜன்

     
     

     
     
     
     
     
     
     
     
     
    யாதவாள் தெருவில் கோ. இராமச்சந்திரன், கோ. வரதராஜன், கோ. தேவநாதன் ஆகியோரின் தந்தையும்,  ஓய்வு பெற்ற போஸ்ட் மேனுமான போஸ்ட் புள்ளே என்று அறியப்படும் டி. கோவிந்தராஜ் பிள்ளை இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.  அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும்.

    தகவல்:  மரு. லெ.பூபதி

    #11 Riyadh - Kaja Nazimudeen, M.A. 2012-01-16 21:31
    எங்களின் (மூன்று முதலியார்களின் தெருக்கள், யாதவாள் தெரு மற்றும் சாணார முடுக்கு) வட்டாரத்தில் வாழ்ந்து வந்த பெரிய மனிதர்களில் இவரும் ஒருவர். அன்னாரின் இறப்பு செய்தி தெரிந்து மனதுக்கு மிகவும் வேதனை ஆகிவிட்டது. விடுப்பில் ஊர் செல்லும்போதெல்லாம் அன்னாரை, அவர்கள் வீட்டில், சந்தித்து நலம் விசாரிப்பேன்; இந்த முறையும் (2011 - March) பார்த்து பேசிவிட்டு வந்தது .... இன்னும் என் நினைவில் உள்ளது. தொழுவதற்காக பள்ளி வாசல்களுக்கு (ஹவுஸ் பள்ளி / மீரா பள்ளி) சைக்கிளில் செல்லும்போது ... தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பவர், என்னை கவனித்துவிட்டு, 'தொழுகவா .. வாப்பா .... போறீங்க? ... தொழுகை ரொம்ப அவசியம்' என்று பிரியமாக சொல்லுவார். அன்னாரின் இழப்பு எங்களின் வட்டாரத்துக்கே மிகபெரிய இழப்பு. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் , இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: pnonazim.blogspot.com/
     
    தகவல்: 
    http://mypno.com/index.php?option=com_content&view=article&id=5588:-16----&catid=41:pnodeaths&Itemid=83#comment-2473

    Sunday, 15 January 2012

    கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்?

    கீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்?      ....... கலி.பூங்குன்றன்

    Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18002

    (1) கீதை தடை செய்யப்பட்டது ஏன்?
    ருசியாவில் கீதை தடை செய்யப்பட்டது. இஸ்கான் என்று அழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்த, பக்தி வேதாந்தசாமி என்பவரால் எழுதப்பட்டது "உள்ளபடியே கீதை'' எனும் நூல். இந்த நூல் ருசிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    கீதை மக்கள் நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடிய நூல். எனவே இதனைத் தடை செய்யவேண்டும் என்று கோரும் வழக்கு ருசியாவின் டோமாஸ்க் நகரின் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
    கீதையைப் பற்றி டோமாஸ்க் பல்கலைக் கழக நிபுணர்களின் கருத்தினை ருசிய நீதிமன்றம் கேட்டுள்ளது.
    போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு போதனை அளிப்பதுதான் கீதை. இது தீவிரவாதத்தைத் தூண்டக்கூடியது என்ற முடிவுக்கு வந்து தடை விதித்தது நீதிமன்றம்.
    கீதையைத் தடை செய்வதோடு மட்டுமின்றி ஹரே கிருஷ்ணா அமைப்பு இந்த நூல் பற்றி பிரச்சாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    அவ்வளவுதான். இந்திய நாடாளுமன்றம் கிடுகிடுத்தது. இந்து வெறி அமைப்பான பி.ஜே.பி. மட்டுமல்ல ; காங்கிரஸ்காரர்களும் கூட குதியாட்டம் போட்டனர். (காங்கிரஸ் மட்டும் என்ன வாழ்கிறது - அதுவும் இன்னொரு பா.ஜ.க. தானே? டிகிரியில் வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்)
    நாடாளுமன்றமே நடத்தவிடப்படாமல் முடக்கப் பட்டது. (நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்வ தற்குத்தானே நாடாளுமன்ற உறப்பினர்கள்?)
    வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்தில் ஓர் உறுதியை அறிவித்தார். மக்களின் புனித நூலான கீதையைத் தடை செய்யக் கூடாது என்று ருசிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று உறுதி அளித்தார். (கடைசிச் செய்தி - இந்துத்துவா சக்திகளின் கடுமையான அழுத்தத்தால் கீதையைத் தடை செய்வதில்லை என்று ருசியா முடிவெடுத்துவிட்டது. அந்தோ பரிதாபம் !)
    காந்தியாரின் உயிரைக் குடிப்பதற்கு - கோட்சே வுக்குத் தூண்டு சக்தியாக இருந்த கீதையைக் காப்பாற்றியதன் மூலம் இந்திய அரசு காந்தியாரை இன்னொரு முறை படுகொலை செய்துவிட்டது. நீதி மன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரனான நாதுராம் கோட்சே என்ன சொன்னான்?
    "இந்து மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி நடந்து கொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவனுடைய கடமை - தர்மம் ஆகும்'' என்பதே கோட்சே அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையாக இருந்தது. உள்ளத் தைத் தொடும்வகையில் வரலாற்றுச் சான்றுகளை அவர் எடுத்துக்காட்டினார். தாய் நாட்டைக் காக்க வேண்டும். அதற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையில் சில சுலோகங்களைச் சொல்லி உணர்ச்சிகர மாகத் தன் உரையை முடித்தார். (பஞ்சாப் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜி.டி. கோஸ்லா எழுதியது, Murder of Mahatma )
    (2) கீதை மக்களை பிளவுபடுத்தும் நூல் இல்லையா?
    சதுர்வர்ணம் : மயா ஸிருஷ்டகுண
    கர்ம விபாசக : தஸ்ய கர்த்Vரமபிமாம்
    வித்தய கர்த்தார - மவ்யம்
    (கீதை - அத்தியாயம் 4 சுலோகம் 13)
    இதன் பொருள் - நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங் களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தி யாளனாகிய என்னால் கூட முடியாது.
    (3) இந்த நான்கு வருணங்கள் குணத்தின் அடிப்படையில்தான் - பிறப்பின் அடிப்படையிலே கிடையாது என்று சிலர் வியாக்கியானங்கள் செய்கிறார்களே?
    அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
    (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87)
    இதன் பொருள் என்ன? பிறக்கும்போதே பிரம்மாவின் நெற்றியில் பிராமணன் பிறந்தான் என்று சொல்லிவிட்டு, குணத்தின் அடிப்படையில் நான்கு வருணங்கள் என்பது அசல் "அக்மார்க்' முரண்பாடு அல்லவா?
    (4) ஒருவன் பிராமணன் என்பதற்கு என்ன அடையாளம் வைத்திருக்கிறார்கள்?
    கர்ப்பதானம் முதல் அந்தியேஷ்டி வரையிலும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள், வேதம் ஓதுதல், கோத்திரம், நித்திய கருமங்கள் போன்றவைகள் மூலம் தான் இந்த "பார்ப்பனத்தன்மை'யை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இதோடு விட்டுவிடவில்லை. "அஷ்டவர்­ம் பிராஹ்மண மபனயீத், தமத்யா யீத' என்று தந்திரமாகக் கூறி வைத்துவிட்டார்கள். அதாவது பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவனுக்கு அவனது எட்டாவது வயதிலேயே பார்ப்பனத் தன்மைக்கான இந்த நச்சுக் கருத்துகளைச் சொல்லித் தரவேண்டுமாம்!.
    கருமங்களினாலும், குணங்களினாலும்தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே 8 வயதிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், இது, பச்சையான சாதி அமைப்பு என்பதைத்தவிர வேறு பொருள் என்ன? பகவத் கீதையில் சாதித் தன்மை இன்னும் வெளிப்படையாகவே இருக்கிறது.
    "ஸ்ரேயான் ஸ்தர்மோ விகுண
    மாதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்;
    ஸ்வதர்மோ நிதனம ஸ்ரேய ;
    பரதர் மோ பயாவஹ''
    இதற்குப் பொருள் என்ன? "ஒரு சாதியான் மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை ; ஆனால் பிற சாதியார் தொழிலைச் செய்யவே கூடாது'' என்பது இதன் பொருள். இதற்குப் பெயர் என்ன? பச்சை சாதி வெறி அல்லாமல் வேறு என்ன? சாதி அடிப்படையிலேதான் தொழில் செய்ய வேண்டும் என்று பேசினால், தீண்டத்தகாத சாதியும், தீண்டாமையும் தானாகவே வந்துவிடுகிறதே!
    (5) அரசன் தோன்றியது ஏன்?
    வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்ய வேண்டும் என்கிறது மனு தர்ம சாஸ்திரம். (அத்தி யாயம் 8 சுலோகம் 348).
    மகாபாரதத்தின் ஒரு இணை நூல்தான் கீதை. அந்த மகாபாரதம் - சாந்தி பருவம் 59ஆம் அதிகாரம் (94-99) என்ன கூறுகிறது !
    ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக் கினார் என்றும், ஆனால் அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும் அதனால் வேணனின் கொடுங் கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும் அவனுடைய வலது தொடை யிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப் படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி. எந்த அடிப்படையில் பிருது, வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள். (1) தண்டநீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்க மாட்டேன் (3) சாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாறுவேன் - என்று மூன்று உறுதி மொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயலுக்கு ஏற்பவும், நியாயமாகவும் செய்ய வேண்டிய எல்லா வற்றையும் செய்வதாக அவன் ஏற்கனவே உறுதிமொழி கொடுத்திருந்தான்.
    அரசன் தோன்றியதே ஜாதி தர்மத்தைக் காப்பதற்கே என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
    இதில் ஒரு வெட்கக்கேட்டைக் குறிப்பிட்டாக வேண்டும். மார்க்சியம் பேசுவோர் கூட கீதையின் கீழ்த் தரத்தை உணராமல் போனது கெட்ட வாய்ப்பாகும்.
    இந்தியாவில் அரசு பொறுப்புகளில் இருக்கும் பிரதமர் முதலியோர் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது "பாரதப் பண்பாட்டுச் சின்னம்'' என்பதுபோல் கீதையைப் பரிசாகக் கொடுப்பது - ஒரு நாகரிகமாகி விட்டது. இதற்கு டயலிட்டிக் மெட்டீரியலிசம் பேசும் கம்யூனிஸ்டுகளும் விதி விலக்கல்ல.
    கேரள முதலமைச்சராக இருந்த ஈ.கே. நாயனார் வாடிகன் சென்றபோது, போப் அவர்களுக்கு கீதையைப் பரிசாக அளித்தார் என்பதுதான் அந்தச் செய்தி!
    கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு நியாயம் கற்பித்தது அதைவிட வெட்கக் கேடாகும்.
    "நூறு கோடிக்கும் அதிகமான கிறித்துவ மக்களின் நம்பிக்கைக்கு உரியவரான போப்பாண்டவரை நான் சந்தித்து, அவருக்குப் பகவத் கீதையை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு மதங்களைப் பற்றி எவ்வித மாறுபட்ட கருத்துகளும் இருந்ததில்லை. நான் மதங்களை மதிக்கிறேன். அதன் அடிப்படையில்தான் பகவத் கீதையைக் கொடுத்தேன். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள மதத்திற்கு உரியதுதான் பகவத் கீதை ; இந்தியக் கலாச்சாரத்தை விளக்கும் புத்தகம் இது. எனவே இந்தியனான நான் அங்கு சென்றதால் போப் பாண்டவருக்கு பகவத் கீதையைக் கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?'' (கதிரவன் 22.06.1997).
    பொருள் முதல்வாதம் பேசுபவர்களைக் கூட பொருளற்றவர்களாக ஆக்கிவிட்டதே கீதை !
    ஏழையாக இருப்பதற்கும், கீழ் ஜாதியாக இருப்ப தற்கும் கர்ம பலன்தான் காரணம் என்று கீதை சொல்லு வதை ஒப்புக் கொண்டால், கம்யூனிஸ்டக் கட்சி என்ற ஒன்று தேவையா? கம்யூனிஸ்டு கட்சி இந்தியாவில் ஏன் தோல்வியுற்றது என்பது இப்போது விளங்கவில்லையா?
    இந்தக் கொடிய பார்ப்பன நஞ்சை முறித்து, மக்கள் மத்தியில் சமத்துவ சமதர்மச் சித்தாந்தத்தை ஊட்ட இந்நாட்டுக் கம்யூனிஸ்டுகள் பயன்படப்போவதில்லை !
    பெரியாரியல்தான் இந்தச் சமூகத்தைக் காக்கும் மீட்சிப் படகு என்பதை நினைவில் வையுங்கள்.
    (6) குலதர்மம் அழியக் கூடாதா?
    போர்க்களத்தில் நிற்கும் உற்றார் உறவினர்களை அழிக்கத் தயங்குகிறான் அர்ச்சுனன். அழிவது உடல்தான். ஆன்மா அழிவதில்லை என்று உற்சாகப்படுத்துகிறான் கிருஷ்ணன். (அப்படியயன் றால் கொலைக் குற்றவாளி களைத் தண்டிக்கும் சட்டத் தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 307ஆவது பிரிவை எடுத்துவிடலாமா?)
    ஆனால், அர்ச்சுனன் என்ன சொல்லுகிறான்?
    "என் உற்றார் உறவினர்களைக் கொல்லுவது நமது குலத்தையே அழிப்பதாகும். அவ்வாறு அழிப்பதென்றால் நமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். அதனால், இந்தத் தவறைச் செய்பவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள்.'' (கீதை அத்தியாயம் 1 சுலோகம் 39)
    மக்களை அழிப்பது பாவமில்லையாம். ஆண் மக்களை அழித்துவிடுவதால், வீட்டில் பெண்கள் வர்ணக் கலப்புக்கு ஆளாகிவிடுவார்களாம். இதுதான் கீதையின் சாரம்.
    (7) பெண்களைப் பற்றி என்ன கூறுகிறது கீதை?
    பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) இந்தக் கீதையைக் கொளுத்த வேண்டாமா?
    (8) விவேகானந்தர் என்ன கூறுகிறார்?
    கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
    முதலில், மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
    இரண்டாவதாக, கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர்வாழ்ந்த ஒருவரா?
    மூன்றாவதாக, கீதையில் கூறப்படுவது போல குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?
    நான்காவதாக, அர்ச்சுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பனதான் அவை.
    கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குருசேத்ர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
    யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சனை எழுகிறது.
    அர்ச்சுனன் உள்பட ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்ர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை - விவேகானந்தர்.("கீதையைப் பற்றிக் கருத்துகள்'  என்ற நூலில்)
    இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய பராக்கிரமசாலி என்று விவேகானந்தரைப் பற்றி பார்ப்பன வட்டாரம் - இந்துத்துவாக் கூட்டம் பறைசாற்றுகிறதே. அந்த விவேகானந்தர் கீதைப் பற்றி மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறார். இப்படிக் கூறும் விவேகானந்தர் இந்துத்துவவாதிதானே? இதற்கு என்ன பதில்?
    தந்தை பெரியார் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு "விடுதலை'யில் (16.11.1973) தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.
    நமது நாட்டில் நடைபெறுகிற முட்டாள் தனங்களிலும், பச்சை அயோக்கியத்தனங்களிலும் தலை சிறந்த முதல் தரமான காரியங்களில் முதலாவது காரியம் என்னவென்றால், பகவத் கீதை ஒரு காட்டுமிராண்டி, அயோக்கியத்தனம் கொண்ட நூலை, வி­யத்தைப் பிரச்சாரம் செய்வதும், மக்களிடையே பரப்புவதுமாகும். அதன் வண்டவாளத்தை வெளியிட ஆசைப்படுகிறேன். அது வி­யமான ஆராய்ச்சி உள்ளவர்கள் அதில் உள்ள மடமையையும், நமது சமுதாயத்திற்கு கேடான வி­யங்களை உணர்ந்தவர்கள் அருள் கூர்ந்து "விடுதலை' பத்திரிகைக்கு எழுதி அனுப்ப வேண்டுகின்றேன். பிரசுரித்து பிறகு புத்தகமாக்க ஆவலாயிருக்கின்றேன்.
    - 16.11.1973, தந்தை பெரியார், தான் மறைவதற்குச் சரியாக 38 நாள்களுக்கு முன்பு விடுதலையில் விடுத்த அறிக்கை.
    அய்யாவின் இந்த விருப்பத்தினை அவரது உத்தம சீடர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நிறைவேற்றினார். கீதையின் மறுபக்கம் எனும் நூலாக 1998இல் வெளிவந்தது. இதுவரை ஆறு பதிப்புகள் வெளிவந்து இலட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துவிட்டது.
    இப்படி மக்கள் மத்தியில் பேதங்களையும், பகைமை உணர்வுகளையும், சண்டைச் சச்சரவுகளையும் உண்டு பண்ணும் கீதையைத் தடை செய்ய வேண்டும் என்று ருசியாவில் கோரிக்கை எழுந்ததில் என்ன தவறு?

     Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18002

    g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!

    g mail மூலமாக சிலர் அனுப்புகின்ற e mail -களை திறந்து பார்க்கும் போது யாருக்கெல்லாம் அந்த mail அனுப்பப்பட்டுள்ளது என்று நீளமான பட்டியலே, news paper அளவுக்கு, இருக்கும். அவற்றையெல்லாம் கடந்து ...செய்தியை  படிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடும்.
    இம்மாதிரியான பட்டியலை எப்படி தவிர்க்கலாம்? அதாவது யாருக்கெல்லாம் அந்தமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை எப்படி மறைப்பது?

    Mail -ஐ composing செய்ததும், அதை அனுப்ப வழமையாக  To Field -இல் அனுப்பவேண்டியவர்களின் mail ID -க்களை எழுதி Send button -ஐ அழுத்துவோம். அனுப்புவதற்கு இது மட்டுமே  வழி அல்ல!
    மேலும் ... இரு வழிகள் Cc, Bcc என்ற  பெயர்களிலும் உள்ளன.

    முதலில் Cc., மற்றும் Bcc.,  பற்றியும் அவைகளை எவ்வாறு  உபயோகிப்பது என்பது குறித்தும்  தெரிந்துகொள்வோம்.
    Cc: ... யின் விரிவாக்கம் ...  Carbon copy; 
    Bcc: ... யின் விரிவாக்கம் ... Blind carbon copy.

    Cc: ...  Carbon copy -
    ஒரு mail -ஐ  வெவ்வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்காக அனுப்பும்போது, Cc -ஐ, பயன்படுத்துவது நல்லது.
    To field -இல் முதல் நபர் ID- யும்; Cc -யில் மற்றவர் ID யையும் எழுதலாம். இப்படி செய்வதால் mail -ஐ படிப்பவர்கள் இரண்டு (To, Cc) Field -களிலும் உள்ள  mail ID -களை காண முடியும்.
    இதன் உபயோகம் என்னவென்றால், ஒருவிஷயத்தை குறித்து உயர் அதிகாரிக்கு அனுப்பும்  mail -ஐ,  சில கீழ்நிலை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியாக  வேண்டும் என்கிற  பட்சத்தில் To -வில் மேலதிகாரியின் ID -யையும், Cc -யில் மற்றவர்கள்  ID -யையும் எழுதுவதால் mail -ஐ படிக்கின்ற எல்லோருமே, (To, Cc என்ற)   இரண்டு Field -களிலும் உள்ள  mail ID -களை காணுவதால், குறிப்பிட்ட விஷயம் எல்லோருக்கும் தெரியப்படுத்த பட்டு இருப்பதை புரிந்துக்கொள்வார்கள்.
    ஆக, Cc -க்கும், To -க்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.


    Bcc: ... Blind carbon copy-
    இந்த Bcc -யும், Cc -யை போலத்தான்.
    இருப்பினும் Bcc -க்கு  சிறப்புத்தன்மை ஒன்று உள்ளது. 
    To field -ல் ஒன்று அல்லது பல mail ID -கள் கொடுத்து இருந்தால் அவை எல்லாமும், Bcc -யில் கொடுத்திருந்த பல ID -களில் ..... எவர் அந்த mail -ஐ திறந்து படிக்கின்றாரோ,  அவர் ID மட்டுமே தெரியும். மற்றவர்களின் ID -கள் அவருக்கு தேவை அற்றது என்பதால், அவை  தெரியவராமல், மறைக்கப்பட்டு விடும்! இதுவே இதன் சிறப்புத்தன்மை!!

    மேலும், இந்த முறையில் அனுப்புவது பாதுகாப்பானதும் கூட; பலருக்கு அனுப்புகின்ற newsletter போன்ற  செய்தி மடல்களுக்கு இந்த முறையை பயன்படுத்தலாம்.

    Bcc -ஐ பயன்படுத்தும் போது To field -இல் எந்தவொரு  mail ID -யையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கொடுக்க விரும்பினால் நமது ID -யையே கொடுத்துவிடலாம்.

    Saturday, 14 January 2012

    Folder -ஐ Task Bar -ல் எப்படி இணைக்கலாம்?

    பணியின் காரணமாக, குறிப்பிட்ட ஒரு  Folder -ஐ அடிக்கடி திறந்து  பயன்படுத்த வேண்டி வரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த Folder உள்ள இடத்துக்கு (உதாரணமாக My Computer)   அடிக்கடி சென்று, அந்த   Folder -ஐ தேடி, திறப்பது சற்று கடினமாகவே  இருக்கும். 

    அப்படி, அடிக்கடி தேவைப்படுகின்ற Folder-ஐ Task Bar-ல் இணைத்துவிட்டால், அந்த Folder-ஐ பயன்படுத்துவது சுலபமாகி விடும்! 
               
    சரி! அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒரு Folder -ஐ Task Bar -ல் எப்படி இணைக்கலாம்? 

    Task Bar  -ரின் மேல்  Right Click செய்து Toolbars -ஐ select செய்தபின், அதிலிருந்து  New Toolbar... -ஐ  select செய்ய - ஒரு Window திறக்கும். அந்த Window -வில் எந்த Folder -ஐ Task Bar-ல் இணைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து, OK கொடுக்க, Task Bar -ன் வலது பக்கத்தில் அந்த Folder  இப்போது இணைக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்தே தேவையான File -களை திறந்து வேலைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.

    இதை நீக்க வேண்டுமெனில்,  Task Bar  -ரின் மேல் மீண்டும்  Right Click செய்து Toolbars -ஐ தேர்ந்தெடுத்து  அந்த Folder -ரின் அருகிலிருக்கும் Tick - குறியை நீக்கிவிட்டால் அந்த  Folder போயே போய்விடும்!

    Friday, 13 January 2012

    World's biggest Koran (Photos added)

    The completion of the world's largest Koran was hailed as a major achievement for the Afghanistan when it was officially unveiled in the nation's capital.
    Measuring more than 7ft long and 10ft wide, the text's 218 pages are decorated in 30 different calligraphy designs and took almost five years to finish.
    Its inauguration ceremony was held yesterday in front of key religious figures, clerics, scholars and government officials to coincide with the opening of Hakim Nasir Khusraw Balkhi Cultural Center and arts exhibition in Kabul.
    Epic achievement: Mohammad Saber Yaqoti Hussaini Khedri, the 
calligrapher behind the world's biggest copy of the Koran, turns a page 
at yesterday's inauguration ceremony in the Afghan capital Kabul
    Epic achievement: Mohammad Saber Yaqoti Hussaini Khedri, the calligrapher behind the world's biggest copy of the Koran, turns a page at yesterday's inauguration ceremony in the Afghan capital Kabul

    Painstaking: The holy book has been inscribed with 30 different 
calligraphy designs for each of its parts. The work took nearly five 
years to complete
    Painstaking: The holy book has been inscribed with 30 different calligraphy designs for each of its parts. The work took nearly five years to complete.

    The project was inspired and sponsored by His Excellency Alhaj Syed Mansoor Naderi, a well-known religious personality and leader of the Shia Ismailies in Afghanistan, it was reported on Khaama Press.
    Calligrapher Mohammad Saber Yaqoti Hussaini Khedri and his students started the composition in September 2004, which involved at least two years of continuous work for the shafting and archiving.

    All the 30 parts of Koran has been done in 30 different designs. It was finally completed in September 2009.
    Important day: Key religious figures, clerics, scholars and 
government officials admire the text's 218 pages during the ceremony at 
the Hakim Nasir Khusraw Balkhi Cultural Center
    Important day: Key religious figures, clerics, scholars and government officials admire the text's 218 pages during the ceremony at the Hakim Nasir Khusraw Balkhi Cultural Center

    Prophetic: The Koran is a verbatim record of the words God 
revealed to Muhammad through the Angel Gabriel
    Prophetic: The Koran is a verbatim record of the words God revealed to Muhammad through the Angel Gabriel

    VITAL STATISTICS:

    Length: 7ft (228cm); Width (pages open): 10ft (310cm); Pages: 218, 

    Time to completion: 5 years, Calligraphy designs: 30

    Speaking at yesterday's (12 Jan 2012) ceremony, Mansoor Naderi described the completion of the book as a major achievement for the Afghan nation and all Muslims around the world, according to Khaama Press.
    Those behind the project were then handed Appreciation Letters by Afghan Senate House speaker Fazal Hadi Muslimyar.
    The Koran is the central religious text of Islam and is a record of the exact words revealed by God through the Angel Gabriel to Muhammad.
    Muslims believe it was periodically revealed to Muhammad over 23 years before his death at the age of 40 in 632AD.
    It is divided into 114 suras which are classified either as Meccan or Medinan depending upon their place and time of revelation.

    Thursday, 12 January 2012

    Is your pen drive original or fake?


    Pen Drives used to store music, videos or any other data. They're the Portable Storage Devices for many peoples because its very portable other than devices. 
    Now Flash drives also manufactured as fake drives and looks like original one. These duplicate pen drives imported mostly from China and selling in India. The selling price of these type pen drives are at low price. Even 256 GB Flash drives sold for 500 Rs. 
    On computer, it will display only fake size of pen drives. Generally its capacity within 4 GB only and that made with small programs to show bigger capacity. When you copy the files larger than 2 GB, it will struggle to work then dead. So how to check your pen drive is original or fake.

    1. H2Testw is worthy software to check a flash drive is original or not. 

    You can check SD cards and various types of memory cards, too.
    Download this software here  (http://www.ziddu.com/download/17497265/h2testw_1.4.zip.html)
    2. Unzip/Extract the file and run the application file.
    3. Before checking a pen drive, empty the files and folders.
    4. Click Target device and select your removable device.
    5. Click Write+Verify button and wait for your pen drive being checked.
    5. If your pen drive is verified as original one, it will be displayed as “Test finished without errors”


    6. If your pen drive is fake one, it will be displayed as “The media is likely to be defective


    This software displays read/write speed and errors of your USB drive. If your USB device is damaged, you will see some errors. you can select also internal hard disk drives for this verifying method.

    Prevent to buy fake pen drives:

    • Never buy pen drives from unfamiliar persons.
    • Never buy flash drives via online websites. The fake flash drives listed in Ebay.com also with original brand names like as Sony, Kingston, Transcend and etc.
    • Buy only in branded stores and good shops you already known.



    Website : http://sosfakeflash.wordpress.com/2008/09/02/h2testw-14-gold-standard-in-detecting-usb-counterfeit-drives

    American soldiers immoral and illegal action against humanity



    American soldiers urinating on dead Afghan bodies has sparked outrage across the world - with Afghanistan's leaders labelling it as a 'recruitment tool for the Taliban'.
    The 'disgusting' and 'highly reprehensible' 40-second clip shows four men in combat gear standing over the three corpses with their genitals exposed as they relieve themselves.
    The men can be heard joking 'Have a great day, buddy', 'Golden like a shower' and 'Yeahhhh!' as they groan with relief whilst urinating.
    It has sparked anger from Afghans, with top negotiator from President Hamid Karzai's High Peace Council Arsala Rahmani, saying it will have a 'very, very bad impact on peace efforts'.







    Read more: http://www.dailymail.co.uk/news/article-2085378/Disgusting-video-recruitment-tool-Taliban-Outrage-world-footage-emerges-showing-U-S-troops-urinating-dead-Afghan-bodies.html#ixzz1jEsh2gRA