புஸ், பிளேயர்: ஈராக் போரை தவறாக கையாண்டனராம்?!
ஈராக்கிற்கு கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் படை கொண்டு சென்று ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாமை பதவியில் இருந்து நீக்கி, பின்னர் தூக்கிலிட்ட செயலின் செயல்பாடுகளை ஆராய 'பிரிட்டனின் யுத்த விசாரணைக் கமிஷன்' - தனது விசாரணைகளை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
சகல யுத்தங்களையும் அது முடிவடைந்த பின்னர் மதிப்பீடு செய்வதும், அதில் உள்ள நிறை, குறை ஆகியவற்றை பதிவு செய்வதும் பிரிட்டனில் உள்ள வழமை. அந்த வழமையின் அடிப்படையில் நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் ஐ.நாவின் ஆயுதபரிகரண முன்னாள் ஆணையராக செயற்பட்ட சுவீடன் நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கன்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) சாட்சியமளித்தார்.
அமெரிக்க அதிபர் புஸ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் ஆகிய இருவரும் ஈராக் யுத்தத்தை மிகவும் தவறான முறையில் நடத்தி சென்றனர் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை என்று விசாரணையின் போது கன்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) தெரிவித்தார். இரு தலைவர்களும் தாம் செல்வது சரியான யுத்தபாதையே என்ற நம்பிக்கையில் பயணித்தாலும், அதை தவறான பாதையிலேயே நடத்தினர் என்றும் குறிப்பிட்டார். மேலும் சதாமிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில் போரை நியாயப்படுத்த யாதொரு முகாந்திரமும் இல்லை என்பது பலரது கருத்தாகவும் உள்ளது.
2 comments:
தவறையே போராக கையாண்டனர்
சுல்தான், மிக்க நன்றி உங்களின் கருத்துக்கு.
Post a Comment