Saturday, 31 July 2010

கால்சியம் மாத்திரைகள் மாரடைப்பை அதிகரிக்கும்!

மாரடைப்பை அதிகரிக்கும் கால்சியம் மாத்திரைகள்!

எலும்புகளுக்கு வலுவூட்ட உட்கொள்ளப்படும் கால்சியம் மாத்திரைகளால் மாரடைப்புக்கான வாய்ப்புக்கள் அதிகமாவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அயன் ரெய்ட் தலைமையிலான குழுவினர் சுமார் 12,000 பேரிடம் ஆய்வு நடத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.

கால்சியம் மருந்துகள் உண்போருக்கு 20 முதல் 30 சதவீதம் வரை மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்டோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கால்சியம் மருந்துகளை உட்கொண்டு வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

ரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாகும்போது ரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்சனையே மாரடைப்பு அதிகரிக்க காரணமாவதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

மருத்துகளால் ரத்தத்தில் கால்சியம் அளவு மிகவும் அதிகரிப்பதால் அதைத் தடுக்க கால்சியம் அதிகமுள்ள உணவை அருந்துவதே எலும்புப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்கிறது இந்தக் குழு.

ஆனால், இதை இதயவியல் நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர். கால்சியத்தால் மாரடைப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை. இது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தியே எந்த முடிவுக்கும் வர வேண்டும் என்கின்றனர்.

Friday, 30 July 2010

உருகும் கிரீன்லாந்து-கண்களுக்குத்தெரிகிறது!



சுமார் 56 கி.மீ நீளம் கொண்ட கிரீன்லாந்தின் பனித்தீவு உருகி - ஆவி மற்றும் தண்ணீராக மாறிவருவதை, இப்போது கண்களால் பார்க்கப்படும் ஒரு காட்சியாகி விட்டது. ஆம்! பெருந்தொகையான உள்ளுர்வாசிகளும், காலநிலை அவதானிப்பாளர்களும் மற்றும் சுற்றுலா செல்லும் தனிமனிதர்களும் கிரீன்லாந்தின் பனித்தீவு உருகுதலை நேரடியாக பார்த்து அதிசயப்படுகிறார்கள்.

காலநிலைப் பாதிப்பு என்பது பனிமலைகளை உருக செய்யும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அதைப் பலர் "அம்புலிமாமா கதை" என்றே வேடிக்கையாக கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று, அது ஒன்றும் அம்புலிமாமா கதையல்ல; கண் முன் காணும் நிதர்சனம் என்று தெரியவருகிறது.

கடந்த 2008ம் ஆண்டிலேயே இந்தத் தீவு உருகுவதை பார்ப்பதற்கான வெப்காம் (கேமரா) ஒன்றை அமைத்து இருந்தார்கள். நாம் வாழுகின்ற புவியை, நாமே- நமது சுயநலத்துக்காக, வெப்பமாக்கியதற்கான கொடுமை, கணத்திற்குக் கணம் இப்போது உலகத்தின் கண்களுக்கு தெரிகிறது. ஆசியப்பகுதி நாடுகளில் உயருகின்ற கடல் மட்டம் இதனுடைய மறுதாக்கம் என்பதும் கவனிக்கத்தக்கது.

ப‌ப்பா‌ளி‌ இலை-பு‌ற்றுநோ‌ய் மரு‌ந்து

பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து-ப‌ப்பா‌ளி‌ இலை‌யி‌ல்!!

ப‌ப்பா‌ளி‌ இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பதாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. உலகில் பு‌ற்றுநோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக உ‌ள்ளது. அதே சமய‌ம் நாளு‌க்கு நா‌ள் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையும் அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே போ‌கிறது.

மரு‌த்துவ‌ர்களு‌க்கு பெரும் சவாலான ‌வியா‌திக‌ளி‌ல் பு‌ற்றுநோயு‌ம் ஒ‌ன்று. இத‌ற்கு சாதாரண ப‌ப்பா‌ளி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பது த‌ற்போது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது. ப‌ப்பா‌ளி இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய் வைர‌ஸ்களை எ‌தி‌ர்‌க்கு‌ம் டி.எ‌ச்.1 டை‌ப் சைடோ‌கி‌ன்‌ஸ் எ‌ன்னு‌ம் மூல‌க்கூறுக‌ள் உ‌ள்ளன. இது நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை ஊ‌க்கு‌வி‌த்து பு‌ற்று நோ‌‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌க்கு‌ள் வை‌க்‌கிறது. அமெரிக்க, புளோ‌ரிடா ப‌ல்கலை‌க்கழக ஆ‌ய்வு‌க் குழு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள க‌ட்டுரை‌யி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அம்மனம் ஆகும் சங்பரிவாரின் சூழ்ச்சிகள்!?

சங்பரிவாரின் அம்பலமாகும் சூழ்ச்சிகள்!


ஜுலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுடில்லியில் உள்ள "ஹெட்லைன்ஸ் டுடே" என்ற தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தின் எதிரில் சங்பரிவாரைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். சில நிமிடங்களில் பல ஆயிரம் தாதாக்கள் இணைந்ததைத் தொடர்ந்து ஆவேசமாக தாக்குதல் தொடங்கியது. முரட்டுத்தனமாக அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புக் காவலர்கள் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையை எதிர்பாத்திருந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் காவல்துறைக்கும் முறையாக அறிவித்திருந்தனர். இப்படி பெருமளவில் தாக்குதல் நடத்த முயல்வார்கள் என எதிர்பார்க்காததால் காவல்துறையினரும் குறைந்தளவிலேயே வந்திருந்தனர். கலவரக்காரர்கள் அலுவலகம் அமைந்திருந்த தெருவில் ஏற்படுத்திய களேபரத்தின் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் அரண்டு,மிரண்டு ஓடவேண்டியதாயிற்று. பாதுகாப்பு துறையினர் லிப்ட்களை இயங்கவிடாமல் செய்துவிட்டதாலும்,காவல்துறையினர் தடுத்ததாலும் நான்காவது மாடியிலிருந்த தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தினுள் கலவரக்காரர்களால் நுழைய இயலவில்லை. இருப்பினும் முகப்பு அலுவலத்தின் கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கினர்.15 நிமிடத்திற்கு மேல் நடைப்பெற்ற இந்த அநாகரிகமான தாக்குதலுக்குப் பின் டெல்லி காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு என்ன காரணம்?



காவிக்கூட்டத்திற்கும் அதன் தீவிரவாத அமைப்புகளுக்குமிடையே உள்ள கள்ள தொடர்பினை அந்தத் தொலைக்காட்சி சேனல் வெளிப்படுத்தியது. நாட்டின் உத்தமபுத்திரர்களாக, சாமியார்களாக கபட நாடகமாடிய கயவர்களின் போலி வேஷத்தைக் கலைத்து உண்மையை உலகிற்கு அறிவித்தது.


தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலையில் துவங்கி,தென்காசியில் வெள்ளோட்டம் பார்த்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வழியாக மலேகான் சென்று அஜ்மீரை அடைந்த, இந்து தீவிரவாத அமைப்புகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்த நல்ல காரியத்தை செய்ததே தொலைக்காட்சி நிறுவனம் செய்த பாவம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பினைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் அது செய்த குற்றம்.


காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிளவு படுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை எட்டிப்பிடிக்க விழையும் எத்தர்களின் இரகசியக் கூட்டம். அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமார் பங்கேற்றுள்ள விடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. நியாய உணர்வு படைத்த பெருமக்களை இச்செய்திகள் அதிரவைத்துள்ளன. ஏனென்றால் இந்தரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். ஸின் சாதாரண தொண்டரல்ல;அதன் மூத்த தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர்.கஷ்மீரின் அமர்னாத் யாத்திரைக்கு இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நடைப்பெற்ற வன்செயல்களில் திரைமறைவு இயக்குநராக இருந்தவர் இவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் மத்திய செயற்குழுவில் முக்கிய உறுப்பினர். 2006ம் ஆண்டு வரை "சம்பார்க் பிரச்சாரக்".


முஸ்லிம்கள் கூடக்கூடிய இடங்களில் குண்டு வைத்து குழப்பம் விளைவிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கான வெடிமருந்துப்பொருட்களைச் சேகரிக்கும் முறைகள் பற்றியும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பப்பட்டக் காட்சிகள் இந்தரேஷ் குமாருக்கும் சங்பரிவாரின் தீவிரவாத அமைப்பிற்குமுள்ள இணக்கத்தை உறுதி செய்துள்ளது.


நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க. வை தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் ஆற்றல் படைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.


திடுக்கிட வைக்கும் மற்றொரு வெளிப்பாடு என்னவென்றால், பா.ஜ.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இக்கூட்டத்தில் பங்கேற்றதும் இக்கொலைக்காரக் கும்பலைச் சேர்ந்த டெல்லி மருத்துவர் ஒருவர் 2006ம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடைப்பெற்ற, விழா ஒன்றிற்கு வருகை தந்த இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அவர்களைக் கொலை செய்ய முயன்றதுமாகும். சரியான சந்தர்ப்பம் கிடைக்காதக் காரணத்தால், அது முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ள செய்தி ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது.


அதுமட்டுமல்ல, புனேயைச் சேர்ந்த இரசாயனத்துறைப் பேராசிரியர் ஒருவர் சங்பரிவார் அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளித்ததும், டெல்லியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஆர்.பி.சிங் என்பவர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்த ஆயுதங்கள் வாங்கியதும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் தங்களுக்கு இந்திய திருநாட்டின் அரசியல்சாசனத்தில் நம்பிக்கை இல்லை என்று கூடிப்பேசி விவாதித்ததும் வெளிச்சத்திற்கு வந்திருகிறது. வந்துள்ளன வந்துள்ளன
நாட்டின் பல பகுதிகளிலும் நடந்து வரும் நிகழ்வுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிச்சயமாகத் தீவிரவாத அமைப்பு தான் என்பதையும், அது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு தேசவிரோத இயக்கமே என்பதையும் நிரூபித்து வருகின்றன. இந்நிலையில் அந்த அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என ஏன் பிரகடனப்படுத்தவில்லை?. அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?


இந்த ஒளி,ஒலிப்பதிவுகள் அடங்கிய இரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன?

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரகியா தாக்கூருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயானந்த பாண்டே பயன்படுத்திய "லாப்டாப்" கருவியிலிருந்து இவை எடுக்கப்பட்டுள்ளன. தடயவியல் வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்ட இப்பதிவுகள் நீதிமன்றத்தில் சாட்சிகளாக சமர்பிக்கப்பட உள்ளன. இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர் அஸ்கிஷ் கேத்தன். அவர் இச்செய்திகளை வெளியிடக் கூடாது என பல அதிகார மையங்களிலிருந்து பயமுறுத்தல்கள் வந்ததாகக் கூறுகிறார். அனைத்தையும் மீறி துணிவுடன் செயல்பட்ட அவருக்கு நம் பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்க வேண்டும்.


இதேபோன்று கோலாப்பூரில் "ஜி" தொலைக்காட்சி நிலையத்தை வன்செயல் கும்பலொன்று தாக்கியுள்ளது. காரணம் கர்நாடகா ரக்ஷனா வேதிகா இயக்கத்தின் தலைவர் செய்யது மன்சூர் அவர்கள் அங்கு வந்திருந்ததே காரணம்.


"சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்தே தீரும்" என்பது அருள்மறை குரானின் அறிவுரை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்.
போலி சாமியார்களின் வேஷம் கலைந்து வருவதைப் போல், போலி காவிகளின் வேஷமும் விரைவில் கலைந்தே தீரும் என்பது இயற்கையின் நியதி.

இந்துத்துவ பயங்கரவாதமும் அதனை மறைக்கும் இந்திய ஊடகங்களும்,அரசியல், நீதித்துறை, காவல்துறை போன்றவை இவர்களுக்கு பல்லக்கு தூக்குவதையும், இதனால் ஒரு சமூகம் குற்றவாளியென தனிமைப்பட்ட்டு நிற்க வைத்திருப்பதையும் இந்துத்துவத்தின் பயங்கரவாத நிஜ முகம் உங்களுக்கு முழுவதுமாக தெரிய... இங்கே அழுத்தி காணலாம்.

புஸ், பிளேயர்: ஈராக் போரை தவறாக கையாண்டனராம்?!

புஸ், பிளேயர்: ஈராக் போரை தவறாக கையாண்டனராம்?!


ஈராக்கிற்கு கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் படை கொண்டு சென்று ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாமை பதவியில் இருந்து நீக்கி, பின்னர் தூக்கிலிட்ட செயலின் செயல்பாடுகளை ஆராய 'பிரிட்டனின் யுத்த விசாரணைக் கமிஷன்' - தனது விசாரணைகளை சமீபத்தில் தொடங்கியுள்ளது.

சகல யுத்தங்களையும் அது முடிவடைந்த பின்னர் மதிப்பீடு செய்வதும், அதில் உள்ள நிறை, குறை ஆகியவற்றை பதிவு செய்வதும் பிரிட்டனில் உள்ள வழமை. அந்த வழமையின் அடிப்படையில் நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் ஐ.நாவின் ஆயுதபரிகரண முன்னாள் ஆணையராக செயற்பட்ட சுவீடன் நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கன்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) சாட்சியமளித்தார்.

அமெரிக்க அதிபர் புஸ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் ஆகிய இருவரும் ஈராக் யுத்தத்தை மிகவும் தவறான முறையில் நடத்தி சென்றனர் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை என்று விசாரணையின் போது கன்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) தெரிவித்தார். இரு தலைவர்களும் தாம் செல்வது சரியான யுத்தபாதையே என்ற நம்பிக்கையில் பயணித்தாலும், அதை தவறான பாதையிலேயே நடத்தினர் என்றும் குறிப்பிட்டார். மேலும் சதாமிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில் போரை நியாயப்படுத்த யாதொரு முகாந்திரமும் இல்லை என்பது பலரது கருத்தாகவும் உள்ளது.

Wednesday, 28 July 2010

நாய் போல வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்?!

நாய் போல வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்?!

(வீடியோ LINK இணைக்கப்பட்டுள்ளது)

உக்கிரேன் (Ukraine) நாட்டை சேர்ந்த “ஒசான மலய” (Oxana Malaya) என்ற 27 வயது இளம் பெண் எவ்வித மனித நடத்தைகளைகளும் இல்லாமல் முற்றுமுழுதாக நாய்களின் செயல்பாடுகளோடு இருந்து வருவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகின்ற அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள்.

இவளது சோகக்கதை இதுதான்:-

1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப்பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.

ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இவளது குழந்தை பருவத்திலேயே தனது குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள். இங்கு தான் அவ் விபரீதம் அந்த பெண்குழந்தைக்கு தொடங்கியது. பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை - நாய்கள் வளர்க்கும் கொட்டடி ஒன்றில் நாய்களோடு நாய்களாக, நாய்களின் கூட்டிலேயே, 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடத்தைகளை முற்றிலும் மறந்து, நாயின் நடாத்தைகளுக்கு முழுதாக மாறிவிட்டாள்.

நாய்களைப்போலவே குரைப்பது, பாய்வது, நடப்பது, உணவு உண்பது மற்றும் நீர் பருகுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் - விஞ்ஞானிகளின் உதவியுடன் - அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை அந்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருவது மிகவும் வேதனையான செய்தி.

பார்க்க, Video Link:

http://www.youtube.com/watch?v=qyqbnDjId7g&feature=player_embedded

டென்மார்க் தமிழர்களின் விளையாட்டு விழா

டென்மார்க்கில் தமிழர்களின் விளையாட்டு விழா

டென்மார்க் வைலை (VEJLE) நகரில் தமிழர்களின் விளையாட்டு விழா எதிர்வரும் 14.08.2010 நடைபெறவுள்ளது. விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் நேரம் காலை 09.00 மணியாகும். இது குறித்த விளம்பரத்தைக் கீழே காண்க.

அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போர் தகவல்கள்-கசிவு


அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போர் தகவல்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அத்தனையும் அமெரிக்க உளவுப்படையின் ஆட்கள் ஆப்கானிஸ்தானில் சேகரித்தவை. தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக நட்பு நாடுகளை சேர்த்துக் கொண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போர் ஒன்பது ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நேரத்தில் கசிந்துள்ள இந்த தகவல்கள், போரின் போக்கையே மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரில் உதவுவதற்காக அமெரிக்காவிடம் ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி டாலர் வாங்கும் பாகிஸ்தான் மறைமுகமாக தலிபான்களுக்கும் உதவுகிறது என்ற உண்மை ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எப்படி இரட்டை வேடம் போட்டு இரு அரசுகளையும் ஏமாற்றி வருகிறது என்பது சுவாரசியமான கூடுதல் தகவல்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளை திட்டமிட்டு நிறைவேற்றும் பொறுப்பை எஸ் விங் என்ற பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ் விங் 'எவருக்கும் பதில் சொல்ல அவசியமில்லாத வானளாவிய அதிகாரத்துடன் செயல்படுகிறது; அதனிடம் கணக்கு வழக்கு இல்லாமல் ஏராளமாக பணம் புரள்கிறது’ என்பது கசிந்த ரகசியங்களில் ஒன்று.

வியட்நாம் போரின்போது ராணுவத்தின் ரகசிய தகவல்கள் அம்பலமானதன் விளைவே அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக கொதித்தெழுந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் இப்போதும் நடக்க சாத்திய கூறுகள் உள்ளதாக சிலர் கணிக்கின்றனர்.

"விக்கிலீக்ஸ்" (www.wikileaks.com) என்ற இணையதளம் 92 ஆயிரம் ஆவணங்களை கொண்ட இந்த ரகசியங்களை மிகப்பிரபல்யமான மூன்று பத்திரிகைகள் வாயிலாக வெளிக்கொணர வழி வகுத்துள்ளது. அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய ரகசிய நடவடிக்கைகளுக்கு எதிராக உருவானதே இந்த இணையதளம்.

‘வெளிப்படையான நிர்வாகத்தில் மட்டுமே அனைவருக்கும் நீதி கிடைக்கும். அனாவசியமான ரகசியங்கள் தவறுகள் நடக்கவே வாய்ப்பளிக்கும்’ என்பது அந்த இணையதள நிறுவனத்தின் தத்துவம்.

அமெரிக்க போர் விமானம் இராக்கிய அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி 12 பேர் இறந்த காட்சி அந்த விமானத்தின் வீடியோவில் பதிவாகி இருந்ததை வெளியிட்டு பிரபலமானதே இந்த இணையதளம். தற்போது 12 நாடுகளில் தன்னார்வலர்கள் உதவியால் செயல் பட்டுவரும் 'விக்கிலீக்' - ஐ, ஒபாமா அரசு முடக்க எடுக்கும் முயற்சிக்கு உலகெங்கும் உள்ள அரசுகள் மானசீகமான ஆதரவு அளிக்கும் என்பதும் உலகமறிந்த ரகசியம்.

அதேவேளை சம்மந்தப்பட்டவர்களே இப்படியான இரகசியங்களை கசிய விடுவதும் ஓர் இராணுவ உத்தியே என்பதையும் திருவாளர் பொதுஜனம் சிந்திக்க இடமிருக்கிறது.

Monday, 26 July 2010

நபிகள் நாயகம் - அய்யா பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (20.12.1953)

முகமதுநபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன.

முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு, பல கடவுள்கள் இல்லை என்றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப்பற்றி என் கருத்து என்ன என்று? என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். கடவுள் என்று மக்கள் ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டியழுகிறவர்களைவிட, நபி அவர்கள் எவ்வளவோமேலானவர் என்பேன். முதலில் மக்கள், பல கடவுள்கள் என்பது பொய், ஒரு கடவுள்தான் மெய் என்ற நிலைக்கு வரட்டும்; மேற்கொண்டு அப்புறம் சேர்த்துக்கொள்ளலாம். நம் நாட்டுக்கு, நம் மக்களுக்கு இது எவ்வளவு நல்ல உபதேசமென்பதைச் சிந்தியுங்கள்.

அடுத்தபடியாக முகமது நபி அவர்கள் சொன்னது மனித சமுதாயத்தில் மக்களுக்குள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு, பேதா பேதம், வித்தியாசம் இல்லை. யாவரும் சமமான பிறவியே என்று சொன்னார். இதுவும் மிக முக்கியமானதாகும். நம்மிலும் பல பெரியார்கள் இந்தப்படியாகச் சொன்னார்கள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுபோல எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவை வெறும் ஏட்டு அளவிலே இருக்கிறதே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லீம் சமுதாயத்தில் நடப்பிலேயே ஒரே ஆண்டவன் வழிபாடும், மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகிறது. இது அவர்களைப் பொறுத்த மட்டிலுந்தான். அதாவது அவர்கள் மதஸ்தர்களைப் பொறுத்தமட்டிலுந்தான் என்று சொல்லப்பட்டாலுங்கூட, மற்ற மதங்களில் அந்த மதத்தில் கட்டுப்பட்டுள்ளவர்களுக்குள்ளாகவே காட்டப்படும் பேதா பேதங்கள், வித்தியாசங்கள், முஸ்லீம் மதஸ்தர்களுள், அவர்களுக்குள்ளாக காண்பிக்கப்படுவதில்லையல்லவா?

இன்றையதினம் நமக்குள்ளும் இந்த உணர்ச்சி, அதாவது முஸ்லிம்கள் நபி அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், எப்படி ஒரு ஆண்டவன், மக்கள் அனைவரும் ஒருகுலம் என்பதான தன்மை உடையவர்களாக இருக்கிறார்களோ, அதே போன்ற உணர்ச்சியும் கருத்தும் இன்று நமக்குள்ளும் தோன்றிவிட்டது. தவிரவும் இந்த மாதிரியான உணர்ச்சி என்பது இன்றைக்கு ஒரு ஃபேஷனாகவும் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன? நபியவர்கள் உபதேசம் அமலில் இருப்பதேயாகும்.

அடுத்தாற்போல முகமது நபி அவர்கள் விக்கிரக ஆராதனையை அந்தக் காலத்திலேயே மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இதில் மிக வேகமாகவே போயிருக்கிறார். விக்கிரகத்தை முஸ்லீம்கள் தொழக்கூடாது. அப்படி விக்கிரகத்தை வணங்குகிறவன் முஸ்லீமே அல்ல என்று சொல்லி, அந்த அளவுக்கு அவர் உருவ வணக்கத்தைக் கண்டித்து, முஸ்லீம்களை வெறுக்கும்படிச் செய்துள்ளார். இதுவும் மிகவும் பாராட்டத்தக்க, போற்றத்தக்க காரியமாகும் என்பதோடு இவையெல்லாம் நம் மக்கள் பின்பற்றவேண்டிய ஒரு பெரிய படிப்பினை என்பேன். இந்தக் காரியங்களைத் தவிர மற்றும் மிக முக்கியமானதொன்றை நபி அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னவற்றிலே இது மிகவும் முக்கியமாய்க் கவனத்தில் வைக்கவேண்டிய காரியமாகும். என்ன? அவர் சொல்கிறார். நான் என்ன சொல்லியிருந்தாலும், அவற்றில் உனக்குச் சந்தேகம் இருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்! என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தோழர்களே! மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நபி அவர்கள், மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள்; மக்கள் சமுதாயம் ஒரே குலம்; உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக்கூடாது; நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக இன்னொன்றும் சொன்னார்; நான்தான் கடைசி நபி; எனக்குப் பின்னால் நபிகள் (தீர்க்கதரிசிகள்) தோன்றமாட்டார்கள் என்று. அதைப்பற்றி நீங்கள் எப்படிக் கருதினாலும், என்ன முடிவுக்கு வந்தாலும் இன்றைய வரையிலே அவருக்குப் பின்னால் இந்தத்துறைகளில் அவர் சொன்ன கொள்கை, கருத்துகளைவிட மேலானதாகச் சொல்வதற்கு ஒருவரும் தோன்றவே இல்லை. அந்த அளவுக்கு மனித சமுதாயத்தின் எல்லா வாழ்வுத்துறைத் தன்மைகள்பற்றியும் உயர்ந்த தத்துவங்கள் கொண்ட கோட்பாடுகள் சொல்லிவிட்டார் நபி அவர்கள்.

ஏதோ பொருளாதாரத் துறையில் சில பெரியார்கள் சில நூறு வருடங்களுக்கு முன்தோன்றி, பல அரிய கருத்துகளை, பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில் சொல்லியிருக்கிறார்கள். தோழர் ஜீவானந்தம் அவர்கள், அதைப்பற்றியும்கூட நபி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். அது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது என்பதோடு, நபியவர்கள் சொன்னதற்கு மேலாக இதுவரை யாரும் எந்த ஆஸ்திகரும் சொல்லவில்லை.

இந்த விழாவிலிருந்து நாம் என்ன பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நபி அவர்களின் இக் காரியங்களையும் கொள்கைகளையும் நம் மனதில் பதிய வைத்துக் கொண்டு, அந்தப்படி நடக்க நாமும் முயற்சி செய்யவேண்டும்.

மற்றும் தங்கள் மத சம்பந்தமான கோட்பாடுகளில் முஸ்லீம்கள் மற்றவர்களையும் அழைத்து, மற்றவர்களுடைய பாராட்டைப் பெறவேண்டும் என்று கருதுகிறார்களோ, அதேபோல மற்ற மதக்காரர்களும் தங்கள் மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மற்றவர்களை அழைத்து அவர்களின் பாராட்டைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றத்திற்கு வழிதோன்றும்.

20.12.53 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

கடலூர் துறைமுகம் - கரையேறுமா?

கடலூர் துறைமுகம் - கரையேறுமா?


முறையான பராமரிப்பு இல்லாததால் சிதைந்து காணப்படும் கடலூர் துறைமுக ரயில்நிலைய சந்திப்பின் பாதை

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், கடந்த 25 ஆண்டுகளாகச் செயல் இழந்து கிடக்கிறது.
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது கடலூர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுமுன் கடலூரில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தங்கள் வாணிபத்தைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள் (made in Porto-Novo என்ற முத்திரையுடன்), கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மணிலா, சர்க்கரை, இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் என்று ஏராளமானவை கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெங்காயம், வெல்லம், சர்க்கரை, வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
யூரியா, கோதுமை போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ரசாயன மூலப்பொருள்கள், யூரியா உரம் ஆகியவை இறக்குமதி செய்யப் படுகின்றன. 1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது துறைமுக அலுவலகம். கடலூர், நாகைத் துறைமுகங்களுக்கு ஒரே அதிகாரி செயல்படுகிறார். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முகத்துவாரத்தில் படியும் மணலை வாருவதற்கு நிரந்தரமாக செயல்பட்டு வந்த மணல்வாரி இயந்திரம் (டிரட்ஜர்) தற்போது நிரந்தரமாக அகற்றப்பட்டு விட்டது.
சுனாமி மறுவாழ்வுப் பணிகளில், முகத்துவாரத்தில் இருந்து மீன்படிப் படகுகள் நிறுத்தப்படும் உப்பனாறு வரை, சிறிதளவு மணல் அகற்றப்பட்டது. ரூ.15 கோடியில் துறைமுகம் பகுதியில் அலைதாங்கி கற்கள் கொட்டப்பட்டன. எனினும் முகத்துவாரம் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்கிறார்கள் மீனவர்கள். ரயில் நிலையத்தில் இருந்து துறைமுகம் செல்லும் ரயில்பாதை கூட அகலப்பாதையாக மாற்றப்படாமல் சிதைந்து கிடக்கிறது.கடலூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் 0.5 கடல் மைல் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகின்றன. துறைமுகச் செயல்பாடுகளுக்கு வசதியாக இந்தத் துறைமுகத்துக்கு சுமார் 100 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் நாகை, கொளச்சல் துறைமுகங்களுக்கு போதிய நிலங்கள் இல்லை என்றும் துறைமுக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், சென்னை துறைமுகத்தில் இறக்கக் கூடிய சரக்குகளை கடலூரில் இறக்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதில் கொண்டு போக முடியும்.இத்தனை வசதிகள் இருந்தும் கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாமலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமலும் செயலிழந்து கிடக்கிறது. கடலூரில் துறைமுகத்தை யொட்டிய பகுதிகளில் மீன்பிடித்தல், படகுகள் கட்டுதல், சிறிய வர்த்தகக் கப்பல்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளால் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடக்கிறது. மீன்பிடித் தொழிலுக்கு வசதியாகக்கூட கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படவில்லை என்பதுதான் கடலூர் மக்களின் ஆதங்கம்.
தென் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், அதிகப்படியான அரசியல் இயக்கங்களும், அதிக எண்ணிக்கையில் அரசியல்வாதிகளும் நிறைந்ததாக கடலூர் மாவட்டம் திகழ்ந்த போதிலும், பொது நலத்தை எண்ணிப்பார்க்கும் சிறந்த அரசியல் தலைமை கிடைக்காததால், துறைமுகம் உள்ளிட்ட பல சிறந்த திட்டங்களுக்கு முறையாகக் குரல் கொடுக்க நாதியற்றுக் கிடக்கிறது கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும்.
இதுகுறித்து கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசன் கூறுவதாவது:

""கடலூர் துறைமுகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கடல்சார் வாரியத்திடம் உள்ளது. தமிழக கிழக்குக் கடற்கரையோரம் துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் துறைமுகம் நல்ல வசதி கொண்டது. வசதி குறைந்த நாகை துறைமுகத்தில் ஓரளவு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனால், இயற்கையாக அமைந்துள்ள கடலூர் துறைமுகத்தில் அதுவும் இல்லை. அவ்வப்போது வந்து போகும் கப்பல்களால் தற்போது, ஆண்டுக்கு சுமார் ரூ.4 கோடி மட்டுமே வருவாய் கிடைக்கிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடலூர் துறைமுகத்தை விரிவுபடுத்த அரசு திட்டுமிட்டு உள்ளது'' என்கிறார்.

"தொழில், பிச்சை எடுப்பதே !"

"தொழில், பிச்சை எடுப்பதே !"

"யாசகம் கேட்பவர் குதிரை மீது ஏறி வந்து கேட்டாலும், அவருக்கு கொடுங்கள்" என்றும்; "மேல் கை (கொடுக்கும் கை), கீழ் கையை (வாங்கும் கையை) விடச் சிறந்தது" என்றும் இஸ்லாம் உபதேசிக்கிறது.
அதாவது, தர்மம் செய்வதை ஆர்வமூட்டி, மறுமையில் நல்லவற்றை அடைய வழி செய்கிறது இஸ்லாம். உண்மை இவ்வாறிருக்க - தற்போதைய சூழல், நம்மை மிகவும் சலிப்படைய செய்வதால்தான் இப்படி ஒரு தலைப்பே!.

சமீபகாலத்திய பிச்சைக்காரர்கள் பின்பற்றும் முறை ஒருவித marketing strategy போலவே தோற்றம் தருவதோடு நம் சிந்தனைகளையும் பலவாறாக கிளறி விட்டுக்கொண்டு இருக்கிறது . நல்ல தேக ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை உள்ள எத்தனையோ ஆட்கள் நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்பதை வழமையாக கொண்டு இருப்பதை காணும்போது, 'இது ஒரு Lucrative business போலும்' என்று எண்ணத் தோன்றுகிறது.
பிச்சைக்காரர்கள் முன்பெல்லாம் தனி ஆட்களாகத்தான் வருவார்கள். ஆனால், இப்போது மூன்று அல்லது நான்கு பேர்களாக, ஒரு குழு அமைத்துக் கொண்டது போலவே, பிச்சைக்கேட்க வருகிறார்கள். ஒருவருக்கொருவர் உறவினர் என்றும் சொல்லிவிட முடியாது. பல பகுதிகளில் இருந்து வந்து இணைந்து கொண்டவர்களே இவர்கள்! . இந்த குழு - பிச்சை கேட்க ஒரு தெருவில் நுழைந்ததும்- முதல் வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு, அதற்கு எதிர்த்த பக்கத்து வீடு என்று எல்லோர் வீட்டு கதவுகளையும் தட்டுகின்றார்கள். அத்தனை வீட்டிலிருந்தும் காசு வரும்போது, "நாங்கள் மூனு பேர் (அல்லது நாலு பேர்) இருக்கிறோமே" என்கிறார்கள். எல்லோர் வீட்டு ஒட்டுமொத்த கலெக்ஷனையும் வாங்கிக்கொண்டு, அவர்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.
இன்னும் சில பிச்சைக்காரர்கள், நமக்குக் கடன் கொடுத்த கடன்காரர்கள் போல் நம் வீட்டுக் கதவை உடைக்கிறார்கள்! யாரோ எவரோ என்று அவசரமாக வந்து கதவைத் திறந்து பார்த்தால், நிற்பவர் பிச்சைக்காரர்! வீட்டுக்காரரின் முகத்தில் கோபம் கொப்பளிக்கும்; பிச்சைக்காரரோ பல்லை இளிப்பார்.
சில சமயங்களில் நாமே கவனித்து இருக்கலாம்- அதாவது, பிச்சைக்காரர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நிற்பார்; தொழுகை நேரத்திலும், அவரே- பள்ளிவாசலுக்கு வெளியேயும் நிற்பார்; அவரே- ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து கதவை தட்டுவதோடு, வழியில் போவோர் வருவோரையும் விட்டு விடுவதில்லை! (இவர் வழி தனி வழி போலும்!)
குடை மற்றும் பூட்டு repair செய்யும் ஒருவர் இருக்கிறார். வெள்ளிக்கிழமைகளில், தன் நிஜ தொழிலுக்கு லீவு விட்டுவிட்டு, தன் தலையில்- என்ன ஷோக்காக- ஒரு முண்டாசைக் கட்டிக்கொண்டு, "அல்லா! ரசூலுல்லா!" என்று நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்கிறார். அதே ஆளை கடைத் தெருவில் பிச்சை கேட்பதையும் பார்க்கலாம்- சற்று நொண்டி நொண்டி நடந்து வருவார்!
நிரம்ப தைரியம் உள்ள பிச்சைகாரர்களும் இருக்கவே செய்கிறார்கள்- வீட்டின் கதவு திறந்திருந்தால், வீட்டுக்குள்ளேயே உரிமையோடு வந்து விடுவார்கள்! (அவர் தம் உரிமையை நிலைநாட்டுகிறாராம்! !) ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை ஏதோ ஒரு புழு, பூச்சியை போல் கேவலமாகப் பார்க்கிறார்கள். இவர்கள் 'பஞ்சத்துக்கு ஆண்டிகளா அல்லது பரம்பரை ஆண்டிகளா?!' என்று நம்மை அல்லல்பட வைத்து விடுவார்கள். .
சில பிச்சைக்காரர்கள்- very smart ஆகவும் இருக்கிறார்கள். கொடுத்த காசை வாங்கிக்கொண்டு, "மதியம் வரேன், சாப்பாடு கொடுங்கள்" என்று பல்லை இளித்து, உரிமை பாராட்டுவார்கள். இன்னும் சிலர் காசை வாங்கிய பின்னர், பழசான சட்டை அல்லது கைலி இருந்தால் கொடுங்களேன் என்றும் கேட்கிறார்கள்.
சில நேரங்களில் இவர்களின் systems of begging பற்றி ஆராயும்போது, நமக்கே ஆச்சரியம் உண்டாகிறது. பஸ்சில் இருந்து இறங்குகின்றதில் (main bus stand) இருந்து - வழியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் என்று தொடங்கி, high school தெரு, முத்தையா முதலியார் தெரு, மிர்ஜா மியான் தெரு , பெரியத் தெரு, இதற்கு இடைப்பட்ட சந்துகள், முடுக்குகளில் உள்ள வீடுகள், மீராப் பள்ளி தெரு, காஜியார் தெரு என்று இப்படியே போய் - கும்மத் பள்ளி தெருவில் ஒரு round-about செய்துவிட்டு வாத்தியா பள்ளி தெருவில் தன் தொழிலை முடித்தவாறு - அந்த தெருவின் பஸ் நிறுத்தத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு பயணம் மேற்கொண்டு விடுவார்கள். அன்றைக்கு, தீடீரென்று, ஏதும் government bus strike ஏற்பட்டு விட்டால்- வாத்தியா பள்ளி தெருவின் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில்- 30 அல்லது 40 ரூபாய்களை கொடுத்து- main bus stand போய், அங்கிருந்து private root பஸ்சில் பயணித்து விடுவது என்பது வேறு கதை. இவர்கள், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊரை இலக்காக்குபவர்கள் என்றால் மிகையாகாது.

சில வேளைகளில் நம்மிடம் சில்லரை இல்லாதபோது (ஏன், சட்டைப்பையில் சல்லிகாசே இருக்காது!) "சில்லறை இல்லையே" என்று சமாளித்தால், சற்றும் தயங்காமல் இவர்கள் கேட்பது: "நோட்டைத்தாங்க; சில்லறையை நான் தறேன்."
நமக்குக் கோபம் வருமா; சிரிப்பு வருமா? ( ஆனால் நாம், பேந்த பேந்த முழிப்பது என்னவோ உறுதி-ஏனென்றால் நம் சட்டைப்பையில்தான் சல்லிகாசே இல்லையே!).
என்றாவது 50 பைசாதான் சில்லரை இருக்கிறது என்று கொடுத்தால், அதை வாங்காமல், வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள்! அவர்களுக்கு 50 பைசா காசில்லையாம்! "கடைத்தெருவில் 50 பைசாதானே கொடுக்குறாங்க" என்று நாம் கேட்டால், "அது கடைத்தெரு; இது வீடு" என்ற வியாக்கியானம் வேறு!

ரவுசு பார்ட்டியை பற்றி, அதாங்க - இந்த பூம் பூம் மாட்டுக் காரர்களை பற்றி சொல்லாமல் விட்டால் - இந்த பதிவுக்கே மதிப்பு இல்லாமல் போய்விடும். எப்பா! இவர்கள் செய்யும் ரவுசு இருக்கே - ஜக்கம்மாவின் பெயரை சொல்லிக்கொண்டு அடிக்கும் மோளத்தில் (பாவம் அந்த மாடு, இவர் சொல்லுவதற்கு எல்லாம் தலையை -தன் கழுத்து மணி குலுங்க- ஆட்டும்!?) - வீட்டில் தூங்கிகொண்டு இருக்கும் கைக்குழந்தையின் 'வீல்' சத்தம்; வயதானவர்களின் ஆயாசமான நெளிவு; நம்முடைய BP (blood pressure) அநியாயத்துக்கு எகிறிப் போய் (நம் செவிப் பறை கிழிந்து விடுமோ!?) "நிறுத்துயா, அடிக்காதே" என்று தொண்டை கிழிய கத்தினாலும், மாட்டுக்கார அய்யா காதில் வாங்க மாட்டார். ஏதும் கொடுத்து சமாதானப் படுத்தினாலே அடிப்பதை நிறுத்தி - நல்ல செய்தி சொல்லுவார்!! ஒருமுறை- சற்று முரட்டு சுவாபம் உள்ள- என் தம்பி, மாட்டுக்கார அய்யாவோட ரவுசு பொறுக்க முடியாம, ஆட்களை வைத்து பூம் பூம் மாட்டை அய்யாவிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி - சாங்கி (மாட்டுக்கறி business செய்பவர்) இடம் அனுப்ப ஏற்ப்பாடு செய்து விட்டான். விஷயம், என் காதுக்கு வர- என் தம்பியை கூப்பிட்டு 'பிச்சை எடுக்க வந்தவரிடம், நீ என்ன மல்லுக்கு நிக்கிறே' என்று சத்தம் போட, என் தம்பி ' இவன் எப்பொழுதுமே இந்த, நம் தெருவுக்குள் வரக்கூடாது; இதற்கு ஒத்துக்கொண்டால் மாட்டை திருப்பி தந்து விடலாம்- இல்லை என்றால் சாங்கியின் கசாப்பு கடை தான்' என்றான்-குரூரமாக சிரித்துக்கொண்டு. ஒருவழியாக சமாதானம் செய்து பிரச்னையை தீர்த்து.... இன்றைய திகதி வரை, அந்த பூம் பூம் மாட்டுக்காரர் நம் தெருவுக்கு மட்டும் வராமல் - மற்றைய தெருவிலெல்லாம், பூம் பூம் மாட்டோடு, வலம்வந்து மோளம் தட்டி பிச்சை எடுத்து வளமாக இருந்து வருகிறார்.
சில பிச்சைக்காரர்கள், தமது 'தொழிலை' முடித்துக்கொண்டு ஒதுங்குமிடம் சத்திரம்; அங்கு சாராயம் மற்றும் கஞ்சா எல்லாம் நடப்பதாக சிலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

சென்னை மண்ணடியில் ஒரு தாயும் மகளும் போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சை வாங்கிக் குவிக்கும் காசில், வட்டித் தொழில் செய்து பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்களாம்!
கிழவி ஒருத்தி சுமார் நாற்பது ஆண்டுகளாக அங்கப்ப நாயக்கன் தெருவில் 'பிச்சை பிழைப்பு' நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.
நம் ஊர்களில் வசூலாகும் பிச்சை-பெருந்-தொகைகளை கொண்டு, நம்மை சந்தித்து விட்டு போகும் பிச்சைக்காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ?

நமது பலவீனத்தை, இவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? அல்லது, நமக்கு இரக்க உணர்வு என்பதே இல்லாமல் போக வேண்டுமா?

Sunday, 25 July 2010

இந்து தீவிரவாத உண்மைகள் - இனி மெல்ல மெல்ல வெளி வரும்!

“இந்து தீவிரவாதம்” என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.
முஸ்லிம்களின் புனிதத்தலமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைதுசெய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது “இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது” – என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.
2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதிராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதிராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதிராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.
அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஸ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துல் சமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஸ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது. கைகாட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும்.

ஹைதிராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார். 2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஸ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில்ள் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன. இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவன்னம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன” – என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.
மெக்கா மசூதி, மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ இப்போதுதான் ஆலோசித்தி வருகிறது .

2008 செப்டம்பர் 29இல் மலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.
4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. “இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.
மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு “கர்கரே சந்திப்பு” என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன – முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை. ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.
அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS. 68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது.
இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஸ்ட்ரா , இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் “கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மலேகான், சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.
தமிழாக்கம்: பிரபாகரன்

Saturday, 24 July 2010

'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் மிருகங்கள்

'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் மிருகங்கள்


''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''

''ஐயோ வேணாம் சாமீ...''

''ஏய், விடுடி... துணியை விடுடி...''

''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''

''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''


இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளாவில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!
Image

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களையும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராளமாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் 'அன்வேஷணம்' (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட... விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.Image

சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண்களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்...'' என கொதித்தார்.

Imageஅந்த வக்கிர கும்பலின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட செங்கோட்டைவாசி ஒருவர், ''ரெண்டு மாசம் முந்தி என் மனைவியுடன் கும்பாவுருட்டி அருவிக்குப் போனேன். அப்ப 'வன சம்ரக்ஷண சமிதி' உறுப்பினர்கள் எங்களைப் பார்த்த பார்வையே சரியில்லை. அங்கிருந்து நாங்கள் காட்டுக்குள் நடந்து போகும்போது பின்னாலேயே வந்த வர்கள் என்னை மிரட்டி, 'இவ யாரு? தமிழ்நாட்டில் இருந்து தள்ளிட்டு வந்துருக்கியா?'ன்னு அசிங்கமா கேட்டாங்க. 'இவ என் மனைவி'ன்னு சொன்னதும், ஒருத்தன் என் கன்னத்தில் 'பளார்'னு அடிச்சான். இன்னொருத்தன் என் மனைவியின் சேலையைப் பிடிச்சு இழுக்க... நாங்க ரெண்டு பேரும் கதறினோம். நல்லவேளையா, அந்த சமயத்தில் நாலஞ்சு தமிழ் ஆட்கள் அருவியில் குளிக்கறதுக்காக, தூரத்தில் வந்ததால், எங்களை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. தப்பிச்சோம், பொழைச்சோம்னு உடனே கிளம்பிட்டோம். இது பத்தி தென்மலை போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க அதை வாங்கலை. கோர்ட், கேஸ்னு அலையணுமேன்னு அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டோம்...'' என்றார், இன்னும்கூட அதிர்ச்சி விலகாமல்.

அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை...'' என்று ஆதங்கப்பட்டார்.

கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ''கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!'' என்று உறுதி கொடுத்தார்.

'வனத்துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!



நன்றி : ஜூவி

Thursday, 22 July 2010

29-year-old Saudi Possessed by Jinn?

Possessed by jinn? 29-year-old in chains for six years

Turki, 29, remains fettered in the basement home of his divorced mother in Makkah. (AN photo by Badea Abu Al-Naja)

By BADEA ABU AL-NAJA | ARAB NEWS

MAKKAH: A 29-year-old Saudi in Makkah has been living in chains for over six years because he is, according to his father, possessed by a female jinn who refuses to leave him.

“Medical doctors and religious sheikhs have failed to diagnose my son. When he has fits, he has convulsions and his entire body twists and his eyes become completely white. Then the voice of a woman can be heard coming from him,” said the father of the young man identified only as Turki.

“When my son first began suffering from this problem I took him to sheikhs to recite Qur’an on him but most of them became scared when they heard the female voice telling them that she was a royal jinn and that no one can exorcise her unless Turki dies,” he said.

The father said a sheikh advised him to tie his son’s arms and legs with iron chains and to read Qur’an on him. “We did this. My son became quiet but is totally unaware of what is happening around him. He does not talk and is now unable to harm anyone,” he added.

The man divorced Turki’s mother some time before he was possessed. His wife now lives with the couple’s four children in a two-room apartment.

“I also used to be possessed and this began when I was nine. I used to see a woman who would at times appear very beautiful and at times extremely ugly. I also used to see her sometimes surrounded by fire and sometimes with animal limbs,” he said.

The man said he suffered from this for over 40 years until a sheikh finally cured him. “My happiness was, however, short-lived because my son is now afflicted with a similar problem,” he added.

Muhammad Al-Suhali, professor of Shariah at Umm Al-Qura University in Makkah and a member of the National Society for Human Rights (NSHR), said he visited the young man and found him to be in a miserable condition.

“Turki was in a semi coma. He did not know what was going around him. He could not eat, drink or use the toilet without the help of others,” he said.

Al-Suhali said when he started reading some Qur’anic verses, Turki became furious and started shaking until he was about to fall out of his bed.

“When I stopped reciting, he became quiet again but was distant and unaware of what was happening,” he said.

He said the family is very poor. “The young man lives with his mother in the basement of an old building. They only have two small rooms, a bathroom and a kitchen. Their furniture is old and they live in very primitive conditions,” he said.

He called on the Ministry of Social Affairs to provide them with better accommodation and to include Turki in its social security program.

“The whole family lives on SR850 a month that they receive in social security,” he said.

Al-Suhali commended the patience and determination of Turki’s young wife, who remains with him in spite of his condition.

Source: http://arabnews.com/saudiarabia/article87978.ece

Tuesday, 20 July 2010

ஆசிய செஸ் போட்டி: சாம்பியன், நெய்வேலி - ஸ்ரீஜா சேஷாத்ரி

ஆசிய செஸ்: நெய்வேலி ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன்



சீனாவில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய செஸ் போட்டியில் நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி தங்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆசிய இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் இம்மாதம் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 27 நாடுகளில் இருந்து 426 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 52 பேர் பங்ககேற்றனர். அவர்களில் 15 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் 14 நாடுகளில் இருந்து 27 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி, 7 புள்ளிகள் பெற்று ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இப்போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஆசிய இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற போது, 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கெனவே துருக்கியில் நடந்த உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். அதில் அவர் 20-வது இடத்தை பெற்றார். சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் செஸ் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரீஸில் நடைபெறவுள்ள உலக இளையோருக்கான செஸ் போட்டியிலும் ஸ்ரீஜா சேஷாத்ரி பங்கேற்கவுள்ளார்.

Sunday, 18 July 2010

மரணத்தின் விளிம்பில் இருப்போரை பராமரிப்பது குறித்த ஆய்வு:

மரணத்தின் விளிம்பில் இருப்போரை குறித்த ஆய்வு:

மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்போரை- சரியான முறையில்- பராமரித்து அவர்களின் உயிர் அமைதியாகப் பிரிவதற்குரிய நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்கும் நாடுகளில் சிறந்தவை எவை என்ற ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 40 நாடுகளை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உள்ள பொருளியல் நுண்ணறிவுத்துறை மேற்கண்ட ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின், 40 நாடுகளின் பட்டியலில், இந்தியா கடைசி மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் வருமாறு:

01. இங்கிலாந்து

02. அவுஸ்திரேலியா

03. நியூசிலாந்து

04. அயர்லாந்து

05. பெல்ஜியம்

06. ஆஸ்திரியா

07. கொலன்ட்

08. ஜேர்மனி

09. கனடா

10. அமெரிக்கா

எங்கே போய்க்கொண்டிருக்கிறது நமது பாரத கலாச்சாரம்?

முதியவர்களையும், வயதான பெற்றோர்களையும் பராமரிக்க தவறும் நாமும்..... முதிய வயதை அடைய மாட்டோமா? அப்பொழுது, நமக்கும் - இதே நிலை தானா!


இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு

CBI கண்காணிப்பில் RSS - இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு
Source: http://www.satyamargam.com/1503


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த அஷோக் பெர்ரி, அஷோக் வர்ஷ்னே ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவ்விருவரும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியாகிய தேவேந்தர் குப்தாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இரு மூத்த செயல்வீரர்களின் விசாரணை அறிக்கை, தற்போது CNN-IBN நிருபர்கள் கைவசமுள்ளது. முக்கியக் குற்றவாளியோடு அவ்விருவருக்கும் தொடர்புள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், ஆர்.எஸ்.எஸுக்குப் புதிய தலைவலியாக இப்போது உருவாகியுள்ளவர் அதனுடைய தலைமைச் செயற்குழுவின் உறுப்பினரும் மூத்தத் தொண்டருமான இந்திரேஷ் குமார் என்பவராவார். இவருக்குத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புடைய பல குற்றவாளிகளோடு நெருக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தோரில் உள்ள 12 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அப்பன்னிருவரும் தற்போது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களும் இந்திரேஷுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸீபிஐ எனும் புலனாய்வுத்துறை இத்தகவல்களை வெளியே விடாமல் இருப்பதற்கு எவ்வளவோ முயன்றும் இத்தகவல் இப்போது கசிந்து வெளிவந்திருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகப் பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதால் சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸின் உயர்மட்டத் தலைவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டும் கட்டாயத்துக்குள்ளாயினர்.

கூட்டத்திற்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், "சங் பரிவாரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்" என்று வாக்குறுதியளித்தார்.

"நாங்கள் எவ்வித விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், அதில் எங்களைக் களங்கப் படுத்தும் முயற்சியோ முறைக்கேடோ இருக்கக் கூடாது" என்று ராம் மாதவ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

2007ஆம் ஆண்டு மே 18 அன்று ஹைதராபாத் பழைய நகரப் பகுதியிலுள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 பேர் மாண்டனர். குண்டு வெடிப்பு என்றால் உடனேயே கைது செய்யப் படுவதற்கு முஸ்லிம்களுக்கா பஞ்சம்? "மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள்" என்பதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரைக் கைது செய்து வழக்கு ஜோடித்தது காவல்துறை. வழக்கு நடந்தது. காவல்துறையின்மீது காறித் துப்பாத குறையாக, "நால்வரும் அப்பாவிகள்" என நீதிபதி தீர்ப்பளித்து விடுவித்தார்.

அதற்கு முன்னரே, மக்கா மஸ்ஜித் வழக்கை ஸீபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கைக் குரல் உயர்ந்தது. மஸ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்திலும் தவ்ஹீது ஜமாஅத் போராட்டம் நடத்தியது. முதலாவது நாடகம் முடிவுக்கு வந்தது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு ஸீபீஐயிடம் ஒப்படைக்கப் பட்டது.

இப்போது, அந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஏற்கனவே கைதாகியுள்ள தேவேந்திர குப்தாவுக்கு அதே குண்டு வெடிப்பில் வர்ஷனேயும் பெர்ரியும் முழு ஒத்துழைப்பு நல்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 21முதல் ஜுன் 25வரை வர்ஷ்னே, பெர்ரி மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய மூவர் மீதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர்.

இவ்விசாரணையின்போது மூவரும் தாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள்தாம் என்பதை ஒப்புகொண்டதோடு, தாங்கள் கான்பூர், அயோத்தி, மற்றும் ஃபைஸாபாதில் தனியாகச் சந்தித்ததையும் வெளிபடுத்தியுள்ளனர். ஆயினும் வர்ஷ்னேவும் பெர்ரியும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புச் சதியில் தங்களிருவருக்கும் பங்கில்லை என்று மறுத்தனர்.

விடை காணமுடியாத வினாக்கள்:

"ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை ஏதும் நடக்கவில்லை" என்று ஸீபீஐ புலனாய்வுத்துறை மூலம் தொடர்ந்து அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது உண்மை; அந்த விசாரணையின் ஆவணங்கள் தங்கள் கைவசம் உள்ளன என IBN-CNN நிருபர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். இந்த முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஸீபீஐயின் 'விசாரணை முறை'யைப் பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன:

  1. முதலாவதாக, குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி தேவேந்திர குப்தாவின் முன்னிலையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் காரர்களான வர்ஷ்னேயும் பெர்ரியும் விசாரணை செய்யப்பட்டது ஏன்?

  2. தேவேந்திர குப்தாவிற்கு இவ்வருவரும் ஸிம் கார்டு மற்றும் தங்குமிடம் போன்ற இதர முக்கிய வசதிகள் ஏற்பாடு செய்தபோது, அவருடைய குற்றப் பின்னணி இவ்விருவருக்கும் தெரியாதா?

  3. இந்தோரில் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்கள், மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸாத்வீ பிரக்யா தாகூரோடு தொடர்புடையவர்களா?

  4. ஆர்.எஸ்.எஸ்ஸின் மடியில் கனமில்லை என்றால் அவர்களது உயர்மட்டத் தலைவர்களின் அவசரக் கூட்டங்கள் தில்லியிலும் இராஜஸ்தானிலும் நடைபெற வேண்டிய கட்டாயம் என்ன?

இந்துத்துவத் தீவிரவாதம் என்பதை மத்திய அரசு இந்நேரம் பார்த்து வெளிக்கொணர்வது, தம் தொண்டர்களைச் செயலிழக்கச் செய்யப்படும் உத்தி என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் இப்போதைய அச்சங் கலந்த குற்றச்சாட்டு. அதன் தொண்டர்கள் தீவிரவாதிகளோடு கலந்து களத்தில் நிற்பதைக் கண்ணாரக் கண்டு கொண்டே அந்த யதார்த்ததை அச்சம் எனும் முகமூடியைப் போட்டு மூடிக் கொள்ளப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.

கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற சங்பரிவார், தீவிரவாதிகளுடனான இந்திரேஷ் குமாரின் தொடர்பை வெளியிட்ட ஐபிஎன்-ஸீஎன்என் தொலைக்காட்சி நிலையத்தைத் தாக்குவதற்காகத் தன் தொண்டர்களை இன்று அனுப்பி வைத்துத் தன் உண்மை முகத்தைச் சற்றே வெளிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், தீவிரவாதப் பின்னணி உள்ளவர்களோடு எந்த மாதிரியான அணுக்கத்தைக் கடைப்பிடிப்பது? என்பதுதான் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் எதிர் நோக்கும் தற்போதைய தலையாயக் கேள்வி.

“ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்!?

“ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்!?

ஆசிரியை 5-வது வகுப்பில் இருந்து  1-ம் வகுப்புக்கு மாற்றினார்:    5-ம் வகுப்பு மாணவி    தீக்குளித்து தற்கொலை;    “ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்


நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.

பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார். அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறினாள். ஆசிரியை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தும் ஊஞ்சல் வார்த்தையை அபினாவால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவி அபினாவை கண்டித்தார்.

படிக்க தெரியாத நீ 5-ம் வகுப்புக்கு தேவையில்லை, பேசாமல் 1-ம் வகுப்புக்கு சென்று விடு என்று கூறி அபினாவை வெளியில் அனுப்பினார். வகுப்பறையில் சக மாணவ- மாணவிகள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதை அபினாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அவள் வீடு திரும்பினாள்.

நேற்று காலையில் அபினா பள்ளிக்கு புறப்படாமல் விரக்தியுடன் வீட்டில் இருந்தாள். பெற்றோர் அவளிடம் ஏன், பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய், யாராவது அடித்தார்களா? என்று கேட்டனர். அப்போது அபினா நடந்த சம்பவங்களை கூறி கண்ணீர் வடித்தாள். இதனால் பெற்றோர், அவளை வற்புறுத்தாமல் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றனர்.

அபினா வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணையை பாலித்தீன் பையில் ஊற்றினாள். பின்னர், வீட்டுக்கு வெளியில் வந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாள். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அபினா, உடல் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கீழே விழுந்தாள்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அபினாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அபினா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Don't be afraid of Islam, says Al-Sudais

Don't be afraid of Islam, says Al-Sudais

Sheikh Abdul Rahman Al-Sudais speaks after inaugurating the Tauheedul Islam Mosque in Blackburn, UK, on Friday. Lord Adam Patel is on his right.

Source: http://arabnews.com/saudiarabia/article85980.ece

The imam of the Grand Mosque in Makkah told the world not to be afraid of Islam and Muslims, adding that Islam represents a message of peace, goodness and tolerance.

Sheikh Abdul Rahman Al-Sudais made the announcement while delivering his Friday sermon at the Tauheedul Islam Mosque in Blackburn, Lancashire, UK.

The new Tauheedul Islam Mosque is the largest in Lancashire and cost 3.5 million pounds ($5.37 million). Qatar's royal family provided an initial donation (1.5 million pounds) for the basic construction of the mosque, with the remainder generated from the Blackburn community. The community had outgrown the much smaller mosque, which was established at the same site in the 1960s.

In his sermon, Al-Sudais said: "Islam came to protect the interests of humanity, prevent evils and build bridges with all communities. It offers a great message of mercy and tolerance."

The Makkah imam urged Muslims living in Western countries to abide by the laws of the countries where they reside. "You should be a positive and constructive factor in the community you live and should not involve yourselves in activities that would undermine its security and stability," the Saudi Press Agency quoted Al-Sudais as saying.

Al-Sudais asked Muslims to learn from the life and teachings of the Prophet Muhammad (peace be upon him), who used to visit his Jewish neighbor. "When the Prophet died his armor was kept with a Jew as a security," he said, urging Muslims to establish good relations with non-Muslims. "This is the best way to attract them to Islam."

Al-Sudais said Muslims living in the West should serve as ambassadors of their religion. "You should uphold the great Islamic values while dealing with Muslims as well as non-Muslims and should not engage in any corrupt or unjust practices."

Al-Sudais hoped that the new mosque, which has taken six years to complete, would serve as a source of goodness, light and guidance for the entire mankind.

Lord Adam Patel, president of the mosque, emphasized the importance of the mosque. "In 21st century Britain, the role of the masjid is as important as it was at the time of our Prophet Muhammad (pbuh)," he said.

Patel said the mosque would work to advance the Islamic faith through the provision of a wide range of spiritual, educational and social services.

"Our vision is to become a center of excellence for Islamic learning and practice providing a beacon for both Muslims and other faith communities who wish to gain a deeper knowledge and understanding of Islam," he said.

He thanked Al-Sudais for coming to Blackburn all the way from Makkah to open the mosque.

The Makkah imam later visited an Islamic school for girls adjacent to the mosque. "Women have a great place in Islam," he said, urging Muslim men to take care to their women. "I am quite happy to meet Muslim girls living in this part of the world who uphold their religion and Islamic values with pride and wear the hijab. It does not prevent them from taking part in different fields of life."

He commended the school authorities for their efforts to provide proper Islamic education to their children.

Student Saeeda Patel, who welcomed Al-Sudais, described him as a model for millions of Muslims around the world being the imam of the Grand Mosque, which houses the Holy Kaaba to which Muslims all over the world turn when praying. "Our school, which was established 25 years ago, is one of the leading Islamic schools in the UK," she said. There are 430 students now. It is the only government-funded Islamic girls high school in the northwest of England.

Saturday, 17 July 2010

Saudi Woman Rescued from Sudanese Kidnapper

Source: http://arabnews.com/saudiarabia/article85042.ece

JEDDAH: Interpol officers rescued a 52-year-old Saudi woman from a Sudanese shepherd who took her to his country in 2004 and kept her there until recently, local Arabic daily Al-Watan reported on Thursday.

According to the newspaper, the kidnapper identified as Y. Ismail convinced the Saudi woman, who he was working for, that treatment was available in his country for her mentally ill daughter.

She fell for the trick and sold her gold ornaments for SR60,000 before leaving her home in Badr, 150km southwest of Madinah.

She then accompanied him to his hometown of Port Sudan, where he took all her money and locked her up in his home for two years. He then blackmailed her family for a ransom.

The newspaper said the 32-year-old shepherd took the woman to Jeddah, where he told the Sudanese consulate that she was his wife who had lost her Sudanese passport.

The consulate issued him with an emergency exit visa and the two took the ship to Port Sudan, before he contacted her brother for ransom money.

The newspaper said her brother refused to pay and called the police instead.

The shepherd was arrested this year with Interpol’s help and deported to the Kingdom where he reportedly confessed to his crime. He is now in prison awaiting trial.

Friday, 16 July 2010

செல்போன் (ஆண்)டவர்களும் நோய்களும்

செல்போன் (ஆண்)டவர்களால் ஏற்படும் நோய்கள்: மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு ..... இத்தியாதி, இத்தியாதி.

நகரெங்கும் வித விதமாய் வியாபித்து நிற்கும் செல்போன் (ஆண்) டவர்களால் உயிருக்கே கேடு என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக தெரிந்தாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த டவர்கள் உமிழும் கதிர் வீச்சு காரணமாக, டவர்களின் அருகாமையில் வசிப்பவர்களுக்கு மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார். இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் பல இடங்களில் தம் வீட்டுக்கூரைகளை செல்போன் டவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் பலர். வாடகையாக பணத்தை வாங்கும் இவர்கள் , மரணத்தையும் மறைமுகமாக வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்த்து- விழித்துக் கொள்ளவே மாட்டார்களா?

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல்-
மஸ்ஜிதுன் நபவி-அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் (Canadian Daawah Association) அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.


"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

Thursday, 15 July 2010

சர்க்கரை நோய்: மூன்று மாதங்களுக்கு ஒரு ஊசி

சர்க்கரை நோய் மூன்று மாதங்களுக்கு ஒரு ஊசி போதும் புதிய கண்டுபிடிப்பு

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒரு முறை போட்டுக் கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை இந்திய மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால், குளுக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம்.இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம். அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இதுபற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் சுரோலியா கூறியதாவது (சுப்ராமோல்க்யூலர் இன்சுலின் அசெம்ப்ளி ) என்ற ரசாயனத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன், ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளி போட்டுக் கொள்ள வேண்டும் மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம் வரை இருக்கும். அதிகபட்சமாக 120 நாட்கள் (4 மாதங்கள்) வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும்.

இப்போது தினசரி அல்லது 2 நாளுக்கு ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டாலும், சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர். இந்த வேதனையை மாற்றும் என்றார்.உலகம் முழுவதும் இப்போது 20 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்