Toilet - இங்கே, சிலர் செய்யும் விஷம(அழிச்சாட்டிய)ங்களின் தாக்கமே இந்த பதிவு!
இந்த பதிவை, வெளியிடலாமா / வேண்டாமா!... என்றுதான், முதலில், தோன்றியது. காரணம், இங்கு பகிர்ந்திருக்கும் விஷயங்களும், படங்களும் பலருக்கு அருவெறுப்பையும், பயங்கரத்தையும் உண்டாக்கலாம். இருப்பினும், எல்லோருக்குமே அத்தியாவசிய அறிவுரையாகவும், அதோடு, Toilet -டில் விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள் புரியும் ஆட்களுக்கு எச்சரிக்கையாகவும் அமையவேண்டும் என்கிற நோக்கத்தில், பதிவிட்டே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்ததின் விளைவே இப்பதிவு.
சிறுவயதில் Asian / Bombay Toilet Sink என்று தரையோடு பதிக்கப்பட்ட
கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. அதில் வயதானவர்கள், குறிப்பாக
முழங்கால் வலி உள்ளவர்கள், குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே,
தொடர்ந்து 'Sitting Type Toilet' அதாவது, 'Western Toilet Sink'
பிரபலம் ஆனது. வசதியாக, ஏதோ, வரவேற்பறை நாற்காலியில் 'ஜம்மென்று' அமர்ந்திருப்பது போல அமர்ந்து
கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இன்றி ஆசுவாசப்படுத்தி அமர்ந்திருக்கலாம். இதனால், சிரமம் என்பது ஒரு பொருட்டல்ல என்றானது.
இப்படியான சொகுசு Sitting Type Toilet வந்த பிறகுதான்...
'போனோமா-வந்தோமா' என்றில்லாமல், Walkman, Daily & Weekly Magazines, Office Files, Music Key Board போதாகுறைக்கு Lap Top உட்பட
டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை
அதிகரிக்க ஆரம்பித்தது! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும்
இல்லாமல் தனிமையில் அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த
முடிகிறதாம்..! என்ன கொடுமை!
மேற்குறிப்பிட்ட கூத்தெல்லாம் அரங்கேறுவது - வீட்டில் இருக்கின்ற அல்லது
Star Hotel Room -ல் உள்ள படுசுத்தமான Sitting Type Toilet -டில் மட்டும்தான்.
மற்றபடி Office, College, Railways, மற்றும் Public Toilet -களில் உள்ள Sitting Type Toilets என்றால் அதில் உட்கார எவருக்கும் மனமே வராது! காரணம், அதை பெரும்பான்மையானோர் முறையாக உபயோகிப்பது இல்லை / உபயோகிக்க தெரியவில்லை என்று தான் கொள்ளவேண்டும்.
முக்கியமாக, (பீங்கான்) தொட்டியின் மீதுள்ள Plastic Seat Cover -ஐ, யாருமே, சுத்தமாக வைத்திருப்பது இல்லை! சிறுநீர் கழிக்க மட்டும் Toilet -டை உபயோகிப்பவர்கள், Seat Cover -ஐ, மேலே தூக்கி நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன் பின்னர்
தன் இயற்கை தேவையை நிறைவேற்றும் பொறுமையோ அல்லது பழக்கமோ எவருக்கும் இருப்பதில்லை. நின்றவாறே... கழித்துவிட்டு... அந்த Plastic Seat Cover -ஐ, Nasty பண்ணிவிடுவதில் பலருக்கு என்னவோ ஒரு ஆனந்தம்!
சரி.... இதை, 'அடக்கி வைக்க முடியாத அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன்
தவறுதானே! சற்று தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரலாமே? அடுத்து வருபவர்
எப்படி இதில் அமர்வார்?" என்கிற லஜ்ஜை/ பொதுநலம்/பொறுப்புணர்வு என்கிற எதுவுமே கிஞ்சிற்றும் இல்லாமல் அப்படியே வெளியில் வந்து விடுவார். இதுபோன்ற தான்தோன்றி பேர்வழிகள் இனியாவது திருந்த வேண்டும்!
சுத்தத்தை பேணக்கூடியவர்கள் (தவிர்க்க முடியாத சமயங்களில்) Bus Stand / கடை வீதி போன்ற இடங்களில் உள்ள Public Toilets -களை உபயோகிப்பதாக இருந்தால், இரண்டொரு ரூபாய்களை செலவு செய்து கடைகளில் இருந்து பத்திரிக்கைகளை வாங்கிகொண்டு Toilet -இன் உள்ளே போவது உத்தமம்! பீங்கான் தொட்டியின் (Seating Cover உள்ளதோ/இல்லையோ) மேற்புற வளைவின் மீது தண்ணீர் ஊற்றி, கையோடு வைத்திருக்கும் பத்திரிக்கையிலிருந்து சற்று கிழித்து மேற்புற வளைவை துடைத்துவிட்டு, அப்பத்திரிக்கையை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பரத்தி வைத்தப்பிறகு, அமர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றலாம்.
இன்னும் சிலர் எதற்குமே கவலைப்படாமல் செருப்பு அல்லது ஷூ காலுடன் அந்த பீங்கான் தொட்டியின் வளைவின் மீது ஏறி (கீழுள்ள வலதுபுற படத்தில் உள்ளது போன்று) அமர்ந்து, அந்த Sitting Type Toilet -டை
அந்தக்கால Bombay Toilet போல உபயோகப்படுத்துவர்!
.
.
மேலே குறிப்பிட்ட 'அவரை' தொடர்ந்து, மேலும், உள்ளே செல்வோர், அவ்வளைவின் மேல் செ
ஆம்! இவ்வகை பீங்கான் தொட்டிகள் மேற்புறம் அகன்றும் அடியில் குறுகலாகவும் வடிவமைப்பட்டுள்ளது. கால்களை தரையில் ஊன்றி இத்தொட்டியின் மேல், முறையாக, அமர்வதால் உடலின் எடையானது (பீங்கான்) தொட்டியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை; மாறாக, உடல் எடையானது கால்கள் மூலமாக பரவி (பூமிக்கு) சென்று விடுகிறது.
ஆனால், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், பீங்கான் தொட்டியின் வளைவின் மேல் முறையற்று ஏறி, 'குத்த வச்சி' அமரும்போது உடல் எடையானது (பீங்கான்) தொட்டியின் மீது குவிந்து கூடுகின்ற அதே சமயம், 'குத்த வச்ச' இரு கால்களின் மூலம் ஏற்படும் விசையானது, கீழ்நோக்கி வெளிப்பக்கமாக, உந்தித்தள்ளுவதால், என்னதான் ISI பெற்ற முதல் தரம் வாய்ந்த Branded Sitting Type Toilet -ஆக இருந்தாலும், நாளடைவில் பலம் குன்றிப்போய்விட வாய்ப்புள்ளது. அதோடு, தொட்டியை சுத்தப்படுத்தும் Brush போன்ற கருவிகளால், எங்கேனும் இடிபட்டு, கண்களுக்கு தெரியாத சிறு விரிசல் போன்றவை ஏற்பட்டும் இருக்கலாம். இப்படி, முறையற்று அமர்வதால் அந்த Sitting Type Toilet எந்நேரத்திலும் இருதுண்டாகவோ அல்லது பல துண்டு, துகள்களாகவோ ... கீழுள்ள படத்தில் உள்ளவாறு உடையலாம்..!
அப்படி உடைவதால் அந்த Sitting Type Toilet -இல் 'குத்த வச்சி' அமர்ந்தவரின் கதி எப்படி இருக்கும்? எசகுபிசகாக உடையும் அந்த Toilet பீங்கானின் கூரான பகுதிகளோ அல்லது அதன் சில்லுகளோ, கால்களை பரப்பி விழுகின்ற அவர் சுதாரிப்பதற்குள், எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டு சொல்லத்தான் இயலுமா? எவராலும் எண்ணிப்பார்க்கவே முடியாத பயங்கரத்தை அல்லவா அவர் சந்தித்திருப்பார்!
அப்படி, Sitting Type Toilet -ஐ முறையற்ற வகையில் உபயோகித்த ஒருவருக்கு நடந்ததை கீழுள்ள ஃபோட்டோவில் பாருங்கள்..! காண சகிக்கலை..!
Source: e mail வழியாக நண்பர் அனுப்பிய இச்செய்தியை சற்று மாற்றங்கள் செய்து பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. (Thanks நண்பா!!)
No comments:
Post a Comment