இணைய உலகின் ஜாம்பவான் GOOGLE, தனது Privacy Policy என்கிற "தனி உரிமை கொள்கை" யினை கடந்த வாரம் அதாவது 01 March, 2012 லிருந்து புதியதாக மாற்றி அமைத்துள்ளது. மாற்றி அமைக்கவிருந்த, இப்புதிய கொள்கைப்பற்றி கடந்த January யிலேயே தனது பயனாளர்களுக்கு அறிவிப்பும் செய்திருந்தது!
- Privacy Policy - என்றால் என்ன?
- இதற்கும், பயனாளராகிய நமக்கும் இருக்கின்ற சம்பந்தம்தான் என்ன?
- இதனால் என்னத்தான் ஆகிவிடப்போகிறது?
நாம் உபயோகிக்கும் / பயன்பெற போகும் இணைய தளங்களில் User Account என்கிற பயனர் கணக்கு தொடங்கும்போது அந்த தளங்கள் - அவர்களின் கொள்கைகள் குறித்து நீண்ட கட்டுரையின் வடிவில் நமக்கு கொடுத்து, அக்கொள்கைகளை படித்துப்பார்த்து விட்டு - அவைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அடைப்புக் கட்டத்தில் Tick செய்து விட்டு மேலே தொடரும்படி நம்மை வலியுறுத்தும். அப்படி கட்டுரை வடிவில் கொடுக்கப்பட்ட அந்த கொள்கைகளே Privacy Policy / தனி உரிமை கொள்கைகள் ஆகும்.
அப்படியான, கொள்கைகளை நம்மில் பெரும்பாலானோர் படித்துப்பார்ப்பதே இல்லை; அவசர, அவசரமாக அடைப்புக்கட்டத்தில் Tick செய்து விட்டு பயனர் கணக்கை தொடங்கி விடுவதே வழமையாக போய்விட்டது.
'ஆம்! இலவச சேவையை நமக்கு தருகிறார்கள்! அவர்களுக்கென்று ஏதோ கொள்கை! அதனால் நமக்கு என்ன? நான் ஒருவன்தானா அக்கொள்கைகளை ஏற்று இருக்கிறேன். கோடிக்கணக்கானவர்கள் ஏற்று இருக்கிறார்களே?' என்று நம்மை நாமே தேற்றியும் கொள்கிறோம்.
அவர்களின் அந்த Privacy Policy -ஐ முழுதும் படித்துப் பார்த்தால்தான் அவர்கள் எந்த அளவுக்கு நம்மை ஆட்கொள்ள பார்க்கிறார்கள் எனப்புரியும். "பயனாளராகிய நீங்கள், எங்களுடன் பயனர் கணக்கு தொடங்கினால், நாங்கள் உங்களின் விருப்பு, வெறுப்பு, தேவைகள் மற்றும் சுயவிபரங்கள் போன்ற எல்லாவற்றையும் கண்காணிப்போம்; தேவைப்பட்டால் இவ்விபரங்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு பரிமாற்றமும் செய்வோம்" என்று அந்த Privacy Policy - யில் சுருக்கமாக எழுதியிருந்தால் Tick செய்வதற்கு முன்பு சற்று யோசித்து இருப்போம்!
இப்படி யோசிக்காமல் Tick செய்துவிட்டதால், என்ன ஆகிவிடப்போகிறது? இவர்களின் இணையதளத்தின் வழியாக நாம் செய்யும் / பார்க்கும் அத்தனையும் இவர்களின் Server -ரில் பதிவு செய்யப்படும். இப்படி பதிவானதை வைத்து, மேலே குறிப்பிட்டப்படி நம் விருப்பு, வெறுப்பு, தேவைகள் மற்றும் சுயவிபரங்கள் போன்ற அனைத்தும் அலசி ஆராயந்தப்பின், நமக்கு சாதக, பாதகமான விளம்பரங்கள் மற்றும் செய்திகள் போன்ற யாவும் நம் Computer -ரின் திரையில் காட்டப்படும். இதை ஒருவகையான விளம்பர யுக்தி என்றே சொல்லலாம்! இவ்வகையான விளம்பரங்கள், சில சமயங்களில், நமக்கு எரிச்சலை கூட உண்டுபண்ணலாம்!
ஆக, Google -லில் User Account என்கிற பயனர் கணக்கு தொடங்கும் ஒருவர், தனது User Account மூலமே 60 -க்கும் மேலான பல சேவைகளை, இலவசமாக, உபயோகிக்கலாம். அப்படி, பல சேவைகளுக்கும் தனி, தனியாக வரையறை செய்யப்பட்டு இருந்த Privacy Policy என்கிற தனி உரிமை கொள்கையைதான், 01 March 2012 லிருந்து "அனைத்து சேவைக்கும் ஒரே கொள்கை" என்கிற ரீதியில், புதியதாக மாற்றி அமைத்துள்ளது. இதுப்பற்றி பார்க்க:
http://pnonazim.blogspot.com/2012/02/google-controversially-changes.html
மேலும், அதன் Server -ரில் சேமிக்கப்படும் பயனாளர்களின் தகவல்களை, பயனாளர் விரும்பினால், அதன் History பகுதிக்கு சென்று அழித்துவிடும் கூடுதல் வசதியையும் Google நமக்கு கொடுத்திருந்தாலும், அப்படி அத்தகவல்களை அழிப்பதற்கு முன்பேகூட, பயனாளரின் தகவல்கள், விளம்பர யுக்திகளுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, கடத்தப்பட்டு இருக்ககூடிய சாத்திய கூறுகள் நிரம்பவே உள்ளன.
“ஒரு விஷயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று ஒருவர் நினைத்தால், அந்த விஷயத்தை அவர் செய்திருக்கவே கூடாது” என்று Google -லின் Co-Founder Larry Page இப்புதிய Privacy Policy -யை நியாயப்படுத்துகிறார்.
ஆக, நமது தனிப்பட்ட விபரங்களை இணையத்தில் பகிரும்போது Google என்றில்லாமல், Face Book, Yahoo, Twitter போன்ற எல்லாவற்றிலுமே, சற்று கவனமுடன் இருத்தல் அவசியம் என்பது புலனாகிறது.

No comments:
Post a Comment