"GOOGLE CALENDAR" -பற்றி, Google -ஐ, உபயோகிக்கும் எவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! பலருக்கும் அறிமுகமான இந்த Google Calendar -ஐ, நம்முடைய வசதிக்கும், தேவைக்கும் தக்கவகையில் மாற்றி அமைப்பது என்பது மிகச்சிலருக்கே தெரிந்ததாக இருக்கும்!! ஆனால், பலருக்கு இதுப்பற்றி தெரிந்தும், உபயோகிப்பது குறித்து தெரியாமல்கூட இருக்கலாம்!!!
ஆக, Google Calendar பற்றிய சிறிய அறிமுகத்தோடு, நமக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் மாற்றி அமைத்து அதனுடைய பயன்பாட்டை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.
Google Calendar என்கிற இந்த web application 13 April 2006 -லிருந்து செயலாக்கத்தில் இருந்து வருவதோடு Google பயனாளிகளை கருத்தில்கொண்டு, அவர்களுக்காக - அவர்களின் முக்கிய பணிகளை, அவர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்துக்கு e-Mail / SMS இவற்றில் ஏதாவது ஒன்றின் வழியாகவோ அல்லது இரண்டிலுமாகவோ நினைவுப்படுத்துதலே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
Google Calender -க்கான Link: http://calendar.google.com/
Google Calendar பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள் அதனுள் நுழைந்து எளிதாக தம் காரியங்களை செய்துகொண்டு விடலாம்.
ஆனால், புதியவர்கள்?
ஆனால், புதியவர்கள்?
Welcome to Google Calendar பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, Continue பொத்தானை அழுத்த, அந்த புதியவர்களுக்கான Calendar உருவாக்கப்பட்டு திறக்கும்.
அப்படி திறந்ததும், அதன் வலது மேல் புறத்தில் Day, Week, Month, 4 Days, Agenda, More என்பவைகளோடு ஒரு சக்கர வடிவமும் தெரியும். இவை எல்லாமே பயனாளர்களின் வசதி மற்றும் தேவைகளுக்காக இருப்பதுடன், இந்த சக்கர வடிவத்தை Click செய்து, Settings -ஐ தேர்வு செய்வதால், பயனாளருக்கு நான்கு (4) Options (General, Calendars, Mobile Setup, Lab என்று) கிடைக்கும். அதிலிருந்து பயனாளர் தன்வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப Calendar -க்கான Settings -ஐ மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
General: இதன் மூலம் Language, Country, Time Zone, Date Format போன்ற பலவற்றை பயனாளரின் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொண்டப்பிறகு, Save என்பதை அழுத்தி விடவும்.
Calendar: இங்கிருந்து Notifications, Sharing போன்றவற்றை மேம்படுத்திக்கொள்ளவும், Default -ஆக இருப்பதை, மாற்ற விரும்பினால், மாற்றமும் செய்து கொள்ளலாம். Save என்பதை மறவாமல் அழுத்தி விடவும்.
Mobil Setup: இங்கே Country, Phone Number, Carrier போன்ற விபரங்களை உள்ளீடு செய்தாக வேண்டும். அப்படி உள்ளீடு செய்து, Mobile Setup -ஐ Activate செய்வதால், பயனாளருக்கு, அவருடைய தேவையை குறித்த, SMS -களை அனுப்பி, நினைவூட்டல் செய்ய இது வழி செய்யும். கேட்கப்பட்ட விபரங்களை, சரியாக, உள்ளீடு செய்தப்பிறகு, Send Verification Code என்பதை அழுத்த, சற்று நேரத்தில் உள்ளீடு செய்யப்பட்ட Phone (Number) -க்கு ஒரு Verification Code வரும். அந்த Verification Code -ஐ, அதே, Mobil Setup, பக்கத்தில் உள்ளீடு செய்துவிட்டு, Finish setup -ஐ அழுத்தி Save செய்து விட்டால் பயனாளருக்கான Mobil Setup பயன்பாட்டிற்கு தயாராகி விடும்.
Lab: Google, தனது புதிய முயற்சிகளான கண்டுபிடிப்புகளை (experimental testing) இங்கு வெளியிடுகிறது. இவைகளையும் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், எந்நேரத்திலும் இவைகள், Google -லினால், மாற்றவும் படலாம் அல்லது எடுக்கவும் படலாம் (may change, break or disappear at any time).
இதே பக்கத்தின் இடது மேற்புறத்தில் CREATE மற்றும் அதன் கீழே அம்மாதத்துக்கான (உதாரணம்: February 2012) Calendar -ரும் தெரியும். இங்கிருந்து பயனாளர், (அதாவது, தனது Calendar -ரிலிருந்து), தன்னுடைய Event (நிகழ்ச்சி, நிரல்) -களை உருவாக்கிக்கொள்ளலாம்.
Event (நிகழ்ச்சி, நிரல்) -களை உருவாக்க:
பயனாளர், தனது Event, குறிப்பிட்ட தேதி (example: 25 February 2012) -யில் நினைவூட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறார். மேலே குறிப்பிட்ட CREATE -க்கு கீழே தெரியும் February 2012 -க்கான Calendar -ரில் 25 -ஆம் தேதியின் மீது ஒருமுறை Click செய்துவிட்டு, CREATE என்பதின் மேல் Click செய்ய ..... கீழே உள்ளதை போன்று Window (Untitled event) ஒன்று திறக்கும்.
இந்த Window -வில், பயனாளர், தம்முடைய தேவைகளுக்கேற்றவாறு, விவரங்களை நிரப்பி ......
Reminders என்பதில் இருவகை Options -கள் தெரியும். அவை ஒவ்வொன்றிலும் மூன்றுவித (e mail; SMS; Popup) பயன்பாட்டு வழிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றிலும் இருந்து ஏதாவது ஒரு பயன்பாட்டு வழியை தேர்வு செய்து Save -செய்து விட்டால், பயனாளரின் Event, அவர் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் பயனாளர் தேர்ந்தெடுத்த இரு பயன்பாட்டு வழிகளின் (example: e Mail & SMS) மூலமும் Remind செய்யப்படுவார்.
முன்னமேயே குறிப்பிட்டபடி, பயனாளர்களின் வசதிகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு உன்னதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Google Calendar -ரில் அதிக பயன்பாடுகள் (Options, Features போன்றவை) நிரம்பவே உள்ளன. அவைகளை எல்லாம் உபயோகப்படுத்த வேண்டுமெனில், பயனாளராகிய, நாம், உட்புகுந்து பார்த்தாலே Google Calendar -ரின் சூட்சுமங்களை அறிந்துகொள்ள முடியும்.
பயனாளர், தனது Event, குறிப்பிட்ட தேதி (example: 25 February 2012) -யில் நினைவூட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறார். மேலே குறிப்பிட்ட CREATE -க்கு கீழே தெரியும் February 2012 -க்கான Calendar -ரில் 25 -ஆம் தேதியின் மீது ஒருமுறை Click செய்துவிட்டு, CREATE என்பதின் மேல் Click செய்ய ..... கீழே உள்ளதை போன்று Window (Untitled event) ஒன்று திறக்கும்.
இந்த Window -வில், பயனாளர், தம்முடைய தேவைகளுக்கேற்றவாறு, விவரங்களை நிரப்பி ......
முன்னமேயே குறிப்பிட்டபடி, பயனாளர்களின் வசதிகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு உன்னதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Google Calendar -ரில் அதிக பயன்பாடுகள் (Options, Features போன்றவை) நிரம்பவே உள்ளன. அவைகளை எல்லாம் உபயோகப்படுத்த வேண்டுமெனில், பயனாளராகிய, நாம், உட்புகுந்து பார்த்தாலே Google Calendar -ரின் சூட்சுமங்களை அறிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment