Friday 30 March 2012

மின்சாரப் பஞ்சமும் Inverter -களும்!

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது, தற்போது முதல்வர் பதவி வகித்து வருகின்ற ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள்:

“....தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு களையப்பட்டு, மின்வெட்டு அறவே ஒழிக்கப்படும். தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும்...”

தமிழக மக்களும் இந்த வார்த்தைகளை நம்பி அ.தி.மு.க கூட்டணியை வலுவாகவே வெற்றிப்பெற செய்தார்கள். இவை எல்லாமே 'அம்மா' வின் 'வழக்கமான' பசப்பு வார்த்தைகள் என்பது பிறகுதான் நிரூபணம் ஆனது! ஆம், தமிழகத்தில் தலை விரித்தாடுகின்ற மின்சாரப்பஞ்சம் வெகுவாகவே மக்களை நிலைகுலைய செய்துள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.


இது இப்படி இருக்க, Inverter -கள் என்று அழைக்கப்படும் மின்சார சேமிப்பு கலன்களை தயாரிக்கும் நிறுவனங்களும், அவற்றை விற்கும் வியாபாரிகளும் தற்போது சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை!

மாதமொன்றுக்கு சராசரியாக 10 -லிருந்து 15 Inverter -களை மக்கள் தலையில், படாதபாடுபட்டு, கல்லா கட்டிய வியாபாரிகள், தமிழக அரசின்  தற்போதைய 'மின்சாரப்புரட்சி'யினால், நூற்றுக்கணக்கான Inverter -களை அதிரடியாக, வெகு எளிதில் கல்லா கட்டும் நிலையை அடைந்துள்ளார்கள்! என்ன விலை கொடுத்தும், மக்களே தம்தலைகளில், சுமக்க தயாராகி விட்டபோது ..... அம்மக்களுக்காக Inverter குறித்து உபயோகமான சில Tips:
       
பொதுவாக Inverter என்னும் இந்த 'மின்சார சேமிப்பு கலன்', மின்சாரத்தை உள்வாங்கி தன்னுள் தக்கவைத்து தேவைப்படும் பிறிதொரு சமயத்தில் வெளிப்படுத்தும். தானாகவே இயங்கும்  (Automated) வடிவமைப்பை கொண்ட இது, உள்வாங்கிக்கொண்டு இருக்கும் மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க, அதாவது உள்வாங்கிய மின்சாரத்தை வெளிப்படுத்த, ஆரம்பித்துவிடும். மீண்டும் மின்சாரம் வந்ததும் இதன் இயக்கமும் தானாகவே நின்று விடும். 

இதனை எப்பொழுதும் மின் இணைப்பில் வைத்து இருப்பதால், தன்னிடமுள்ள மின்சக்தியின் அளவு குறையும் பட்சத்தில் தன்னை தானே Recharge செய்துகொண்டு தன் மின்சக்தியின் அளவை சமன் படுத்தியவாறு இருக்கும். ஆக, Inverter அதனுடன் இணைக்கப்பட்ட Battery இவைகளை எப்பொழுதும் மின் இணைப்பில் வைத்து இருப்பது அவசியம். 

Square Wave, Sine Wave என இருவகை Model -களில் Inverter -கள் உள்ளன. இவைகள் 250 Watts மற்றும் 400 Watts  திறன் கொண்டவை. 250 Watts -ஐ உபயோகித்தால் ஒரு விளக்கு மற்றும் ஒரு ஃபேனை இயக்கலாம்.  400 Watts -சில் இரண்டு விளக்குகளையும், இரண்டு ஃபேன்களையும் இயக்கலாம். இந்த இரண்டு திறன் வகைகளும் தற்போது அதிக புழக்கத்தில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இப்போது புழக்கத்தில் இருந்து வருபவை 650 Watts மற்றும் 850 Watts திறன் கொண்ட Inverter -கள். 650 Watts மூலம் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் மற்றும் ஒரு டி.வி. யை இயக்கலாம். 850 Watts திறன் கொண்டதை உபயோகிப்பதால் 4 விளக்குகளோடு, 3 ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸி போன்றவைகளை இயக்க முடியும். 

850 Watts திறன் கொண்ட Inverter -களே சிறுதொழில் செய்பவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயன்தரக்கூடியது. இன்றைய சூழ்நிலைக்கு இதுவே உகந்ததாக இருப்பதோடு, அதிகளவில் விற்பனை ஆகக்கூடியதும் இதுதான்!  

சில அத்தியாவசிய Tips: 
  • உபயோகிப்போரின் தேவைக்கு ஏற்ற வகையில் Inverter -களையும் அதற்கேற்ற Battery -களையும் கவனத்துடன் தேர்வு செய்வது நல்லது.
  • Battery -களை தேர்வு செய்யும்போது சற்று அதிக அளவில் மின்சக்தியை சேமித்து வைக்கக் கூடிய Battery -களாக தேர்வு செய்யவும். 
  •  நீண்ட காலமாய் Inverter தயாரித்து வருகின்ற நிறுவனங்களின் Inverter மற்றும் Battery -களை வாங்குவதோடு விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு அந்நிறுவனம் தரும் Warranty மற்றும் Service போன்ற விபரங்களையும் அறிந்துக்கொள்ளவும்.
Inverter -களில் Square Wave -வை விட, Sine Wave -களே சிறந்த தேர்வாக உள்ளது! காரணம், தேவைப்படும் மின்சக்தியை Sine Wave முழுமையாக  தருவதாகவும், இதனால் உபயோகிக்கும் மின்சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை எனவும், Square Wave -வை பொறுத்தவரை உபயோகிக்கும் மின்சாதனங்களில் ஒருவித இரைச்சல் சப்தம் ஏற்படுவதால், மின்சாதனங்கள் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.    

மேலும் Battery -யில் Flat மற்றும் Tubular  என இரு வகைகள் உள்ளன. இதில் Tubular வகை சிறந்தது; நீண்ட நாட்களுக்கு உழைக்கவும் செய்வதோடு பராமரிப்பு செலவும் குறைவு.
FLAT 
TUBULAR













Battery -யை அடிக்கடி கண்காணித்து வருவதோடு, அதனுடைய Distilled Water குறைந்து வரும் பட்சத்தில் அதனை நிரப்புவதும் அவசியம். 

தற்போது உச்சத்தில் இருந்துவருகின்ற மின்சாரப்பஞ்சம் சில மாதங்கள் சென்று சற்று குறையவோ / கூடவோ  அல்லது முழுமை பெற்று தமிழகமே தன் அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்கக்கூடிய அளவிற்கு போனாலும், விலை கொடுத்து வாங்கிவைத்துள்ள Inverter - களை தூக்கி பரண்மேல் போட்டு விடாமல், மாதம் ஓரிரு முறைகளாவது  மின்சாரத்தை நிறுத்தி அவைகளுக்கு வேலை கொடுப்பதால் Inverter -ம் அதை சார்ந்த Battery -யும் பழுதடையாமல் நீண்ட நாள் உழைக்கும்.

Inverter -கள் வாங்குவது பற்றி மேலும் அறிய: 

No comments: