Cable மூலம் இணைக்கப்பட்ட Printer -களை உபயோகித்துதான் தகவல்களை
Computer -ரிலிருந்து இதுவரை அச்சிட்டு வந்தோம். Google, 25 January 2011 -லிருந்து, மற்றும் ஒரு இலவச சேவையாக "Google Cloud Print beta" என்பதை தனது பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது!
எந்தவொரு தகவலையும், எங்கிருந்தும் அச்சிடும்படி "Google Cloud Print beta" என்னும் இச்சேவையின் மூலம் கட்டளையிடுவதால் குறிப்பிட்ட அத்தகவலானது இணையத்தின் வழியாக இணைக்கப்பட்டுள்ள Printer-ரில் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கும். கட்டளை இட்டப்பிறகு மின்சாரம் போய்விட்டாலும், மீண்டும் மின்சாரம் வரும்போது தகவல்கள் அச்சிடப்படும்!
Android OS -க்காக முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த பயன்பாடு, Google -லின், Chrome Extension (நீட்சி) ஆக பிறகு வடிவமைக்கப்பட்டது.
Cell Phone -களின் வழியாக பார்க்கும் இணையப்பக்கங்களையும் இச்சேவையை உபயோகித்து அச்சிட்டுக்கொள்ளும் வழிவகைகளும் மேம்படுத்தப்பட்டு இருப்பது கூடுதல் வசதி!
இச்சேவையின் மூலம் Doc / PDF / Txt / JPG / JPEG files, Gmail email, attachment or Google Docs போன்றவைகளை அச்சிட முடியும்.
1. Chrome Browser மூலம் Google கணக்கில் நுழைந்து கீழுள்ள Link மூலம் இணைக்கப்படவேண்டிய Printer -ஐ தேர்வு செய்து இணைத்துக்கொள்ள வேண்டும்.
http://www.google.com/landing/cloudprint/win-enable.html
இச்சேவையின் மூலம் அநேக Printer -களை இணைத்து செயல் படுத்தலாம்.
2. கீழுள்ள Link மூலம் Google Cloud Print -க்கான Chrome Extension (நீட்சி) -ஐ Install செய்யவும்.
http://goo.gl/LVxSA
No comments:
Post a Comment