முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி
சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இது மனிதர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும், என்ற கருத்து நிலவுகிறது. எனவே, மேற்கத்திய நாட்டவர்கள் கடற்கரையில் படுத்த படி சூரிய குளியல் (சன்பாத்) செய்கின்றனர்.
ஆனால் சூரிய ஒளி முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லாண்காஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் டிரேவர் மேக்மிலன், சாரா அல்லிசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் மூலம், கண்ணாடி வழியாக ஊடுருவி வரும் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் முகத்தின் வசீகரம் கெட்டு விடும். ஏனெனில் ஊடுருவி வரும் சூரிய ஒளியின் கதிர்கள் முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தி விடும். இதனால் 7 ஆண்டுகள் அதிகமாக முதுமையான தோற்றம் ஏற்படும். அதே போன்று காரில் தொடர்ந்து பல மணி நேரம் பயணம் செய்யும் போதும் இது போன்ற நிலை உண்டாகும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பயணம் செய்தால் கடுமையாக தாக்கும் சூரிய ஒளியால் முக சுருக்கம் ஏற்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment