தாயின் பிணத்துடன் வாழும் பெண்!
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றபோது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று கதவை தட்டியபோது சாலினி மெக்ரா கதவை திறக்கவில்லை. 45 நிமிடங்களுக்கு பிறகே கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
போலீசார் சென்று பார்த்தபோது சாலினி தனது தாயார் வினோதினி குப்தா உடல் அருகே உட்கார்ந்து இருந்தார். போலீசார் அந்த உடலை கைப்பற்றி மருந்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சாலினியின் தாயார் வினோதினி குப்தா 4 மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டதும், அந்த உடலுடனேயே சாலினி மெக்ரா வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட சாலினி தனது தாயார் இறந்தது கூட தெரியாமல் இருந்துள்ளார்.
சாலினி 20 வருடங்களுக்கு முன்பே கணவரைப் பிரிந்துவிட்டார். அதன் பிறகு தாயுடன் தனியாகவே வசித்து வந்தார். சமீப காலமாக அவருக்கு அடிக்கடி மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்தபடியே பிசா, பாஸ்ட்புட் உணவுகளை "ஆர்டர்" கொடுத்து வாங்கி சாப்பிட்டு விட்டு தாயின் உடலுடன் அதே வீட்டில் வசித்திருக்கிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் சாலினியின் தாயார் வினோதினி�க்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. ஆனால் தாயார் தூங்குவதாக நினைத்துக்கொண்டு சாலினி அதே அறையில் இருந்திருக்கிறார். நடந்த சம்பவம் பற்றிய தகவல் பெங்களூரில் இருந்த சாலினியின் மகள் ரெகானா (20) வுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே டெல்லி விரைந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் எத்தனையோ பேர் இருந்தும் தரை தளத்தில் உள்ள வீட்டில் தாயின் பிணத்துடன் 4 மாதம் ஒரு பெண் வாழ்ந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source: http://www.inneram.com/2010090610476/woman-living-with-mothers-dead-body
No comments:
Post a Comment