YouTube புதிய சேனல் - for SCHOOLS

காலம்
மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்! முன்னெல்லாம், நாம் படிக்கும்
காலங்களில், ஆசிரியர்கள், ஏதேனும் கதை அல்லது கட்டுரைகள் எழுதி வர
பணிப்பார்கள். நாமும் மெனக்கெட்டு நூலகம் சென்றோ அல்லது அறிவு சற்று கூடிய
பெரிசுகளிடமோ போய் விபரத்தை சொல்லி குறிப்பெடுத்து நம் கட்டுரைகளை
வகுப்பில் சமர்ப்பிப்போம்.
ஆனால், இன்றைய
தொழில்நுட்ப உலகில் இவையெல்லாம் தொலைந்து .... 'ஒரு விஷயம் தெரியலையா?'
... 'கூகிள்
போ! .... அங்கு எல்லாம் கிடைக்கும்!!' என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது.
இணையத்தில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் கலந்தே தான் உள்ளது.
பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை
இணையத்தில் பார்ப்பதினால் குறிப்பிட்ட
அந்த கல்விக்கானதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். Google - தனது
YouTube சேவையில்
பள்ளி மாணவர்களுக்காக சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பது பற்றிதான்
இப்பதிவு.
Youtube for Schools என்ற
இப் பிரிவின் கீழ் பள்ளி மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை
பார்த்து பயன்பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google
கணக்கொன்றை உருவாக்கி, தங்கள் பள்ளியின் பாடம்
சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். YouTube -இல் ஏற்கனவே
Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பலதரப்பட்ட
கல்வி
நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொண்டு, இவற்றின்
மூலம் மொழிகள், கணிதம், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்ற பலவற்றை மாணவர்கள்
கற்று பயன்பெறலாம்.


மேலும்,
குறிப்பிட்ட பள்ளியில் தரவேற்றப்பட்டு இருக்கின்ற வீடியோக்களை, அந்த பள்ளி
மட்டுமே பார்க்கும்படியாகயும் அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு
பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை
மட்டும் காண்பித்து அறிவைப் வளர்க்கும் YouTube -இன் இச்சேவை பாராட்டப்பட
வேண்டிய ஒன்றே!
http://www.youtube.com/schoolshttp://www.youtube.com/
http://youtube.com/teachers
No comments:
Post a Comment