Thursday 29 December 2011

SOPA -க்கு ஆதரவு

SOPA -க்கு ஆதரவு:
ஒரே வாரத்தில் 72,000 -த்துக்கு மேலான  Domain -களை   இழந்த GoDaddy 

தற்போதைய உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களினால் மிகவும் பயந்து போய் உள்ளன என்பதே நிதர்சன உண்மை!  எகிப்திய மக்களின்  புரட்சிக்கு வித்திட்ட சமூக தளங்கள் 'எங்கே நம்ம நாட்டுக்குள்ளும்   புகுந்து  பிரச்சினையை கொண்டு வந்து விட்டு விடுமோ'  என்பதே ஒவ்வொரு ஆட்சியாளர்களின்  வயிற்றிலும்  புளியை கரைத்த வண்ணமுள்ளது.  இவ்வகையான சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் ஏற்கெனவே   தடை செய்திருக்கிறது.  இதுபோன்ற சமூக தளங்களை நம் நாட்டிலும் தடை செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல்  இணையதள நிறுவனங்களை அழைத்து பேசி இருப்பது குறித்து  நாமெல்லோரும்  அறிவோம்.

இணையதளங்களையே மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த திருவாளர்  ஒபாமா அமெரிக்காவில் ஒரு புதிய சட்டத்தை, SOPA (Stop Online Piracy Act) என்ற பெயரில் கொண்டு வர முனைந்தார். இச் சட்டத்தினால் குறிப்பிட்ட சில  இணையதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதின் மூலம் தம் நாட்டின் நிஜ - நிழல் பிம்பங்கள் உலக அரங்கில் ஏறாதவாறு தடுத்து விடலாம் என்ற நோக்கில்  முயற்சித்தார். (என்னவொரு ஹிட்லர் தனம்!)  ஒபாமாவின்  இந்த முயற்சிக்கு அமெரிக்க மக்கள் மட்டுமல்ல;  பிரபல இணைய நிறுவனங்களும்   (Google, Twitter, Facebook, LinkedIn போன்றவை)  ஒன்றாக சேர்ந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தன.
இப்படி இணைய ஜாம்பவான்களே தம் எதிர்ப்புகளை  தெரிவித்து கொண்டு இருக்கையில், Go Daddy என்னும்  Domain & Hosting வழங்கி வரும் நிறுவனம் தனது ஆதரவை இந்த 'ஹிட்லர் தன' புதிய சட்டத்திற்கு கொடுத்தது. ஏற்கெனவே செம கடுப்பில் இருந்த அமெரிக்கர்களுக்கு Go Daddy -இன் செயல் மேலும் எரிச்சலை உண்டு பண்ண, இதனுடன்  வியாபார ரீதியாகவும், தனியாகவும் Domain வைத்திருந்தவர்கள் தங்களது கணக்குகளை விலக்கிக்கொண்டு வேறு நிறுவனங்களில் தங்களது Domain -ஐ இணைக்க தொடங்கினார்கள். (அதாவது Go Daddy -க்கு ஆப்பு வைத்தாகி விட்டது).
Go Daddy தன் ஆதரவு அறிவிப்பை வார முதல் நாளான திங்கள் அன்று வெளியிட அன்று மட்டும் 8,800 Domain -கள் இந்த தளத்தில் இருந்து வெளியேறி  வேறு நிறுவனங்களில் தங்களை இணைத்துக்கொண்டனர். தினம், தினம் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
Wikipedia -வும், தன் அறிவிப்பை அதன்  உரிமையாளர் Jimmy Wales மூலம் Twitter -ரில், வெளியிட்டு தன் நிலையை உறுதிபடுத்தி உள்ளது.

தினமும் கூடிக்கொண்டே போன எதிர்ப்பு அலைகள் Go Daddy - ஐ ஸ்தம்பிக்கவே  செய்து விட்டது. ஆம்! திங்களிலிருந்து வெள்ளி வரை 72,000 -த்துக்கு மேலான Domain - களை இழந்து விட்டது. இதனை எதிர் கொள்ளவியலாத நிலையில்  Go Daddy அந்தர் பல்டி அடித்து, SOPA -க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதன் பிறகு, விலகிக்கொண்ட தனது வாடிக்கையாளர்களை தாஜா செய்ய கெஞ்சி கூத்தாடியும், எவருமே சமாதானம் ஆனதாக தெரியவில்லை.  இதோடு நில்லாமல், இன்று   (29, December) Go Daddy -லிருந்து விலகும் நாளாக (Move Your Domain Away from GoDaddy Day) அறிவிப்பு, வேறு, வெளியாகி உள்ளது.
இந்த, "ஹிட்லர் தன"  சட்டம் (SOPA) நடைமுறை செய்யப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்  என்பதை இந்த Link - மூலம் தெரிந்துகொள்ளலாம்.

What is SOPA and How it works [Infographic]

SOPA (Stop Online Piracy Act) is the new bill will introduce in US for online piracy. As this new rule American can not visit all websites. Some websites will be block in US. Big Internet companies like Facebook, Google, Yahoo, LinkedIn, Twitter are opposite this new rule SOPA.
Here the below infographic is saying how it works SOPA.


Please drop your comment about this new Act and share with your friends.
 

No comments: