Thursday, 29 December 2011

Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!

Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!


SCREEN SHOT என்பது படத்தைப் போன்ற ஒரு தோற்றம் ஆகும்.
SHOT எடுக்கின்ற  நேரத்தில் Computer Screen எந்த காட்சியுடன் இருந்ததோ, அந்த காட்சியின்  படம்தான் SCREEN SHOT  என்பதாகும்.
இந்த SCREEN SHOT  - களின் பிரத்தியேகத்தன்மை என்னவென்றால்   சொல்ல வேண்டியவற்றை    மிக நேர்த்தியாகவும் அழுத்தமாகவும்  பார்ப்பவர்களின்   மனதில் காட்சிகளாக பதிய வைப்பதுடன்   நம்பிக்கையையும் ஊட்டுகிறது.
இந்த SCREEN SHOT -ஐ    Word, Excel, Power Point Presentation போன்றவற்றில்  எப்படி கொண்டு வருவது?
முதலில்  SHOT எப்படி  எடுப்பது என்று பார்ப்போம்.
Computer திரையில் தெரிகின்ற  முழுக்காட்சியையும் SCREEN SHOT -ஆக எப்படி எடுப்பது?
Key Board -ல் உள்ள Print Screen key- யை (இது அம்புக் குறிகளின்  கீகளுக்கு மேலாகவோ அல்லது சில கீ போர்டுகளில் F12 கீக்கு அடுத்தோ இருப்பதோடு, அதன் மீது PrtScrn / Print Screen என்று குறிக்கப்பட்டு இருக்கும்) அழுத்திவிட்டு, எந்த புரோகிராமில் இந்த திரைக்காட்சியை சேர்க்க வேண்டுமோ அங்கு சென்று Paste செய்தால்  திரையில் தெரிந்த / பார்த்த காட்சி, ஒட்டப்பட்டு விடும்.

ஒன்றுக்கு மேற்ப்பட்ட புரோகிராம்கள் திரையில் இயங்கிக் கொண்டிருக்க, அவற்றில் ஒரு புரோகிராமினை மட்டும் SCREEN SHOT எடுக்க வேண்டும் என விரும்பினால், அந்த புரோகிராமில் கிளிக் செய்து ALT + PRINT SCREEN கீயை அழுத்தி,  எங்கு இணைக்க வேண்டுமோ அந்த  பைலில் பேஸ்ட் செய்வதால் Task Bar மற்றும் Border போன்ற  தேவையற்றவைகள்  களையப்பட்டு, விரும்பும் காட்சி மட்டும் Screen Shot - ஆக எடுக்கப்படும்.

Screen Shot -களை Word, Excel, Presentation  போன்றவற்றில் Pasting செய்வதால்  அவை சாதாரணமாக ஓட்டப்பட்ட  படங்களை  போல் காட்சி அளித்தாலும், அவைகளை வெவ்வேறு அளவுகளில் மாற்றி அமைக்கவும் முடியும். அதோடு Brightness,  Contrast  போன்றவைகளை  கூட்டவும்  குறைக்கவும்  செய்யலாம். சுருங்க சொன்னால் Clip Art, Graphics போன்றவற்றில் செய்யக்கூடிய   Editing  வேலைகள் அனைத்தையும்  மேற்கொள்ளலாம்.
Screen Shot எடுப்பது பற்றி  Windows Operating System தரக்கூடிய முறைகளே மேற்குறிப்பிட்டவை.
இதை தவிர்த்து,  சில இலவச  மென்பொருட்கள் மூலம்   இந்த Screen Shot - ஐ செய்வதால், மேற்சொன்ன (Windows) முறைகளிலிருந்து வேறுபட்டு- அதாவது Print Screen Key, Pasting, Edit போன்ற  சுற்று வழிகளை - இந்த இலவச  மென்பொருட்கள் குறைப்பதோடு Screen Shot எடுக்க விரும்பும் காட்சிகளுக்கு கூடுதலாக  Special Effect கொடுக்க, Heading இணைக்க  என்று பல வசதிகளைத் தருகிறது..
அந்த வகைகளில்:
1. Screenshot Captor என்ற இலவச மென்பொருளை   http://www.versiontracker.com என்ற தளத்திலிருந்து download செய்து பயன்படுத்தலாம். அத்துடன்  இலவச License ஒன்றையும்  இந்த தளத்திலிருந்து பெற்று பயன்படுத்துவது நல்லது.
 
2. Screen Shot செய்வதற்கான மற்றொரு  இலவச மென்பொருளை (with VIDEO)  http://www.jingproject.com/ என்ற தளத்தில் இருந்து download செய்து பயன்படுத்தலாம்.  ஒரு இலவச அக்கவுண்ட்  திறந்த பிறகே, இதனுடைய  முழு வசதிகளையும் உபயோகப்படுத்த முடியும். இன்ஸ்டால் செய்து, அக்கவுண்ட் திறந்த பின்னர், திரையின்  மேலே  மஞ்சள் வண்ணத்தில் சிறிய வட்டம் ஒன்று தோன்றும். மவுசை  அதன் மீது நகர்த்த அவ்வட்டம் மாறும். மவுஸின் இடது புறத்தைக் கிளிக் செய்ய, திரையின்  எந்த இடத்தினை Screen Shot -ஆக  எடுக்க  வேண்டுமோ  அந்த இடத்திற்குக் கொண்டு செல்லலாம். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு அதனைப் படமாகவோ அல்லது வீடியோவாகவோ கூட மாற்றி எடுக்க முடியும்.
ஆம்! இதில் உள்ள சிறப்பம்சம் Video -வாகவும் மாற்றுவது!! 
எடுத்த படத்தை அல்லது வீடியோவை  FILE - லாக மாற்றி,  கம்ப்யூட்டரில்  அல்லது இணையத்திலும் கூட  SAVE செய்துக்கொள்ளலாம். இதன் பின்பு,  அந்த படம் / வீடியோவிற்கான  LINK ஒன்றை jing தரும். இந்த LINK -ஐ  பலதரப் பட்ட FILE -களிலும் இணைத்துக்கொள்ளலாம்.

No comments: