Thursday, 29 December 2011

SOPA -க்கு ஆதரவு

SOPA -க்கு ஆதரவு:
ஒரே வாரத்தில் 72,000 -த்துக்கு மேலான  Domain -களை   இழந்த GoDaddy 

தற்போதைய உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களினால் மிகவும் பயந்து போய் உள்ளன என்பதே நிதர்சன உண்மை!  எகிப்திய மக்களின்  புரட்சிக்கு வித்திட்ட சமூக தளங்கள் 'எங்கே நம்ம நாட்டுக்குள்ளும்   புகுந்து  பிரச்சினையை கொண்டு வந்து விட்டு விடுமோ'  என்பதே ஒவ்வொரு ஆட்சியாளர்களின்  வயிற்றிலும்  புளியை கரைத்த வண்ணமுள்ளது.  இவ்வகையான சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் ஏற்கெனவே   தடை செய்திருக்கிறது.  இதுபோன்ற சமூக தளங்களை நம் நாட்டிலும் தடை செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல்  இணையதள நிறுவனங்களை அழைத்து பேசி இருப்பது குறித்து  நாமெல்லோரும்  அறிவோம்.

இணையதளங்களையே மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த திருவாளர்  ஒபாமா அமெரிக்காவில் ஒரு புதிய சட்டத்தை, SOPA (Stop Online Piracy Act) என்ற பெயரில் கொண்டு வர முனைந்தார். இச் சட்டத்தினால் குறிப்பிட்ட சில  இணையதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதின் மூலம் தம் நாட்டின் நிஜ - நிழல் பிம்பங்கள் உலக அரங்கில் ஏறாதவாறு தடுத்து விடலாம் என்ற நோக்கில்  முயற்சித்தார். (என்னவொரு ஹிட்லர் தனம்!)  ஒபாமாவின்  இந்த முயற்சிக்கு அமெரிக்க மக்கள் மட்டுமல்ல;  பிரபல இணைய நிறுவனங்களும்   (Google, Twitter, Facebook, LinkedIn போன்றவை)  ஒன்றாக சேர்ந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தன.
இப்படி இணைய ஜாம்பவான்களே தம் எதிர்ப்புகளை  தெரிவித்து கொண்டு இருக்கையில், Go Daddy என்னும்  Domain & Hosting வழங்கி வரும் நிறுவனம் தனது ஆதரவை இந்த 'ஹிட்லர் தன' புதிய சட்டத்திற்கு கொடுத்தது. ஏற்கெனவே செம கடுப்பில் இருந்த அமெரிக்கர்களுக்கு Go Daddy -இன் செயல் மேலும் எரிச்சலை உண்டு பண்ண, இதனுடன்  வியாபார ரீதியாகவும், தனியாகவும் Domain வைத்திருந்தவர்கள் தங்களது கணக்குகளை விலக்கிக்கொண்டு வேறு நிறுவனங்களில் தங்களது Domain -ஐ இணைக்க தொடங்கினார்கள். (அதாவது Go Daddy -க்கு ஆப்பு வைத்தாகி விட்டது).
Go Daddy தன் ஆதரவு அறிவிப்பை வார முதல் நாளான திங்கள் அன்று வெளியிட அன்று மட்டும் 8,800 Domain -கள் இந்த தளத்தில் இருந்து வெளியேறி  வேறு நிறுவனங்களில் தங்களை இணைத்துக்கொண்டனர். தினம், தினம் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
Wikipedia -வும், தன் அறிவிப்பை அதன்  உரிமையாளர் Jimmy Wales மூலம் Twitter -ரில், வெளியிட்டு தன் நிலையை உறுதிபடுத்தி உள்ளது.

தினமும் கூடிக்கொண்டே போன எதிர்ப்பு அலைகள் Go Daddy - ஐ ஸ்தம்பிக்கவே  செய்து விட்டது. ஆம்! திங்களிலிருந்து வெள்ளி வரை 72,000 -த்துக்கு மேலான Domain - களை இழந்து விட்டது. இதனை எதிர் கொள்ளவியலாத நிலையில்  Go Daddy அந்தர் பல்டி அடித்து, SOPA -க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதன் பிறகு, விலகிக்கொண்ட தனது வாடிக்கையாளர்களை தாஜா செய்ய கெஞ்சி கூத்தாடியும், எவருமே சமாதானம் ஆனதாக தெரியவில்லை.  இதோடு நில்லாமல், இன்று   (29, December) Go Daddy -லிருந்து விலகும் நாளாக (Move Your Domain Away from GoDaddy Day) அறிவிப்பு, வேறு, வெளியாகி உள்ளது.
இந்த, "ஹிட்லர் தன"  சட்டம் (SOPA) நடைமுறை செய்யப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்  என்பதை இந்த Link - மூலம் தெரிந்துகொள்ளலாம்.

What is SOPA and How it works [Infographic]

SOPA (Stop Online Piracy Act) is the new bill will introduce in US for online piracy. As this new rule American can not visit all websites. Some websites will be block in US. Big Internet companies like Facebook, Google, Yahoo, LinkedIn, Twitter are opposite this new rule SOPA.
Here the below infographic is saying how it works SOPA.


Please drop your comment about this new Act and share with your friends.
 

Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!

Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!


SCREEN SHOT என்பது படத்தைப் போன்ற ஒரு தோற்றம் ஆகும்.
SHOT எடுக்கின்ற  நேரத்தில் Computer Screen எந்த காட்சியுடன் இருந்ததோ, அந்த காட்சியின்  படம்தான் SCREEN SHOT  என்பதாகும்.
இந்த SCREEN SHOT  - களின் பிரத்தியேகத்தன்மை என்னவென்றால்   சொல்ல வேண்டியவற்றை    மிக நேர்த்தியாகவும் அழுத்தமாகவும்  பார்ப்பவர்களின்   மனதில் காட்சிகளாக பதிய வைப்பதுடன்   நம்பிக்கையையும் ஊட்டுகிறது.
இந்த SCREEN SHOT -ஐ    Word, Excel, Power Point Presentation போன்றவற்றில்  எப்படி கொண்டு வருவது?
முதலில்  SHOT எப்படி  எடுப்பது என்று பார்ப்போம்.
Computer திரையில் தெரிகின்ற  முழுக்காட்சியையும் SCREEN SHOT -ஆக எப்படி எடுப்பது?
Key Board -ல் உள்ள Print Screen key- யை (இது அம்புக் குறிகளின்  கீகளுக்கு மேலாகவோ அல்லது சில கீ போர்டுகளில் F12 கீக்கு அடுத்தோ இருப்பதோடு, அதன் மீது PrtScrn / Print Screen என்று குறிக்கப்பட்டு இருக்கும்) அழுத்திவிட்டு, எந்த புரோகிராமில் இந்த திரைக்காட்சியை சேர்க்க வேண்டுமோ அங்கு சென்று Paste செய்தால்  திரையில் தெரிந்த / பார்த்த காட்சி, ஒட்டப்பட்டு விடும்.

ஒன்றுக்கு மேற்ப்பட்ட புரோகிராம்கள் திரையில் இயங்கிக் கொண்டிருக்க, அவற்றில் ஒரு புரோகிராமினை மட்டும் SCREEN SHOT எடுக்க வேண்டும் என விரும்பினால், அந்த புரோகிராமில் கிளிக் செய்து ALT + PRINT SCREEN கீயை அழுத்தி,  எங்கு இணைக்க வேண்டுமோ அந்த  பைலில் பேஸ்ட் செய்வதால் Task Bar மற்றும் Border போன்ற  தேவையற்றவைகள்  களையப்பட்டு, விரும்பும் காட்சி மட்டும் Screen Shot - ஆக எடுக்கப்படும்.

Screen Shot -களை Word, Excel, Presentation  போன்றவற்றில் Pasting செய்வதால்  அவை சாதாரணமாக ஓட்டப்பட்ட  படங்களை  போல் காட்சி அளித்தாலும், அவைகளை வெவ்வேறு அளவுகளில் மாற்றி அமைக்கவும் முடியும். அதோடு Brightness,  Contrast  போன்றவைகளை  கூட்டவும்  குறைக்கவும்  செய்யலாம். சுருங்க சொன்னால் Clip Art, Graphics போன்றவற்றில் செய்யக்கூடிய   Editing  வேலைகள் அனைத்தையும்  மேற்கொள்ளலாம்.
Screen Shot எடுப்பது பற்றி  Windows Operating System தரக்கூடிய முறைகளே மேற்குறிப்பிட்டவை.
இதை தவிர்த்து,  சில இலவச  மென்பொருட்கள் மூலம்   இந்த Screen Shot - ஐ செய்வதால், மேற்சொன்ன (Windows) முறைகளிலிருந்து வேறுபட்டு- அதாவது Print Screen Key, Pasting, Edit போன்ற  சுற்று வழிகளை - இந்த இலவச  மென்பொருட்கள் குறைப்பதோடு Screen Shot எடுக்க விரும்பும் காட்சிகளுக்கு கூடுதலாக  Special Effect கொடுக்க, Heading இணைக்க  என்று பல வசதிகளைத் தருகிறது..
அந்த வகைகளில்:
1. Screenshot Captor என்ற இலவச மென்பொருளை   http://www.versiontracker.com என்ற தளத்திலிருந்து download செய்து பயன்படுத்தலாம். அத்துடன்  இலவச License ஒன்றையும்  இந்த தளத்திலிருந்து பெற்று பயன்படுத்துவது நல்லது.
 
2. Screen Shot செய்வதற்கான மற்றொரு  இலவச மென்பொருளை (with VIDEO)  http://www.jingproject.com/ என்ற தளத்தில் இருந்து download செய்து பயன்படுத்தலாம்.  ஒரு இலவச அக்கவுண்ட்  திறந்த பிறகே, இதனுடைய  முழு வசதிகளையும் உபயோகப்படுத்த முடியும். இன்ஸ்டால் செய்து, அக்கவுண்ட் திறந்த பின்னர், திரையின்  மேலே  மஞ்சள் வண்ணத்தில் சிறிய வட்டம் ஒன்று தோன்றும். மவுசை  அதன் மீது நகர்த்த அவ்வட்டம் மாறும். மவுஸின் இடது புறத்தைக் கிளிக் செய்ய, திரையின்  எந்த இடத்தினை Screen Shot -ஆக  எடுக்க  வேண்டுமோ  அந்த இடத்திற்குக் கொண்டு செல்லலாம். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு அதனைப் படமாகவோ அல்லது வீடியோவாகவோ கூட மாற்றி எடுக்க முடியும்.
ஆம்! இதில் உள்ள சிறப்பம்சம் Video -வாகவும் மாற்றுவது!! 
எடுத்த படத்தை அல்லது வீடியோவை  FILE - லாக மாற்றி,  கம்ப்யூட்டரில்  அல்லது இணையத்திலும் கூட  SAVE செய்துக்கொள்ளலாம். இதன் பின்பு,  அந்த படம் / வீடியோவிற்கான  LINK ஒன்றை jing தரும். இந்த LINK -ஐ  பலதரப் பட்ட FILE -களிலும் இணைத்துக்கொள்ளலாம்.

Thursday, 22 December 2011

YouTube புதிய சேனல் - for SCHOOLS

YouTube புதிய சேனல் - for SCHOOLS







காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்! முன்னெல்லாம், நாம் படிக்கும் காலங்களில், ஆசிரியர்கள், ஏதேனும் கதை அல்லது கட்டுரைகள் எழுதி வர பணிப்பார்கள். நாமும் மெனக்கெட்டு  நூலகம் சென்றோ அல்லது அறிவு சற்று கூடிய பெரிசுகளிடமோ போய் விபரத்தை சொல்லி குறிப்பெடுத்து நம் கட்டுரைகளை வகுப்பில் சமர்ப்பிப்போம்.  
ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் இவையெல்லாம்  தொலைந்து .... 'ஒரு விஷயம் தெரியலையா?' ... 'கூகிள் போ! .... அங்கு எல்லாம் கிடைக்கும்!!'  என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது. இணையத்தில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் கலந்தே தான் உள்ளது.  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான  கல்வி சம்பந்தப்பட்ட  வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதினால் குறிப்பிட்ட அந்த கல்விக்கானதை   எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.  Google - தனது YouTube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பது பற்றிதான் இப்பதிவு.
Youtube for Schools என்ற இப் பிரிவின் கீழ்  பள்ளி மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட  வீடியோக்களை பார்த்து பயன்பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கி,  தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். YouTube -இல்  ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொண்டு, இவற்றின் மூலம் மொழிகள், கணிதம், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்ற பலவற்றை மாணவர்கள் கற்று பயன்பெறலாம்.
பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  YouTube -இல் உள்ள,  எந்த வீடியோவினையும் பார்க்க இயலும். ஆனால், மாணவர்கள்   Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களையும், தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே கருத்துரையும் வராது; Related Videos என்பதும் வராது. எப்படித் தேடினாலும் பாடங்கள் குறித்த வீடியோக்கள் மட்டுமே வரும். இந்த சிறப்பம்சம் மாணவர்கள் மற்ற ஏதேனும் வீடியோக்களைப் பார்க்க தடுப்பதோடு அவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமலும் இருக்க உதவுகிறது.
பள்ளி ஆசிரியர்களுக்காகவே     Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் பல பள்ளிகளில் பணிபுரியும் சகஆசிரியர்களின் பாட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளதால், (மற்ற) பள்ளி ஆசிரியர்களும் இவற்றைப் பார்த்து தமது அறிவையும்  மேம்படுத்திக்கொள்ளலாம் .
மேலும், குறிப்பிட்ட பள்ளியில் தரவேற்றப்பட்டு இருக்கின்ற வீடியோக்களை, அந்த பள்ளி மட்டுமே பார்க்கும்படியாகயும்  அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் வளர்க்கும் YouTube -இன்  இச்சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!
http://www.youtube.com/schools
http://www.youtube.com/education
http://youtube.com/teachers

Saturday, 29 October 2011

திக், திக் துறை.. தடய அறிவியல்

திக், திக் துறை.. தடய அறிவியல்

தன்னுடைய மனைவியின் சிலம்பை விற்பதற்காக மதுரை வந்தான் கோவலன். அதே நேரத்தில் பாண்டிய மன்னனுடைய மனைவின் சிலம்பு காணாமல் போயிருந்தது. கோவலன் கொண்டு வந்தது தன் மனைவியின் சிலம்பு என்று நினைத்த பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரண தண்டனை விதித்தான்.

இதை கேள்விப்பட்ட கண்ணகி தன் இன்னொரு கால் சிலம்பை எடுத்து பாண்டிய மன்னனின் அவையில் உடைத்தாள். கண்ணகியின் சிலம்பில் இருந்த்து மாணிக்க பரல்கள் அரசியிடம் இருந்ததோ முத்துமணிகள். இதை பார்த்த பாண்டிய மன்னன் யானோ அரசன்? யானே கள்வன் என்று இறந்துவிடுவான். இந்த இடத்தில் சிலம்பு தான் தடயம்!

தடய அறிவியல் என்ற வார்த்தையை இப்போது நாம் கண்டுபிடித்தாலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த அறிவியல் இங்கு இருந்திருக்கிறது என்று ஆரம்பித்தார் தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குனர் விஜயகுமார்.

தடய அறிவியல் துறை பற்றியும் தமிழ்நாட்டில் தடய அறிவியல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் விஜயகுமாரிடம் பேசினேன். தன் துறை சார்ந்த அறிவை பகிர்ந்துக்கொண்டார்.

ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது என்றவர் தடய அறிவியல் துறையின் பயன்பாடுகளை பற்றி சொன்னார்.

"நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்டுபிடிப்பதற்கு, சரியான நபர்களை அடையாளம் காணுவதற்கு தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபிப்பது தான் தடய அறிவியலின் பணி. நாங்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை எங்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வோம். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறையின் பங்களிப்பு இருக்கிறது.

எம்.எஸ்.இ. முடித்து 74-ம் ஆண்டில் தடய அறிவியல் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஊட்டியில் வேலை. அங்கு இருந்த ஒரு மலை கிராமத்தில் தன் கணவனையே மனைவி கொலை செய்திருந்த வழக்கு தான் என் முதல் வழக்கு. இருபதுகளில் இருந்ததால் ஒரு விதமான பயம் இருந்தது. இதற்கு மலை சார்ந்த இடமும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சடலம் இருக்கும் இடத்துக்கு அருகே அமர்ந்து சாப்பிடுகிற மனநிலைக்கு கூட வந்துவிட்டேன்," என்றவர் தான் சந்தித்த சில வழக்குகள் பற்றி விரிவாகச் சொன்னார்.

"சென்னை அருகே இருந்த கிராமத்தில் ஒரு தாய் மட்டும் தனியாக இருக்கிறார். கரூரில் வேலைபார்க்கும் மகன் சீரியஸாக இருக்கிறான். உடனே கிளம்பி வரவும் என்று அவருக்கு ஒரு தந்தி வருகிறது. பதறியடித்து அந்த தாயும் கிளம்பி செல்கிறார். ஆனால் அங்கு மகன் நன்றாக இருக்கிறான். தந்தி ஏன் வந்தது என்பதை பற்றி மறந்துவிட்டு மகனுடன் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிகிறார்.

வீட்டை திறந்தவர்க்கு அதிர்ச்சி, உள்ளே வைத்திருந்த பணத்தை காணவில்லை. இந்த புகார் காவல் துறைக்கு செல்கிறது. அவர்கள் எங்களை உதவிக்கு அழைக்கிறார்கள். நான் சென்று திருட்டு நடந்த வீட்டை பார்க்கிறேன். ஒரே வீட்டை இரண்டாக தடுத்திருக்கிறார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு உள்ளேயே செல்ல முடியும். வீட்டின் பூட்டு சரியாக இருப்பதால் வீட்டின் இன்னொரு பகுதியில் இருந்து வந்து தான் திருடி இருக்க முடியும் என்று நம்பி நானே ஏறிச்சென்று மேலே பார்த்தேன். பனை மரத்திலான ரீப்பர் கட்டை நடுவே இருக்கிறது. அந்த ரீப்பர் கட்டை தாவி குதிக்கும் போது பக்கத்து வீட்டுகாரனின் கால் முடி அந்த மரத்தில் சிக்கி விட்டது. கால் முடியை எடுத்து ஆராயந்து பார்த்ததில் பக்கத்து வீட்டுகாரன் தான் திருடி இருக்கிறார் என்று நிரூபிக்க இந்த தடயம் வசதியாக இருந்தது," என்றவர்  தான் சந்தித்த இன்னொரு வழக்கின் விவரத்தை பகிர்ந்தார்.

"இன்னொரு கிராமத்தில் வயதான முதியவரை கொன்று விடுகிறார்கள். வீடு முழுக்க ரத்தம். சென்று பார்த்தபோது எந்த தடயமும் கிடைக்க வில்லை. ஆனால் முதியவரின் ரத்தத்தை மிதித்துவிட்டு வெளியே செல்லும் போது கொலை செய்தவனின் கால் தடம் பதிந்துவிட்டது. அந்த மாதிரியை எடுத்தோம். மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்ட சிலரை காவல் துறையினர் கைது செய்திருந்தார்கள். அவர்களின் கால் தடத்தை எடுத்துபார்த்ததில் ஒருவனின் கால்தடம் சரியாக பொருந்திவந்தது," என்றவரிடம் ரேகை ஆராய்வதும் உங்களது துறைதான என்று கேட்டதற்கு, "என் சொந்த ஊருக்கு போகும் போதும் கூட என்னை ரேகை பார்க்கும் இடத்தில் வேலை பார்ப்பவர் என்று சொல்லுவார்கள்," என்று சிரித்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.

"ரேகையை ஆராய்வது தடய அறிவியல் துறையின் பணி அல்ல. நாங்கள் குற்றம் அல்லது சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் தடயங்களை அறிவியல் பூர்வமாக நிரூப்பிப்பது தான் எங்களது பணி.

சம்பவம் என்று என்று சொன்னது தான் காரணம் இருக்கிறது. ஒருவர் மறைந்து விடுகிறார். அவரது உடல் புதைக்கபட்டுவிடுகிறது. சில நாட்களில் எழும்புக்கூடு தான் இருக்கும். அப்போது குறிப்பிட்ட இவர் தான் இறந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது. அவர் யார் என்பதையும் தடய அறிவியல் மூலமாக கண்டிபிடிக்கலாம்.

இறந்தவரின் புகைப்படம் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதாகக்கி, மண்டை ஓட்டை வைத்துக்கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து சூப்பர் இம்போசிஷன் முறையில், இறந்தவர் இவர்தான் என்று கண்டிபிடிப்போம். ஒரு வேளை புகைப்படம் கிடைக்கவில்லை, இறந்தாக சொல்லப்படும் நபரின் பெற்றோர்களின் டி.என்.ஏ.வையும்  கிடைத்த மண்டையோட்டில் இருக்கும் டி.என்.ஏ.வையும் வைத்து சோதனை செய்வோம்.ஒருவேளை பெற்றோர்கள் இல்லை என்றால், இறந்தாக சொல்லப்படும் நபரின் குழந்தைகளின் டி.என்.ஏ.வை எடுத்துக்கொண்டு சோதனை செய்வோம்.

இது போல பல வகைகளில் தடய அறிவியல் துறை தடய அறிவியல் துறை செயல்படுகிறது என்று சொன்னவரிடம், "இப்போது உங்களிடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் வந்து சென்றதற்கான தடயத்தை பற்றி சொல்ல முடியுமா என்று விஜயகுமாரிடம் கேட்டதற்கு. உடனடியாக இரண்டு மூன்று தடயங்களை சொல்ல முடியும். மேலும் உங்களது பழக்கங்களை வைத்து நிறைய கண்டிபிடிக்க முடியும். முதலில் உங்களது விசிட்டிங் கார்டு இங்கே என்னிடம் இருக்கிறது. இரண்டாவதாக இந்த டேபிளில் இரண்டு டம்ளர்கள் இருக்கிறது. அது ஏன் இங்கு இருக்க வேண்டும். அதில் என்ன இருந்தது. மேலும் அதில் என்ன கலக்கப்பட்டிருந்தது. என்ற அடிப்படையில் தேடலாம். இன்னும் தேடிப்பார்க்கும் போது நிறைய தடங்களை நீங்கள் விட்டுச் சென்றிருக்கலாம்.

சம்பவம் நடந்த இடத்தில் எது வேண்டுமானலும் தடயமாக இருக்கலாம். அது தான் தடயம் என்று கண்டுபிடிக்கும் ஆற்றலை அனுபவம் தான் கற்றுக்கொடுக்கும்," என்று முடித்தார் விஜயகுமார்.

வினோத வழக்குகள்...

தடய அறிவியல் துறையின் மற்றொரு பிரபல நிபுணர் சந்திரசேகரிடமும் பேசினேன். அவர் தான் சந்தித்த 'கொலை அல்லாத வினோத வழக்கின்' அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

"தடய அறிவியல் துறையில் வேலைக்கு சேரப்போகிறேன் என்று சொன்னவுடனே என் வீட்டில் அனைவரும் பயந்தனர். இருந்தாலும் எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. இப்போது திருப்பி பார்க்கையில் நிறைய வழக்குக்கு உதவியிருக்கிறேன் என்று நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது.

திருட்டில் தொலைந்து போன தொகையே 600 ரூபாய் தான். ஆனால் அதற்கான தடய அறிவியல் செய்த செலவு 1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து குற்றவாளியை கண்டிபிடித்தோம்," என்றார்.

மேலும், தடயஙகள் இல்லாமல் குற்றங்கள் நடைபெற வாய்ப்பே இல்லையா என்று கேட்டதற்கு, "மிகச்சிறிய குற்றங்கள், உதாரணத்துக்கு சிறு திருட்டுகள் எந்த விதமான தடயமும் இல்லாமல் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரிய குற்றங்களில் தடயம் இல்லாமல் செய்யவே முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னால் புரியவரும்.

தடய அறிவியல் துறைக்கு சவால் விட்டு நான் இந்த வீட்டில் திருடப்போகிறேன். முடிந்தால் நான் வந்ததற்காக தடயங்களை உறுதி செய்யுங்கள் என்று சவால் விட்டு, ஒரு வீட்டுக்கு திருடப்போகிறார். (நிஜமாக அல்ல சவாலுக்காக). சவால் விட்டுவிட்டோமே என்று கவனமாக தலைமுடிக்கு கவசம், கையுறை, காலுறை என எல்லாவிதமான முன் எச்சரிக்கையுடனும் செல்கிறார். அதீத எச்சரிக்கையுடன் செல்வதால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு வியர்த்துவிடுகிறது. அதனால் ஃபிரிட்ஜில் இருந்து ஒரு குளிர்பானத்தை எடுத்துகுடிக்கிறார். அதிலும் தடயங்கள் இல்லாமல் அழித்துவிட்டு திரும்பிவிடுகிறார்.

சிறிதுநேரத்தில் தடய அறிவியல் துறையினர் செல்கிறார்கள். தேடிப்பார்த்தும் எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு அவர் குடித்த மிச்சம் வைத்த பாட்டலின் மூடி கிடைக்கிறது. இப்போது தான் ஒரு விஷயம் புரிய வருகிறது. அந்த ஃபிரிட்ஜிலே பாட்டில் திறப்பதற்கான ஓப்பனர் இருக்கிறது. இருந்தாலும் இவரின் பழக்கத்தின் காரணமாக தன் பல்லை பயன்படுத்தி பாட்டிலை திறந்திருக்கிறார். அந்த மூடியில் அவர் பல்லின் அச்சு இருக்கிறது.

இருந்தாலும் அது அவரின் அச்சுதான் என்று கண்டிபிடிக்க அவரை சில நாட்கள் பின்தொடர்ந்து வேறு இடத்தில் இதே போல் பாட்டிலை திறக்கும் போது அந்த மூடியையும்  எடுத்து நிரூபிக்கிறார்கள். பழக்கம் கூட தடயத்தை உண்டாக்கும்," என்று முடித்தார் சந்திரசேகர்.

தமிழ்நாட்டில் தடய அறிவியல்!

சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.

தடய அறிவியல் துறையில் எப்படி இணைவது?

இயற்பியல், வேதியியல், உயிரியில் பாடங்களில் பட்ட மேற்படிப்பு படித்திருத்தவர்கள் டி.என்.பி.எஸ்.இ. தேர்வுகள் மூலமே இந்த பணியில் சேரமுடியும்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. ஃபாரன்சிஸ் சயின்ஸ் கோர்ஸ் இருந்தது. இருந்தாலும் இந்த கோர்ஸ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த படிப்பு இருக்கிறது.

படம்: வீ.நாகமணி

Source : Vikatan

இந்திய – சிறீலங்கா பாணியில் இத்தாலிய பாராளுமன்றத்தில் அடிதடி மோதல்



இந்திய – சிறீலங்கா பாணியில் இத்தாலிய பாராளுமன்றத்தில் அடிதடி மோதல்

டென்மார்க் 27.10.2011 வியாழன் மாலை
இத்தாலிய பாரளுமன்றத்தில் ஆளும் கூட்டுக்கட்சியினருக்கும், எதிரணியினருக்கும் இடையே சூடான வாக்குவாதம், 26.10.2011 புதன்கிழமை,  நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளதார திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான சில உத்திரவாதங்களை  இத்தாலிய அரசு  கொடுக்க வேண்டியிருந்தது. இத்தகைய உத்தரவாதம் இல்லாவிட்டால் புதிய திட்டங்களை அமல் செய்ய முடியாது.  இதை நிறைவேற்ற கடுமையான மீதம் பிடித்தலை இத்தாலி மேற்கொண்டாக  வேண்டும்.
இதுகுறித்த விவாதம் பாராளுமன்றில் நடைபெற்றபோது எதிரணியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றைய ஆளும் (கூட்டணிக்கட்சியான லீகா நோட்) கட்சியினரை நோக்கி தமது   கைகளில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து வீசினார்கள். இக்கட்சியின் வயதான தலைவர் 39 வயது பெண்ணை தேடி ஓடியுள்ளார் என்று இன்னொருவர் திட்டினார். இதனால் அடிதடியில் இரு தரப்பும் இறங்கினார்கள்.
பொருளாதாரப் பிரச்சனையை தீர்ப்பதைவிட இவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பது பாரிய பிரச்சனையாக மாறியது.
இந்திய – சிறீலங்கா பாராளுமன்றங்களில் ஜனநாயக முதிர்வில்லாத  உறுப்பினர்கள் நடப்பதுபோல இத்தாலிய பாராளுமன்றிலும் நடைபெற்றது. நல்லவேளை கலைஞர் பாணியில் துகிலுரி படலமும், தேவடியா பேச்சும் இடம் பெற்றிருந்தால் மேலும் சுவையேறியிருக்கும்.
இருப்பினும்,  கலைஞரின் தேவடியாள் பாணியில் 39 வயது குமரிக்காக இத்தாலிய பாராளுமன்றத்தில்  அடி, தடி  நடந்தது ஐரோப்பாவில் ஒரு குளுகுளு மோதலாகவே பேசப்படுகிறது.

Friday, 29 April 2011

Who will be “lesser evil” for Muslims in Tamil Nadu

Who will be “lesser evil” for Muslims in TN: Amma or Kalaignar?

By Md. Ali, TwoCircles.net,

New Delhi: With just 15 days left in the Judgment of Tamil Nadu assembly elections and amid various poll predictions, the political temperature of the state seems high. All election surveys point towards the possibility of a coalition government or a fractured mandate or a hung assembly.

Like general voters, no body exactly knows who the Muslim electorate favored on 13 of this month, although each alliance, led by DMK and AIDMK, claims to have got their votes.


Jawahirullah (3rd from Left) with a TMMK delegation meeting Jayalalitha

What has become the talk of the town is the question: Who among Amma and Kalaignar, as Jayalalitha and Karunanidhi are popularly known, will be “good” for Muslims who constitute around seven percent of the state population.

There are many who think that the DMK-led alliance will be better for the Muslim electorate of the state. Historically and traditionally Muslims are seen as a DMK vote bank. Credit goes to its alliance with the Indian Union Muslim League (IUML) since the days of its founder Mohammed Ismael. This time IUML fought on 3 assembly seats but on the DMK symbol, the rising sun.

Shafi Ahmad Ko, Chennai-based senior journalist, says that Karunanidhi-led DMK is largely seen as a Muslim-friendly political party. Explaining the basis for this kind of image, Shafi says that the DMK government started 3.5% reservation for Muslims in the state and during the campaign trail, Karunandhi promised to raise the percentage to 5% if voted back to power. The DMK government also constituted an Urdu academy in the state for the propagation of the language which is spoken in some Muslim pockets of the state. Moreover, when it comes to the religious freedom of the minorities, people feel much more comfortable during the regime of DMK, adds Ahmad.

As opposed to the DMK, Shafi explains that the media image of Amma is of a pro-Brahmanical force. The reason behind this kind of image is that Jayalalitha had supported the Karsevaks’ demolition of the Babri Masjid. Another instance of her anti-Minority image was the Anti Conversion Law which Amma brought in 2002 but she had to scrap it due to its widespread criticism.


In this file photo K.M. Khader Mohideen, president of the Tamil Nadu State Indian Union Muslim League is seen along with M. Karunanidhi, Chief Minister of Tamil Nadu, during a IUML State conference in Chennai. Photo by The Hindu

But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two. In this regard, a section of the intellectuals in the state looks at the welfare measures announced by the DMK government for the minorities, with a strong sense of skepticism and calls for the evaluation of these schemes as they are being implemented on the ground.

Dr. Sattar, president of the state chapter, All India Muslim Majlise Mushawarat, cautions against the simplistic way of blindly considering DMK as the messiah of the Muslims in the state. Sattar points towards the state sponsored structural prejudices against Muslims because of which their representation at various governmental sectors is quite low. He also highlights the low accessibility and skewed implementation of the schemes for the welfare of the minorities in the state, “Just by allowing the minority community to pray according to its religion doesn’t mean that you are secular and their friend.”

On the issue of Urdu for instance, S.M. Pasha of Urdu Lovers Forum is very angry against the DMK government, “the state government pretends acting in the interests of Urdu but actually it couldn’t have done more harm to the language when it made the language optional for the students.”

Consequently, a section of the Muslim community calls for revaluation of their approach towards Jayalalitha. They look forward to Amma as the possible sincere benefactor of Muslims in the state. It’s on the support of this constituency that Prof. Jawahirullah, chief of Tamil Nadu Muslim Munnetra Kazagham (TMMK), withdrew his support to DMK and went with the AIADMK alliance in this election.

“Only AIADMK can provide the real empowerment to the Muslims because only this party had the courage to let the only Muslim party have its identity as opposed to the DMK which treats IUML as its minority wing,” says the TMMK chief.

Highlighting the failures of the DMK government in the past, Jawahirullah shows the “sincerity” of the AIADMK when it promised the Muslims reservation not just 5% but a proportionate one. Alleging that the largest number of communal riots happened in the state during the DMK regime and not during the AIADMK government, Jawahirullah says that, “It’s a myth that the DMK government has protected the minorities.”

“Jayalalitha means business as opposed to Karunanidhi who only talks and most of his announcements are just propaganda which doesn’t get implemented at the ground level,” says Jawahirullah who has also fought assembly elections from Ramanathapuram.

Accusing the DMK government of insincerity, the TMMK chief also highlights the failure of the DMK government in implementing the recommendations of the Ranganath Mishra Commission Report in the state.



Jayalalitha & M. Karunanidhi [Photo Courtesy: chikubuku.com]

But what about the anti-minority stands of the AIADMK in the past? “Every body learns from their experiences from the past and so has Jayalalitha. We just need to give her another chance,” defends the TMMK chief who avoids being called a “professional politician.”

What will be very interesting to see is: who is voted to power and how the Muslim political groups respond to that political dispensation because ultimately it will influence the way Muslim politics is being done in the state.

Source: http://goo.gl/QuRQc