இந்திய – சிறீலங்கா பாணியில் இத்தாலிய பாராளுமன்றத்தில் அடிதடி மோதல்
டென்மார்க் 27.10.2011 வியாழன் மாலைஇத்தாலிய பாரளுமன்றத்தில் ஆளும் கூட்டுக்கட்சியினருக்கும், எதிரணியினருக்கும் இடையே சூடான வாக்குவாதம், 26.10.2011 புதன்கிழமை, நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளதார திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான சில உத்திரவாதங்களை இத்தாலிய அரசு கொடுக்க வேண்டியிருந்தது. இத்தகைய உத்தரவாதம் இல்லாவிட்டால் புதிய திட்டங்களை அமல் செய்ய முடியாது. இதை நிறைவேற்ற கடுமையான மீதம் பிடித்தலை இத்தாலி மேற்கொண்டாக வேண்டும்.
இதுகுறித்த விவாதம் பாராளுமன்றில் நடைபெற்றபோது எதிரணியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றைய ஆளும் (கூட்டணிக்கட்சியான லீகா நோட்) கட்சியினரை நோக்கி தமது கைகளில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து வீசினார்கள். இக்கட்சியின் வயதான தலைவர் 39 வயது பெண்ணை தேடி ஓடியுள்ளார் என்று இன்னொருவர் திட்டினார். இதனால் அடிதடியில் இரு தரப்பும் இறங்கினார்கள்.
பொருளாதாரப் பிரச்சனையை தீர்ப்பதைவிட இவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பது பாரிய பிரச்சனையாக மாறியது.
இந்திய – சிறீலங்கா பாராளுமன்றங்களில் ஜனநாயக முதிர்வில்லாத உறுப்பினர்கள் நடப்பதுபோல இத்தாலிய பாராளுமன்றிலும் நடைபெற்றது. நல்லவேளை கலைஞர் பாணியில் துகிலுரி படலமும், தேவடியா பேச்சும் இடம் பெற்றிருந்தால் மேலும் சுவையேறியிருக்கும்.
இருப்பினும், கலைஞரின் தேவடியாள் பாணியில் 39 வயது குமரிக்காக இத்தாலிய பாராளுமன்றத்தில் அடி, தடி நடந்தது ஐரோப்பாவில் ஒரு குளுகுளு மோதலாகவே பேசப்படுகிறது.
No comments:
Post a Comment