Monday, 19 March 2012

Google +1 பொத்தானை அழகாக்க! (Chrome Browser)

Google Plus என்கிற social networking and identity service, 28 June 2011 லிருந்து, Google  லினால், தொடங்கப்பட்டது.

19 January 2012 -ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரப்படி Google+ உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 90 மில்லியன் எனவும், இந்த வளர்ச்சியானது தினமும் (தோராயமாக) 625,000 புதிய உபயோகிப்பாளர்களின் மூலம் கூடிக்கொண்டே போய், இவ்வருட (2012) இறுதியில் 400 மில்லியன் உபயோகிப்பாளர்களை Google+ பெற்று சாதனை படைக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இருப்பினும்,  Google+ உபயோகிப்பாளர்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 3.3 நிமிடங்கள் மட்டுமே இதை பாவிப்பதாகவும், Face Book பயனாளிகள் மாதம் சராசரியாக 7.5 மணி  நேரங்கள் Face Book இல், செலவிடுவதாகவும்  Todd Wasserman (from Mashable) என்பவர் சொல்கிறார்.



எது எப்படியோ, தற்போதைக்கு Google+ -ன் வளர்ச்சி Face Book -கை விட குறைவாகவே இருந்தாலும், Google+ தன்னகத்தே வைத்துள்ள Features (Stream, Circles, Hangouts, Messenger, Instant Upload, Sparks, Games) என்னும்  அம்சங்களை பயனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ளதால்,  காலப்போக்கில் அதிக அளவிலான உபயோகிப்பாளர்களை பெற்றுவிடக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உள்ளன.

மேலும், Google +1 -ன் Button Color பார்ப்பதற்கு அபாயகர, சிகப்பு கலரில் அமைக்கப்பட்டு இருப்பது நம் கண்களுக்கும், மனதுக்கும் இதம் அளிக்கக்கூடியதாக இல்லை! (சிலருக்கு இருக்கலாமோ என்னவோ?!)

ஆக, நம் விருப்பத்துக்கு ஏற்ற நீல கலரில், இந்த Button -ஐ எப்படி மாற்றி அமைக்கலாம்?


முதலில், http://mohamedmansour.com/chrome/google-plus-revert/  என்னும் Link சென்று ...
     



பிறகு, கீழ்காணும்  இவ்வழிமுறைகளை பின்பற்றவும்:


1.
என்பதை Click செய்து ......




2.
Install என்பதை மீண்டும் Click செய்து .....

3.
 









Install என்பதை மேலும் Click செய்ய,

இந்த Chrome Extension (நீட்சி), தன்னை, Chrome Browser -ரில் இணைத்துக்கொண்டு விடும்.

Chrome Browser -ஐ Refresh செய்ய சிவப்பு கலரில் காட்சி அளித்த (Google +1) Button நீல கலருக்கு மாறி இருக்கும்.

மின்சாரச் சிக்கலும் தமிழக அரசின் தனியார்துறை பாசமும்




 “....தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு களையப்பட்டு, மின்வெட்டு அறவே ஒழிக்கப்படும். தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும்...”

இது கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தற்போது முதல்வர் பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா சொன்னது. மக்களும் செயாவின் பசப்பு வார்த்தைகளை நம்பியும், கடந்த ஆட்சியின் மீது கொண்டிருந்த பல்வேறு வெறுப்புகளை வெளிக்கொணரும் வகையிலும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.

ஆனால் செயலலிதா அரியணையேறிய ஓரிரு நாட்களிலேயே, “வேதாளம் முருங்கை மரம்” ஏறிய கதையாக சமச்சீர்க் கல்வி எதிர்ப்பு, பரமக்குடியில் ஆறு தமிழர் படுகொலை, விலை உயர்வு, தொடர் மின்வெட்டு என்று மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் வரலாறு அனைவரும் அறிந்ததே.

செயலலிதா ஆட்சிக்கட்டிலேறிய ஆறே மாதத்தில், மின்சாரம் எப்போது துண்டிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சருக்கே தெரியாத அளவிற்கு, தற்போது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மொத்த மின்வெட்டு எட்டுமணி நேரமா, பத்துமணி நேரமா? - என்று மின்துறை அமைச்சரே குழம்பிப்போகும் அளவுக்கு நிலைமை மோசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் இருள் சூழ்ந்து கிடக்கக்கூடிய நிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ள திடீர் மின் பற்றாக்குறை இயற்கையானதுதானா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது, 1910-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் வந்தது.

'விடுதலை இந்தியாவின்' முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற புரட்சியாளர் அம்பேத்கர், 'மின் விநியோகச் சட்டம்-1948' என்றொரு சட்டத்தை நிறைவேற்றி, அதை அறிமுகம் செய்து பேசும்போது, 'எதிர்கால இந்தியா மின் வளர்ச்சியைச் சார்ந்தது. மின்சாரம் என்பது எல்லா தொழிலுக்கும் தாய்த் தொழில் போன்றது. ஆகவே இது தனியாரிடம் இருக்கக்கூடாது. 70 விழுக்காடு கிராமங்களை உள்ளடக்கிய விவசாய நாடு இந்தியா. எனவே கிராமங்களுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்சாரத்தை விநியோகிக்கும் பொறுப்பை மத்திய-மாநில அரசுகள் ஏற்க வேண்டும்' என்று மின்சாரத்தின் அவசியத்தின் முன்னுரிமையை வலியுறுத்தினார்.

மேலும், இது மாநில அரசின் ஒரு துறையாக முடங்கி விடாமல் மின் வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் சட்டத்தை வடிவமைத்து, மின்சாரப் பயன்பாட்டை அனைவரும் எட்டுவதற்கு வழிவகை செய்தார். 

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் 'சேவை' என்கிற நிலையில்தான் அவ்வாரியம் தொடங்கப்பட்டது அதன்படியே செயல்பட்டும் வந்தது. மக்களின் பேராதரவையும் பெற்று விளங்கியது.

1975லேயே 95 விழுக்காடு கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கி, மின் உற்பத்தியில் முன்னணியில் விளங்கியது தமிழ்நாடு மின்சார வாரியம்.

அதன்பிறகுதான், மின்வாரியங்கள் மூலதனத்தில் 3 விழுக்காடு இலாபமீட்ட வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில், 1979-ஆம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவரை ‘சேவை’ என்கிற நிலையில் இருந்த மின்சார வாரியம், அப்போதுதான் ‘இலாபம்’ என்கிற ஒரு கருத்தை முன்வைக்கிறது.

'புதிய பொருளாதாரக் கொள்கை' உருவானபோது, மின்சாரத்தின் ‘கழுத்து’ இறுகத் தொடங்கியது. உலகமயமாக்கலின் விளைவால் வேரூன்றிய பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குச் சாதகமாக, 'ஒழுங்குமுறைச் சட்டம் - 1998' என்கிற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது இந்திய அரசு. அதுவரை மின்சார வாரியத்தின் கையில் இருந்த மின் கட்டண நிர்ணயம், உரிமம் வழங்கும் அதிகாரம் (லைசென்ஸ்) உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் தட்டிப் பறித்துக் கொண்டது ஒழுங்குமுறை ஆணையம்.

இவ்வொழுங்குமுறை ஆணையம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்நிய பெருமுதலாளிகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டு, 'மின்சாரச் சட்டம் 2003' என்கிற ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டமானது. 'தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் முன் அனுமதி பெறத் தேவையுமில்லை. மின்சாரம் வணிக ரீதியாக விற்கப்படவேண்டும்' என்பன போன்ற பல புள்ளிகளுடன் முழுக்க முழுக்க தனியார் துறையினரின் ஆதிக்கத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டது.

1998-இல் ஒழுங்குமுறை ஆணையம் 'தலையெடுத்த' பிறகு இருந்த இலாபமும் சற்றே குறைந்து நட்டத்தை அடையத் தொடங்கியது மின்சார வாரியம். 

எடுத்துக்காட்டாக: 
1998-99இல் 334.93 கோடி இலாபம்; 
1999-2000இல் 365.05 கோடி இலாபம்; 
2000-2001இல் 387.83 கோடி இலாபம்; 
2001-2002-இல் 4851.9 கோடி நட்டம் 
(நன்றி. மின்சாரக் கட்டணம்-தனியார் துறையின் வேட்டைக்காடு, பொறியாளர் சா.காந்தி) 

இந்த புள்ளி விபரத்தை நன்கு கூர்ந்து கவனித்தீர்களேயானால் ஒழுங்குமுறை ஆணையத்தின் இலட்சணம் விளங்கும். அவ்வாணையம் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் அடைந்த இலாபம் 1087.81 கோடி; ஆனால் 2001-2002-இல் அடைந்த நட்டம் 4851.9 கோடி. என்னே ஒழுங்குமுறை ஆணையத்தின் சாதனை!

இவ்வாறாக 1957-தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 2003-வரை 46 ஆண்டுகள் வாரியங்களால் அரசு அடைந்த நட்டம் ரூ.41400 கோடி (இக்கால கட்டத்தில் தான் மக்களுக்கு சேவை அடிப்படையில் மின்னிணைப்பு வழங்கப்பட்டது).  

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அடைந்த நட்டம் ரூ.1,13,089 கோடி.

எதிர்வரும் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ.53,298 கோடி. இந்த நட்டத்தையெல்லாம் சரிகட்டப்போவது வேறு யாருமில்லை; பொது மக்களாகிய நாம் தான். அதற்காகத்தான் முடிவை முன்கூட்டியே எடுத்துவிட்டு, மக்களிடம் 'கருத்துக்கேட்பு' என்னும் நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு.

ஒழுங்குமுறை ஆணையம் தொடக்கத்திலிருந்து பெரும் நட்டத்தில் இயங்கி வந்தாலும் ஓரளவு மின்சாரம் வினியோகம் இருந்ததே, இப்போது என்ன திடீர் தட்டுப்பாடு என்கிற புரியாத புதிருக்கான விடையை இனி ஆராய்வோம்.

பொதுவாக மின்சாரக் கொள்முதல் ஐந்து பிரிவுகளிலிருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. அவை:
1. மாநில அரசின் சொந்த மின் உற்பத்தி 
2. நடுவண் தொகுப்பிலிருந்து தமிழகத்தின் பங்கு 
3. மரபுசாரா மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம் 
4. ஒப்பந்தம் செய்துகொண்ட தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரம் 
5. சந்தை விலையில் கொள்முதல்.

மேற்கண்ட ஐந்து பிரிவுகளில் இருந்தும் மின்சாரம் தங்குதடையின்றி மின்சாரம் பெறப்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில், மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தக் கூடுதல் மின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதலாக மின் உற்பத்தி நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் உலகமயமாக்களின் விளைவால் வந்த புதிய பொருளாதாரக் கொள்கை அதற்கு தடைபோட்டது.

1994-க்குப் பிறகு மின்வாரியங்கள் தங்கள் கூடுதல் தேவைக்காகப் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கவில்லை.

அக்கால கட்டத்தில், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க CEA (Central Electricity Authority)யின் அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் CEA, மின் வாரியங்களின் எல்லா நகர்வுகளுக்கும் முட்டுக்கட்டைபோட்டது. இவ்வாறு நடுவணரசு, தனியார் முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் எடுபிடிகளாக விளங்கியதன் விளைவாக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தடையின்றிச் செயல்படத் தொடங்கின.

தமிழகத்தின் முதல் தனியார் மின் உற்பத்தி நிலையமாக, சென்னை பேசின் பாலம், வாரியத்தின் நிலத்தில் அமைந்துள்ள ஜி.எம்.ஆர். செயல்படத் தொடங்கியது. இந்நிறுவனம் கடந்த 1999-சனவரி முதல் உற்பத்தியைத் தொடங்கியது. இது 196 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

தொடர்ந்து பிள்ளை பெருமாள் நல்லூர் நிலையம், சனவரி 2001-இல் சாமல்பட்டி, (10.566 மெகாவாட்) ஏப்ரல் 2001-இல் மதுரை பவர் (106 மெ.வா), டிசம்பர் 2002-இல் நெய்வேலி S.T.C MS (250 மெ.வா) போன்ற நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கின. இதுபோக, Abam (113 மெ.வா), Penna (52.8 மெ.வா) போன்ற தனியார் மின் நிலையங்களும் செயல்படத் தொடங்கின. மேற்கண்ட நிறுவனங்கள் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், வாரியத்திற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய வேண்டும்.

வாரியம் தன் மின் தேவை அதிகரிக்கும்போது, வெளிச் சந்தையில் மின்சாரத்தை வாங்கத் தொடங்கியது.  இன்று மின்சார வாரியம் தன் சொந்த உற்பத்தியான 32 விழுக்காடு போக, ஏனைய 88 விழுக்காடு மின்சாரத்திற்கு கொள்முதலை நம்பித்தான் வினியோகம் செய்கிறது.

மேலே கண்ட தனியார் நிறுவனங்களிடம் வாரியம் செய்து கொண்டஒப்பந்தத்தின்படி, வாரியம் 1 யூனிட் மின்சாரம் கூட வாங்கவில்லை என்றாலும், நிலைக்கட்டணமாக ஆண்டுக்கு 1006 கோடியை அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், மேலே முதலில் கண்ட 5 மின் நிலையங்களும் வாரியத்திடமிருந்து ரூ.10,060 கோடியை மூலதனக் கட்டணமாக பெற்றே நிலையத்தைத் தொடங்கினார்கள் என்பதுதான்.

பல்வேறு நிலைகளில் ஒழுங்குமுறை ஆணையம், தனியார் மின்நிலையங்களின் பகல் கொள்ளைக்குத் துணை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், தனியார் மின் நிலையங்களுக்கும், வாரியத்துக்குமிடையே நடந்த பல்வேறு வழக்குகளில், தனியார் மின்நிலையங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளையே வழங்கியுள்ளது ஒழுங்குமுறை ஆணையம். இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ரூ.100 கோடிக்கு மேல் வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக ஜி.எம்.ஆர். வாசவிக்கு வழங்கப்பட்ட ரூ.484 கோடி தீர்ப்பு. பி.பி. என் மின் நிறுவனம் கேட்ட ரூ.189 கோடி வழக்கில் ரூ.1050 கோடி இழப்பீடு வழங்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியது ஒழுங்குமுறை ஆணையம். ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தனியார்மீது என்னே கருணை?!

இவ்வாறாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வீழ்ச்சிக்கு தனியார் மின் நிறுவனங்களுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தமே காரணம் எனலாம்.

தற்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் மின்வெட்டு சிக்கல் பற்றி பொதுமக்களால் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வாரி இரைத்து பெறப்படும் மின்சாரம் எங்கே? என்ற கேள்வி எழுவது இயல்பே!

பொதுவாக, நடுவணரசின் அனல்மின் நிலையம் ஆனாலும் சரி, அணுமின் நிலையமானாலும் சரி, எந்த மாநில எல்லையில் அமைந்துள்ளதோ, அம்மாநிலத்திற்கு அம்மின் நிலையத்தினால் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30 விழுக்காடு மட்டும் தான் வழங்கப்படும். மீதியுள்ள மின்சாரம் நடுவண் மின்தொகுப்பிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.

குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 30%, ஆந்திராவிற்கு 19%, கர்நாடகாவிற்கு 14%, கேரளாவிற்கு 10%, புதுச்சேரிக்கு 5%, என்.எல்.சி. நிறுவனத்திற்கு 7%, நடுவண் மின்தொகுப்பிற்கு 15% என பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நடுவணரசின் சதியால் தன் மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு, இருளில் தவித்துக்கொண்டிருக்கிறான் சொரணையற்ற தமிழன்.

நம் தாய்த்தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவணரசால், பன்னாட்டு - வடநாட்டு தனியார்த் தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில், தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் தான் ரூ.42 ஆயிரம் கோடி வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. (நன்றி: தென் ஆசியச் செய்தி - பிப்ரவரி 2012) 

நம்மிடமிருந்து மின்சாரத்தைப் பெறும் அண்டை மாநிலங்களில் மின் தடை அமுலில் இல்லை. ஆனால் நாமோ இருந்த மின்சாரத்தை இழந்துவிட்டு இருளில் அல்லல்படுகிறோம்.

மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க அரசு வழிவகை செய்திருக்கிறது. பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் நம்முடைய மின்சாரத்தில் குளிர்சாதன அறைகளில் இருந்துகொண்டு கொண்டாட்டம் போட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் அமைய இருப்பனவற்றையும் சேர்த்து, 139 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவிலேயே அதிகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறியுள்ளது. இது இரு கழக ஆட்சிகளின் 'உயரிய சாதனை!'

தமிழகத்தில் 70 விழுக்காடு மின்சாரத்தை 2.1 கோடிபேர் பகிர்ந்துகொள்ள, 30 ஆயிரத்துக்கும் குறைவான பன்னாட்டு-தனியார் பெருநிறுவனங்கள் 30% மின்சாரத்தை அரசின் ஆசிர்வாதத்தோடு எடுத்துக்கொள்கின்றன‌.

வீடுகளுக்கான மின்சாரமே சரியாகக் கிடைக்காது மக்கள் இருளில் தவிக்கும் இந்தச் சூழலில், தனியார் பெருமுதலாளிகளின் காலி மனையிடங்கள் (ரியல் எஸ்டேட்) இரவிலும் பகலைப்போல ஜொலிப்பதைக் காணமுடிகிறது! இந்தக் கொடுமை நெல்லை மாவட்டத்தின் கிருஷ்ணன் கோவில், இராஜபாளையம், சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகள் என பரவலாக தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது.

மின்வாரிய நட்டத்தை பொதுமக்களின் தலையில் கட்டத் துடிக்கும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்திற்கு நம் வீடுகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகக்குறைவான தொகையையே மின்கட்டணமாக வசூலிக்கப்படுவது என்ன நியாயம் என்றே புரியவில்லை?

மேலும், 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வணிகப் பட்டியலில் இருந்து தொழில்களுக்கான பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளன‌. இதனால் ஒவ்வொரு தகவல் தொழில் நுட்ப நிறுவனமும் யூனிட்டுக்கு ரூ.1.80லிருந்து ரூ.2.50 வரை இலாபமடைந்துள்ளது. இவ்வாறு 'ஏழ்மையான' தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 'கருணை' காட்டி வருகிறது வாரியம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குச் 'சலுகை' விலையில் மின்சாரம் வழங்கும் அரசு, ஏழை எளிய மக்கள் வாழ்ந்துவரும் குடியிருப்புகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தையும் தடைசெய்துள்ளது.

இன்றைய சூழலில் நிலவும் மின் சிக்கலுக்கு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களில் போராட்டமே காரணம் என்ற மாயையை மக்களிடத்தே உருவாக்க, சமீப காலங்களில் அளவுக்கு அதிகமாக - வழக்கத்துக்கு மாறாக மின்வெட்டு செய்து, கூடங்குளம் போராட்டத்தை பாமர மக்களைக் கொண்டே எதிர்ப்புத் தெரிவிக்க வைக்கும் படுமோசமான நயவஞ்சகச் செயலைச் செய்து வருகிறது தமிழக அரசு.

கடந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, கூடங்குளத்துக்கு எதிப்புத் தெரிவிப்பது போல பம்மாத்து செய்த செயலலிதா, தேர்தல் முடிந்ததும் மத்திய அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
 
மன்மோகன் சிங்கின் மற்றும் நாராயணசாமிகள் விடும் 'புருடாக்களை' உண்மையென நம்பிக்கொண்டு மெத்தப் ‘படித்த மேதாவிகள்’ சிலர் கூடங்குளம் அணு உலையைத் திறந்தால், உடனே தமிழகம் மின்ஒளியில் மிளிரும் என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மின் தேவை, நாளொன்றுக்கு 11,000 மெகா வாட்; இதில் 2500 மெகா வாட் பற்றாக்குறை. தற்போது இது 4000 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. (நன்றி : இந்தியா டுடே - அக்டோபர் 2011)

ஆனால், நீங்கள் சொல்கிறபடி கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால், அதிலிருந்து சுமார் 963 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; அதில் மின்கசிவின் மூலம் ஏற்படும் இழப்பு 173 மெகா வாட்; மீதியுள்ளது 790 மொகா வாட். இதில் அணு உலை அமைந்துள்ள தமிழகத்திற்கான ஒதுக்கீடு (30%) வெறும் 237 மெகா வாட். இது தமிழகத்தின் தற்போதைய 2% மின் தேவையைக் கூட பூர்த்தி செய்யாது. மீதியுள்ள 553 மெகா வாட் மின்சாரம் யாருக்கு என்ற ஐயம் எழலாம்.

மீதியுள்ள மின்சாரம், நம்மைப் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காலில் போட்டு மிதித்து, தமிழகத்தின் முல்லைப் பெரியாறு நீர் உரிமையை மறுக்கும் மலையாள இனவெறி கேரள அரசுக்கும், காவிரியாறு மற்றும் பாலாற்று நீர் உரிமையை மறுக்கும் முறையே கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கும் நம் இனத்தைக் கூட்டோடு அழித்த இலங்கைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் செல்லவிருக்கிறது. அவர்கள் நம் உயிருக்கு உலைவைக்கும் கூடங்குள அணு மின்சாரத்தைப் பயன்படுத்தி குதூகலிக்க இருக்கிறார்கள்.

தில்லி அரசு, கூடங்குளம் அணு உலையைத் திறப்பதில் காட்டும் முனைப்பைப் பார்த்தே தெரியவில்லையா கூடங்குளம் யாருடைய நலனுக்கானதென்று?

அன்பார்ந்த “படித்த” பெருமக்களே, இப்போது சொல்லுங்கள்; நம் தாய்த் தமிழகத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தும் கூடங்குளம் மரண உலை நம்மண்ணில் தேவைதானா?.

தற்போதைய பெரும் மின்பற்றாக்குறைக்கு பெருமாநல்லூர் (பி.பி.என்.) ஜி.எம்.ஆர். வாசவி, மதுரை பவர், சாமல்பட்டி போன்ற தனியார் மின் நிறுவனங்கள், மின்வாரியத்தில் இருந்து தங்களுக்குச்சேர வேண்டிய நிலுவைக்காக உற்பத்தி நிறுத்தம் செய்து வருவதும் பன்னாட்டு நிறுவனங்களும், ஒழுங்குமுறை ஆணையமும், தில்லி அரசுமே காரணமாகும்.

மின்சாரமின்றி அன்றாடம் பகலிலும், இரவிலும் அல்லலுக்கு உள்ளாகும் தமிழக மக்களின் மின் தட்டுப்பாட்டைத் தீர்க்க, வாரியத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்து, தேவையற்ற நட்டத்தை நிறுத்த வேண்டும். பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நம் மண்ணில் உற்பத்தி செய்யப்படும் நெய்வேலி உள்ளிட்ட மின் நிலையங்களின் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தின் மின் தட்டுப்பாடு என்பது, தனியார்மயம் மற்றும் உலகமயத்தோடு தொடர்புடையதாக உள்ளது. எனவே, தனியார்மயம் மற்றும் உலகமயத்திற்கு எதிராக மக்களின் கரங்கள் உயர்ந்தால் தான் தமிழகத்தை பீடித்துள்ள 'இருள்' விலகும்.

- தங்க.செங்கதிர் ( tha.senkathir@yahoo.com)
அலைபேசி : 9786752008

Thursday, 15 March 2012

Shortcut keys for Face Book

Shortcut Keys உதவியால் பல வேலைகளை, நம் Computer -ரில், எளிதாக செய்துக்கொண்டு விடலாம் என்பதை அறிவோம். அப்படியான Shortcut Key -களைக்கொண்டு உலக அளவில் மிக பிரபல்யமானதும், அநேக மக்களால் பாவிக்கக்கூடியதுமான Face Book -ல் எப்படியெல்லாம் பலதரப்பட்ட OS - களான Chrome, Firefox & IE போன்றவைகளில் உபயோகப்படுத்தி பயன் அடையலாம்  என்பது குறித்து கீழே அட்டவணை மூலம் விளக்கப்பட்டுள்ளது.



Shortcut Keys for Google Chrome:



Keys Action
Alt + M New Message
Alt + ? Cursor in Search box
Alt + 0 Help Center
Alt + 1 Home Page
Alt + 2 Profile Page
Alt + 3 Friend Request
Alt + 4 Messages if any
Alt + 5 Notification
Alt + 6 Account Settings
Alt +7  Privacy Settings
Alt + 8 Official Facebook page
Alt + 9 Service Agreement 
L Like/Unlike Photos in Lightbox mode
*சில Shortcut Keys சரிவர இயங்க Chrome Browser -ஐ Update செய்தல் வேண்டும். 


Shortcut Keys for Mozilla Firefox:



Keys Action
Shift + Alt + M New Message
Shift + Alt + ? Cursor in Search box
Shift + Alt + 0 Help Center
Shift + Alt + 1 Home Page
Shift + Alt + 2 Profile Page
Shift + Alt + 3 Friend Request
Shift + Alt + 4 Messages if any
Shift + Alt + 5 Notification
Shift + Alt + 6 Account Settings
Shift + Alt +7  Privacy Settings
Shift + Alt + 8 Official Facebook page
Shift + Alt + 9 Service Agreement 
Shift + Alt + 6 Account Settings
L Like/Unlike Photos in Light box

*சில Shortcut Keys சரிவர இயங்க Firefox Browser -ஐ Update செய்தல் வேண்டும்.


                                             Shortcut Keys for Internet Explorer:



Keys Action
Alt + M + Enter New Message
Alt + ? + Enter Cursor in Search box
Alt + 0 + Enter Help Center
Alt + 1 + Enter Home Page
Alt + 2 + Enter Profile Page
Alt + 3 + Enter Friend Request
Alt + 4 + Enter Messages if any
Alt + 5 + Enter Notification
Alt + 6 + Enter Account Settings
Alt +7 + Enter  Privacy Settings
Alt + 8 + Enter Official Facebook page
Alt + 9 + Enter Service Agreement 
L Like/Unlike Photos in Light box
* சில Shortcut Keys சரிவர இயங்காது.

Monday, 12 March 2012

Privacy Policy என்கிற "தனி உரிமை கொள்கை"

இணைய உலகின் ஜாம்பவான் GOOGLE, தனது Privacy Policy என்கிற "தனி உரிமை கொள்கை" யினை  கடந்த வாரம் அதாவது 01 March, 2012 லிருந்து புதியதாக மாற்றி அமைத்துள்ளது. மாற்றி அமைக்கவிருந்த, இப்புதிய கொள்கைப்பற்றி கடந்த January யிலேயே தனது பயனாளர்களுக்கு அறிவிப்பும் செய்திருந்தது!
                                              
  • Privacy Policy - என்றால் என்ன?
  • இதற்கும், பயனாளராகிய  நமக்கும்  இருக்கின்ற சம்பந்தம்தான்  என்ன?
  • இதனால் என்னத்தான் ஆகிவிடப்போகிறது?


நாம் உபயோகிக்கும் / பயன்பெற போகும்  இணைய தளங்களில் User Account என்கிற பயனர் கணக்கு தொடங்கும்போது அந்த தளங்கள் - அவர்களின் கொள்கைகள் குறித்து நீண்ட கட்டுரையின் வடிவில் நமக்கு கொடுத்து, அக்கொள்கைகளை படித்துப்பார்த்து விட்டு - அவைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அடைப்புக் கட்டத்தில் Tick செய்து விட்டு மேலே தொடரும்படி நம்மை வலியுறுத்தும். அப்படி கட்டுரை வடிவில் கொடுக்கப்பட்ட அந்த கொள்கைகளே Privacy Policy / தனி உரிமை கொள்கைகள் ஆகும்.

அப்படியான, கொள்கைகளை நம்மில் பெரும்பாலானோர் படித்துப்பார்ப்பதே இல்லை; அவசர, அவசரமாக அடைப்புக்கட்டத்தில் Tick செய்து விட்டு பயனர் கணக்கை தொடங்கி விடுவதே வழமையாக போய்விட்டது.

'ஆம்! இலவச சேவையை நமக்கு தருகிறார்கள்! அவர்களுக்கென்று ஏதோ கொள்கை! அதனால் நமக்கு என்ன? நான் ஒருவன்தானா அக்கொள்கைகளை ஏற்று இருக்கிறேன். கோடிக்கணக்கானவர்கள் ஏற்று இருக்கிறார்களே?' என்று நம்மை நாமே தேற்றியும் கொள்கிறோம்.

அவர்களின்  அந்த Privacy Policy -ஐ முழுதும் படித்துப் பார்த்தால்தான் அவர்கள் எந்த அளவுக்கு நம்மை ஆட்கொள்ள பார்க்கிறார்கள் எனப்புரியும். "பயனாளராகிய நீங்கள்,  எங்களுடன் பயனர் கணக்கு தொடங்கினால், நாங்கள் உங்களின் விருப்பு, வெறுப்பு, தேவைகள் மற்றும் சுயவிபரங்கள் போன்ற எல்லாவற்றையும் கண்காணிப்போம்; தேவைப்பட்டால் இவ்விபரங்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு பரிமாற்றமும் செய்வோம்" என்று அந்த Privacy Policy - யில் சுருக்கமாக எழுதியிருந்தால்  Tick செய்வதற்கு முன்பு சற்று யோசித்து இருப்போம்!

இப்படி யோசிக்காமல் Tick செய்துவிட்டதால், என்ன ஆகிவிடப்போகிறது? இவர்களின் இணையதளத்தின் வழியாக நாம் செய்யும் / பார்க்கும் அத்தனையும் இவர்களின் Server -ரில் பதிவு செய்யப்படும். இப்படி பதிவானதை வைத்து, மேலே குறிப்பிட்டப்படி நம் விருப்பு, வெறுப்பு, தேவைகள் மற்றும் சுயவிபரங்கள் போன்ற அனைத்தும் அலசி ஆராயந்தப்பின், நமக்கு சாதக, பாதகமான விளம்பரங்கள் மற்றும் செய்திகள் போன்ற யாவும் நம் Computer -ரின் திரையில் காட்டப்படும். இதை ஒருவகையான விளம்பர யுக்தி என்றே சொல்லலாம்! இவ்வகையான விளம்பரங்கள், சில சமயங்களில்,   நமக்கு எரிச்சலை கூட உண்டுபண்ணலாம்!

ஆக, Google -லில் User Account என்கிற பயனர் கணக்கு தொடங்கும் ஒருவர், தனது User Account மூலமே 60 -க்கும் மேலான பல சேவைகளை, இலவசமாக, உபயோகிக்கலாம். அப்படி, பல சேவைகளுக்கும் தனி, தனியாக வரையறை செய்யப்பட்டு இருந்த Privacy Policy என்கிற தனி உரிமை கொள்கையைதான், 01 March 2012 லிருந்து "அனைத்து சேவைக்கும் ஒரே கொள்கை" என்கிற ரீதியில், புதியதாக மாற்றி அமைத்துள்ளது.  இதுப்பற்றி பார்க்க:
http://pnonazim.blogspot.com/2012/02/google-controversially-changes.html

மேலும், அதன் Server -ரில் சேமிக்கப்படும் பயனாளர்களின் தகவல்களை, பயனாளர் விரும்பினால், அதன் History பகுதிக்கு சென்று அழித்துவிடும் கூடுதல் வசதியையும் Google நமக்கு கொடுத்திருந்தாலும், அப்படி அத்தகவல்களை அழிப்பதற்கு முன்பேகூட, பயனாளரின் தகவல்கள், விளம்பர யுக்திகளுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, கடத்தப்பட்டு இருக்ககூடிய சாத்திய கூறுகள் நிரம்பவே உள்ளன.

“ஒரு விஷயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று ஒருவர் நினைத்தால், அந்த விஷயத்தை அவர்  செய்திருக்கவே கூடாது” என்று Google -லின் Co-Founder Larry Page இப்புதிய Privacy Policy -யை நியாயப்படுத்துகிறார்.

ஆக, நமது தனிப்பட்ட விபரங்களை இணையத்தில் பகிரும்போது Google என்றில்லாமல், Face Book, Yahoo, Twitter போன்ற எல்லாவற்றிலுமே, சற்று கவனமுடன் இருத்தல் அவசியம் என்பது புலனாகிறது.

Sunday, 4 March 2012

99 rajnikanth jokes..... ;)



hey guys! take ur mind off studies for sometime and have fun ;)

no offense to rajnikanth fans.





1. Rajinikanth killed the Dead Sea.

2. When Rajinikanth does push-ups, he isn't lifting himself up. He is pushing the earth down.

3. There is no such thing as evolution, it's just a list of creatures that Rajinikanth allowed to live.

4. Rajinikanth gave Mona Lisa that smile.

5 .Rajnikanth can divide by zero.

6. Rajinikanth can judge a book by it's cover.

7. Rajinikanth can drown a fish.

8. Rajinikanth can delete the Recycle Bin.

9. Rajinikanth once got into a fight with a VCR player. Now it plays DVDs.

10. Rajinikanth can slam a revolving door.

11. Rajinikanth once kicked a horse in the chin. Its descendants are today called giraffes.

12. Rajinikanth once ordered a plate of idli in McDonald's, and got it.

13. Rajinikanth can win at Solitaire with only 18 cards.

14. The Bermuda Triangle used to be the Bermuda Square, until Rajinikanth kicked one of the corners off.

15. Rajinikanth can build a snowman out of rain.


16. Rajinikanth can strangle you with a cordless phone.

17. Rajinikanth can make onions cry.

18. Rajinikanth destroyed the periodic table, because he only recognizes the element of surprise.

19. Rajinikanth can watch the show 60 minutes in 20 minutes.

20. Rajinikanth has counted to infinity, twice.

21. Rajinikanth will attain separate statehood in 2013.

22. Rajinikanth did in fact, build Rome in a day.

23. Rajinikanth once got into a knife-fight. The knife lost.

24. Rajinikanth can play the violin with a piano.

25. Rajinikanth never wet his bed as a child. The bed wet itself in fear.

26. The only man who ever outsmarted Rajinikanth was Stephen Hawking, and he got what he deserved.

27. Rajinikanth can talk about Fight Club.

28. Rajinikanth doesn't breathe. Air hides in his lungs for protection.

29. There are no weapons of mass destruction in Iraq. Rajinikanth lives in Chennai.

30. Rajinikanth kills Harry Potter in the eighth book.

31. Rajinikanth does not own a stove, oven, or microwave, because revenge is a dish best served cold.

32. Rajinikanth has already been to Mars, that's why there are no signs of life there.

33. Rajinikanth doesn't move at the speed of light. Light moves at the speed of Rajinikanth.

34. Rajinikanth knows Victoria's secret.

35. Water boils faster when Rajinikanth stares at it.

36. Rajinikanth can throw the Thackerays out of Mumbai.

37. Rajinikanth kills two stones with one bird.

38. Google won't find Rajinikanth because you don't find Rajinikanth; Rajinikanth finds you.

39. Rajinikanth gave the Joker those scars.

40. Rajinikanth leaves messages before the beep.

41. Rajinikanth once warned a young girl to be good "or else". The result? Mother Teresa.

42. Rajinikant electrocuted Iron Man.

43. Rajinikanth killed Spiderman using Baygon Anti Bug Spray.

44. Rajinikanth can make PCs better than the Mac.

45. Rajinikanth puts the 'laughter' in manslaughter.

46. Rajinikanth goes to court and sentences the judge.

47. Rajinikanth can handle the truth.

48. Rajinikanth can speak Braille.

49. Rajinikanth can dodge Chuck Norris' roundhouse kicks.

50. Rajinikanth can teach an old dog new tricks.

51. Rajinikanth calls Voldemort by his name.

52. Who do you think taught Voldemort Parseltongue? Rajinikanth did.

53. Chuck Norris once met Rajinikanth. The result - He was reduced to a joke on the internet.

54. Rajinikanth got small pox when he was a kid. As a result small pox is now eradicated.

55. Rajinikanth’s calendar goes straight from March 31st to April 2nd, no one fools Rajanikanth.



56. Rajinikanth grinds his coffee with his teeth and boils the water with his own rage.

57. The last time Rajinikanth killed someone, he slapped himself to do it. The other guy just disintegrated. Resonance.

58. Rajinikanth once had a heart attack. His heart lost.

59. Rajinikant is so fast, he can run around the world and punch himself in the back of the head.

60. Rajinikanth can run at speed of light around a tree and screw himself.

61.Rajinikant can lick his elbows.

62. Rajinikant once ate an entire bottle of sleeping pills. They made him blink.

63. Rajinikant does not get frostbite. Rajnikant bites frost.

64. Rajinikant doesn’t wear a watch. He decides what time it is.

65. Rajinikant got his drivers license at the age of 16 seconds.

66. When you say “no one is perfect”, Rajinikant takes this as a personal insult.

67. In an average living room there are 1,242 objects Rajinikanth could use to kill you, including the room itself.

68. Words like awesomeness, brilliance, legendary etc. were added to the dictionary in the year 1949. That was the year Rajinikanth was born.

69. The statement "nobody can cheat death", is a personal insult to Rajnikanth. Rajni cheats and fools death everyday.

70. When Rajnikanth is asked to kill some one he doesn't know, he shoots the bullet and directs it the day he finds out.

71. Rajinikant can give pain to Painkillers and headache to Anacin.

72. Rajinikanth knows what women really want.



73. Time and tide wait for Rajinikanth.

74. Rajinikanth sneezed only once in his entire life, that's when the tsunami occurred in the Indian ocean.

75. As a child when Rajinikanth had dyslexia, he simply re-scripted the alphabet.

76. Rajinikanth collects Honey from his private Moon - HoneyMoon.

77. Rajinikanth can answer a missed call.

78. Rajinikanth doesn't need a visa to travel abroad, he just jumps from the tallest building in Chennai and holds himself in the air while the earth rotates.

79. Rajinikanth's brain works faster than Chacha Chaudhury's.

80. Rajinikanth doesn't shower. He only takes blood baths.

81. To be or not to be? That is the question. The answer? Rajinikanth.

82. The quickest way to a man's heart is with Rajinikanth's fist.

83. Where there is a will, there is a way. Where there is Rajinikanth, there is no other way.

84. Rajinikanth's every step creates a mini whirlwind. Hurricane Katrina was the result of a morning jog.

85. Rajinikant doesn’t bowl strikes, he just knocks down one pin and the other nine faint out of fear.

86. Archaeologists unearthed an old English dictionary dating back to the year 1236. It defined “victim” as “one who has encountered Rajinikant”.

87. There is no such thing as global warming. Rajinikanth was feeling cold, so brought the sun closer to heat the earth up.

88. Once a cobra bit Rajinikanth' leg. After five days of excruciating pain, the cobra died.

89. Rajinikanth is a champion in the game "Hide n' seek", as no one can hide from Rajinikanth.

90. Rajinikant proves Newton wrong all the time. Every time he performs an action, he simply eliminates anything and everything that can provide the reaction.

91. Rajinikant is a weapon created by God to use on doomsday to end the world.

92. Aliens do indeed exist. They just know better than to visit a planet that Rajinikanth is on.

93. We live in an expanding universe. All of it is trying to get away from Rajinikanth.

94. If at first you don't succeed, you're not Rajinikanth.

95. Rajinikanth's first job was as a bus conductor. There were no survivors.

96. Rajinikanth does not style his hair. It lays perfectly in place out of sheer terror.

97. When Rajinikanth plays Monopoly, it affects the actual world economy.

98. Rajinikanth is the only man to ever defeat a brick wall in a game of tennis.

99. Rajinikanth's house has no doors, only walls that he walks through.

Thanks to: mudit gupta
Source: http://www.binscorner.com/pages/9/99-rajnikanth-jokes.html#

Saturday, 3 March 2012

Make Cell Phone Battery Last Longer

 

Turn the phone off. If you don't plan on answering the phone while you're sleeping or after business hours, just turn it off. Do the same if you are in an area with poor or no signal, such as a subway or remote area, where your phone constantly searching for better connection. Some phones have an automatic power save feature; so, enable it. If you don't need to receive or make calls then disable the phone functionality (flight mode). The best way to ensure longer battery life is to make sure you have a great signal where you use your phone.

Stop searching for a signal. When you are in an area with poor or no signal, your phone will constantly look for a better connection, and will use up all your power doing so. The best way to ensure longer battery life is to make sure you have a great signal where you use your phone.  

Switch off vibrate function and use just the ring tone. The vibrate function eats additional battery power. Keep the ring tone volume as low as possible.


Turn off phone's back light. The back light makes the phone easier to read in bright light. However, the light also uses battery power. If you can get by without it, your battery will last longer. If you have to use the back light, many phones will let you set the amount of time to leave the back light on. Shorten that amount of time. Usually, one or two seconds will be sufficient. Some phones have an ambient light sensor, which can turn off the back light in bright conditions and enable it in darker ones.

Avoid using unnecessary features. Such as camera or connect to the Internet. Flash photography can drain the battery quickly.

Keep calls short. This is obvious, but how many times someone on his phone say, "I think my battery’s dying," and then continue his conversation for several minutes! Sometimes, the dying battery is just an excuse to get off the phone (and it's a good one, too!), but if you really need to conserve the battery, limit your talk time.

Turn off Bluetooth. It will drain your battery very quickly.

Keep off WIFI, GPS, and infrared features except when you need them.

Turn the brightness of display to the lowest setting.

Use GSM rather than 3G - Using phone in 3G / Dual Mode will drain the battery quicker than if you just use GSM mode - have a look at your phones spec and you'll see it will quote two different battery life times - normally 50% more for pure GSM use.
For smartphones avoid using moving or animated pictures or videos as background. Animated backgrounds will drain the battery faster.

Use a black background whenever possible. AMOLED screens use a less power displaying black instead of white. When web browsing use sites like www.bGoog.com that display a black Google background instead of white.

Prolong the life of battery:
  • Initialize a new battery. New batteries should be fully charged before their first use to obtain maximum capacity. Ignore the phone telling you that the battery is full—this is normal but is not accurate if the battery is not initialized. 
  • Avoid fully discharging battery Batteries' life is shortened every time you fully discharge them. Instead, charge them when the battery meter shows one bar left. 
  • Keep the battery cool. Your battery will last longest if used near room temperature, and nothing wears on a battery like extended exposure to high temperatures. Avoid leaving the phone in a hot car or in direct sunlight. In addition, check the battery while it’s charging. If it seems excessively hot, your charger may be malfunctioning.  
  • Charge the battery correctly, in accordance with its type. Most newer cell phones have lithium-ion batteries, while older ones generally have nickel-based batteries. Read the label on the back of the battery or in the technical specifications in the manual to determine which yours is.  
  • Regardless of the battery type, use only a charger rated for your battery, and discontinue use of a charger that causes the battery to heat up excessively. 
  • Store batteries properly. If your battery will be out of use for a while, remove it from the phone and store it in a cool and dry place. 
  • Clean the battery terminals. Terminals may accumulate dirt, which reduce the efficiency of energy transfer. Clean them with a cotton cloth by rubbing or use isopropyl alcohol.               Be careful: solvents, such as acetone or nail polish remover dissolve plastic.
Indications for battery failure:
  • The usable time after recharging will be shortened.
  • The battery becomes unusually warm during a recharge cycle. 
  • The battery becomes warm during phone use. 
  • The battery case may become swollen. This can be detectable by touching or viewing the phone's back cover getting bump. A healthy battery's case is flat.

Thursday, 1 March 2012

Google Calendar

"GOOGLE CALENDAR" -பற்றி,  Google -ஐ,  உபயோகிக்கும் எவருக்கும்  தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! பலருக்கும் அறிமுகமான இந்த Google Calendar -ஐ, நம்முடைய வசதிக்கும், தேவைக்கும்  தக்கவகையில் மாற்றி அமைப்பது என்பது மிகச்சிலருக்கே தெரிந்ததாக  இருக்கும்!! ஆனால், பலருக்கு இதுப்பற்றி தெரிந்தும், உபயோகிப்பது குறித்து தெரியாமல்கூட இருக்கலாம்!!!

ஆக,  Google Calendar பற்றிய சிறிய அறிமுகத்தோடு, நமக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம்  மாற்றி அமைத்து அதனுடைய பயன்பாட்டை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம். 

Google Calendar என்கிற இந்த web application 13 April 2006  -லிருந்து செயலாக்கத்தில் இருந்து வருவதோடு Google பயனாளிகளை கருத்தில்கொண்டு, அவர்களுக்காக - அவர்களின் முக்கிய பணிகளை, அவர்கள் தேர்ந்தெடுக்கும்  நேரத்துக்கு e-Mail / SMS இவற்றில் ஏதாவது ஒன்றின் வழியாகவோ அல்லது  இரண்டிலுமாகவோ நினைவுப்படுத்துதலே இதன் முக்கிய குறிக்கோளாகும்.    

Google Calender -க்கான  Link: http://calendar.google.com/

Google Calendar பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள்  அதனுள்  நுழைந்து எளிதாக தம் காரியங்களை செய்துகொண்டு விடலாம்.

ஆனால், புதியவர்கள்?

Welcome to Google Calendar   பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, Continue பொத்தானை அழுத்த, அந்த புதியவர்களுக்கான Calendar உருவாக்கப்பட்டு திறக்கும்.  

அப்படி திறந்ததும், அதன் வலது மேல் புறத்தில் Day, Week, Month, 4 Days, Agenda, More என்பவைகளோடு ஒரு சக்கர வடிவமும் தெரியும். இவை எல்லாமே பயனாளர்களின் வசதி மற்றும் தேவைகளுக்காக இருப்பதுடன், இந்த சக்கர வடிவத்தை Click செய்து, Settings -ஐ தேர்வு செய்வதால், பயனாளருக்கு நான்கு (4) Options (General, Calendars, Mobile Setup, Lab என்று) கிடைக்கும். அதிலிருந்து பயனாளர் தன்வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப Calendar -க்கான Settings -ஐ மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

General: இதன் மூலம் Language, Country, Time Zone, Date Format போன்ற பலவற்றை பயனாளரின் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொண்டப்பிறகு, Save என்பதை அழுத்தி விடவும்.

Calendar: இங்கிருந்து Notifications, Sharing போன்றவற்றை மேம்படுத்திக்கொள்ளவும், Default -ஆக இருப்பதை, மாற்ற விரும்பினால், மாற்றமும் செய்து  கொள்ளலாம்.  Save என்பதை மறவாமல் அழுத்தி விடவும்.

Mobil Setup: இங்கே Country, Phone Number, Carrier போன்ற விபரங்களை உள்ளீடு செய்தாக வேண்டும். அப்படி உள்ளீடு செய்து, Mobile Setup -ஐ Activate செய்வதால்,  பயனாளருக்கு, அவருடைய தேவையை குறித்த,  SMS -களை  அனுப்பி, நினைவூட்டல் செய்ய இது வழி செய்யும். கேட்கப்பட்ட விபரங்களை, சரியாக, உள்ளீடு செய்தப்பிறகு, Send Verification Code என்பதை அழுத்த, சற்று நேரத்தில் உள்ளீடு செய்யப்பட்ட  Phone (Number) -க்கு ஒரு Verification Code வரும். அந்த Verification Code -ஐ,  அதே, Mobil Setup, பக்கத்தில் உள்ளீடு செய்துவிட்டு, Finish setup -ஐ அழுத்தி Save செய்து விட்டால் பயனாளருக்கான Mobil Setup பயன்பாட்டிற்கு தயாராகி விடும்.  

Lab: Google, தனது புதிய முயற்சிகளான கண்டுபிடிப்புகளை (experimental testing) இங்கு வெளியிடுகிறது. இவைகளையும் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், எந்நேரத்திலும் இவைகள், Google -லினால், மாற்றவும் படலாம் அல்லது எடுக்கவும் படலாம் (may change, break or disappear at any time).

இதே பக்கத்தின் இடது மேற்புறத்தில் CREATE மற்றும் அதன் கீழே அம்மாதத்துக்கான (உதாரணம்: February 2012) Calendar -ரும் தெரியும். இங்கிருந்து பயனாளர், (அதாவது, தனது Calendar -ரிலிருந்து), தன்னுடைய  Event (நிகழ்ச்சி, நிரல்) -களை உருவாக்கிக்கொள்ளலாம்.      


Event (நிகழ்ச்சி, நிரல்) -களை உருவாக்க:
பயனாளர், தனது Event, குறிப்பிட்ட தேதி (example: 25 February 2012) -யில் நினைவூட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறார். மேலே குறிப்பிட்ட CREATE -க்கு கீழே தெரியும்  February 2012 -க்கான  Calendar -ரில்  25 -ஆம் தேதியின் மீது ஒருமுறை Click செய்துவிட்டு, CREATE என்பதின் மேல் Click செய்ய ..... கீழே உள்ளதை போன்று Window (Untitled event) ஒன்று திறக்கும்.

இந்த Window -வில், பயனாளர்,  தம்முடைய தேவைகளுக்கேற்றவாறு, விவரங்களை நிரப்பி ......



Reminders என்பதில் இருவகை Options -கள் தெரியும். அவை ஒவ்வொன்றிலும் மூன்றுவித (e mail; SMS; Popup) பயன்பாட்டு வழிகள் இருக்கும்.  அவை ஒவ்வொன்றிலும் இருந்து ஏதாவது ஒரு பயன்பாட்டு வழியை தேர்வு செய்து Save -செய்து விட்டால், பயனாளரின் Event, அவர்  குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் பயனாளர் தேர்ந்தெடுத்த இரு பயன்பாட்டு வழிகளின் (example: e Mail & SMS) மூலமும் Remind செய்யப்படுவார்.

முன்னமேயே குறிப்பிட்டபடி, பயனாளர்களின் வசதிகளையும், தேவைகளையும்  கருத்தில் கொண்டு உன்னதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Google Calendar -ரில் அதிக பயன்பாடுகள் (Options, Features போன்றவை) நிரம்பவே உள்ளன. அவைகளை எல்லாம் உபயோகப்படுத்த வேண்டுமெனில், பயனாளராகிய, நாம், உட்புகுந்து பார்த்தாலே Google Calendar -ரின் சூட்சுமங்களை அறிந்துகொள்ள முடியும்.