Thursday, 12 January 2012

American soldiers immoral and illegal action against humanity



American soldiers urinating on dead Afghan bodies has sparked outrage across the world - with Afghanistan's leaders labelling it as a 'recruitment tool for the Taliban'.
The 'disgusting' and 'highly reprehensible' 40-second clip shows four men in combat gear standing over the three corpses with their genitals exposed as they relieve themselves.
The men can be heard joking 'Have a great day, buddy', 'Golden like a shower' and 'Yeahhhh!' as they groan with relief whilst urinating.
It has sparked anger from Afghans, with top negotiator from President Hamid Karzai's High Peace Council Arsala Rahmani, saying it will have a 'very, very bad impact on peace efforts'.







Read more: http://www.dailymail.co.uk/news/article-2085378/Disgusting-video-recruitment-tool-Taliban-Outrage-world-footage-emerges-showing-U-S-troops-urinating-dead-Afghan-bodies.html#ixzz1jEsh2gRA

Well done, Bijappur SP, Dr. D.C. RAJAPPA & team..!



Source: http://pinnoottavaathi.blogspot.com/2012/01/blogger.html


Well done, Bijappur  SP, Dr. D.C. RAJAPPA & team..!

பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியரிதல்களும் குறைந்து கண்டன குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும். எனவே, இங்கே சிலரை அவர்களின் நேரிய நற்செயல்களுக்காக நன்றியோடு பாராட்ட இருக்கிறோம் சகோ..! அதில் ஒருவர் பதிவர்..!

புத்தாண்டு தினத்தன்று கர்நாடகா-பீஜப்பூர் மாவட்டம், சிந்தகி என்ற ஊரில் அரசு வட்டாட்சியார் அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் உள்ள ஒரு வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருக்க... உடனே, அந்த ஊரில் பதட்டம்..!
பிஜேபி, ஸ்ரீ ராம் சேனை உட்பட்ட தடை செய்யப்படவேண்டிய அனைத்து RSS-சங்பரிவாரங்களின் ஆதரவோடு... கடைய(உ)டைப்பு, கட்டுப்பாடற்ற ஊர்வலம், விஷமகோஷம், வன்முறை முழக்கம், வெறியாட்டம், தீவைத்தல், வாகனங்களை சேதப்படுத்துதல், சாலை மறியல், தர்ணா, போக்குவரத்து நிறுத்தம், பள்ளி கல்லூரி கட்டாய விடுமுறை, அலுவலகம் மூடல், அப்பாவி மக்கள் அவதியுறல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு, கலவரம், லத்தி சார்ஜ், பந்த்... எல்லாமே ஜெகஜ்ஜோதியாக அடுத்தடுத்து திட்டமிட்டபடி மக்கள் விரோத செயல்கள் அரங்கேறின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வழக்கம்போலவே முஸ்லிம்கள் இவர்களால் 'சந்தேகிக்கப்பட்டு'(?) தூற்றப்பட்டனர். உடனே கொடி ஏற்றியவர்களை கைது செய்ய கலவரக்காரர்களால் காவல் துறையினரிடம் கோரப்பட்டது..!!!
ஆனால், கயவர்களை கண்டுபிடித்து... கைது செய்தவுடன், அவர்களிடம் பேச்சு மூச்சை காணவில்லை..! அதுவரை அப்படி குதித்தவர்கள் அடங்கிப்போய் ஓடி ஒளிந்து உட்கார்ந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, "நான் இல்லை நீதான்..." "...இல்லை ...இல்லை ...நீ தான்..!" "உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே..!" "நீ யார்..?" என்று நேற்றுவரை ஒன்றாக இருந்து கத்தியவர்கள்... தமக்குள் இன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..!

'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!

இதற்கு முன் இரண்டு பிளாஷ்பேக்ஸ் பார்த்து விடுவோம்..!
 பிளாஷ்பேக் -1 : P.கண்ணப்பன்..!
தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில், தலைப்புச் செய்தியில் "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" கைது செய்யப் பட்டிருக்க, அந்த வழக்கை தன் கையில் எடுத்து... திறம்பட துப்பறிந்து... "தங்கள் அலுவலகத்தில் தாங்களே வெடி குண்டு வைத்துக் கொண்டார்கள், இந்த RSS பயங்கரவாதிகள்" என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த அன்றைய திருநெல்வேலி DIG (பின்னர், மதுரையில் IG) P.கண்ணப்பன் IPS மற்றும் அவருடைய டீமை  தமிழ் முஸ்லிம்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. "முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்" என்ற புனையப்பட்ட அவப்பெயரை முதலில் நீக்கியவர். ஆனாலும், இந்திய ஊடகங்கள் இதை துணுக்குச் செய்தியாகக்கூட  பகிராமல் மறைத்தன.!
 பிளாஷ்பேக் -2 : ஹேமந்த் கார்கரே..! 
இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவரை தெரியாமலோ, தெரிந்தோர் மறந்து போயிருக்கவோ வாய்ப்பே இல்லை..! நான் உட்பட இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து தனக்கான குடி யுரிமையுடன் ஜம்பமாக பயங்கரவாதத்தை எதிர்த்து அவைகளுக்கு தடைகோரி பதிவில் எழுத- பொது வெளியில்  பேச- முடிகிறது என்றால்... பற்பல குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" சந்தேகத்தின் பேரில் தலைப்புச் செய்தியில் கைது செய்யப் பட்டிருந்தும், அனுதினமும் வந்த காவிகளின் கொலை மிரட்டல்களை பொருட் படுத்தாது அந்த வழக்குகளில் உண்மையை வெளிக் கொணர்ந்த இவரின் நேர்மையான உயிர்க்கு அஞ்சா உழைப்பே காரணம். இவரை நம் நாட்டிற்கு சரியான நேரத்தில் ஈந்த இறைவனுக்கே புகழனைத்தும்.
இவர்கள் போல இன்னும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நம் நாட்டிற்கு தரச்சொல்லி, இத்தளத்தில் முன்பொரு பதிவில் இறைவனிடம் நாம் பிரார்த்தித்து உள்ளோம் சகோ..! இவர்கள் போல கர்நாடகா-பீஜப்பூர் சம்பவத்தில் இன்னும் சிலரை காண்கிறோம்.
.
இந்த பாகிஸ்தானிய கொடியேற்று சம்பவம் நடந்த நான்காவது நாள் அதிகாலை (வெறும் மூனே நாள்தான் துப்பு துலக்கல்) "ஹிந்துத்துவ-RSS-சங்பரிவார கும்பலில் ஒன்றான 'ஸ்ரீ ராம் சேனா' வினர்தான் குற்றவாளிகள்" என்று கண்டு பிடிக்கப்பட்டது... நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை அல்லவா..?!
இதை நிகழ்த்தியவர்கள் பற்றி... இவர்களை ஃபோகஸ் பண்ணி  பாராட்டி, தட்டிக்கொடுத்து புகழ்ந்து பேச, ஃபோட்டோ போட்டு எழுத ஏனோ கிட்டத்தட்ட எவருமே முன்வர வில்லை..! அதனால் என்ன..? நாம் எதற்கு பிளாக் வைத்து இருக்கிறோம்..? தனிப்பதிவு போட்டு பாராட்டுவோம்..! போதாக்குறைக்கு  அவர் ஒரு பதிவர் (Blogger) வேறு..! விட்டு விடுவோமா..?
மங்களூர் பஃப் மற்றும் காதலர் தின தாக்குதலுக்கு பெயர்போன 'ஸ்ரீ ராம் சேனா'வின் மாணவர் அணி தலைவனான Rakesh Siddaramiah Mutt (19) என்பவனும், அவனோடு படிக்கும் அவ்வமைப்பின் கல்லூரி மாணவர்கள் Sunil Madiwalappa (18), Anil Kumar (18), Parashuram Ashok (20), Rohit Eshwar (18), Mallanagouda Vijaykumar (18) 5 பேரும் ( இதில் ஈடுபட்ட Arun Vaghmore (20) என்பவன் தப்பிவிட்டான்... தேடப்படும் இவன் மட்டும் இன்னும் பிடிபட வில்லை)....மொத்தம் ஏழு பேர் சேர்ந்து... இரவில் அங்கே கொடியை ஏற்றிவிட்டு காலையில் வந்து நல்லவர்கள் போல கொடியை ஏற்றியவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யக்கோரி கோஷம்போட்டு பாகிஸ்தான் கொடியை எரித்து கலவரம் செய்து இருக்கின்றனர்..!
முதலில் அந்த ஜனவரி 1 இரவில் அந்த அலுவலக வளாகத்தில் இரவு அரைமணி நேரம் (3:30-4:00) ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததுதான் முதல் துப்பு. அதை கண்ட ஐ விட்னஸ் சொன்ன தகவலின்படி... அந்த வாகனத்துக்கு சொந்தக்காரனை, வேறொரு இடத்தில் பார்த்த அந்த ஐ விட்னஸ் அவனை அடையாளம் காட்ட...  அவனை அணுகி விசாரிக்கும் போது தெரியவந்தது என்னவெனில்... பைக் சொந்தக்காரனான இவனும் இவன் நண்பனும் பிஜப்பூரில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது தம் நண்பர்களை அந்த அரசு அலுவலக வளாகத்தில் சந்தித்ததாக தெரிவித்தனர். கூடவே அவர்கள் செய்த காரியமும் இவர்கள் மூலம் வெளிவந்து விட்டது. இவர்களின் மூலம் மற்ற நண்பர்கள் கண்டறிந்து சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். தப்பிவிட்ட ஒருவன் மட்டும் இன்னும் சிக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி சுனில் வீட்டில் தான் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..! புதன்கிழமை, ஜனவரி 4 ம் தேதி அதிகாலை மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பொதுவாக முஜாகிதீன், சிமி, தொய்பா, கொய்தா என்று அனானி ஈமெயிலை ஆதாரமாக குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் 'தடா பொடா' என்று கைது செய்யப்படுபவர்கள் கூட, தங்கள் முகங்களை கைகளால் மறைக்க இயலாதவாறு பின்னால் கட்டப்பட்டு செய்தியாளர்களிடம் முகம் நிமிண்டி காட்டப்படுவது நாம் அறிந்ததே..! 
பாக்.கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனாவின் 'பர்தா' அணிந்த கேடிகள்
ஆனால், இங்கே... சாட்சி, ஆதாரத்துடன் அகப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் கூட... இவர்களுக்கு முகத்தை மறைக்க பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட முகம் மறைக்கும் புருகா-நிகாப் சலுகைகள் எல்லாம் தரப்பட்டுள்ளன..! சபாஷ்..! இந்த "புதிய மாற்றத்தை" நாம் வரவேற்போம். அதேநேரம்... நாளை ஒருநாள்... 'குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்பளித்த பின்னராவது இவர்களின் முகத்தை "நடுநிலை(?) ஊடகங்கள்" நமக்கு காட்டுவார்கள் என்று நம்புவோம்..!
"ஒரு பக்கம், நாங்கள் குற்றவாளிகள் அல்ல... RSS தான் குற்றவாளி" என்று கூறும் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா இந்த உண்மையை கண்டுபிடித்த சாதனையாளர்களுக்கு இல்லை..? அவனுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அத்தனை ஃபோட்டோக்கள் கூகுளில் உள்ளன..! ஹேமந்த் கார்கரேவின் வாரிசுகளான இவர்களுக்கு ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்குள்...அப்பப்பா 2 நாளாக நான் பட்ட பாடு..! அவர்கள் ஒருவரல்ல சகோ..! 5 பேர் கொண்ட டீம்..! இந்த ஐந்து பேரில், அதன் டீம் தலைவர்தான் சாதனையாளரான நம் பதிவர்..! கடைசியில், அவரின் ப்ளாக் ப்ரோஃபைல் போட்டாதான் எனக்கு கிடைத்தது..! நியூசில் அல்ல..!
அவர்.... பீஜப்பூர் மாவட்ட SP,  Dr. D.C. ராஜப்பா IPS
(நம்மை போல இவரும் ஒரு (Blogger) பதிவருங்கோ...!)
(பிற்சேர்க்கை) மேலேயுள்ள  ப்ளாக் ப்ரோஃபைல் லிங்க் இதுதான்....
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/
இவர்தான் ஒரு  "special investigation team"  ஒன்றை தன்னுடைய DSP - முத்துராஜ் தலைமையில் உடனடியாக ஏற்படுத்தி... அதில் DCIB Police Inspector சித்தேஷ்வர், CPI சிதம்பர் மற்றும்  PSI பாபகவுடா படில் ஆகியோரை இணைத்தார். இவர்கள்தான் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி கலவரத்தையும் கட்டுப்படுத்தி, பந்தையும் அமைதியாக நடக்க அனுமதித்து, இதன் மூலம் முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர். 
நம் நாட்டில் இவரை/இவர் டீமை எவரும் கண்டு கொள்ளா விட்டாலும் கூட... தான் உண்டாக்கிய தன்  டீமுக்கு தானே ரூ.10,000 வெகுமதி வழங்கி கவுரவித்தும் உள்ளார்.

நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..! 
Well done, Bijappur  SP, Dr. D.C. RAJAPPA & team..!

Monday, 9 January 2012

g-mail -லின் Attachment ICON -களை மாற்ற ...

பொதுவாக,  E -Mail -களில்  ஏதேனும்  Attachment இருந்தால்- அதை குறிக்கும் விதமாக -  CLIP வடிவ  ICON ஒன்று காணப்படும். அதாவது, இணைக்கப்பட்டுள்ளது - Word, Excel, PDF, Picture போன்ற - எந்த வகையை சார்ந்ததாக இருந்தாலும் அனைத்திற்கும் இந்த ஒரே CLIP வடிவ ICON -தான்! 

Mail -ஐ திறந்து பார்க்கும் போதுதான், இணைக்கப்பட்டுள்ள அந்த FILE -எந்த வகையை சார்ந்தது என்பது உறுதியாகும். ஆக, Mail -ஐ திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையை சார்ந்த  FILE  உள்ளது என்பதை அறிய முடியாது. 

இருப்பினும், இதனை சற்று மாற்றி - அதாவது இணைக்கப்பட்டுள்ள  (Attachment)  FILE, எந்த வகையை சார்ந்த  FILE -லில் இருந்து - கையாளப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளதோ .. அந்த வகை FILE -இன் ICON -ஐ தெரிய வைத்தால் எப்படி இருக்கும்?   

 மாற்றம் செய்வதற்கு முன்:
 
மாற்றம் செய்தப்பிறகு:


G Mail - ஐ Chrome Browser மூலம் செயல்படுத்தும்போது மட்டுமே இது சாத்தியமாகிறது! காரணம், மாற்றத்தை  செய்யப்போகிற- Add-on (நீட்சி), Chrome - ஐ சேர்ந்தது (Chrome Add-on) என்பதால், Attachment ICON -ஐ மாற்ற Chrome Browser  -ஐ உபயோகப்படுத்துதல் அவசியம்.  

எப்படி மாற்றம் செய்வது?
Chrome Browser -லிருந்து .....
என்ற  Link  சென்று,  +ADD TO CHROME  என்பதை Click செய்ததும் ....  


ஒரு சிறிய Window திறக்கும்.  அதில் INSTALL என்பதை Click செய்யவும்.




இங்கு சொல்லப்பட்டுள்ள  Add-on மிகவும் சிறியது என்பதால் Chrome Browser -ரில் தன்னை உடனே இணைத்துக்கொண்டு விடும். இப்போது Mail -களை திறக்காமலேயே,  ICON - களை பார்த்து,   எந்த வகையை சார்ந்த File -கள் Attachment -ஆக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பு - has:attachment என்று G Mail -இன் Search Box - இல் type செய்தால்,  அனைத்து Attachment -மெயில்களையும் ஒரே window -வில் காணலாம்.








 

 

Sunday, 8 January 2012

அழகான RESUME ..10நிமிடங்களில் !

அழகான  RESUME ..10 நிமிடங்களில் !




என்னதான் பெரிசா படிச்சிருந்தாலும் ஒரு பயோடேட்டாவை  தயாரிக்கனும்னா... மத்தவங்களோடதை பார்த்து, அதிலே எது அழகா, சிறப்பா இருக்கோ ... அதுமாதிரியேதான் பலரும் உருவாக்கம் செய்கிறோம்!

இருப்பினும் பலவகை மாடல்களில் மனதை கவரும் வண்ணங்களில் வகை வகையான பயோடேட்டாக்களை 10 நிமிடங்களில் தயார் செய்ய முடியுமா? முடியும் என்கிறது RESUME SIMO என்கிற தளம்!


பலமணி நேரம் உட்கார்ந்தும் பயோடேட்டாவை சரியான முறையில் அமைக்க முடியவில்லையே என அங்கலாய்த்து  கொள்பவர்கள்  கூட (சுயதிறமை உள்ளவரோ/இல்லையோ) இத்தளத்தின் மூலம் பயோடேட்டாவை உருவாக்கி தம்மை  interview செய்யும் மேலதிகாரிகளை கவர்ந்து விடலாம் என்று இத்தளம் மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது.

இத்தளத்திற்குள் நுழைந்து  Get Started -ஐ சொடுக்கி பயோடேட்டாவை  உருவாக்கம் செய்ய வேண்டும். பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு, வேலை செய்ய விரும்பும் துறைகள் என்று அனைத்தையும் கேட்டு,  பயோடேட்டாவை எப்படி வடிவமைத்து கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அந்த வடிவில் கொடுக்கிறது.

எவ்வித கட்டணமும் இல்லை. இணையம் வழியாக எப்போதும், எங்கும் பார்க்கும்படியாகவும்  தேவைப்பட்டால்  பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியையும் தருகிறது. 

தள முகவரி:   http://www.resumesimo.com/

Friday, 6 January 2012

Disabling Control Panel

What is Control Panel? 
Control Panel is a place that has a set of functions to handle the operating system settings. We can set the date/time, remove programs, manage hard-wares such as display, keyboard, printers and changing many of the system settings. 

Why do we disabling Control Panel?
Control panel is an important part of a computer. If you are using a computer at home or office, some of your friends / children or anyone can change the settings and make problems to your system.
They may uninstall an important software or any program, too. In these cases you will be affect and lose your settings. So how to disable and block other users to access control panel.

How to disabling Control Panel?
1. Goto Run command or simply press windows button+R key to open Run box
2. Type “gpedit.msc” and enter. 
A Group Policy Editor settings window will open.


3. In the left side panel, click sequently as below
User Configuration-> Administrative Templates-> Control Panel
4. In the right side panel, you will see the item “ Prohibit access to the control panel”. Double click that and select Enabled in that window. Click ok button to save the settings.



That’s it. Then you do not worry about control panel settings. You can set disabled to revert back the previous settings. This method can work in Windows XP, too.

Thursday, 5 January 2012

Windows Registry Tips

Windows Registry Tips:
How to close non-responsive programs automatically


Normally you end tasks the non-responsive programs manually using windows task manager with (CTRL + ALT +DELETE) keys. Sometimes these non-responsive programs creates problem to run windows and others programs properly.  You can configure your computer to manage these non-responsive programs automatically. Windows has a feature that will close all non responding program automatically. If you have little knowledge about editing windows registry then you can configure your computer for this purpose.

Follow the given steps to configure windows registry for auto end task:

  • First click on Start button then type Regedit in Run option. Here locate the location to:
  • Go to Hkey_Current_User\Control Panel\Desktop
  • Here in right side panel, double click on AutoEndTasks and here its default value is 0. Now change it to 1. Now windows will close your all non-responsive programs automatically.
  • Now close the registry editor and restart your computer after any changes to go into effect.


"ஈ" ...... என்னும் நோய் பரப்பி

"ஈ" ...... என்னும் நோய் பரப்பி
இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள்.  பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும்  அருவெறுப்பு தான்  தோன்றும்.  ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின்  மீதும் உட்காருவது தான்.  ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே.  அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ  குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மலஜல கழிப்பறை, சுகாதாரம் குறைந்த  குப்பைத்தொட்டிகள்  போன்ற இடங்களில் மிகவசதியாக வாழ்கின்றன.

பெண் ஈ, ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடுமாம்.
ஈக்கள், கொசுக்களைப் போல் நம் இரத்தத்தில் கலக்கக்கூடிய கொடிய நோய்க்கிருமிகளை சுமந்துக்கொண்டு அலைவதில்லை என்றாலும், உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்குமதி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன என்பதே உண்மை!



ஈக்களின் ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன.  இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான, பிசின் போன்ற, ஒரு அமைப்பு உள்ளது.  இந்த பிசின், ஒருவித பசை பொருளாகும்.  கழிவுகளின் மீது, ஈக்கள், உட்காரும்போது கழிவுகளிலுள்ள பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கின்றன.  ஈ, மீண்டும் நம் மீதோ அல்லது உணவின்  மீதோ உட்காரும்போது அந்த பாக்டீரியாக்கள் வெகுஎளிதில் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன.  

pnonazim.blogspot.com
இதன் விளைவால்  வயிற்றுப்போக்கு, குடற்புழு, உடல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபாய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் நம்மை தாக்குகின்றன. 'நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல' என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.

தற்போது தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேற்குறிப்பிட்ட இடங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு ஈக்களின் பெருக்கமும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது.  மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் விற்கப்படும்  இடங்களிலும் ஈக்களின் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.

இப்படி பல வகைகளில் தொல்லைகொடுக்கும் ஈக்களிடமிருந்து நம்மையும், நாம் வாழும் சுற்றுசூழலையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது:
-- அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருத்தல்.
-- அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, கிடங்குகளில் தூய்மையை பேணுதல்.
-- வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை தினமும் அகற்றுதல்.
-- உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருளையும் திறந்து வைப்பதை முற்றிலும் தவிர்த்தல்.
-- வீடுகளில் குப்பைகளை சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்தி விடுதல்.
--கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. (இதனால் ஈக்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அழிக்கலாம்).
-- ஈக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தால், மஞ்சள் தூளை நீரில் கரைத்து  அவைகள்  அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதை தவிர்ப்பதோடு, தொந்திரவிலிருந்தும் சற்று நிம்மதி பெறலாம்.