Thursday, 17 May 2012

(Blogs - வலைப்பூக்களான) Blogger, WordPress பற்றி ...?

ஒருவரது எண்ணங்களையும் கருத்துக்களையும் இணையத்தில் எவருடனும் பகிர்ந்து கொள்கின்ற இடம் தான் Blog (வலைப்பூ) என்பது! இதை ஒரு வகையான Journalism என்றுகூட வகைப்படுத்தலாம்!
ஒரு நேரத்தில், Yahoo வின் Yahoo!Blog, Geocities போன்றவை, மேற்சொன்ன பகிரும் விஷயத்தில், பிரபல்யமாக இருந்தவை தான்! காலப்போக்கில் இவைகளின் பயன்பாடு சரிய ஆரம்பித்தது என்னவோ Google -லின் Blogger - அதாவது Blogspot, மற்றும் Word Press போன்றவைகள் இணையத்தில் உலாவர தொடங்கியப் பிறகே!

Google Blogger ருடைய Blogspot டின் எளிமையான வடிவமைப்பும் அதனுள் பொதிந்துள்ள வசதிகளும்தான் பலரை அதன்பால் விரையவைத்தது! சிறந்த வரவேற்ப்பையும் பெற்றது!! இதற்குப்பின் அடுத்த இடத்தை தக்கவைத்திருப்பது  WordPress ஆகும்.        
  
Blogger: Pyra Labs என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, August 23, 1999 இல் உருவாக்கப்பட்ட இந்த Blogger -ஐ, Google நிறுவனம் விலை கொடுத்து வாங்கி, 2003 ஆம் ஆண்டில், தன்வசமாக்கியது.  

சொந்தமான வலைத்தளங்கள் இல்லாத பதிவர்கள் தம்மை இங்கு இணைத்துக்கொள்வதால் அப்பதிவர்களின் அனைத்து Blog -(செய்தி)களும் Google லின் Server இல் இருந்து blogspot.com என்னும் (Google லின்)  subdomain மூலம் வெளியிடப்படுகின்றது.

வலைப்பதிவுகளை உருவாக்கத் தேவையான மென்பொருட்கள், (அப்பதிவுகளை சேமிக்க) சேமிப்பகங்கள் மற்றும் இணையத்தில் அவற்றை வெளிக்கொணரத்தேவையான Server போன்ற அனைத்தையும் பயனாளி, அதாவது உபயோகிப்பாளர், அறியாதவாறு வடிவமைத்தது இதன் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

அதோடு, Computer அதன் தொடர்புடைய இணைய அறிவு போன்ற  விஷயங்கள் பதிவர்களுக்கு அடிப்படை அளவில் (Basic Level) இருந்தாலே போதும் என்ற நிலையையும் இந்த வடிவமைப்பு உருவாக்கியது இதன் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்தது.

பதிவர்களை கருத்தில் கொண்டு எண்ணற்ற வசதிகளை, இச்சேவை, இணையத்தில் மேம்படுத்தி பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் திறம்பட பரவலாக்கியது.

இந்த சேவையை Google இலவசமாகவே வழங்குவதால், இணைய வசதி உள்ள  எவரும் எளிதாக Blog (வலைப்பூ) துவங்கலாம் என்கிற நிலைபாட்டினால், வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் கணிசமாகவும்  உயர்ந்துள்ளது.

முற்கால கையெழுத்துப்பிரதி(பத்திரிக்கை)களுக்கு  ஒப்பானதாகவும்  இது கருதப்படுவதில் வியப்பில்லை! 

இதற்கான Link: http://blogger.com
  
Matthew Charles Mullenweg வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை
Matt Mullenweg





WordPress: இதுவும் ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இதை உபயோகப்படுத்தியும் பல்லாயிரக்கணக்கில் வலைப்பதிவுகள்  வெளியிடப்படுகின்றன.

இந்த WordPress 27 May 2003 இல், 19 வயதான Matt Mullenweg என்பவரால், துவங்கப்பட்டது. இது ஒரு சுதந்திர மென்பொருளாக (Open Source Program) இருப்பதால் பயனாளிகளின் விருப்பத்துக்கும், தேவைக்கும் தகுந்தவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும்  முடியும்.

பயனாளிகளின் இஷ்டத்துக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்து பயன்பெற இயலும் என்கின்ற காரணத்தால் பெரும்பாலான பெரிய தளங்கள் WordPress மூலமே செயல் பட்டு வருகின்றன.

2007, 2009, 2010, 2011 ஆகிய வருடங்களில் சுதந்திர மென்பொருளுக்கான (Open Source Program) விருதுகளை WordPress பெற்றாலும் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
      
இதற்கான Links:
 http://wordpress.com/   (இலவச சேவை) அல்லது
 http://wordpress.org/ (கட்டண சேவை)

இலவச சேவையான wordpress.com மூலம் Limited Theme Supported, No Plugins Allowed, FREE, Limited Monetization, No Maintenance போன்றவற்றையும், 
கட்டண சேவையான wordpress.org மூலம் Full Theme Supported, All Plugins Allowed, Regular Expense, Monetization Freedom, Maintenance போன்ற வசதிகளை பெறலாம். 
Blogger மற்றும் WordPress ஆகிய இவ்விரண்டிலும் Blogger தான், பயனாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இதற்கான காரணம், Blogger -ரின் எளிமையான வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பலவசதிகள் மற்றும் தொழில்நுட்பஅறிவு என்பது பயனாளர்களுக்கு தேவையற்ற ஒன்று என்ற நிலைப்பாடு போன்ற இவைகளால்  Blogger முன்னணியில் இருப்பதில் வியப்பில்லை!

WordPress இல், Blogger போன்றே, பலவசதிகள் இருந்தாலும் தொழில்நுட்பஅறிவு என்பது WordPress க்கு சற்றேனும் அவசியமாகிறது. இதனால் தான் பெரிய தளங்கள் பெரும்பாலும் WordPress மூலம் செயல்படுகின்றன.   

"எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்" என்பதைத்தானே நாமெல்லோரும் விரும்புகிறோம். அந்த ரீதியில் Blogger மற்றும் WordPress ஆகிய இவ்விரண்டிலுமே இலவசப் பதிவுகள்தான் அதிகமாக எழுதப்பட்டு வருகின்றன!

No comments: