எஸ்.ஜெயராம், அரண்வாயலிலிருந்து எழுதுகிறார்:
விளம்பரங்கள் - நமது தினசரி வாழ்க்கையில் நுழைந்து பயங்கர கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லவேண்டும்.
ஆம்! சனி, ஞாயிறுகளில் கூட காலை 5 மணி முதலே கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் மூலம் மத ரீதியான பிரசாரத்தை ஆரம்பித்து பள்ளிப் படிப்பு, முதியோர் அமைதி போன்ற பலவற்றை கெடுக்கின்றனர்!!
பிறந்த நாள், செத்த நாள் போன்ற நினைவு நாட்களிலும், அரசியல் தலைவர்களின் கட்சி மாநாடுகளிலும், திருமணங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் கண்களை உறுத்துகின்றன!
கட்சிகளின் கொடிக்கம்பங்களோ சென்டர் மீடியனில் அழகுக்காக வளர்க்கப்படுகின்ற செடிகளை நாசப்படுத்துவதோடு தெருக்களையும் அலங்கோலப்படுத்தி விடுகின்றன!
நாளிதழை திறந்தால் ....... விளம்பர நோட்டீஸ்களின் அபிஷேகம் தான்!
நாளிதழை திறந்தால் ....... விளம்பர நோட்டீஸ்களின் அபிஷேகம் தான்!
கொக்கி போட்டு திருடப்படுகின்ற கள்ள மின்சாரத்தில் தமிழகத்தின் ஏனைய அரசியல் தலைவர்களுடன் அரசின் அமைச்சர்களும் ஒளிர்கின்றனர்!
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடற்ற விளம்பர தட்டிகளில், கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில், அக்கட்சிகளின் தலைவர்களை போற்றிப் புகழ்ந்து நம்மை கண்டு களிக்க செய்கின்றனர்?
பஸ் ஸ்டாண்டுகளில் 25 அடி உயர கட்-அவுட்களில் தலைவரும்/ தலைவியும்! அங்கே பயணிகள் நிற்பது எப்படி?
பிறந்த நாளோ/ இறந்த நாளோ- இந்த கருமாதிகள் முடிந்த பிறகாவது இத்தலைவர்களின் அழகு முகங்களை(?) அப்புறப்படுத்துகிறார்களா?
சாலையின் குறுக்காக கட்டிய சணல் அறுந்து பிளாஸ்டிக் தோரணங்கள் பாதசாரிகளின் கால்களில் பின்னி கீழே தள்ளுகின்றன! இதில் எல்லா கட்சிகளுக்கும் சம அளவு பங்களிப்பு உண்டு!!
கட்சித் தலைவர்களின் முகங்களை, "டிவி' சேனல்களிலும், நாளிதழ்களிலும் தினம் தினம் பார்த்து அலுத்தது போக தெரு சுவர்களையும் விடாமல், "இந்திரன், சந்திரன்" என்று புகழ்ந்து எழுதி அச்சுவர்களையும் ஏன் அலங்கோலப்படுத்துகிறீர்கள் ? அநியாயம் ஐயா!
உயிரோடு இருக்கின்ற சாதி / சமுதாய / அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் ஆகிய இவர்களின் படங்களுக்குத்தான் மாலைகள் போட்டு கோஷமிட்டு நாறடிக்கிறீர்கள் என்றால், செத்துப் போனவர்களையும் சந்தியில் உட்காரவைத்து கொட்டுமேளத்துடன் கூத்தடித்து சிரமப்படுத்துவானேன்?
உன் வீட்டு கல்யாணம் ....
உன் அப்பனுக்கு, 10 ஆம் நாள் காரியம் ....
உன் பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ....
உன் பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ....
அவை எல்லாமே உன்னோடு!
எங்களுக்கு என்ன?
உன் வீட்டு இறந்த உடல், சுடுகாடு நோக்கி, சாலையில் போகும் போது ... மது குடித்து, பூ இறைத்து ஆடிப்பாடி சாலைகளை விளம்பர மேடையாக்கி அசுத்தப்படுத்த, யார் அதிகாரம் தந்தது?
உன் துக்கம் உன்னோடு!
இந்த விளம்பர அடாவடிக்கு, எப்போது தான் முடிவு?
---------------------------------------------------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய Email செய்தி, சற்று மாறுதல் செய்யப்பட்டு, இங்கு பகிரப்பட்டுள்ளது.
1 comment:
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
Post a Comment