Friday, 27 April 2012

மாதாந்திர மின் கட்டண வசூல் முறை...

குமரகுருபரன் - தணிக்கை அலுவலர், (பணி நிறைவு)
மதுரையிலிருந்து எழுதுவது:

மின் வாரியத்தில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு அளவு கணக்கெடுப்பும், மின் கட்டண வசூலும், கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

மேலும், இன்றைய கால கட்டத்தில், மின் கட்டண வசூலுக்கு, கணினி பயன்பாடு வந்துவிட்டதால், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின் பயன்பாடு அளவு கணக்கெடுப்பும், கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டண வசூலும், நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இப்போது, ஏப்ரல் 1ம் தேதி முதல், வீட்டு உபயோகப் பயனீட்டாளர்களுக்கு, மூன்று விதமான கட்டண முறை உள்ளது.
இரு மாதங்களுக்கு:
1 முதல் - 100 யூனிட் வரை: 1.00 ரூபாய்
101 முதல் - 200 யூனிட் வரை: 1.50 ரூபாய்
1 முதல் - 200 யூனிட் வரை: 2.00 ரூபாய்
201 முதல் - 500 யூனிட் வரை: 3.00 ரூபாய் 

1 முதல் - 200 யூனிட் வரை: 3.00 ரூபாய்
201 முதல் - 500 யூனிட் வரை: 4.00 ரூபாய்
501 முதல்: 5.75 ரூபாய்

வீட்டு உபயோக மின் பயன்பாடு அளவு, சரியாக இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டும். 

உதாரணத்துக்கு, ஏப்ரல் 1ம் தேதி கணக்கெடுத்தால், அடுத்த கணக்கெடுப்பு, ஜூன் 1ம் தேதி இருக்கவேண்டும். ஆனால், ஜூன் 2 அல்லது 3ல் கணக்கெடுத்தால், யூனிட் அதிகமாகி, முதல் ஸ்லாப்பில் செலுத்த வேண்டியவர்கள், இரண்டாம் ஸ்லாப்பிலும்; இரண்டாவது ஸ்லாப்பில் செலுத்த வேண்டியவர்கள், மூன்றாவது ஸ்லாப்பிலும் மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

உதாரணம்:
* சரியாக இரு மாதத்தில் கணக்கெடுத்தால், 200 யூனிட்.
* ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தள்ளி கணக்கெடுத்தால், 205 யூனிட்.
* 5 யூனிட் அதிகமானதால், இரண்டாவது ஸ்லாப்பில் மொத்த யூனிட்டிற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
* சரியாக, இரு மாதத்தில் கணக்கெடுத்தால், 500 யூனிட் .
* ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தள்ளி கணக்கெடுக்கும் போது 505 யூனிட். 5 யூனிட் அதிகமானதால், மூன்றாவது ஸ்லாப்பில், மொத்த யூனிட்டிற்கும் மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

வீட்டு உபயோக மின் பயனீட்டாளர்கள் சுமையை, ஓரளவிற்கு குறைக்கும் வண்ணம், சரியாக இரு மாதங்களுக்கு ஒருமுறை, தேதி மாறாமல், மின் பயன்பாடு அளவு கணக்கெடுக்க, மின் வாரியம் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

                                            ----------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய e mail செய்தி, இங்கு பகிரப்பட்டுள்ளது.
                                            ----------------------------------------

No comments: