அபார வசூல்!
கே. கலியபெருமாள், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பணி நிறைவு), பரங்கிப்பேட்டையிலிருந்து எழுதுகிறார்:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், அவசரத் தேவைக்கு நகைக் கடன் வேண்டி அணுகினால், நகை மதிப்பீட்டாளர் கட்டணமாக 1,000 ரூபாய்க்கு, மூன்று ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினால், 300 ரூபாய் மதிப்பீட்டாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து தொழில் செய்யும் சேட்டுகள் வாங்கும் கந்து வட்டியை விட அதிகம்!
வங்கிகளில் வாங்கினால், சலுகை கிடைக்குமென நினைப்பது தவறு. நாள் ஒன்றுக்கு, ஒரு வங்கியில், ஐந்து லட்ச ரூபாய் நகைக்கடன் தரப்படுகிறது எனில், மதிப்பீட்டாளர் கட்டணம் 1,500 ரூபாய் ஆகிறது.
மாதம் 25 வேலை நாட்கள் என வைத்துக் கொண்டால், இவர்களின் வருமானம், 37 ஆயிரத்து 500 ரூபாய். கிட்டத்தட்ட வங்கி மேனேஜரின் ஊதிய அளவிற்கு வருகிறது.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது, ஏழை - எளிய மக்களும், விவசாயிகளும் தான்.
ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கத்துறை மூலமாக, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறான பட்டயப் படிப்பு பெற்ற நபர்களை, வங்கி மூலம் நியமித்தால், மாத ஊதியம், 10 ஆயிரம் ரூபாய்க்குள் வரும்.
அதை வாடிக்கையாளரிடம் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
படித்துவிட்டு, வேலையில்லாமல் இருப்போருக்கு உதவி செய்தது போலவும் இருக்கும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பொதுத்துறை வங்கிகள், தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
----------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய e mail செய்தி, இங்கு பகிரப்பட்டுள்ளது.
----------------------------------------
No comments:
Post a Comment