"உபயோகித்து வருகின்ற Computer -களில் இணையதளங்கள் வேகமாக இயங்கவில்லையே! .... வாங்கி பழசாகிப்போன Computer .... எப்படி வேகமாக செயல்படும்!!" என்று நினைத்து அசட்டையாக இருந்து விடக்கூடாது!
Computer -ரின் வேகம், இணையத்தின் வேகம் போன்ற இவைகள் நாளுக்குநாள் குறைவதற்கும் அவைகளுக்கான தீர்வுகளும்தான் என்ன?
Web Browsers: நம்மில் பலர் Internet Explorer Browser -ஐயே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். Computer வாங்கும்போது .... அதனுடன் சேர்த்தே இந்த IE Browser -ரும் வழங்கப்படுவதால், நாமும் வழங்கப்பட்ட இதையே, எவ்வித Upgrade -களுக்கும் உட்படுத்தாமல், தொடர்ந்து, அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில், மேம்படுத்தப்பட்ட பல Browser -கள் இணையத்தில் வலம் வருகின்றன. ஆக, வேறு ஒரு Browser மூலம் இணையத்தில் நுழைந்து, தளங்கள் வேகமாக இயங்குகின்றனவா? அவற்றிலிருந்து Download செய்யப்படுகின்ற File -கள் வேகமுடன் Download ஆகின்றனவா? என்று பார்ப்பதில் தவறில்லையே!
மேலும், வேகத்தினை முக்கிய முதன்மை அம்சமாக கொண்டே இப்போதுள்ள பல Browser -கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், Google -லின் Chrome Browser அதிக வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் Java Script Engine மூலம் Tune செய்யப்பட்டு வருகிறது. அது போலவே Firefox, Epic போன்ற Browser -களும் வேகமாக இயங்கக்கூடியதே!
http://www.google.com/chrome
http://www.mozilla.org/firefox
http://www.epicbrowser.com
(எரிச்சலூட்டும்) இணைய விளம்பரங்கள்: பெரும்பான்மையான இணைய தளங்களில் விளம்பரங்களும் அதை தொடர்ந்து Animation படங்களும் காட்டப்படுகின்றன. (இதுவே நமக்கு பெரும் எரிச்சலை உண்டுபண்ணும்!)
தேவைப்பட்ட எதையாவது, இந்த தளங்களிலிருந்து, Download செய்ய முயலும்போது, அந்த விளம்பரங்களும் சேர்ந்து, தன் இஷ்டத்துக்கு, Download ஆகும். இதனாலும் Computer மற்றும் இணையத்தின் வேகம் குறைய வாய்ப்புள்ளது.
ஆக, அப்படி தொந்திரவு தரக்கூடிய விளம்பரங்களை, உபயோகிக்கும் Browser -களால் வடிவமைக்கப்பட்டுள்ள, சில பிரத்தியேக Options மூலம் Filter செய்து விடுவதால், இத்தகைய விளம்பர தொந்திரவுகளும் இருக்காது; System -மும் அதை சார்ந்த இணையதளமும் மென்மையாகவும், வேகமாகவும் இயங்கும்.
கைத்தொலைபேசி வடிவம் (Mobile Version): பொதுவாகவே எந்தவொரு இணையதளத்திலும் செய்திகள் போன்ற தகவல்கள் விரிவு படுத்தப்பட்ட வடிவில் தான் பிரசுரிக்கப்பட்டு இருக்கும். இப்படி விரிவு படுத்தப்பட்ட அத்தகவல்கள், அந்த தளத்திலிருந்து Down Load ஆவதற்கு, சில நேரங்களில், தாமதம் ஆகலாம். (இப்படி தாமதம் ஆவது என்பது, அத்தளம் சார்ந்த Server -ரின் பிரச்சனையாகக்கூட இருக்கலாம்!)
இம்மாதிரி தாமதமாகும் தளங்களை, அத்தளங்களின் கைத்தொலைபேசி வடிவம் அதாவது Mobile Version மூலம், நம் Computer ரில் இருந்தே, Down Load செய்வது சிறந்தது! இப்படி செய்வதால், விரிவு படுத்தப்படாத தகவல்கள் மற்றும் அதன் தொடர்புடைய Links மட்டுமே இந்த Mobile Version -ல் காணக் கிடைக்கும். இதிலிருந்து தேவையான தகவல்கள் அல்லது Links போன்றவைகளை சிற்சில நிமிடங்களில் Down Load செய்துவிடவும் முடியும்!
கீழே உள்ள Link, BBC -யின் தமிழ் Mobile Version ஆகும்.
http://www.bbc.co.uk/tamil/mobile/
RSS (Really Simple Syndication): என்பது வலைப்பதிவுகள், செய்திகள், இசை மற்றும் ஒளிப்படம் போன்ற அடிக்கடி புதுப்பிக்கப்படும் தகவல்களை, ஒரு தரப்படுத்தப்பட்ட (XML File) கோப்பு வடிவில், பிரசுரிக்கப் பயன்படுத்தப்படும் வலை ஓடை (Web Stream) ஆகும். தொகுப்பிற்கான தகவல்கள், இவ்வலை ஓடையில், ஒரேயொருமுறை பிரசுரிக்கப் பட்டாலும், வெவ்வேறு பல நிரல்கள் (Coding) மூலமாக அத்தகவல்களை கண்டுகளிக்க அனுமதிக்கிறது.
RSS Reader என்னும் மென்பொருள் மூலம் மேற்சொன்ன இவ்வலை ஓடையின் தொகுப்புகளை வாசிக்கலாம். பயனாளரின் விருப்ப வலைத்தளங்களில் பதியப்படுகின்ற முக்கிய செய்திகளை தக்கநேரத்தில் பெறவும், பதிவு செய்ய விரும்பும் வாசகர்களுக்கும் மற்றும் பல வலைதளங்களின் ஓடைகளை ஒரே இடத்தில் திரட்ட விரும்புபவர்களுக்கும் இந்த RSS Reader உதவுகிறது.
இந்த RSS Reader -ஐ பாவிப்பதால், இணையத்தில் அவ்வபோது Update செய்யப்படுகின்ற, Latest Headlines போன்ற, புதிய தகவல்களின் தலைப்பு வரிகளை காணமுடியும் என்பதோடு, தேவைப்படும் தகவலின் தலைப்பு வரியினை Click செய்வதால் அத்தலைப்பில் பிரசுரமாகி இருக்கும் செய்தியை முழுமையாகவும் காணலாம்.
ஆக, இந்த RSS Reader -ஐ உபயோகித்து தேவையான தகவல்கள் அல்லது Links போன்றவைகளை சொற்ப நிமிடங்களில் Down Load செய்துவிடலாம் என்பதோடு, உபயோகத்தில் இருக்கும் Computer மற்றும் அதை தொடர்ந்த இணையமும் மென்மையாகவும், வேகமாகவும் இயங்கும்.
Cache Memory: இணைய இணைப்பின் மூலம் பார்வையிட்ட தளங்களின் தகவல்கள் போன்ற அனைத்து விபரங்களும் இந்த Cache Memory -யில் தான் பதியப்படுகின்றன. அப்படி பதியப்படுகின்ற அத்தகவல்களை அவ்வபோது அழித்து வருவதன் மூலம் உபயோகத்தில் இருந்துவரும் Browser -களின் வேகம், குறையாமல் ஒரு கட்டுக்குள், இருந்து வரக்கூடிய சாத்தியமும் உள்ளது. இதுபோலவே, Computer தன்னிச்சையாக சேமிக்கின்ற Temporary File -களையும் அவ்வபோது அழித்து வருவதால் Computer -ரின் வேகமும் ஒரு கட்டுக்குள் இருந்து வரும்.
பொதுவாகவே, இணையத்தில் வலம் வரும் பலர், ஏகப்பட்ட தளங்களை திறந்து வைத்திருப்பர்! இப்படி ஏகப்பட்ட தளங்களை செயலாக்கத்தில் வைத்திருப்பதால் Computer மற்றும் அதை தொடர்ந்த இணையமும் வேகம் குறைந்த நிலைக்கு ஆட்படும். பார்த்த / பார்த்து முடித்த தளங்களை உடனுக்குடன் மூடிக்கொண்டு வருவதும், (Browser -ரின்) History -யிலுள்ள தகவல்களை அவ்வபோது அழித்து வருவதும் Computer, இணையம் இவைகளை வேகத்துடன் செயல்பட வைக்கும்.
No comments:
Post a Comment