Thursday 12 April 2012

திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!



'மணல் கயிறு’ திரைப்படத்தில் Hero S. V. சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து வித  Conditions போடுவார்!!!!


ஆம்! திருமண Market -டில் பையன்களால் Conditions போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது தலைகீழாக மாறி, இப்போது பெண்கள்தான், திருமண Market -டில்,  தனக்கு வரும் 'மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் நல்லது' என ஆயிரத்தெட்டு Conditions போடுகிறார்கள்!

உதாரணமாக, நானே (கோபாலகிருஷ்ணன்) சென்னையில் ஒரு Marriage Matching Center நடத்தி வருகிறேன்.

எங்களது Marriage Center -ரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்சொல்லி  பதிவு செய்யும் முறையை ரொம்பவும் Strict -டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண்களையும், பையன்களையும் Office -க்கு நேரில்  வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். 

பெண்கள் - பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா? ...

உதாரணமாக, சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் தேடி, Register செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். Phone -லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு! இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா; நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி Register செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

‘‘வேறொண்ணுமில்லை. வீட்டிலே Cook இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் Cook இருக்கு; ஆனா அவ Leave போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. 'Cook, Leave போட்டா அவன் அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே! .... நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன Company -யிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான்(!); சமைக்கணும், Coffee போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!

அடுத்து File பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்தப் பையன் ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா சொன்னார். அதோட, அந்தப் பையனோட Cell Number கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் Movie போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற Manners கூடத் தெரியலே! I want my space. எனக்கு ரொம்ப Broad minded பையன்தான் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான Dialog -களை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு Life -லேயே பிடிக்காத வார்த்தை Compromise. நான் எதுக்காக Compromise பண்ணிக்கணும். அப்படி ஒரு Life எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு Adjustable type இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால Parents இல்லாத இடமா.... ஏதாவது ...இருக்கான்னு பாருங்க.... அல்லது.... வெளியூரிலே பையனின் குடும்பம் இருந்து அவன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி இருக்கா?’’ என்றார்கள்...
 
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு Coffee கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு Mood வந்தா நல்லாவே Cook பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே Independent. அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்....

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் Mood Out ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக Register செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப Phone அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட 'பொண்ணு Friday தான் வருவா... Sunday தான் பேசணும்... சும்மா பேசினா Mood Out ஆயிடுவா... அப்புறம் இந்த Week End பூராவும் Waste -ஆகப் போயிடும்' என்பார்கள்.

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ Mind -ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு Total -லாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

இன்று, "Life -ல எனக்குன்னு ஒரு Security ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு O. K.  சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த Security தான். ‘‘ஒரு Plot Book பண்ணிட்டேன்... அதுக்கான Commitments  கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு Security  வேணுமே!...’’ என்கிறார்கள். 

தவிர, பல பெண்கள் இப்போது வேலை, Project என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு Commitments எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை Enjoy பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பெற்றோர்கள் தான்!...
 
இன்றைய பெண்களிடம் ‘ஒரு வெற்றிகரமான திருமணமாக, இது நிச்சயம், அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை. 

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் Height 2 Inches கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று, தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில், கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர், நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு போன்ற இவைகளே காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘Parents கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
பெண்ணை படிக்க வைத்து, ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள், மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளானதுப் போல, உறவினர் நண்பர்கள் மத்தியில் ஒதுங்கி, தனிமைப்பட்டு மன உளைச்சல் போன்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷ, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை, இந்தப் பெண்கள், அனுபவித்துப் பார்க்கும் வாய்ப்பையே  இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தையும், கணவரையும் நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கையை பெறுவார்கள்  என்பதில் சந்தேகமில்லை!
நன்றி: தமிழ் தாயகம் ...பதிந்தவர்: GOPALAKRISHNAN 

No comments: