Saturday, 28 April 2012

ராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்?





"சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்தப்பகுதியை தேசிய புராதன நினைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும். ராமர் பாலத்துக்கு ஆதரவாக உள்ள இந்து மக்களின் உணர்ச்சி வேகத்தால், மத்திய அரசு தெளிவற்ற நிலையில் உள்ளது..." - இப்படிக் கூறியிருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. சேது சமுத்திரம் திட்டம் செயல்படுத்தப்படுகிற பகுதியில்தான் ராமர் பாலம் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் அதே சுப்பிரமணிய சுவாமி.

சேது சமுத்திரம் திட்டம் இன்றைக்கு மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகி இருக்கிறது. வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் நாடு முழுக்க குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. வேண்டும் என்று சொல்பவர்கள் அறிவியலைக் காரணம் காட்டுகிறார்கள். வேண்டாம் என்பவர்கள் ஆன்மீகத்தை துணைக்கு அழைக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை காரணமாக முன்னிறுத்தி, திட்டத்தை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள், கவலைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.

ராமர் பாலம் என்று இல்லாத ஒரு வாதத்தை, மக்களின் மத உணர்வுகளை, நம்பிக்கைகளை உசுப்பி விடக்கூடிய ஆன்மீக விஷ(ய)த்தை கையில் எடுத்துக் கொண்டு பிரச்னை செய்வதுதான், ஆபத்தான. அச்சுறுத்தலான விஷயம். சேது சமுத்திரம் திட்டத்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும். கடலியல் சூழல் பாதிக்கும். அங்கு வாழும் கோடிக்கணக்கான கடல் உயிரினங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று காரணங்கள் காட்டினால், மறுப்பின்றி அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; தவறில்லை. ஆனால், இந்தத் திட்டத்தை முடக்குவதற்காக ராமரை துணைக்கு அழைப்பதில் எந்த நியாயமும் இல்லை.

நியாயம் இல்லை என்பது மட்டுமல்ல... அவர்கள் விடுவது ‘கப்சா’வாக இருந்தாலும், அதிலும் கூட ஒரு ‘லாஜிக்’ இல்லை. ‘ராமர் பாலத்துக்கு ஆதரவாக இந்துக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருக்கிறார். இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிற நானும் கூட, கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்துதான். எனக்குள் அப்படியாக எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் இல்லை... ராமர் மீது சத்தியம். எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுற்றி இருக்கிற சக இந்து நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் ராமர் மீது இருக்கிற அக்கறை, ராமர் பாலத்தின் மீது இல்லை என்பதை உறுதியாகவே இங்கு கூறமுடியும்.

ராமர் பாலத்தின் மீது இந்த அளவுக்கு அக்கறையாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால்... அவர் பெயரை உச்சரித்த படியே, இந்த நாட்டில் எக்கச்சக்கமான மதக்கலவரங்களையும், மாபெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியவர்கள்தான் கணணுக்குத் தெரிகிறார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு, இந்த மதவாதிகளிடம், அடிப்படைவாதிகளிடம்தான் இருக்கிறதே தவிர, சாமானிய இந்துக்களிடம் இல்லை. அவர்களுக்கு அதற்கெல்லாம் கவலைப்பட நேரமில்லை. ராமர் பாலத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளிலும் அவர்களுக்கு ஆயிரம் பிரச்னைகள்.

ராமர் பாலம்... ராமர் பாலம் (உண்மையில் அது, ஆதம் பாலம் எனப்படுகிற மணல் திட்டு!) என்று கோஷமிடுபவர்கள், அது ராமர் பாலம் என்பதை (அறிவியல் ரீதியாக முடியாவிட்டாலும் கூட, ஆன்மீக ரீதியிலாவது) நிரூபிக்கவேண்டும். முதலாவதாக, ராமர் பாலம் என்று கருதப்படுகிற, அழைக்கப்படுகிற அந்த மணல் திட்டு, நிஜத்தில் ஒரு இயற்கை அமைப்பு. இரு பெரிய நீர்பரப்புகளை இணைக்கிற ஒரு குறுகிய நிலப்பரப்பு அது. இதுபோன்ற இயற்கை அமைப்புகளுக்கு ‘இஸ்த்மஸ் (isthmus)’ என அறிவியல் பெயர் உண்டு.

சில இடங்களில் இவை கடல் மட்டத்துக்கு மேலாக இருக்கும். இங்கே அது கடலில் மூழ்கி இருக்கிறது. ‘இஸ்த்மஸ்’ அமைப்பை ஒட்டி மணல் படிவதன் காரணமாக, அந்தப்பகுதியில் ஆழம் சற்றுக் குறைவாக இருக்கிறது. உலகின் பல கடற்பகுதிகளில் இப்படியான ‘இஸ்த்மஸ்’ இணைப்பு உண்டு. வட, தென் அமெரிக்க இடையே இப்படிப்பட்ட ‘இஸ்த்மஸ்’ இணைப்பை வெட்டித்தான் பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. உலகில் இன்னும் பல, பல இடங்களில் இப்படி இயற்கை மணல் திட்டுக்களை வெட்டி, வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ராமர் பால கோஷ்டிகளுக்கு முதலில் ஒரு கேள்வி. சீதையை மீட்டெடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ராமரும், லட்சுமணரும், இன்னபிற வானர சேனைகளும், இலங்கைக்கு பயணப்படுவதற்காக அமைக்கப்பட்டதுதான், இந்த ராமர் பாலம் என்பது உங்கள் வாதம். ரொம்பச் சரி. முதலில், ராமரும், அவரது சகோதரர் லட்சுமணனும், வானர சேனைகளும் ராமேஸ்வரத்தை அடைந்தது எப்படி? அதை விளக்குவீர்களா?


ராமேஸ்வரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ராமேஸ்வரம் என்பது ஒரு தீவுப்பகுதி. சகலபுறங்களும் கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி. மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்கள் கவனித்திருக்கலாம். மண்டபம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டரைக் கடந்தால், கடல் வந்து விடும். அந்தக் கடலை கடக்க ரயில் பாலமும், அடுத்ததாக பஸ் பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கரையில் இருந்து அந்தக்கரை வரை கடலின் நீளம் 2.7 கிலோ மீட்டர். கடலின் நடுப்பகுதி ஆழமானது. சிறிய ரக கப்பல்கள் இன்றும் கூட இந்தக் கடல்பகுதியை கடந்து சென்றும், வந்தும் கொண்டிருக்கின்றன என்பதில் இருந்து இது ஆழ்கடல் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமர் அண்ட் கோ இலங்கைக்கு போனது அப்புறம். முதலில் படை, பரிவாரங்களுடன் அவர் எப்படி ராமேஸ்வரம் போனார்? குறிப்பாக, அந்த 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதியை அவர் கடந்தது எப்படி? அவருடன் சென்றவை பெரும்பாலும் வானரசேனைகளே என்றாலும், ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த கடலை அத்தனை வானரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தாவிக் குதித்து கடப்பதெல்லாம் கஷ்டம். கார்ட்டூன் படம் எடுத்தாலும் கூட இவ்வளவு பெரிய ‘லாங் ஜம்ப்’ சாத்தியமில்லாத விஷயம். வானரங்களே கடக்க கஷ்டபடுகின்றன என்றால், ராமர், லட்சுமணன் போன்ற ராஜகுமாரர்களுக்கு அது ரொம்பவும் கஷ்டம்.

ஆகவே, அந்த கடற்பரப்பை கடந்து அவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்திருக்கவேண்டுமானால், நிச்சயமாக இப்போது பாம்பன் பாலம் இருக்கிற இடத்திலும் அவர்கள் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். இல்லையா? பாலம் அமைந்திருந்தால் மட்டுமே கடலைக் கடந்து ராமேஸ்வரம் அடைந்திருக்க முடியும். ஆக, ராமர் முதன்முதலாக இந்தக் கடல் பகுதியில்தான் பாலத்தைக் கட்டியிருக்கவேண்டும். பாம்பன் பாலத்தில் ரயிலில் நீங்கள் செல்லும் போது கடலை கவனித்திருந்தால், இதற்குச் சாட்சியாக இன்னும் ஒரு விஷயம் கூட புரிந்து கொள்ளமுடியும்.

இந்தக் கடல் பகுதியில், மிதக்கிற கற்களை (Floating stones) இப்போதும் நிறையப் பார்க்கமுடியும். இந்த மிதக்கும் கற்களைத்தான், பாலம் கட்ட ராமர் பயன்படுத்தியதாக சுப்ரமணியன்சுவாமிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பாலம் கட்டியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், கையைப் பிடித்து அழைத்துப் போய், இந்தக் கற்களைத்தான் காட்டுகிறார்கள். உண்மையில் இந்த மிதக்கிற கற்கள், பாலம் கட்டுகிற / கட்டப் பயன்படுத்திய கற்கள் அல்ல. இது பவளப்பாறை (Coral Reefs) வகையைச் சேர்ந்தவை. அவ்வளவே. இந்தியாவில், மன்னார் வளைகுடா பகுதி தவிர அந்தமான், லட்சத்தீவுகள் பகுதியில் இவை எக்கச்சக்கமாய் இருக்கின்றன. பசுபிக் பெருங்கடல் பகுதியிலும் இவை உண்டு.

சரி, அந்த ஆய்வு இப்போது வேண்டாம். பாம்பன் பகுதியில் ராமர் ஒரு பாலத்தை கட்டினார். ராமேஸ்வரத்தை அடைந்தார். ஏற்கனவே பாம்பனில் பாலம் கட்டிய அனுபவம் கைகொடுக்க, மீண்டும் ஒரு மெகா பாலத்தை சிங்களத் தீவுக்கு அவர்கள் அமைத்திருக்கவேண்டும். கண்ணில் படுகிற சாட்சியாக, பாம்பன் பகுதியிலேயே ராமர் பாலம் இருக்க; அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு, ஆள் நடமாட்டமில்லாத, அவ்வளவு சுலபத்தில் யாரும் சென்று வர முடியாத, ஆழ்கடல் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாகவும், அதை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும், இந்துக்கள் அங்கு சென்று பூஜைகள், புண்ணியங்கள செய்யவேண்டும் என்றும் கூறுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?

இவ்வளவு உறுதியான ஆதாரங்கள் இருக்கையில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துமத உணர்வாளர்கள், பாம்பன் பாலம் அமைந்திருக்கும் தற்போதைய கடல் பகுதியை ஏன் ராமர் பாலம் என்று அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தக் கூடாது? பழகிய விஷயம் என்பதால், உச்சநீதிமன்றத்திலும் கூட வழக்குத் தொடரலாமே? நிலப்பரப்பில் இருந்து பல மைல் தூரம் கடந்து சென்று, நடுக்கடலில் உள்ள ஒரு ராமர் பாலத்தை இந்துக்கள் எப்படி தரிசனம் செய்யமுடியும்? அங்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்யமுடியும்? படகு பிடித்து மட்டுமே போகமுடியும். அதுவும், நேரம் சரியில்லை என்றால், இலங்கை கடற்படை காரர்கள் வந்து சுட்டுத் தள்ளி, ஒரேடியாக ராமரிடம் அனுப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது.

சுப்பிரமணியன் சுவாமியும், அத்வானியும், சுஷ்மா சுவராஜூம் வேண்டுமானால், இந்திய கடற்படை உதவியுடன், அவர்கள் குறிப்பிடுகிற ராமர் பாலத்தை தரிசித்து வரமுடியுமே தவிர... பிற எந்த இந்துவுக்கும் அது சாத்தியப்படுகிற விஷயமே அல்ல. ஆகவே, வீண் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, அனைத்து இந்து பெருமக்களுக்கும் பயன்படுகிறது போல, இப்போது பாம்பன் பாலம் இருக்கிற பகுதியை ராமர் பாலமாக அறிவித்து, அதை தேசிய புராதனச் சின்னமாக்க கோரி போராட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். அப்படி மட்டும் அறிவிக்கப்பட்டால், பக்தர்கள் பாம்பனிலேயே இறங்கி, ராமர் பாலத்தை பார்த்து மகிழ்வதுடன், பூஜை, வழிபாடுகளும் நடத்திக் கொள்ளமுடியும். இன்னும் அதிகளவு சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். தமிழகத்துக்கு வருவாயும் பெருகும். யோசிப்பாரா சுப்பிரமணியன் சுவாமி?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
Source: http://goo.gl/mqfzr 

Friday, 27 April 2012

மாதாந்திர மின் கட்டண வசூல் முறை...

குமரகுருபரன் - தணிக்கை அலுவலர், (பணி நிறைவு)
மதுரையிலிருந்து எழுதுவது:

மின் வாரியத்தில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு அளவு கணக்கெடுப்பும், மின் கட்டண வசூலும், கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

மேலும், இன்றைய கால கட்டத்தில், மின் கட்டண வசூலுக்கு, கணினி பயன்பாடு வந்துவிட்டதால், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின் பயன்பாடு அளவு கணக்கெடுப்பும், கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டண வசூலும், நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இப்போது, ஏப்ரல் 1ம் தேதி முதல், வீட்டு உபயோகப் பயனீட்டாளர்களுக்கு, மூன்று விதமான கட்டண முறை உள்ளது.
இரு மாதங்களுக்கு:
1 முதல் - 100 யூனிட் வரை: 1.00 ரூபாய்
101 முதல் - 200 யூனிட் வரை: 1.50 ரூபாய்
1 முதல் - 200 யூனிட் வரை: 2.00 ரூபாய்
201 முதல் - 500 யூனிட் வரை: 3.00 ரூபாய் 

1 முதல் - 200 யூனிட் வரை: 3.00 ரூபாய்
201 முதல் - 500 யூனிட் வரை: 4.00 ரூபாய்
501 முதல்: 5.75 ரூபாய்

வீட்டு உபயோக மின் பயன்பாடு அளவு, சரியாக இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டும். 

உதாரணத்துக்கு, ஏப்ரல் 1ம் தேதி கணக்கெடுத்தால், அடுத்த கணக்கெடுப்பு, ஜூன் 1ம் தேதி இருக்கவேண்டும். ஆனால், ஜூன் 2 அல்லது 3ல் கணக்கெடுத்தால், யூனிட் அதிகமாகி, முதல் ஸ்லாப்பில் செலுத்த வேண்டியவர்கள், இரண்டாம் ஸ்லாப்பிலும்; இரண்டாவது ஸ்லாப்பில் செலுத்த வேண்டியவர்கள், மூன்றாவது ஸ்லாப்பிலும் மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

உதாரணம்:
* சரியாக இரு மாதத்தில் கணக்கெடுத்தால், 200 யூனிட்.
* ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தள்ளி கணக்கெடுத்தால், 205 யூனிட்.
* 5 யூனிட் அதிகமானதால், இரண்டாவது ஸ்லாப்பில் மொத்த யூனிட்டிற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
* சரியாக, இரு மாதத்தில் கணக்கெடுத்தால், 500 யூனிட் .
* ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தள்ளி கணக்கெடுக்கும் போது 505 யூனிட். 5 யூனிட் அதிகமானதால், மூன்றாவது ஸ்லாப்பில், மொத்த யூனிட்டிற்கும் மின் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

வீட்டு உபயோக மின் பயனீட்டாளர்கள் சுமையை, ஓரளவிற்கு குறைக்கும் வண்ணம், சரியாக இரு மாதங்களுக்கு ஒருமுறை, தேதி மாறாமல், மின் பயன்பாடு அளவு கணக்கெடுக்க, மின் வாரியம் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

                                            ----------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய e mail செய்தி, இங்கு பகிரப்பட்டுள்ளது.
                                            ----------------------------------------

Monday, 23 April 2012

முருங்கை (Moringa)














முருங்கை (Moringa) - என்று சொல்லப்படும் முருங்கைமரத்தின் சிறிய இலைகளை  ('கீரை' யை)  உணவில் சேர்த்து (சாப்பிட்டு) வருவதால் நிறைந்த ஊட்டச் சத்தோடு கூடிய நற்பலன்களை பெறலாமென இந்த Link மூலம் அறிய வருகிறது!










அதோடு, முருங்கை (Moringa) குறித்த பல அறிவார்ந்த விஷயங்களையும் உள்ளடக்கி உள்ளது. அவற்றில் சில:
Countries where Moringa grows
Countries with 5-35% of population malnourished
How to Grow Moringa
Names of Moringa


Sunday, 22 April 2012

இணையமும் அதன் வேகமும்!

"உபயோகித்து வருகின்ற Computer -களில் இணையதளங்கள் வேகமாக இயங்கவில்லையே! .... வாங்கி பழசாகிப்போன Computer .... எப்படி வேகமாக செயல்படும்!!" என்று நினைத்து அசட்டையாக இருந்து விடக்கூடாது!

Computer -ரின் வேகம், இணையத்தின் வேகம் போன்ற இவைகள் நாளுக்குநாள் குறைவதற்கும் அவைகளுக்கான தீர்வுகளும்தான் என்ன?

Web Browsers:  நம்மில் பலர் Internet Explorer Browser -ஐயே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். Computer வாங்கும்போது .... அதனுடன் சேர்த்தே இந்த IE Browser -ரும் வழங்கப்படுவதால், நாமும் வழங்கப்பட்ட இதையே, எவ்வித Upgrade -களுக்கும் உட்படுத்தாமல்,  தொடர்ந்து, அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.













இன்றைய காலகட்டத்தில், மேம்படுத்தப்பட்ட பல Browser -கள் இணையத்தில் வலம் வருகின்றன. ஆக,  வேறு ஒரு Browser மூலம் இணையத்தில் நுழைந்து, தளங்கள் வேகமாக இயங்குகின்றனவா? அவற்றிலிருந்து Download செய்யப்படுகின்ற File -கள் வேகமுடன் Download ஆகின்றனவா? என்று பார்ப்பதில் தவறில்லையே!

மேலும், வேகத்தினை முக்கிய முதன்மை அம்சமாக கொண்டே இப்போதுள்ள பல Browser -கள்  வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், Google -லின் Chrome Browser அதிக வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் Java Script Engine மூலம் Tune செய்யப்பட்டு வருகிறது. அது போலவே  Firefox, Epic போன்ற Browser -களும் வேகமாக இயங்கக்கூடியதே!
http://www.google.com/chrome
http://www.mozilla.org/firefox
http://www.epicbrowser.com         
       
(எரிச்சலூட்டும்) இணைய விளம்பரங்கள்: பெரும்பான்மையான இணைய தளங்களில் விளம்பரங்களும் அதை தொடர்ந்து Animation படங்களும் காட்டப்படுகின்றன. (இதுவே நமக்கு பெரும் எரிச்சலை உண்டுபண்ணும்!)

 தேவைப்பட்ட எதையாவது, இந்த தளங்களிலிருந்து, Download செய்ய முயலும்போது, அந்த விளம்பரங்களும் சேர்ந்து, தன் இஷ்டத்துக்கு, Download ஆகும். இதனாலும் Computer மற்றும் இணையத்தின் வேகம் குறைய வாய்ப்புள்ளது.

ஆக, அப்படி தொந்திரவு தரக்கூடிய விளம்பரங்களை, உபயோகிக்கும் Browser -களால்  வடிவமைக்கப்பட்டுள்ள, சில பிரத்தியேக Options மூலம் Filter செய்து விடுவதால், இத்தகைய விளம்பர தொந்திரவுகளும் இருக்காது; System -மும் அதை சார்ந்த இணையதளமும் மென்மையாகவும், வேகமாகவும் இயங்கும்.

கைத்தொலைபேசி வடிவம் (Mobile Version): பொதுவாகவே எந்தவொரு இணையதளத்திலும் செய்திகள் போன்ற தகவல்கள் விரிவு படுத்தப்பட்ட  வடிவில் தான் பிரசுரிக்கப்பட்டு இருக்கும். இப்படி விரிவு படுத்தப்பட்ட அத்தகவல்கள், அந்த தளத்திலிருந்து Down Load ஆவதற்கு, சில நேரங்களில், தாமதம் ஆகலாம். (இப்படி தாமதம் ஆவது என்பது, அத்தளம் சார்ந்த Server -ரின் பிரச்சனையாகக்கூட இருக்கலாம்!)

இம்மாதிரி தாமதமாகும் தளங்களை, அத்தளங்களின் கைத்தொலைபேசி வடிவம் அதாவது Mobile Version மூலம், நம் Computer ரில் இருந்தே, Down Load செய்வது சிறந்தது! இப்படி செய்வதால், விரிவு படுத்தப்படாத தகவல்கள் மற்றும் அதன் தொடர்புடைய Links மட்டுமே இந்த Mobile Version -ல்  காணக் கிடைக்கும். இதிலிருந்து தேவையான தகவல்கள் அல்லது Links போன்றவைகளை சிற்சில நிமிடங்களில் Down Load செய்துவிடவும் முடியும்! 

கீழே உள்ள Link,  BBC -யின் தமிழ் Mobile Version ஆகும்.     
http://www.bbc.co.uk/tamil/mobile/


RSS  (Really Simple Syndication): என்பது வலைப்பதிவுகள், செய்திகள், இசை மற்றும் ஒளிப்படம் போன்ற அடிக்கடி புதுப்பிக்கப்படும் தகவல்களை, ஒரு தரப்படுத்தப்பட்ட (XML File) கோப்பு வடிவில், பிரசுரிக்கப் பயன்படுத்தப்படும் வலை ஓடை (Web Stream) ஆகும்.  தொகுப்பிற்கான தகவல்கள்,  இவ்வலை ஓடையில், ஒரேயொருமுறை பிரசுரிக்கப் பட்டாலும், வெவ்வேறு பல நிரல்கள் (Coding) மூலமாக அத்தகவல்களை கண்டுகளிக்க  அனுமதிக்கிறது.

RSS Reader  என்னும்  மென்பொருள் மூலம் மேற்சொன்ன இவ்வலை ஓடையின் தொகுப்புகளை வாசிக்கலாம். பயனாளரின் விருப்ப வலைத்தளங்களில் பதியப்படுகின்ற முக்கிய செய்திகளை தக்கநேரத்தில் பெறவும், பதிவு செய்ய விரும்பும் வாசகர்களுக்கும் மற்றும் பல வலைதளங்களின் ஓடைகளை ஒரே இடத்தில் திரட்ட விரும்புபவர்களுக்கும்  இந்த RSS Reader உதவுகிறது.

இந்த RSS Reader -ஐ பாவிப்பதால், இணையத்தில் அவ்வபோது Update செய்யப்படுகின்ற, Latest Headlines போன்ற, புதிய தகவல்களின் தலைப்பு வரிகளை காணமுடியும் என்பதோடு, தேவைப்படும் தகவலின் தலைப்பு வரியினை Click செய்வதால் அத்தலைப்பில் பிரசுரமாகி இருக்கும் செய்தியை முழுமையாகவும் காணலாம்.

ஆக,  இந்த RSS Reader -ஐ உபயோகித்து தேவையான தகவல்கள் அல்லது Links போன்றவைகளை சொற்ப நிமிடங்களில் Down Load செய்துவிடலாம் என்பதோடு, உபயோகத்தில் இருக்கும் Computer மற்றும் அதை தொடர்ந்த இணையமும் மென்மையாகவும், வேகமாகவும் இயங்கும்.  
   
Cache Memory: இணைய இணைப்பின் மூலம் பார்வையிட்ட தளங்களின் தகவல்கள் போன்ற அனைத்து விபரங்களும் இந்த Cache Memory -யில் தான் பதியப்படுகின்றன. அப்படி பதியப்படுகின்ற அத்தகவல்களை அவ்வபோது அழித்து வருவதன் மூலம் உபயோகத்தில் இருந்துவரும்  Browser -களின் வேகம், குறையாமல் ஒரு கட்டுக்குள்,  இருந்து வரக்கூடிய சாத்தியமும் உள்ளது. இதுபோலவே, Computer தன்னிச்சையாக சேமிக்கின்ற Temporary File -களையும் அவ்வபோது அழித்து வருவதால் Computer -ரின் வேகமும் ஒரு கட்டுக்குள் இருந்து வரும். 

பொதுவாகவே, இணையத்தில் வலம் வரும் பலர், ஏகப்பட்ட தளங்களை திறந்து வைத்திருப்பர்! இப்படி ஏகப்பட்ட தளங்களை செயலாக்கத்தில் வைத்திருப்பதால் Computer மற்றும் அதை தொடர்ந்த இணையமும் வேகம் குறைந்த நிலைக்கு ஆட்படும். பார்த்த / பார்த்து முடித்த தளங்களை உடனுக்குடன் மூடிக்கொண்டு வருவதும், (Browser -ரின்) History -யிலுள்ள தகவல்களை அவ்வபோது அழித்து வருவதும் Computer, இணையம் இவைகளை வேகத்துடன் செயல்பட வைக்கும். 

Thursday, 19 April 2012

Super Monk (with Photos)

Chinese photographer and artist, Li Wei, 37, from Beijing, dressed as a monk and suspended himself in the air by wires to perform this illusion. He then shoots red smoke out of his shoes to create the amazing effect of flying. These pictures were taken over the Fontaine of Lyons at La Villette in Paris.

Supermonk: The Chinese artist dressed as a monk and suspended 
himself in the air by wires to perform this illusion
He says he never uses computers or special effects; just mirrors, wires, scaffolding and acrobatics. Creating hair-raising performances to convey his continual sense of lost gravity, Wei has taken his work all over the world.

Dizzying: The pictures were taken over the Fontaine of Lyons at La
 Villette in Paris


Brave: He says he never uses computers or special effects, just 
mirrors, wires, scaffolding and acrobatics

Wei's photos, which sell up to $8,000 (£4,200), have depicted him free falling from tall buildings-pictures that resemble the famous photograph of the French artist Yves Kline hurtling out a window.
The artist loves the reaction that his work evokes from people who pass it on the street.
Mission: Creating hair-raising performances to convey his 
continual sense of lost gravity, Wei has taken his work all over the 
world


New heights: Born in Beijing in is work is a mix of performance 
art and photography that creates illusions of a sometimes dangerous 
reality

He added: 'The first reaction is astonishment. Some people think these are sense of humor. They are curious about how I did this'.
'Sometimes I am in real danger - I have to hang myself high with steel wires and people do get a little worried for me - but I am fine.'
Li Wei sees his art as both a mission to set the scene for the perfect photograph and a perfect performance.

Friday, 13 April 2012

சீனாவும், இணையதளங்களும்!


சீனா என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே  மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பரப்பளவில்  மூன்றாவது பெரிய நாடாக கருதப்படுகிறது. 

சீனா பொதுவுடமைத் தத்துவத்தை கடைபிடித்து வரும் நாடாக இருந்தாலும், சீன அரசின் நிர்வாகக் கொள்கைகளுக்கு ஏற்பவே ஏதும் செய்ய இயலும். 

இணையத்தின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கம் சீன மக்களுக்கு நிரம்பவே பிடித்திருந்தாலும் அரசின் நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப தான் இணையத்தை அவர்களால் உபயோகிக்க முடியும். 

ஆம்! இணைய தணிக்கை (Internet Censorship) என்பதை சீன அரசு சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கி உள்ளதால், அரசு அனுமதிக்கும் இணைய தளங்களை மட்டுமே சீன மக்களால் காணவும் உபயோகிக்கவும் முடியும்!! 

இந்த இணைய தணிக்கை முறையினால்தான், இரண்டொரு வருடங்களுக்கு முன், Google -லுக்கும் சீன அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு .... Google தன் தொடர்பை சீனாவிலிருந்து துண்டித்துக் கொண்டது!




அப்படியான அந்த இணைய தணிக்கை விதிகளின்படி, உலகின் பல இணைய தளங்கள், மக்களால் அனுபவிக்க முடியாதபடிக்கு, சீன அரசால் Block செய்யப்பட்டு உள்ளது. அப்படி Block செய்யப்பட்டுள்ள சில முக்கிய தளங்கள்: 
Blogger Blogs, Facebook, Google Docs, Picasa, Twitter, Youtube என பட்டியல் நீளுகின்றது. 

அதோடு, உலகின் ஏதோ ஒரு மூலையில் வடிவமைக்கபட்ட ஒரு இணைய தளமானது (உதாரணமாக: http://www.pnonazim.blogspot.com/) சீனாவில் Block செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை http://www.blockedinchina.net/  என்னும் இந்த Link மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

அப்படி பார்த்தவகையில், மேற்சொன்ன, எனது இணைய தளம் சீனாவில் Block செய்யப்பட்டுள்ளது!

  
 இதனை தொடர்ந்து ... youtube.com
 

இதுமாதிரியே, உலகின் இணைய தளங்கள் மற்ற உலக நாடுகளிலும் Block செய்யப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பதை கீழுள்ள Links மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.


http://www.just-ping.com/index.php
http://www.watchmouse.com/en/ping.php
http://www.websitepulse.com/help/testtools.china-test.html

Thursday, 12 April 2012

திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!



'மணல் கயிறு’ திரைப்படத்தில் Hero S. V. சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து வித  Conditions போடுவார்!!!!


ஆம்! திருமண Market -டில் பையன்களால் Conditions போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது தலைகீழாக மாறி, இப்போது பெண்கள்தான், திருமண Market -டில்,  தனக்கு வரும் 'மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் நல்லது' என ஆயிரத்தெட்டு Conditions போடுகிறார்கள்!

உதாரணமாக, நானே (கோபாலகிருஷ்ணன்) சென்னையில் ஒரு Marriage Matching Center நடத்தி வருகிறேன்.

எங்களது Marriage Center -ரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்சொல்லி  பதிவு செய்யும் முறையை ரொம்பவும் Strict -டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண்களையும், பையன்களையும் Office -க்கு நேரில்  வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். 

பெண்கள் - பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா? ...

உதாரணமாக, சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் தேடி, Register செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். Phone -லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு! இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா; நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி Register செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

‘‘வேறொண்ணுமில்லை. வீட்டிலே Cook இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் Cook இருக்கு; ஆனா அவ Leave போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. 'Cook, Leave போட்டா அவன் அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே! .... நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன Company -யிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான்(!); சமைக்கணும், Coffee போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!

அடுத்து File பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்தப் பையன் ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா சொன்னார். அதோட, அந்தப் பையனோட Cell Number கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் Movie போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற Manners கூடத் தெரியலே! I want my space. எனக்கு ரொம்ப Broad minded பையன்தான் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான Dialog -களை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு Life -லேயே பிடிக்காத வார்த்தை Compromise. நான் எதுக்காக Compromise பண்ணிக்கணும். அப்படி ஒரு Life எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு Adjustable type இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால Parents இல்லாத இடமா.... ஏதாவது ...இருக்கான்னு பாருங்க.... அல்லது.... வெளியூரிலே பையனின் குடும்பம் இருந்து அவன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி இருக்கா?’’ என்றார்கள்...
 
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு Coffee கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு Mood வந்தா நல்லாவே Cook பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே Independent. அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்....

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் Mood Out ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக Register செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப Phone அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட 'பொண்ணு Friday தான் வருவா... Sunday தான் பேசணும்... சும்மா பேசினா Mood Out ஆயிடுவா... அப்புறம் இந்த Week End பூராவும் Waste -ஆகப் போயிடும்' என்பார்கள்.

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ Mind -ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு Total -லாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

இன்று, "Life -ல எனக்குன்னு ஒரு Security ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு O. K.  சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த Security தான். ‘‘ஒரு Plot Book பண்ணிட்டேன்... அதுக்கான Commitments  கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு Security  வேணுமே!...’’ என்கிறார்கள். 

தவிர, பல பெண்கள் இப்போது வேலை, Project என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு Commitments எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை Enjoy பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பெற்றோர்கள் தான்!...
 
இன்றைய பெண்களிடம் ‘ஒரு வெற்றிகரமான திருமணமாக, இது நிச்சயம், அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை. 

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் Height 2 Inches கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று, தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில், கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர், நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு போன்ற இவைகளே காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘Parents கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
பெண்ணை படிக்க வைத்து, ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள், மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளானதுப் போல, உறவினர் நண்பர்கள் மத்தியில் ஒதுங்கி, தனிமைப்பட்டு மன உளைச்சல் போன்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷ, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை, இந்தப் பெண்கள், அனுபவித்துப் பார்க்கும் வாய்ப்பையே  இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தையும், கணவரையும் நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கையை பெறுவார்கள்  என்பதில் சந்தேகமில்லை!
நன்றி: தமிழ் தாயகம் ...பதிந்தவர்: GOPALAKRISHNAN 

Sunday, 8 April 2012

Indian worker who not get wages for past 18 years

Indian shepherd gets his dues thanks to Hail governor's intervention

A stranded Indian worker who was not paid his wages for the past 18 years received compensation of SR85,000 from his sponsor in Jeddah yesterday thanks to the timely intervention of Hail Gov. Prince Saud bin Abdulmuhsin.
The compensation was handed to the Indian Consulate in Jeddah by officers from the Shamli police station in Hail.
Indian Consul General Faiz Ahmed Kidwai thanked the Hail governor for helping the worker identified as 45-year-old P. Periyaswamy, who had apparently been neglected by his sponsor.
“If it were not for the intervention of the governorate, the victim would not have seen light at the end of the tunnel,” the diplomat added.
The consul general said he would send a personal letter of thanks to Prince Saud.
Periyaswamy, a resident of the village of Karkudi village in the Indian state of Tamil Nadu, came to work as a shepherd in Hail province in 1994. He was married for a year when he reached the Kingdom.
His sponsor did not pay his salary for 18 years or allow him to go on vacation or leave on final exit. He never confronted his Saudi sponsor with the hope that he would be allowed to go home one day.
A Saudi citizen who took pity on him complained to the police and the governor’s office on his behalf.
The sponsor was then arrested and ordered to pay the worker’s wages and air ticket. The governorate also instructed the concerned authorities to repatriate him immediately after the wages were paid. Out of depression, Periyaswamy had even attempted to commit suicide.
On directives from the governorate, Periyaswamy was kept under the care of Al-Shamli police until his dues were settled.
Consul for Labor Welfare at the Indian Consulate in Jeddah S. Dakshina Moorthy told Arab News yesterday that although the worker was due more than SR100,000, he demanded only SR85,000 from his sponsor.
According to Moorthy, members of the sponsor’s tribe collected the amount as the employer could not pay such a huge sum. He had claimed that he was jobless and not in a position to pay a single riyal.
Moorthy said Periyaswamy agreed to the settlement amount.
“As he did not have a bank account back home, he requested us to keep the money with the consulate and to transfer the sum to a bank account later,” the consul said, adding the money has been deposited into the consulate’s account.
In the meantime, the consulate established contact with Periyaswamy's family in Tamil Nadu. “Some social workers in Jeddah helped us to trace his whereabouts. His younger brother Kannappa is making arrangements to receive him in his village,” the diplomat said.
Moorthy said the police officers who escorted Periyaswamy back to Hail promised he would be repatriated within a week.
The consulate issued commendation letters to the police officers at Al-Shamil police who helped the worker.
A group of Indian social workers collected some SR30,000 to help Periyaswamy when he goes to India.
The Indian Consulate has issued him with an outpass (emergency certificate) for a single journey to India.

 Source: http://goo.gl/0k3HP

Saturday, 7 April 2012

ஒரு பார்வை - நகை மதிப்பீட்டு கட்டணம்

அபார வசூல்! 
கே. கலியபெருமாள், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பணி நிறைவு), பரங்கிப்பேட்டையிலிருந்து எழுதுகிறார்: 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், அவசரத் தேவைக்கு நகைக் கடன் வேண்டி அணுகினால், நகை மதிப்பீட்டாளர் கட்டணமாக 1,000 ரூபாய்க்கு, மூன்று ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினால், 300 ரூபாய் மதிப்பீட்டாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து தொழில் செய்யும் சேட்டுகள் வாங்கும் கந்து வட்டியை விட அதிகம்!

வங்கிகளில் வாங்கினால், சலுகை கிடைக்குமென நினைப்பது தவறு. நாள் ஒன்றுக்கு, ஒரு வங்கியில், ஐந்து லட்ச ரூபாய் நகைக்கடன் தரப்படுகிறது எனில், மதிப்பீட்டாளர் கட்டணம் 1,500 ரூபாய் ஆகிறது.

மாதம் 25 வேலை நாட்கள் என வைத்துக் கொண்டால், இவர்களின் வருமானம், 37 ஆயிரத்து 500 ரூபாய். கிட்டத்தட்ட வங்கி மேனேஜரின் ஊதிய அளவிற்கு வருகிறது. 

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது, ஏழை - எளிய மக்களும், விவசாயிகளும் தான். 

ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கத்துறை மூலமாக, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறான பட்டயப் படிப்பு பெற்ற நபர்களை, வங்கி மூலம் நியமித்தால், மாத ஊதியம், 10 ஆயிரம் ரூபாய்க்குள் வரும். 
அதை வாடிக்கையாளரிடம் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
  
படித்துவிட்டு, வேலையில்லாமல் இருப்போருக்கு உதவி செய்தது போலவும் இருக்கும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பொதுத்துறை வங்கிகள், தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
----------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய e mail செய்தி, இங்கு பகிரப்பட்டுள்ளது.
----------------------------------------
 

Wednesday, 4 April 2012

எட்டு சவால்களும், அவற்றை எதிர்கொள்ளும் வழிகளும்!


எட்டு சவால்களும், அவற்றை எதிர்கொள்ளும் வழிகளும்!
- நாச்சியாள்
படம்: வீ.நாகமணி

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம் .. குழந்தைகள்தான்! முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இன்றைய குழந்தைகள் வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள்; அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்!


'இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால்கள்,  பெற்றோர்களின் கவனத்துக்காக, இங்கே... இடம் பிடிக்கின்றன.


1. தனிமை: 'நோபல்’ பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், 'ஒரு காலத்தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்கப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உறவுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனையுடன் சொல்லியுள்ளார். 

இன்றைய குழந்தை, தான் யாருடன் விளையாடுவது என்று தீர்மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 'இன்னாருடன் சேர்ந்து விளையாடினால்தான் என் குழந்தை நல்லவனாக வளருவான்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகிறது; சுருக்கப்படுகிறது.


பல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் குழந்தைகள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும்? எனவே, நண்பர்கள், உறவினர்கள் என சமூகத்திடம் பழகவிட்டு வளர்த்தெடுங்கள், குழந்தைகளை!



2. மலையேறிப்போன விளையாட்டுப் பொழுதுகள்: குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடிய காரணத்தால்... சாதிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன! ஆனால், இன்று ஓர் குழந்தை குழுவாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதைவிட, அந்தக் குழந்தை விளையாடுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. 

'விளையாடுற நேரம் அந்த கணக்கைப் போட்டுப்பாரு’ என்பது போன்ற பெற்றோர்களின் சுயநலம் சார்ந்த தவறான புரிதலால், குழந்தைகளால் தங்கள் இயல்புக்குரிய விளையாட்டை அனுபவிக்க முடிவதில்லை.


பாரதி சொன்ன 'ஓடி விளையாடு பாப்பா’வை தான் மருத்துவர்களும் சொல்கிறார்கள். உடல், மன ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தை வளர, அடுத்த முறை... 'விளையாடச் செல்கிறேன்' என்று கேட்டால், மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள்.


3. முதலீடாகும் குழந்தைகள்: பெரும்பாலான பெற்றோர்கள், 'உனக்கு நான் எல்.கே.ஜி-க்கு பத்தாயிரம் செலவு செய்தேன்; ஐந்தாம் வகுப்புக்கு 20 ஆயிரம் செலவு செய்தேன்; எட்டாம் வகுப்புக்கு 30 ஆயிரம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லியே, அவர்கள் மீது 'முதலீடு' செய்திருக்கும் எண்ணத்தை குழந்தைகளின் மனதில் விதைக்கிறார்கள். 

குழந்தைகளின் படிப்புக்காக தாம் செய்வது 'கடமை' என்பதை உருமாற்றி... 'முதலீடு' எண்ணத்தை அவர்களின் மனதில் விதைப்பதால் அந்தக் குழந்தைக்கு... முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள். இதே இன்வெஸ்ட்மென்ட் லாஜிக்கை நடனம், இசை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு கிளாஸ் போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ்களுக்கும் கொடுக்கப்படுகின்றன.

குழந்தைகளின்  மேல் அன்பை முதலீடு செய்யுங்கள் ... அவர்களிடமிருந்து அன்பே பதிலாக  கிடைக்கும்!


4. பெரிய மனுஷத்தனம்: குழந்தையின் திறமை, அறிவு ஆகியவற்றை, அது வாங்கும் மார்க்கை வைத்தே மதிப்பிடுகிறார்கள் - வீடு மற்றும் பள்ளியில். அதாவது, குழந்தைகளின் பெர்ஃபார்மென்ஸை வைத்தே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் நாம்தான் 'நம்பர் ஒன்’னாக இருக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும்போது, அதன் வயதுக்கும் இயல்புக்கும் மீறிய அறிவைத் தேடி அலைகின்றன. அதனால்தான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை மூன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை போல் பெரிய மனுஷத்தனமாகப் பேசுகிறது. இந்த பெரிய மனுஷத்தனம் சில சமயங்களில் வன்முறையாக உருவெடுக்கிறது. 

'எம்பொண்ணு பெரிய மனுஷி மாதிரி பேசுவா..!’ என்று பெருமைப்படும் பெற்றோர்களே, ஒரு கணம்  சிந்தியுங்கள்!


5. வடிகட்டப்படாத செய்திகள்: வரவேற்பறையில் டி.வி, படுக்கை அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போனில் செய்தி எனத் தகவல் தொடர்பு சாதனங்கள் நொடிக்கு நொடி பல்லாயிரம் செய்திகளை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. பெரியவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு சங்கிலியில், பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் விஷயங்களே அதிகம் கிடைக்கின்றன. 

ஒரு குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தகவல்கள் அனைத்தும் அந்தக் குழந்தையையும் சென்று சேர்கின்றன. சீரியலில் வரும் இரண்டாம் தாரம் பற்றிய கதை, ஒரு மூன்றாம் வகுப்புச் சிறுமிக்கு எதற்குத் தேவை என்பது பற்றி யோசிப்பதில்லை. அதனால் ஒரு குழந்தை தன் வயதுக்கும், மனதுக்கும் தேவைஇல்லாத விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தையின் அன்பான, பண்பான இயல்புகள் நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்படுகின்றன. 

'மீடியாக்களுக்கு தணிக்கை கொண்டு வருவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கும்' என்று காத்திருக்காமல், முடிந்தவரை தொலைக்காட்சிகளை முடக்கிப் போடுங்கள் !


6. ஒப்பீடு: 'நீ மட்டும் இந்த வருஷம் ஒழுங்கா பரீட்சை எழுதி, ஃபர்ஸ்ட் குரூப் வாங்கலேனா... உன் லைஃபே அவ்வளவுதான்’ என்பது போன்ற உணர்வுப்பூர்வமான தாக்குதலை எதிர்கொள்ளாத குழந்தைகளே இன்று இல்லை!

'பக்கத்து வீட்டு சுரேஷ் மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கான். நீ இன்னும் 80 மார்க்லயே நில்லு’, 'சுனிதா என்ன அழகா டான்ஸ் ஆடுறா... நீயும்தான் இருக்கியே’ என்பது போன்ற ஒப்பீட்டுத் தாக்குதலுக்கு ஆளாகாத குழந்தைகள் யார் இருக்கிறார்கள்? 

வீட்டுக்கு வீடு நடக்கும் இந்தத் தாக்குதல் மனதளவில் ஓர் குழந்தையை நிறையவே காயப்படுத்துகிறது. 'நாம் எதற்குமே லாயக்கு இல்லையோ’ என்ற தாழ்வு மனப்பான்மையையும், 'அவனால்தான இந்தத் திட்டு’ என்கிற பொறாமை மனப்பான்மையையும் வளர்க்கிறது. இது நாளடைவில் வன்முறைக்கு வழி செய்யும். 

ஒப்பீட்டுத் தாக்குதல் குழந்தைகளை எந்தளவுக்கு பாதை மாற்றுகிறது என்பதை உணருங்கள்.


7. மாறிவரும் கலாசாரம் - உணவு: தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கத்தாலும் பூமி பந்து சிறு உருண்டையாகிவிட்டது. நூடுல்ஸ், உலகக் குழந்தைகளின் உணவாகிவிட்டது. சர்வதேச பிராண்ட் நொறுக்குத் தீனிகள், ஹோட்டல்ஸ், கூல்டிரிங்ஸ் என உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. 

நம் சீதோஷண நிலைக்கு சற்றும் பொருத்தமற்ற உணவு, அதிக கலோரி கொண்ட உணவு, அந்த அதிக கலோரியை வெளியேற்ற வழி இல்லாத வாழ்க்கை முறை என பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைக்கும் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, ரத்த அழுத்தம் என ரொம்பவே பாடாய்படுத்துகிறது. அதே நேரம், 'சத்துக் குறைபாடு தேச அவமானம்’ என பிரதமரே சொல்லும் நிலை!

குழந்தைகளின் உணவையும் ஆரோக்கியத்தையும் பொருத்தத் தெரிந்தவர்களே... சிறந்த பெற்றோர்!


8. பாதுகாப்பு: சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தூரம், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் தனித்து இருக்கும் குழந்தைகள் என பல்வேறு காரணங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 

தனித்து இருக்கும் குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், சீண்டல்களும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. இதனை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறுப்பினர்களாக இருப்பதால், அது சரியா... தவறா என்ற குழப்ப மனநிலைமையில் இருப்பது குழந்தைகளுக்கு பெரும் பெரும் சவலாக இருக்கிறது!


வளரும் சூழ்நிலையும், மீடியாவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்குப் பாலுறவு குறித்து பல தவறான புரிதல்களை கற்பித்து உள்ளன. இதனால், பள்ளிக் குழந்தைகளிடம் கூட கர்ப்பக்கலைப்பு நடந்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமன தகவல்கள் வெளியாகி உள்ளன. 

'Good Touch ... Bad Touch’ என, தற்காப்பு விஷயங்களை, ஐந்து வயதில் இருந்தே  குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.


''ஒரு கலாசார - பொருளாதார - சமூக மாற்றத்தில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களும், நெகட்டிவான விஷயங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பாஸிட்டிவ் - நெகட்டிவ் விஷயங்களில் எது தேவை, தேவையில்லை என்பதில் முதலில் பெற்றோர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் மட்டுமே குழந்தைகள் ..... குழந்தைகளாக வளர முடியும். அதற்கு, குழந்தைகளுடன் உரையாட வேண்டும்!'' என்கிறார் நடராசன் நெத்தியடியாக! 
ஆம்... குழந்தைகளுடனான பெற்றோர்களின் குவாலிட்டி நேரங்களே இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, வழிகாட்டலை அவர்களுக்கு வழங்கும்!

நன்றி: அவள் விகடன் 27-மார்ச் -2012