Monday, 20 February 2012

நினைவக (RAM) பயன்பாட்டை கவனித்து, நிர்வகிக்க:

முந்தையப் பதிவான  "நினைவகம்: RAM and ROM"
(http://pnonazim.blogspot.com/2012/02/ram-and-rom.html
என்பதில்  குறிப்பிட்டபடி,
அதிக இடங்களை ஆக்கிரமிக்கக்கூடிய Program -களை  Computer -ரில் இயக்கநிலையில் எப்பொழுதும் வைத்திருப்பதால், (Random Access) Memory என்கிற RAM குறைந்துகொண்டே போய், ஒரு கட்டத்தில் Computer -ரின் வேகமும் குறையத்தொடங்கும். இதனால் அடுத்தடுத்து இயக்க இருக்கின்ற  Files and Program -களுக்கு Memory -இல் தக்கவைக்க போதுமான இடமில்லாமல் போவதால் Computer தன் இயக்கத்தில்  திணறவும் ஆரம்பிக்கும்.
ஆக, Memory - அதாவது RAM - எந்த அளவு பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வதால், அதற்கு ஏற்றார்போல் அதிமுக்கியமில்லாத (இயக்க நிலை) Program மற்றும்  File போன்றவைகளை  மூடுவதினால் RAM -க்கு சற்று  கூடுதலாக இடம் கிடைப்பதோடு, Computer வேகமும்  சற்றுகூட வாய்ப்பிருக்கிறது. ஆக, RAM- எந்த அளவு பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள இணையத்தில் பல Software Program -கள்  இலவசமாக இருக்கின்றன. 

அந்த வகையில் சில: 
  • Performance Monitor

இதனுடைய சமீபத்திய Version 4.0.,  ஆனது   CPU, Memory, Disk and Network போன்றவைகளை கண்காணித்து அவைகளின் பயன்பாடுகளை System Tray -யில் காண்பிப்பதோடு, உபயோகத்தில் இருந்துவருகின்ற Network -க்கான Graph -ஐயும் காட்டுகிறது. பல வசதிகளை உள்ளடக்கிய இது,  இலவசமும் கூட.

இதனுடைய Size: Win32 Setup (1.5 Mb) ; Zipped Package (300 Kb) 

இதனை இத்தளத்திலிருந்து பெறலாம்:

  • SysTrayMeter:
மிகச்சிறிய (15.01 KB) அளவே உள்ள  application -ஆன இது, இலவசமும் கூட.  Computer -ரின் (System) Tray -இல் தன்னை (ஒரு Icon -ஆக) இணைத்துக்கொண்டு CPU & RAM - இவைகளின் பயன்பாடுகளை Colorful -ஆக வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும்.
இதனால், CPU & RAM பயன்பாடுகளை எளிதாக அறியலாம்.
 
இதனை கீழ்க்கண்ட தளத்திலிருந்து பெறலாம்.

 
சற்று கூடுதல் திறன் கொண்டதும், பல வசதிகளை உள்ளடக்கியதுமான இது, Memory (RAM) -யின் வேகத்தை திறம்பட நிர்வகிக்கும் தன்மை கொண்டது. இலவசமும் கூட.
Version: 1.52, Size: 606 KB (Zip format)

இதனை இத்தளத்திலிருந்து பெறலாம்:


  • MemInfo:  Computer (System) Tray -யில் அமர்ந்தவண்ணம், Memory (RAM or Page File) பயன்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்ற இதுவும் இலவசமானதே. 
Memory யின் பயன்பாடு 65% -க்கு உள்ளாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், 65% -க்கு மேல் இருந்தால் மஞ்சள் வண்ணத்திலும், 95% -ஐ அடைந்து விட்டால் சிவப்பு வண்ணத்திலும் வெளிப்படுத்துவதோடு, Memory நெருக்கடியான நிலையை அடையப்போகின்றது என்கிற பட்சத்தில் உடனே எச்சரிக்கையினையும் தரவல்லது.  De-fragmenter உடன், இதன் Version 3.1 (Size: 489.24KB), இணைந்து வருவதால் Computer -ரின் வேகத்தை அதிகப்படுத்தவும் சாத்தியமாகிறது.

இதனை இத்தளத்திலிருந்து பெறலாம்:

http://download.cnet.com/MemInfo/3000-2248_4-67969.html

No comments: