Computer and Info Technology -களில் பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வருவது பற்றி நாமெல்லோரும் அறிவோம். அப்படி பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வந்தாலும், விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஸ்தாபனங்களின் பெயர்களை, எப்பொழுதும், நாம்
நினைவில் வைத்து இருப்பதோடு, அந்த பெயர்களையும் சதா சொல்லியப்படி இருப்பதை எவராலும் மறுக்கவியலாது.
அந்த
பெயர்களை, இந்த ஸ்தாபனங்கள், எப்படி பெற்றெடுத்தன? அவற்றின் வரலாறு என்ன? என்று, எப்போதேனும், யோசித்து இருக்கிறோமா? சரி! சில நிமிடங்களை இப்போதாவது செலவு செய்து எப்படி பெற்றென என்றுதான் பார்ப்போமே!!
1. Adobe.com: ஒரு நதியின் பெயரே Adobe என்பதாகும். இந்நிறுவனத்தை 1982 December -ரில் தொடங்கிய, இருவரில் (John Warnock and Charles Geschke) ஒருவரான John Warnock அமெரிக்காவின் California மாகாணத்தில் உள்ள Los Altos என்ற பகுதியில் வசிக்கிறார். இவருடைய வீட்டிற்குப் பின்புறம் தான் இந்த Adobe Creek என்னும் நதி ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிறுவன logo -வை வடிவமைத்தவர், John Warnock -ன் மனைவி Marva Warnock (a graphic designer) ஆவார். இந்நிறுவனத்தின் President and Chief Operating Officer ஆக Shantanu Narayen என்னும் Hyderabad (India) நகரை சேர்ந்தவர், 2005 January -இல் இருந்து பணிபுரிந்து வருகிறார். மேலும், major development operation -களுக்காக உலகின் பல பகுதிகளில் இந்நிறுவனம் தனது அலுவலக கிளைகளை (Branch Offices) திறந்திருந்தாலும், இந்தியாவில் Noida, மற்றும் Bengaluru -வில் இதற்கான கிளைகள் இருக்கின்றன.
2. Apple.com: 1970 -களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் Slogan - "Byte into an Apple" என்பதுதான். இதன் பிறகு 1997 -2002 கால கட்டங்களில் வியாபார நோக்கில் இதன் slogan "Think Different" என்று மாற்றி அமைக்கப் பட்டாலும், இதன் குறிப்பிட்ட சில கருவிகளுக்கு "iThink" -என்பதிலிருந்து ..... 'iMac', 'iPhone', 'iPod' போன்ற வித்தியாசமான பெயர்களையும் உபயோகித்து வருகிறது.
Apple Company Headquarters |
இந்நிறுவனத்தை
ஸ்தாபித்தவர்களில் முதன்மையாளராக கருதப்படும் Steven Paul Jobs, சுருக்கமாக Steve Jobs ஆரம்பகாலங்களில், ஆப்பிள் பண்ணையில் வேலை செய்து வந்திருக்கிறார். ஆரம்பிக்க போகும், தனது, புதிய Computer நிறுவனத்துக்கு பெயர் ஒன்றை அவருடைய நண்பர்கள் பரிசீலித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, ஒருவேளை அவர்களால் பரிசீலிக்க முடியவில்லை என்னும் பட்சத்தில் கம்பெனிக்கு Apple Computers என்றே பெயர் வைத்து விடப்போவதாக வேடிக்கையாகவும் சொல்லி உள்ளார். நண்பர்களாலும் எந்தவொரு நல்ல பெயரையும் கொடுக்க முடியாத நிலையில் இந்நிறுவனத்துக்கு Apple Computers என்பதே
இறுதி பெயராகி, சரித்திரத்திலும் நிலை பெற்றுவிட்டது.
Steve Jobs -இன் பெற்றோர்கள் Joanne Carole Schieble மற்றும் Abdul Fattah Jandali ஆவார்கள். இவரது தந்தை சிரியா (Syria) நாட்டில் பிறந்த ஒரு முஸ்லிம். இவரது தாயும், தந்தையும் university மாணவர்களாக இருந்தபோதே காதலில் வயப்பட்டதினால், திருமண பந்தம் இல்லாமலேயே, Steve Jobs பிறந்திருக்கிறார். Paul Reinhold Jobs and Clara Jobs என்கிற தம்பதியர் இவரை, குழந்தை பருவத்திலேயே, தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள். இத்தம்பதியர் தாம், தனது பெற்றோர்கள் என்று Steve Jobs பெருமையுடன் கூறியும் உள்ளார்.
2003 -இல், Steve Jobs, pancreatic cancer -ரினால் பாதிக்கப்பட்டார். 2009 -இல் liver transplant செய்தும் பலனில்லாமல், 5 October 2011 -அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 56.
3. Google.com:
மிகப்பெரிய Search Engine -ஐ தன்னகத்தே கொண்டுள்ள இந்த நிறுவனத்தை Stanford University -யில் Ph.D செய்துவந்த Larry
Page and Sergey Brin என்ற இரு மாணவர்கள் நிறுவிய போது,
இதில் தேடப்படும் தகவல்களின்
எண்ணிக்கை 1 இல் தொடங்கி, அதன்பின் 100 பூஜ்யங்கள் கொண்ட எண்களாக
இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, (அதாவது A "GOOGOL" is the large number 10100, that is, the digit 1 followed by 100 zeros)
"Googol" என்றே முதலில்
உருவாக்கம் செய்தார்கள். எழுதும்போது ஏற்பட்ட சிறு தவறால் (misspelling)
Google என்று மாறிப்போனது!
Google Headquarter |
மேலும், "google" என்ற இச்சொல்லானது காலப்போக்கில் Merriam Webster Collegiate Dictionary, Oxford English Dictionary போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆங்கில அகராதிகளில் ("to use the Google search engine to obtain information on the Internet" -என்கிற அளவுக்கு) இடம் பெற்றதோடு, Global Language Monitor என்னும் அமைப்பும் மற்றும் BBC -யும் சேர்ந்து, 2009 -இன் பிற்பகுதியில் (முறையே "Google" No. 7 on its Top Words of the Decade list & Google in their Portrait of the Decade (Words) series என்று) புகழாரமும் சூட்டின.
ஆக, Miss Spelling -உடன் தொடங்கப்பட்ட "Google" நிறுவனம், இன்று, மனித இனத்தின் சிந்தனைப்போக்கையே மாற்றி விட்டதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
4. hotmail.com: இணைய(த்தொடர்பின்) அடிப்படையில்தான் இயங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட இந்த Hotmail சேவையே இணைய அடிப்படையில் இயங்கும் முதல் சேவையாக கருதப்படுகிறது.
Internet இணைப்பை தருகின்ற - Internet Service Provider (ISP) -களின் உதவி இன்றி, தனது சொந்தமான (hotmail) Server -ரிலிருந்து அனுப்பப்படுகின்ற e mail, Web Server -ஐ அடைந்தபின், மீண்டும் அந்த mail -ஐ எப்படி பெறுவது என்று பலமுறை சிந்தித்து, இந்த hotmail -ஐ, வடிவமைத்து இருக்கிறார் Sabeer Bhatia. இவர் இந்தியாவின், Chandigarh நகரில் பிறந்து, Bangalore -ல் வளர்ந்து ஆளானவர்.
இந்நிறுவனத்துக்காக பல பெயர்களை இந்த Sabeer Bhatia உண்டாக்கிப் பார்த்திருக்கிறார்; எந்தப் பெயராக இருந்தாலும், அது mail என்றே முடிய வேண்டும் என தீர்மானமாக இருந்திருக்கிறார். காரணம், Web Page -களில் உபயோகிக்கக்கூடிய Programming மொழியை (machine language), பொதுவாக HTML (அதாவது, Hyper Text Markup Language) என்று சொல்கிறோம். ஆக, HOTMAIL என்பதில் HTML இருப்பதால் இதுவே சரியானத்தேர்வு என முடிவு செய்து hotmail என்று பெயர் வைத்திருக்கிறார். (The name "Hotmail" was chosen out of many possibilities ending in "-mail" as it included the letters HTML - the markup language used to create web pages).
தொடங்கியகாலங்களில் இது HoTMaiL என - HTML தனித்து
தெரிவது போன்று - பெரிய எழுத்துகளிலும், மற்றவை சிறிய எழுத்துகளிலுமாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்போது எழுதும் வழக்கமான முறையில்
மாற்றப்பட்டது.
5. Intel.com: Gordon E. Moore (a chemist, physicist) and Robert Noyce (a physicist) ஆகிய இருவரால், 1968 -இல், இந்நிறுவனம் தொடங்கப் பட்டது.
5. Intel.com: Gordon E. Moore (a chemist, physicist) and Robert Noyce (a physicist) ஆகிய இருவரால், 1968 -இல், இந்நிறுவனம் தொடங்கப் பட்டது.
Intel Headquarters |
தங்களின், இந்த புதிய நிறுவனத்துக்கு "Moore
Noyce" என்று பெயரிடவே முதலில் முடிவு செய்தனர். ஆனால், இந்தப்பெயர் "more noise" என்கிற அர்த்தத்தில் பார்க்கப்பட்டால் - அதிலும், ஒரு electronics நிறுவனத்துக்கு இம்மாதிரியான பெயர் சரியாக வராதே! என்றெல்லாம் யோசித்து, கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு NM Electronics என்னும் பெயரை வைத்திருந்தார்கள்.
பிறகு, Integrated Electronics -அல்லது, சுருக்கமாக "Intel" என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம் என்று பார்க்கும்போது, Intel என்னும் இந்தப் பெயர் Intelco என்ற hotel chain (or group of hotels) மூலம் ஏற்கெனவே பதிவு (trademarked) செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
பிறகென்ன! Intelco -விடம் பேரமும், விலையும் பேசி பெயருக்கான உரிமை (rights for the name) வாங்கப்பட்டது. ஆக, இப்படி பேரம் பேசி வாங்கப்பட்ட அந்த Intel -என்னும் பெயரே, உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக திகழ்கிறது.
பிறகு, Integrated Electronics -அல்லது, சுருக்கமாக "Intel" என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம் என்று பார்க்கும்போது, Intel என்னும் இந்தப் பெயர் Intelco என்ற hotel chain (or group of hotels) மூலம் ஏற்கெனவே பதிவு (trademarked) செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
பிறகென்ன! Intelco -விடம் பேரமும், விலையும் பேசி பெயருக்கான உரிமை (rights for the name) வாங்கப்பட்டது. ஆக, இப்படி பேரம் பேசி வாங்கப்பட்ட அந்த Intel -என்னும் பெயரே, உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக திகழ்கிறது.
6. microsoft.com: Bill Gates and Paul Allen என்ற பால்ய வயது சிநேகிதர்களினால் 1975, April 4 -லில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டாலும், இதற்கான அடித்தளம் போடப்பட்டது என்னவோ, Popular Electronics என்ற பத்திரிகையின் 1975, January மாத இதழில் வெளிவந்த புகழ் பெற்ற ஒரு கட்டுரையினால் தான் என்றால் எவருமே நம்பத்தான் மாட்டார்கள்! ஆம், அதுதான் உண்மையும் கூட!
MITS (Micro Instrumentation and Telemetry Systems) என்ற சிறு நிறுவனத்தின் Altair 8800 என்னும் microcomputer பற்றிய கட்டுரை தான் அது. அந்த கட்டுரையை Paul Allen கொண்டுவந்து Bill Gates இடம் கொடுத்து 'நாமும் MITS -உடன் இணைந்து, அவர்களுக்கு தேவைப்படும் BASIC programming language -ஐ செய்து கொடுக்கலாமே' என்று சொல்லி, இருவரும் சேர்ந்து அதை செய்து கொடுக்க, இதன் அடிப்படையில் Paul Allen சிந்தனையில் உருவாக்கம் ஆனது தான் Micro-Soft நிறுவனம்.
இடையே இருந்த சிறு இடைக்கோட்டை Bill Gates, 1979 -இன் பிற்பகுதியில், நீக்கிவிட்டு Microsoft என்று ஒரே பெயராக்கினார். இப்போது, இந்த பெயரே உலக மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிறுவன பெயராகவும் அமைந்து விட்டது.
MITS (Micro Instrumentation and Telemetry Systems) என்ற சிறு நிறுவனத்தின் Altair 8800 என்னும் microcomputer பற்றிய கட்டுரை தான் அது. அந்த கட்டுரையை Paul Allen கொண்டுவந்து Bill Gates இடம் கொடுத்து 'நாமும் MITS -உடன் இணைந்து, அவர்களுக்கு தேவைப்படும் BASIC programming language -ஐ செய்து கொடுக்கலாமே' என்று சொல்லி, இருவரும் சேர்ந்து அதை செய்து கொடுக்க, இதன் அடிப்படையில் Paul Allen சிந்தனையில் உருவாக்கம் ஆனது தான் Micro-Soft நிறுவனம்.
இடையே இருந்த சிறு இடைக்கோட்டை Bill Gates, 1979 -இன் பிற்பகுதியில், நீக்கிவிட்டு Microsoft என்று ஒரே பெயராக்கினார். இப்போது, இந்த பெயரே உலக மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிறுவன பெயராகவும் அமைந்து விட்டது.
7. yahoo.com: Stanford University -இல் Electrical Engineering படித்துவந்த Jerry Yang and David Filo என்கிற மாணவர்களால், 1994 January -இல், "David and Jerry's Guide to the World Wide Web" என்கின்ற பெயரில்தான் இந்நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால், 1994 April மாதத்தில் "Yahoo!" என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
காரணம், "yahoo" என்ற இந்த பெயர், அக்காலகட்ட கல்லூரி மாணவர்களிடையே, சிலாகித்து பேசும் அளவுக்கு மிக பிரபல்யமாக இருந்ததோடு, David Filo -வின் (கல்லூரி) girlfriend ஒருத்தியும், வேடிக்கையாக David Filo -வை, இப்பெயராலேயே அடிக்கடி, கூப்பிட்டு (கிண்டலடித்து) வந்ததும் கூட பெயர் மாற்றத்திற்கான காரணங்களாக இருந்தாலும், "yahoo" என்பது, Jonathan Swift என்பவரின் Gulliver's Travels என்ற கதையில் வரும் ஒரு அமானுஷ்ய பாத்திரத்தின் (legendary being) பெயராகவும் இருந்தது. Gulliver's Travels கதைப்படி, "yahoo" என்ற சொல், "Yet Another Hierarchical Officious Oracle" என்னும் சொற்றொடரில் இருந்து, acronym முறையில் (அதாவது, acronym is widely used to describe any abbreviation formed from initial letters, such as NATO, FBI, HTML etc.,) எடுத்தாளப்பட்டதும் கூட!
மேலும், Gulliver's Travels கதைப்படி, "yahoo" என்றப்பெயருக்கு - மிகவும் முரட்டுத்தனமும், நாகரிகம் அற்ற, பண்பாடு ("rude, unsophisticated, uncouth") என்னவென்றே அறியாத இளைஞனை குறிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டும் இருந்தது. நாங்களும் அப்படியான இளைஞர்கள்தான் என்று Jerry -யும் Filo -வும், தங்களுக்கு தாங்களே, வேடிக்கையாக, குறிப்பிட்டுக் கொண்டதால் Yahoo! என்ற பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்து சூட்டிக்கொண்டனர்.
No comments:
Post a Comment