Friday, 17 February 2012

நினைவகம்: RAM and ROM


Computer -ஐ கையாளுவதற்கு அதனுடைய தொழில்நுட்பம்  பற்றி தெரிந்துதான் ஆகவேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும், அதனுடைய அடிப்படை குணாதிசயங்களை தெரிந்துக்கொள்வது பயன் அளிக்கும் என்பதோடு, அதை இயக்கவும் எளிதாக இருக்கும். 

தனக்கு இடப்படும் தகவல்/கட்டளைகளை 0 அல்லது 1 என்னும் இரு இலக்கங்களின் binary digits  (சுருக்கமாக, "bit"/"b") என்கிற கூட்டு  அமைப்பில்தான், Computer, அதனுடைய Memory (நினைவகத்தி) -ல் எடுத்துக் கொள்கிறது.   இந்த binary digits  (8 -தடவை) களால் எழுதப்படும் கூட்டே ஒரு byte (= 8 bits) என்பதாகும். ஆக, இதன் பெருக்கமானது  kilo byte (either 1000 or 210 = 1024 bits), mega byte (either 8000000 or 8×220 = 8388608bits) etc., என்று விரிந்து போய்கொண்டே இருக்கும்.    

ஆக, Computer -ஐ  பொறுத்தவரை அதனுடைய Memory (நினைவகம்) மிகவும் அவசியமான ஒன்று!  இந்த Memory -யை:
RAM (Random Access Memory) மற்றும்
ROM (Read Only Memory) என  இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

RAM (Random Access Memory): Computer மின்சக்தியைப் பெற்ற பின்னரே RAM (Random Access Memory) -என்னும்  இந்த நினைவகம்  தன்வேலையை தொடங்குகிறது. நம்மால் உபயோகப்படுத்தப்படும் பல Program -கள் இதனுடைய Memory -இல்தான் தற்காலிகமாக எழுதப்பட்டு, அதாவது Computer -ஐ திறந்ததிலிருந்து மூடுகின்றவரை Computer இயங்க தேவைப்படுகின்ற  அத்தியாவசிய Program -களும், நமது தேவைகளுக்காக (Word, Excel, Presentation போன்ற) பல  File -களை திறப்பதால் அவைகள் இயங்குவதற்கான Program -களும், இயக்கநிலையில் இருந்துக்கொண்டே இருக்கும். அப்படியான File -கள் மற்றும் (அதனுடன் சம்மந்தப்பட்ட இயக்கநிலை) Program -களையும் தன்னுள் வாங்கி அவற்றை செவ்வனே பிரித்துக்கொடுக்கும் பணியைத்தான் இந்த  RAM செய்துவருகிறது.

                    








மேலும், RAM -இன் அளவு ஒரு வரையறைக்குள் உட்படுத்தப்பட்டு இருப்பதால், ஒன்று அதற்கு மேற்பட்ட அல்லது குறிப்பிட்ட அளவிலான  Program -களை மட்டும் இதனால் உள்வாங்கி செயலாற்ற இயலும். ஒரு Program -ஐ நிறுத்தி, முழுவதும் மூடும்போது அந்த Program, (Random Access) Memory -இல் இருந்து நீக்கப்படுவதோடு, அதன் இடத்தில் வேறு Program வைக்கப்பட்டு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

Windows மற்றும் சில Operating System -களில் Program -களை மூடிய பிறகும், சில சமயங்களில், அந்த Memory -யின் இடத்தை அந்த Program -க்காக அப்படியே வைத்திருக்கும். இருப்பினும் மின்சாரத்தின் துணைகொண்டு RAM இயங்குவதால், மின்சக்தியை இழக்கும்போது அனைத்து Program -களும் RAM -லிருந்து அழிக்கப்பட்டு விடும். 

அதிக இடங்களை ஆக்கிரமிக்கக்கூடிய Program -களை எப்பொழுதும் Computer -ரில் இயக்கநிலையில் வைத்திருந்தால், (Random Access) Memory ஆனது குறைந்துகொண்டே போகும்; இதனால் Computer -ரின் வேகமும் குறையத்தொடங்கி, அடுத்தடுத்து இயக்க இருக்கின்ற  Files and Program -களுக்கு Memory -இல் தக்கவைக்க இடமில்லாமல் போவதால் Computer திணறத்தொடங்கும். அல்லது செயல் இழந்துப்போய் (Cross) அப்படியே நிற்கும்.  சற்று கூடுதல் அளவுள்ள RAM -ஐ computer -ரில் இணைப்பதின் மூலம், இதனை, சரி செய்யலாம் என்பதோடு அதிக அளவுள்ள Program -களையும் இதன் மூலம் தக்கவைத்து சீராக இயக்கவும் முடியும்.

ஆக, Computer -ரின் Memory (RAM) அதிக அளவில் இருந்தால்தான் நிறைய எண்ணிக்கையிலான Program -களை இயக்க முடியும். தற்போதைய காலகட்டத்தில்  1 GB, 2 GB அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளுடன் உள்ள RAM தான் Computer -ஐ  சீராக இயங்க வைக்கும் சிறந்த தேர்வாக உள்ளது.

ROM - (Read Only Memory):  Computer -ரின்   (Mother Board -டில் உள்ள) Chip -களில் ஏற்றப்பட்டு இருக்கும் கட்டளைகள் அடங்கிய Program -களின் தொகுப்பே ROM. மாற்றங்கள் செய்யக்கூடாத தொகுப்புகளை உள்ளடக்கிய Memory இது!
       
Computer இயக்கத்திற்கு தேவைப்படும் அடிப்படை Program -களை இந்த Memory தன்னுள் வைத்திருப்பதால், இதனை Computer -ரின் உயிர்நாடி என்றுகூட சொல்லலாம்! அதோடு, இதனுடைய Program -களை மாற்றம் செய்யவோ அல்லது வேறு புதிய Program -களை இணைக்கவோ கூடாது.

மேலும், Computer செயல்பாட்டில் இருக்கிறதோ இல்லையோ, இந்த ROM, தன்னில் உள்ள Program -களுடன், இயங்குவதற்காக எப்பொழுதும் தயார் நிலையில் இருந்துக்கொண்டே இருக்கும்.

No comments: