Friday, 24 February 2012

Google controversially changes

* WHY delete your Google browsing history?
** DEAD LINE is before March 1 to hide your secrets!
*** HOW to delete your Google browsing history in three simple steps?

* WHY?
There is just a week to go until Google controversially changes its privacy policy to allow it to gather, store and use personal information about its users.
But there is one way to stymie the web giant's attempts to build a permanent profile of you that could include personal information including age, gender, locality and even sexuality.

** DEAD LINE!
From March 01, you won't be able to opt out of the new policy, which has been criticized by privacy campaigners who have filed a complaint to U.S. regulators.
But before that date you can delete your browsing history and, which will limit the extent to which Google records your every move - including your embarrasing secrets.

*** Here's HOW?
1. Go to the Google homepage and sign into your account. Use the dropdown menu under your name in the upper right-hand corner to access your settings. Click on 'account settings', like below.
Google


2. Next, find the section called 'Services' and you'll see a link to 'View, enable, or disable web history', shown in the red box below. Click on it.
Google
3. Finally, you can remove all of your search details by clicking on 'Remove Web History', shown in the red box below. Once you have done this your history will remain disabled until you turn it back on.
Google

Although disabling web history will not prevent Google from gathering and storing this information and using it for internal purposes, but it means the Web giant will anonymise the data in 18 months.
It will also prevent it from certain kinds of uses, including sending you customized search results.
If you don't sign in, Google will track your searches via the computer's IP address. The only way to clear your personal history is by signing in.
While it is not known exactly how Google would use your combined information, the policy has been widely criticised.
The Center for Digital Democracy has filed a complaint with the Federal Trade Commission.
Facing anger: Google co-founder Larry Page is being accused of 
allow the service to invade the privacy of users

Picture: Google co-founder Larry Page

It has asked the FTC to sue Google to stop the policy change and to fine the company.
If successful, the the FTC can impose fines up to $16,000 per day for each violation.
Privacy problems are particularly pertinent to those who share a Google account with other members of their family.
For example if one person searches for pictures of scantily clad women, the next family member to use the internet may find themselves being recommended a bikini contest on YouTube.
Cecilia Kang, of the Washington Post, described collation of vast tracts of information as a ‘massive cauldron of data.’
‘Privacy advocates say Google's changes betray users who are not accustomed to having their information shared across different Web sites.’ she said.
‘A user of Gmail, for instance, may send messages about a private meeting with a colleague and may not want the location of that meeting to be thrown into Google's massive cauldron of data or used for Google's maps application.’
Technology site Gizmodo said that the change was the end of Google’s ‘don’t be evil motto.
The site’s Mat Honan wrote: ‘It means that things you could do in relative anonymity today, will be explicitly associated with your name, your face, your phone number.
'If you use Google's services, you have to agree to this new privacy policy. It is an explicit reversal of its previous policies.’
Larry Dignan, meanwhile, writing on ZDnet.com, described the new policy as ‘Big Brother-ish’.

Read more: http://goo.gl/ihZ8Y

Wednesday, 22 February 2012

ஒரு Terminal (for Google)! பல சேவைகள்!!

Google, தனது பயனுள்ள (G mail, Blogger, You Tube, Picasa, Google Reader, Google Calendar etc., போன்ற) பல சேவைகளை அதன் பயனாளர்களுக்கு பெரிய பட்டியலே இடும் அளவுக்கு தந்துக்கொண்டு இருப்பதை எவராலும் மறுக்க இயலாது!

அப்படியான நீண்ட பட்டியலில் உள்ள எந்தவொரு சேவையையும் பெறுவதற்கு அதற்கான URL -ஐ Address Bar -ரில், மிக சரியாக, type செய்தால்தான் அச்சேவையின் தளம் திறக்கும். அப்படி, ஒவ்வொரு தளத்தையும் தனித்தனியாக திறக்க URL -ஐ type செய்வது என்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும்! 
ஆக, தனது பயனாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, Google, "Terminal for Google" என்கிற பெயரில், ஒரு Extension (நீட்சி)-ஐ உருவாக்கம் செய்துள்ளது. இந்த Extension (நீட்சி)-ஐ Chrome Browser -ரில் இணைத்துவிட்டால் அனைத்து சேவைகளின் தளங்களையும் just a click -இல் open செய்துவிடலாம்!

ஆம், ஒவ்வொரு முறையும் URL -ஐ type செய்துதான் அத்தளத்தை பெற வேண்டும் என்கிற, Logic -யையே, இந்த "Terminal for Google" தகர்த்து, மாற்றி அமைத்து விட்டதே என்கிற வியப்பை சொல்லித்தான் ஆகவேண்டும்!
 
கீழ்காணும் வசதிகளுடன் "Terminal for Google" மேம்படுத்தவும் பட்டுள்ளது:
1.    சேவைகளின் shortcut -களை icons -களாக காட்டும் வசதி.
2. Gmail, Google Reader மற்றும் Google+ ஆகிய சேவைகளில் படிக்காதவைகளின் எண்ணிக்கையை காட்டும் வசதி.
3.  செயலில் இருக்கும் (இணையப்)பக்கத்தை Gmail or Blogger வழியாக share செய்யும் வசதி.

இந்த "Terminal for Google" மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் கீழே  பட்டியல் இடப்பட்டுள்ளது:

Gmail, Google Calendar, Google Reader, Google Contacts, Google Tasks, 
Google Docs, Google Sites, Google Analytics, Webmaster Tools, FeedBurner, Blogger, Google Adsense, Google AppEngine, Picasa, YouTube, Dashboard, Accounts, Google News, Google Maps, Android Market, Google Groups, iGoogle, Google Notebook, Google Translate, Google Voice, Google Bookmarks, Google URL Shortener, music beta, Knol, Google finance, Google Moderator, Google Books, Chrome Web Store, Google+, Panoramio

"அனைத்துக்கும் ஆசைப்படு(ம்)" ரகத்தை சேர்ந்த பயனாளர்கள் எல்லா சேவைகளையும் தேர்ந்தெடுத்தும் கொள்ளலாம்; அல்லது, தேவைப்படுகின்ற சேவைகளை மாத்திரம், அவர்தம் வசதிப்படி, தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

1,229 KB அளவுள்ள
"Terminal for Google" -இன், Extension (நீட்சி)-ஐ, இந்த Link -லிருந்து ...
+ADD TO CHROME என்பதனை Click செய்து ...

Chrome Browser -ரில் Install செய்ததும்,
Browser -ரின் வலது பக்க மேல்மூலையில் தெரியும், இந்த
Icon -மேல், mouse -சின் வலது பக்கத்தினால் Click செய்ய ... கிடைக்கும்
சிறிய window -விலிருந்து, Options -ஐ Click செய்து .... அதிலிருந்து Services
என்பதை திறந்து தேவையான சேவைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.



அனைத்து சேவைகளின் URL -களை இனியும், நினைவில் வைத்துதான் ஆகவேண்டும் என்கிற நிர்பந்தமில்லை. ஒரே Click -கில் எந்தவொரு சேவைக்கும் "Terminal for Google" மூலம் சுலபமாகவே சென்று விடலாம்.

Monday, 20 February 2012

நினைவக (RAM) பயன்பாட்டை கவனித்து, நிர்வகிக்க:

முந்தையப் பதிவான  "நினைவகம்: RAM and ROM"
(http://pnonazim.blogspot.com/2012/02/ram-and-rom.html
என்பதில்  குறிப்பிட்டபடி,
அதிக இடங்களை ஆக்கிரமிக்கக்கூடிய Program -களை  Computer -ரில் இயக்கநிலையில் எப்பொழுதும் வைத்திருப்பதால், (Random Access) Memory என்கிற RAM குறைந்துகொண்டே போய், ஒரு கட்டத்தில் Computer -ரின் வேகமும் குறையத்தொடங்கும். இதனால் அடுத்தடுத்து இயக்க இருக்கின்ற  Files and Program -களுக்கு Memory -இல் தக்கவைக்க போதுமான இடமில்லாமல் போவதால் Computer தன் இயக்கத்தில்  திணறவும் ஆரம்பிக்கும்.
ஆக, Memory - அதாவது RAM - எந்த அளவு பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வதால், அதற்கு ஏற்றார்போல் அதிமுக்கியமில்லாத (இயக்க நிலை) Program மற்றும்  File போன்றவைகளை  மூடுவதினால் RAM -க்கு சற்று  கூடுதலாக இடம் கிடைப்பதோடு, Computer வேகமும்  சற்றுகூட வாய்ப்பிருக்கிறது. ஆக, RAM- எந்த அளவு பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள இணையத்தில் பல Software Program -கள்  இலவசமாக இருக்கின்றன. 

அந்த வகையில் சில: 
  • Performance Monitor

இதனுடைய சமீபத்திய Version 4.0.,  ஆனது   CPU, Memory, Disk and Network போன்றவைகளை கண்காணித்து அவைகளின் பயன்பாடுகளை System Tray -யில் காண்பிப்பதோடு, உபயோகத்தில் இருந்துவருகின்ற Network -க்கான Graph -ஐயும் காட்டுகிறது. பல வசதிகளை உள்ளடக்கிய இது,  இலவசமும் கூட.

இதனுடைய Size: Win32 Setup (1.5 Mb) ; Zipped Package (300 Kb) 

இதனை இத்தளத்திலிருந்து பெறலாம்:

  • SysTrayMeter:
மிகச்சிறிய (15.01 KB) அளவே உள்ள  application -ஆன இது, இலவசமும் கூட.  Computer -ரின் (System) Tray -இல் தன்னை (ஒரு Icon -ஆக) இணைத்துக்கொண்டு CPU & RAM - இவைகளின் பயன்பாடுகளை Colorful -ஆக வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும்.
இதனால், CPU & RAM பயன்பாடுகளை எளிதாக அறியலாம்.
 
இதனை கீழ்க்கண்ட தளத்திலிருந்து பெறலாம்.

 
சற்று கூடுதல் திறன் கொண்டதும், பல வசதிகளை உள்ளடக்கியதுமான இது, Memory (RAM) -யின் வேகத்தை திறம்பட நிர்வகிக்கும் தன்மை கொண்டது. இலவசமும் கூட.
Version: 1.52, Size: 606 KB (Zip format)

இதனை இத்தளத்திலிருந்து பெறலாம்:


  • MemInfo:  Computer (System) Tray -யில் அமர்ந்தவண்ணம், Memory (RAM or Page File) பயன்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்ற இதுவும் இலவசமானதே. 
Memory யின் பயன்பாடு 65% -க்கு உள்ளாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், 65% -க்கு மேல் இருந்தால் மஞ்சள் வண்ணத்திலும், 95% -ஐ அடைந்து விட்டால் சிவப்பு வண்ணத்திலும் வெளிப்படுத்துவதோடு, Memory நெருக்கடியான நிலையை அடையப்போகின்றது என்கிற பட்சத்தில் உடனே எச்சரிக்கையினையும் தரவல்லது.  De-fragmenter உடன், இதன் Version 3.1 (Size: 489.24KB), இணைந்து வருவதால் Computer -ரின் வேகத்தை அதிகப்படுத்தவும் சாத்தியமாகிறது.

இதனை இத்தளத்திலிருந்து பெறலாம்:

http://download.cnet.com/MemInfo/3000-2248_4-67969.html

Friday, 17 February 2012

நினைவகம்: RAM and ROM


Computer -ஐ கையாளுவதற்கு அதனுடைய தொழில்நுட்பம்  பற்றி தெரிந்துதான் ஆகவேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும், அதனுடைய அடிப்படை குணாதிசயங்களை தெரிந்துக்கொள்வது பயன் அளிக்கும் என்பதோடு, அதை இயக்கவும் எளிதாக இருக்கும். 

தனக்கு இடப்படும் தகவல்/கட்டளைகளை 0 அல்லது 1 என்னும் இரு இலக்கங்களின் binary digits  (சுருக்கமாக, "bit"/"b") என்கிற கூட்டு  அமைப்பில்தான், Computer, அதனுடைய Memory (நினைவகத்தி) -ல் எடுத்துக் கொள்கிறது.   இந்த binary digits  (8 -தடவை) களால் எழுதப்படும் கூட்டே ஒரு byte (= 8 bits) என்பதாகும். ஆக, இதன் பெருக்கமானது  kilo byte (either 1000 or 210 = 1024 bits), mega byte (either 8000000 or 8×220 = 8388608bits) etc., என்று விரிந்து போய்கொண்டே இருக்கும்.    

ஆக, Computer -ஐ  பொறுத்தவரை அதனுடைய Memory (நினைவகம்) மிகவும் அவசியமான ஒன்று!  இந்த Memory -யை:
RAM (Random Access Memory) மற்றும்
ROM (Read Only Memory) என  இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

RAM (Random Access Memory): Computer மின்சக்தியைப் பெற்ற பின்னரே RAM (Random Access Memory) -என்னும்  இந்த நினைவகம்  தன்வேலையை தொடங்குகிறது. நம்மால் உபயோகப்படுத்தப்படும் பல Program -கள் இதனுடைய Memory -இல்தான் தற்காலிகமாக எழுதப்பட்டு, அதாவது Computer -ஐ திறந்ததிலிருந்து மூடுகின்றவரை Computer இயங்க தேவைப்படுகின்ற  அத்தியாவசிய Program -களும், நமது தேவைகளுக்காக (Word, Excel, Presentation போன்ற) பல  File -களை திறப்பதால் அவைகள் இயங்குவதற்கான Program -களும், இயக்கநிலையில் இருந்துக்கொண்டே இருக்கும். அப்படியான File -கள் மற்றும் (அதனுடன் சம்மந்தப்பட்ட இயக்கநிலை) Program -களையும் தன்னுள் வாங்கி அவற்றை செவ்வனே பிரித்துக்கொடுக்கும் பணியைத்தான் இந்த  RAM செய்துவருகிறது.

                    








மேலும், RAM -இன் அளவு ஒரு வரையறைக்குள் உட்படுத்தப்பட்டு இருப்பதால், ஒன்று அதற்கு மேற்பட்ட அல்லது குறிப்பிட்ட அளவிலான  Program -களை மட்டும் இதனால் உள்வாங்கி செயலாற்ற இயலும். ஒரு Program -ஐ நிறுத்தி, முழுவதும் மூடும்போது அந்த Program, (Random Access) Memory -இல் இருந்து நீக்கப்படுவதோடு, அதன் இடத்தில் வேறு Program வைக்கப்பட்டு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

Windows மற்றும் சில Operating System -களில் Program -களை மூடிய பிறகும், சில சமயங்களில், அந்த Memory -யின் இடத்தை அந்த Program -க்காக அப்படியே வைத்திருக்கும். இருப்பினும் மின்சாரத்தின் துணைகொண்டு RAM இயங்குவதால், மின்சக்தியை இழக்கும்போது அனைத்து Program -களும் RAM -லிருந்து அழிக்கப்பட்டு விடும். 

அதிக இடங்களை ஆக்கிரமிக்கக்கூடிய Program -களை எப்பொழுதும் Computer -ரில் இயக்கநிலையில் வைத்திருந்தால், (Random Access) Memory ஆனது குறைந்துகொண்டே போகும்; இதனால் Computer -ரின் வேகமும் குறையத்தொடங்கி, அடுத்தடுத்து இயக்க இருக்கின்ற  Files and Program -களுக்கு Memory -இல் தக்கவைக்க இடமில்லாமல் போவதால் Computer திணறத்தொடங்கும். அல்லது செயல் இழந்துப்போய் (Cross) அப்படியே நிற்கும்.  சற்று கூடுதல் அளவுள்ள RAM -ஐ computer -ரில் இணைப்பதின் மூலம், இதனை, சரி செய்யலாம் என்பதோடு அதிக அளவுள்ள Program -களையும் இதன் மூலம் தக்கவைத்து சீராக இயக்கவும் முடியும்.

ஆக, Computer -ரின் Memory (RAM) அதிக அளவில் இருந்தால்தான் நிறைய எண்ணிக்கையிலான Program -களை இயக்க முடியும். தற்போதைய காலகட்டத்தில்  1 GB, 2 GB அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளுடன் உள்ள RAM தான் Computer -ஐ  சீராக இயங்க வைக்கும் சிறந்த தேர்வாக உள்ளது.

ROM - (Read Only Memory):  Computer -ரின்   (Mother Board -டில் உள்ள) Chip -களில் ஏற்றப்பட்டு இருக்கும் கட்டளைகள் அடங்கிய Program -களின் தொகுப்பே ROM. மாற்றங்கள் செய்யக்கூடாத தொகுப்புகளை உள்ளடக்கிய Memory இது!
       
Computer இயக்கத்திற்கு தேவைப்படும் அடிப்படை Program -களை இந்த Memory தன்னுள் வைத்திருப்பதால், இதனை Computer -ரின் உயிர்நாடி என்றுகூட சொல்லலாம்! அதோடு, இதனுடைய Program -களை மாற்றம் செய்யவோ அல்லது வேறு புதிய Program -களை இணைக்கவோ கூடாது.

மேலும், Computer செயல்பாட்டில் இருக்கிறதோ இல்லையோ, இந்த ROM, தன்னில் உள்ள Program -களுடன், இயங்குவதற்காக எப்பொழுதும் தயார் நிலையில் இருந்துக்கொண்டே இருக்கும்.

Monday, 6 February 2012

URL shortcuts to access web pages

Some URL (Uniform Resource Locator) shortcuts has indicated below to access the web pages automatically:
 
For Windows: 
Just type any string of characters in the address bar, then press Ctrl-Enter.
Windows will automatically add both "www" and ".com" (front and end of the string) and then search the page on the Internet.
 

For example, type the string - youtube - in the address bar then press  Ctrl-Enter.
Windows will take to the  web site at  www.youtube.com

Following table will guide to other URL such as .org and .net to enable on different OS, too. 
Try it .................!!!!!!

URL Shortcuts For Windows For Other OS
Adds www.+.com Ctrl+ Enter
or
Ctrl+ Shift+ Enter
or
Shift + Enter
Ctrl+ Enter(Firefox)
or
Control+ Enter(Chrome)
Adds www.+.org - Shift+Control+ Enter(Firefox)
Adds www.+.net - Shift + Enter (Firefox)


சில நிறுவனங்களின் பெயரும் அதன் வரலாறும்

Computer and Info Technology -களில் பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வருவது பற்றி நாமெல்லோரும் அறிவோம். அப்படி பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வந்தாலும்,  விரல் விட்டு எண்ணக்கூடிய  சில ஸ்தாபனங்களின் பெயர்களை, எப்பொழுதும், நாம் நினைவில் வைத்து இருப்பதோடு, அந்த பெயர்களையும் சதா  சொல்லியப்படி இருப்பதை எவராலும் மறுக்கவியலாது. 

அந்த பெயர்களை, இந்த ஸ்தாபனங்கள், எப்படி பெற்றெடுத்தன? அவற்றின் வரலாறு என்ன? என்று, எப்போதேனும்,  யோசித்து இருக்கிறோமா? சரி! சில நிமிடங்களை இப்போதாவது செலவு செய்து எப்படி பெற்றென என்றுதான் பார்ப்போமே!! 

1.  Adobe.com:  ஒரு நதியின் பெயரே Adobe என்பதாகும். இந்நிறுவனத்தை 1982 December -ரில் தொடங்கிய, இருவரில் (John Warnock and Charles Geschke) ஒருவரான John Warnock அமெரிக்காவின் California மாகாணத்தில் உள்ள  Los Altos என்ற பகுதியில் வசிக்கிறார். இவருடைய வீட்டிற்குப் பின்புறம் தான் இந்த Adobe Creek என்னும் நதி ஓடிக்கொண்டு இருக்கிறது.
 
 










இந்நிறுவன logo -வை வடிவமைத்தவர்,  John Warnock  -ன் மனைவி  Marva Warnock (a graphic designer) ஆவார். இந்நிறுவனத்தின் President and Chief Operating Officer ஆக Shantanu Narayen  என்னும் Hyderabad (India) நகரை சேர்ந்தவர், 2005 January -இல் இருந்து பணிபுரிந்து வருகிறார். மேலும், major development operation -களுக்காக உலகின் பல பகுதிகளில் இந்நிறுவனம் தனது அலுவலக கிளைகளை (Branch Offices) திறந்திருந்தாலும், இந்தியாவில்  Noida, மற்றும் Bengaluru  -வில் இதற்கான கிளைகள்  இருக்கின்றன.

2. Apple.com:   1970 -களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல்  Slogan -  "Byte into an Apple"  என்பதுதான். இதன் பிறகு 1997 -2002 கால கட்டங்களில் வியாபார நோக்கில் இதன் slogan  "Think Different" என்று மாற்றி அமைக்கப் பட்டாலும், இதன் குறிப்பிட்ட சில கருவிகளுக்கு "iThink" -என்பதிலிருந்து  ..... 'iMac', 'iPhone', 'iPod' போன்ற வித்தியாசமான பெயர்களையும் உபயோகித்து வருகிறது.
 
Apple Company Headquarters
 








இந்நிறுவனத்தை ஸ்தாபித்தவர்களில் முதன்மையாளராக கருதப்படும் Steven Paul Jobs, சுருக்கமாக Steve Jobs ஆரம்பகாலங்களில், ஆப்பிள் பண்ணையில் வேலை செய்து வந்திருக்கிறார். ஆரம்பிக்க போகும், தனது, புதிய Computer நிறுவனத்துக்கு பெயர் ஒன்றை அவருடைய  நண்பர்கள் பரிசீலித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, ஒருவேளை அவர்களால் பரிசீலிக்க முடியவில்லை என்னும் பட்சத்தில் கம்பெனிக்கு Apple Computers என்றே  பெயர் வைத்து விடப்போவதாக  வேடிக்கையாகவும் சொல்லி உள்ளார். நண்பர்களாலும்  எந்தவொரு நல்ல பெயரையும் கொடுக்க முடியாத நிலையில் இந்நிறுவனத்துக்கு Apple Computers என்பதே இறுதி பெயராகி, சரித்திரத்திலும் நிலை பெற்றுவிட்டது.

Steve Jobs -இன் பெற்றோர்கள் Joanne Carole Schieble மற்றும்  Abdul Fattah Jandali ஆவார்கள். இவரது தந்தை சிரியா (Syria) நாட்டில் பிறந்த  ஒரு முஸ்லிம்.  இவரது  தாயும், தந்தையும்  university மாணவர்களாக இருந்தபோதே காதலில் வயப்பட்டதினால், திருமண பந்தம் இல்லாமலேயே,  Steve Jobs பிறந்திருக்கிறார்.  Paul Reinhold Jobs  and Clara Jobs என்கிற தம்பதியர் இவரை, குழந்தை பருவத்திலேயே, தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள். இத்தம்பதியர் தாம், தனது பெற்றோர்கள் என்று Steve Jobs  பெருமையுடன் கூறியும் உள்ளார்.

2003 -இல், Steve Jobs,  pancreatic cancer  -ரினால் பாதிக்கப்பட்டார். 2009 -இல்  liver transplant செய்தும் பலனில்லாமல்,  5 October 2011 -அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 56.

    
3. Google.com: மிகப்பெரிய Search Engine -ஐ தன்னகத்தே கொண்டுள்ள இந்த நிறுவனத்தை Stanford University  -யில் Ph.D  செய்துவந்த  Larry Page and Sergey Brin   என்ற இரு  மாணவர்கள்  நிறுவிய போது, இதில்  தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 இல் தொடங்கி, அதன்பின் 100 பூஜ்யங்கள்  கொண்ட எண்களாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு,  (அதாவது A "GOOGOL" is the large number 10100, that is, the digit 1 followed by 100 zeros) "Googol" என்றே   முதலில் உருவாக்கம் செய்தார்கள். எழுதும்போது ஏற்பட்ட சிறு தவறால் (misspelling) Google என்று மாறிப்போனது! 
  
Google Headquarter










மேலும்,  "google"  என்ற இச்சொல்லானது காலப்போக்கில் Merriam Webster Collegiate Dictionary, Oxford English Dictionary  போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆங்கில அகராதிகளில் ("to use the Google search engine to obtain information on the Internet" -என்கிற அளவுக்கு) இடம் பெற்றதோடு,  Global Language Monitor  என்னும் அமைப்பும் மற்றும்  BBC    -யும் சேர்ந்து,  2009 -இன் பிற்பகுதியில் (முறையே   "Google" No. 7 on its Top Words of the Decade list & Google in their Portrait of the Decade (Words) series என்று) புகழாரமும் சூட்டின.

ஆக, Miss Spelling -உடன் தொடங்கப்பட்ட  "Google"  நிறுவனம், இன்று, மனித இனத்தின் சிந்தனைப்போக்கையே மாற்றி விட்டதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.


 4. hotmail.com: இணைய(த்தொடர்பின்) அடிப்படையில்தான் இயங்க வேண்டும் என்னும் நோக்கத்தில்  உருவாக்கம்  செய்யப்பட்ட  இந்த Hotmail சேவையே இணைய அடிப்படையில் இயங்கும் முதல் சேவையாக கருதப்படுகிறது.


Sabeer Bhatia (earned a master's degree in electrical engineering from Stanford University)   and Jack Smith  என்கிற இரு பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த சேவை 1996, July 4 -லிருந்து   Microsoft  நிறுவனத்தின்  Windows Live -மூலம்  செயற்பட்டு வருகிறது. 

Internet  இணைப்பை  தருகின்ற - Internet Service Provider (ISP) -களின் உதவி இன்றி, தனது சொந்தமான (hotmail) Server -ரிலிருந்து  அனுப்பப்படுகின்ற  e mail,  Web Server -ஐ அடைந்தபின், மீண்டும் அந்த mail -ஐ  எப்படி பெறுவது  என்று பலமுறை சிந்தித்து,  இந்த hotmail -ஐ, வடிவமைத்து இருக்கிறார் Sabeer Bhatia. இவர்  இந்தியாவின்,  Chandigarh  நகரில் பிறந்து, Bangalore -ல் வளர்ந்து ஆளானவர்.

இந்நிறுவனத்துக்காக பல பெயர்களை இந்த Sabeer Bhatia உண்டாக்கிப் பார்த்திருக்கிறார்; எந்தப்  பெயராக இருந்தாலும், அது mail என்றே முடிய வேண்டும் என தீர்மானமாக இருந்திருக்கிறார். காரணம், Web Page -களில் உபயோகிக்கக்கூடிய Programming மொழியை (machine language), பொதுவாக HTML (அதாவது, Hyper Text Markup Language)  என்று  சொல்கிறோம். ஆக, HOTMAIL என்பதில் HTML இருப்பதால் இதுவே சரியானத்தேர்வு  என முடிவு செய்து hotmail என்று  பெயர் வைத்திருக்கிறார். (The name "Hotmail" was chosen out of many possibilities ending in "-mail" as it included the letters HTML - the markup language used to create web pages).

தொடங்கியகாலங்களில் இது HoTMaiL என - HTML தனித்து தெரிவது  போன்று - பெரிய எழுத்துகளிலும், மற்றவை  சிறிய எழுத்துகளிலுமாக அமைக்கப்பட்டு   பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்போது எழுதும் வழக்கமான  முறையில் மாற்றப்பட்டது.


 5. Intel.com:  Gordon E. Moore  (a chemist, physicist) and Robert Noyce (a physicist) ஆகிய  இருவரால், 1968 -இல், இந்நிறுவனம் தொடங்கப் பட்டது.
Intel Headquarters










தங்களின், இந்த புதிய நிறுவனத்துக்கு  "Moore Noyce" என்று பெயரிடவே முதலில் முடிவு செய்தனர்.  ஆனால், இந்தப்பெயர்  "more noise" என்கிற அர்த்தத்தில் பார்க்கப்பட்டால் - அதிலும், ஒரு  electronics  நிறுவனத்துக்கு இம்மாதிரியான பெயர் சரியாக வராதே! என்றெல்லாம் யோசித்து, கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு NM Electronics என்னும் பெயரை வைத்திருந்தார்கள்.

பிறகு, Integrated Electronics -அல்லது, சுருக்கமாக "Intel" என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம் என்று பார்க்கும்போது, Intel என்னும் இந்தப் பெயர் Intelco என்ற hotel chain (or group of hotels) மூலம் ஏற்கெனவே பதிவு (trademarked) செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

பிறகென்ன! Intelco -விடம் பேரமும், விலையும் பேசி பெயருக்கான உரிமை (rights for the name) வாங்கப்பட்டது. ஆக, இப்படி பேரம் பேசி வாங்கப்பட்ட அந்த Intel -என்னும் பெயரே,  உலகில்  புகழ் பெற்ற ஒரு பெயராக திகழ்கிறது.


6. microsoft.com:   Bill Gates  and  Paul Allen  என்ற பால்ய வயது சிநேகிதர்களினால் 1975, April 4 -லில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டாலும், இதற்கான அடித்தளம் போடப்பட்டது என்னவோ, Popular Electronics என்ற பத்திரிகையின் 1975, January மாத இதழில் வெளிவந்த புகழ் பெற்ற ஒரு கட்டுரையினால் தான் என்றால் எவருமே நம்பத்தான் மாட்டார்கள்! ஆம், அதுதான் உண்மையும் கூட!

MITS (Micro Instrumentation and Telemetry Systems) என்ற சிறு நிறுவனத்தின் Altair 8800 என்னும் microcomputer பற்றிய கட்டுரை தான் அது. அந்த கட்டுரையை  Paul Allen   கொண்டுவந்து  Bill Gates  இடம் கொடுத்து 'நாமும்  MITS -உடன் இணைந்து, அவர்களுக்கு தேவைப்படும்  BASIC programming language  -ஐ செய்து கொடுக்கலாமே' என்று சொல்லி, இருவரும் சேர்ந்து அதை செய்து கொடுக்க, இதன் அடிப்படையில் Paul Allen  சிந்தனையில் உருவாக்கம் ஆனது தான்  Micro-Soft  நிறுவனம்.

இடையே இருந்த சிறு இடைக்கோட்டை Bill Gates, 1979 -இன் பிற்பகுதியில், நீக்கிவிட்டு  Microsoft என்று ஒரே பெயராக்கினார்.    இப்போது, இந்த பெயரே உலக மக்களின் வாழ்க்கையை  புரட்டிப்போட்ட நிறுவன பெயராகவும்  அமைந்து விட்டது.

7. yahoo.com:  Stanford University -இல் Electrical Engineering படித்துவந்த Jerry Yang and David Filo  என்கிற மாணவர்களால், 1994 January -இல்,  "David and Jerry's Guide to the World Wide Web" என்கின்ற பெயரில்தான் இந்நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால்,  1994 April மாதத்தில் "Yahoo!" என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. 

காரணம், "yahoo" என்ற இந்த பெயர், அக்காலகட்ட கல்லூரி மாணவர்களிடையே, சிலாகித்து பேசும் அளவுக்கு மிக பிரபல்யமாக இருந்ததோடு, David Filo -வின் (கல்லூரி) girlfriend ஒருத்தியும், வேடிக்கையாக David Filo -வை, இப்பெயராலேயே அடிக்கடி, கூப்பிட்டு (கிண்டலடித்து) வந்ததும் கூட பெயர் மாற்றத்திற்கான காரணங்களாக இருந்தாலும், "yahoo" என்பது, Jonathan Swift என்பவரின் Gulliver's Travels என்ற கதையில் வரும்  ஒரு அமானுஷ்ய பாத்திரத்தின் (legendary being)  பெயராகவும் இருந்தது. Gulliver's Travels கதைப்படி, "yahoo" என்ற சொல், "Yet Another Hierarchical Officious Oracle" என்னும் சொற்றொடரில் இருந்து, acronym முறையில் (அதாவது, acronym is widely used to describe any abbreviation formed from initial letters, such as NATOFBI, HTML etc.,) எடுத்தாளப்பட்டதும் கூட!

மேலும், Gulliver's Travels கதைப்படி, "yahoo" என்றப்பெயருக்கு - மிகவும்  முரட்டுத்தனமும், நாகரிகம் அற்ற, பண்பாடு ("rude, unsophisticated, uncouth") என்னவென்றே அறியாத இளைஞனை குறிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டும்  இருந்தது. நாங்களும் அப்படியான இளைஞர்கள்தான் என்று Jerry -யும் Filo -வும், தங்களுக்கு  தாங்களே, வேடிக்கையாக, குறிப்பிட்டுக் கொண்டதால் Yahoo! என்ற பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்து சூட்டிக்கொண்டனர்.