Friday, 30 March 2012

மின்சாரப் பஞ்சமும் Inverter -களும்!

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது, தற்போது முதல்வர் பதவி வகித்து வருகின்ற ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள்:

“....தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு களையப்பட்டு, மின்வெட்டு அறவே ஒழிக்கப்படும். தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும்...”

தமிழக மக்களும் இந்த வார்த்தைகளை நம்பி அ.தி.மு.க கூட்டணியை வலுவாகவே வெற்றிப்பெற செய்தார்கள். இவை எல்லாமே 'அம்மா' வின் 'வழக்கமான' பசப்பு வார்த்தைகள் என்பது பிறகுதான் நிரூபணம் ஆனது! ஆம், தமிழகத்தில் தலை விரித்தாடுகின்ற மின்சாரப்பஞ்சம் வெகுவாகவே மக்களை நிலைகுலைய செய்துள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.


இது இப்படி இருக்க, Inverter -கள் என்று அழைக்கப்படும் மின்சார சேமிப்பு கலன்களை தயாரிக்கும் நிறுவனங்களும், அவற்றை விற்கும் வியாபாரிகளும் தற்போது சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை!

மாதமொன்றுக்கு சராசரியாக 10 -லிருந்து 15 Inverter -களை மக்கள் தலையில், படாதபாடுபட்டு, கல்லா கட்டிய வியாபாரிகள், தமிழக அரசின்  தற்போதைய 'மின்சாரப்புரட்சி'யினால், நூற்றுக்கணக்கான Inverter -களை அதிரடியாக, வெகு எளிதில் கல்லா கட்டும் நிலையை அடைந்துள்ளார்கள்! என்ன விலை கொடுத்தும், மக்களே தம்தலைகளில், சுமக்க தயாராகி விட்டபோது ..... அம்மக்களுக்காக Inverter குறித்து உபயோகமான சில Tips:
       
பொதுவாக Inverter என்னும் இந்த 'மின்சார சேமிப்பு கலன்', மின்சாரத்தை உள்வாங்கி தன்னுள் தக்கவைத்து தேவைப்படும் பிறிதொரு சமயத்தில் வெளிப்படுத்தும். தானாகவே இயங்கும்  (Automated) வடிவமைப்பை கொண்ட இது, உள்வாங்கிக்கொண்டு இருக்கும் மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க, அதாவது உள்வாங்கிய மின்சாரத்தை வெளிப்படுத்த, ஆரம்பித்துவிடும். மீண்டும் மின்சாரம் வந்ததும் இதன் இயக்கமும் தானாகவே நின்று விடும். 

இதனை எப்பொழுதும் மின் இணைப்பில் வைத்து இருப்பதால், தன்னிடமுள்ள மின்சக்தியின் அளவு குறையும் பட்சத்தில் தன்னை தானே Recharge செய்துகொண்டு தன் மின்சக்தியின் அளவை சமன் படுத்தியவாறு இருக்கும். ஆக, Inverter அதனுடன் இணைக்கப்பட்ட Battery இவைகளை எப்பொழுதும் மின் இணைப்பில் வைத்து இருப்பது அவசியம். 

Square Wave, Sine Wave என இருவகை Model -களில் Inverter -கள் உள்ளன. இவைகள் 250 Watts மற்றும் 400 Watts  திறன் கொண்டவை. 250 Watts -ஐ உபயோகித்தால் ஒரு விளக்கு மற்றும் ஒரு ஃபேனை இயக்கலாம்.  400 Watts -சில் இரண்டு விளக்குகளையும், இரண்டு ஃபேன்களையும் இயக்கலாம். இந்த இரண்டு திறன் வகைகளும் தற்போது அதிக புழக்கத்தில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இப்போது புழக்கத்தில் இருந்து வருபவை 650 Watts மற்றும் 850 Watts திறன் கொண்ட Inverter -கள். 650 Watts மூலம் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் மற்றும் ஒரு டி.வி. யை இயக்கலாம். 850 Watts திறன் கொண்டதை உபயோகிப்பதால் 4 விளக்குகளோடு, 3 ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸி போன்றவைகளை இயக்க முடியும். 

850 Watts திறன் கொண்ட Inverter -களே சிறுதொழில் செய்பவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயன்தரக்கூடியது. இன்றைய சூழ்நிலைக்கு இதுவே உகந்ததாக இருப்பதோடு, அதிகளவில் விற்பனை ஆகக்கூடியதும் இதுதான்!  

சில அத்தியாவசிய Tips: 
  • உபயோகிப்போரின் தேவைக்கு ஏற்ற வகையில் Inverter -களையும் அதற்கேற்ற Battery -களையும் கவனத்துடன் தேர்வு செய்வது நல்லது.
  • Battery -களை தேர்வு செய்யும்போது சற்று அதிக அளவில் மின்சக்தியை சேமித்து வைக்கக் கூடிய Battery -களாக தேர்வு செய்யவும். 
  •  நீண்ட காலமாய் Inverter தயாரித்து வருகின்ற நிறுவனங்களின் Inverter மற்றும் Battery -களை வாங்குவதோடு விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு அந்நிறுவனம் தரும் Warranty மற்றும் Service போன்ற விபரங்களையும் அறிந்துக்கொள்ளவும்.
Inverter -களில் Square Wave -வை விட, Sine Wave -களே சிறந்த தேர்வாக உள்ளது! காரணம், தேவைப்படும் மின்சக்தியை Sine Wave முழுமையாக  தருவதாகவும், இதனால் உபயோகிக்கும் மின்சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை எனவும், Square Wave -வை பொறுத்தவரை உபயோகிக்கும் மின்சாதனங்களில் ஒருவித இரைச்சல் சப்தம் ஏற்படுவதால், மின்சாதனங்கள் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.    

மேலும் Battery -யில் Flat மற்றும் Tubular  என இரு வகைகள் உள்ளன. இதில் Tubular வகை சிறந்தது; நீண்ட நாட்களுக்கு உழைக்கவும் செய்வதோடு பராமரிப்பு செலவும் குறைவு.
FLAT 
TUBULAR













Battery -யை அடிக்கடி கண்காணித்து வருவதோடு, அதனுடைய Distilled Water குறைந்து வரும் பட்சத்தில் அதனை நிரப்புவதும் அவசியம். 

தற்போது உச்சத்தில் இருந்துவருகின்ற மின்சாரப்பஞ்சம் சில மாதங்கள் சென்று சற்று குறையவோ / கூடவோ  அல்லது முழுமை பெற்று தமிழகமே தன் அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்கக்கூடிய அளவிற்கு போனாலும், விலை கொடுத்து வாங்கிவைத்துள்ள Inverter - களை தூக்கி பரண்மேல் போட்டு விடாமல், மாதம் ஓரிரு முறைகளாவது  மின்சாரத்தை நிறுத்தி அவைகளுக்கு வேலை கொடுப்பதால் Inverter -ம் அதை சார்ந்த Battery -யும் பழுதடையாமல் நீண்ட நாள் உழைக்கும்.

Inverter -கள் வாங்குவது பற்றி மேலும் அறிய: 

Monday, 26 March 2012

Google -லின் Cloud Print Beta

Cable மூலம் இணைக்கப்பட்ட Printer -களை உபயோகித்துதான்  தகவல்களை  Computer -ரிலிருந்து இதுவரை  அச்சிட்டு வந்தோம்.  Google, 25 January 2011 -லிருந்து, மற்றும் ஒரு இலவச சேவையாக "Google Cloud Print beta" என்பதை தனது பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது! 

எந்தவொரு தகவலையும், எங்கிருந்தும் அச்சிடும்படி "Google Cloud Print beta" என்னும் இச்சேவையின் மூலம் கட்டளையிடுவதால் குறிப்பிட்ட அத்தகவலானது இணையத்தின் வழியாக இணைக்கப்பட்டுள்ள Printer-ரில் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கும். கட்டளை இட்டப்பிறகு மின்சாரம் போய்விட்டாலும், மீண்டும் மின்சாரம் வரும்போது தகவல்கள் அச்சிடப்படும்!

Android OS -க்காக முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த பயன்பாடு, Google -லின், Chrome Extension (நீட்சி) ஆக பிறகு வடிவமைக்கப்பட்டது.

Cell Phone -களின் வழியாக  பார்க்கும் இணையப்பக்கங்களையும் இச்சேவையை உபயோகித்து அச்சிட்டுக்கொள்ளும்  வழிவகைகளும்  மேம்படுத்தப்பட்டு  இருப்பது கூடுதல் வசதி!

இச்சேவையின் மூலம் Doc / PDF / Txt / JPG / JPEG files, Gmail email, attachment or Google Docs போன்றவைகளை அச்சிட முடியும். 
 

 Printer -ஐ, Google Cloud Print -இல் எவ்வாறு இணைப்பது?

1. Chrome Browser மூலம் Google கணக்கில் நுழைந்து கீழுள்ள Link மூலம் இணைக்கப்படவேண்டிய Printer -ஐ தேர்வு செய்து இணைத்துக்கொள்ள வேண்டும். 
 http://www.google.com/landing/cloudprint/win-enable.html                                  




இச்சேவையின் மூலம் அநேக Printer -களை இணைத்து செயல் படுத்தலாம்.

2.  கீழுள்ள Link மூலம் Google Cloud Print -க்கான Chrome Extension (நீட்சி) -ஐ Install செய்யவும்.
http://goo.gl/LVxSA






3.  Chrome Browser - ரின் வலது மேல் மூலையில் காணப்படும் Wrench Icon -ஐ Click செய்ய,  கிடைக்கும் Window -விலிருந்து .......
Options => Under the Hood => Google Cloud Print
என்பதன் மூலம்  இணைக்கப்பட்டுள்ள Printer -களை, தேவைக்கு தக்கவகையில், நிர்வகிக்கவும் செய்யலாம்.

Friday, 23 March 2012

Toilet விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள்?!

Toilet - இங்கே, சிலர் செய்யும் விஷம(அழிச்சாட்டிய)ங்களின் தாக்கமே இந்த பதிவு! இந்த பதிவை, வெளியிடலாமா / வேண்டாமா!... என்றுதான்,  முதலில், தோன்றியது. காரணம், இங்கு பகிர்ந்திருக்கும் விஷயங்களும், படங்களும் பலருக்கு அருவெறுப்பையும், பயங்கரத்தையும் உண்டாக்கலாம். இருப்பினும், எல்லோருக்குமே அத்தியாவசிய அறிவுரையாகவும், அதோடு, Toilet -டில் விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள் புரியும் ஆட்களுக்கு எச்சரிக்கையாகவும் அமையவேண்டும் என்கிற நோக்கத்தில், பதிவிட்டே ஆக வேண்டும் என்று  முடிவு எடுத்ததின் விளைவே இப்பதிவு.


 
சிறுவயதில் Asian / Bombay Toilet Sink என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. அதில் வயதானவர்கள், குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள், குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'Sitting Type Toilet' அதாவது, 'Western Toilet Sink' பிரபலம் ஆனது.  வசதியாக, ஏதோ, வரவேற்பறை நாற்காலியில் 'ஜம்மென்று' அமர்ந்திருப்பது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இன்றி ஆசுவாசப்படுத்தி அமர்ந்திருக்கலாம். இதனால், சிரமம் என்பது ஒரு பொருட்டல்ல என்றானது.
 
இப்படியான சொகுசு Sitting Type Toilet வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல், Walkman, Daily & Weekly Magazines, Office Files, Music Key Board போதாகுறைக்கு Lap Top உட்பட டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனிமையில் அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! என்ன கொடுமை!

மேற்குறிப்பிட்ட கூத்தெல்லாம் அரங்கேறுவது - வீட்டில் இருக்கின்ற அல்லது Star Hotel Room -ல் உள்ள படுசுத்தமான Sitting Type Toilet -டில் மட்டும்தான். மற்றபடி Office, College, Railways, மற்றும் Public Toilet -களில்  உள்ள Sitting Type Toilets என்றால் அதில் உட்கார எவருக்கும் மனமே வராது! காரணம், அதை பெரும்பான்மையானோர் முறையாக உபயோகிப்பது இல்லை / உபயோகிக்க தெரியவில்லை என்று தான் கொள்ளவேண்டும்.

முக்கியமாக, (பீங்கான்) தொட்டியின் மீதுள்ள Plastic Seat Cover -ஐ, யாருமே, சுத்தமாக வைத்திருப்பது இல்லை! சிறுநீர் கழிக்க மட்டும் Toilet -டை உபயோகிப்பவர்கள், Seat Cover -ஐ, மேலே தூக்கி  நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன் பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும் பொறுமையோ அல்லது பழக்கமோ எவருக்கும் இருப்பதில்லை. நின்றவாறே... கழித்துவிட்டு... அந்த Plastic Seat Cover -ஐ, Nasty பண்ணிவிடுவதில் பலருக்கு என்னவோ ஒரு ஆனந்தம்!

சரி.... இதை, 'அடக்கி வைக்க முடியாத அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே! சற்று தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரலாமே? அடுத்து வருபவர் எப்படி இதில் அமர்வார்?" என்கிற லஜ்ஜை/ பொதுநலம்/பொறுப்புணர்வு என்கிற எதுவுமே கிஞ்சிற்றும் இல்லாமல் அப்படியே வெளியில் வந்து விடுவார். இதுபோன்ற தான்தோன்றி பேர்வழிகள் இனியாவது திருந்த வேண்டும்!

அடுத்து வருபவருக்கு, அந்த Plastic Seat Cover மேல் சிதறிக்கிடக்கும் மஞ்சள் கலர் நீரை பார்த்தவுடன், அதில் உட்காரத்தான் மனம் வருமா..? இல்லை, கழுவி விட்டு உட்காரலாம் என்கிற எண்ணம்தான் வருமா?  'எவனோ செய்த அசிங்கத்தை  தான் எதற்கு கழுவ வேண்டும்' என்கிற எண்ணம் தானே மேலோங்கும்!



சுத்தத்தை பேணக்கூடியவர்கள் (தவிர்க்க முடியாத சமயங்களில்) Bus Stand / கடை வீதி போன்ற இடங்களில் உள்ள Public Toilets -களை உபயோகிப்பதாக இருந்தால், இரண்டொரு ரூபாய்களை செலவு செய்து கடைகளில் இருந்து பத்திரிக்கைகளை வாங்கிகொண்டு Toilet -இன் உள்ளே போவது உத்தமம்! பீங்கான் தொட்டியின் (Seating Cover உள்ளதோ/இல்லையோ) மேற்புற வளைவின் மீது தண்ணீர் ஊற்றி,  கையோடு வைத்திருக்கும் பத்திரிக்கையிலிருந்து சற்று கிழித்து மேற்புற வளைவை துடைத்துவிட்டு, அப்பத்திரிக்கையை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பரத்தி வைத்தப்பிறகு, அமர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றலாம். 

இன்னும் சிலர் எதற்குமே கவலைப்படாமல் செருப்பு அல்லது ஷூ காலுடன் அந்த பீங்கான் தொட்டியின் வளைவின் மீது ஏறி (கீழுள்ள வலதுபுற படத்தில் உள்ளது போன்று) அமர்ந்து, அந்த Sitting Type Toilet -டை அந்தக்கால Bombay Toilet  போல உபயோகப்படுத்துவர்! 
.

மேலே குறிப்பிட்ட 'அவரை' தொடர்ந்து, மேலும், உள்ளே செல்வோர், அவ்வளைவின் மேல்  செருப்பு / ஷூ இவைகளின் அச்சுடன் சேர்ந்த சகதி / மண் போன்ற கன்றாவிகளை கண்டு, முகம் சுளித்து .... இவரும் முன்னவரை போலவே ...... செய்ய ... இனி வரும் எல்லோருமே ...... அதைப்போலவே?! ..(அஹ்! என்ன ஒரு ஒற்றுமை!!) இப்படிப்பட்ட (ஒற்றுமை என்னும்) அறிவீனத்தினால் ஏற்படப்போகும் / காத்திருக்கும் ஆபத்தை யாருமே அறியாமல் இருப்பதுதான் வேதனை!

ஆம்! இவ்வகை பீங்கான் தொட்டிகள் மேற்புறம் அகன்றும் அடியில் குறுகலாகவும்  வடிவமைப்பட்டுள்ளது. கால்களை தரையில் ஊன்றி இத்தொட்டியின் மேல், முறையாக, அமர்வதால் உடலின் எடையானது (பீங்கான்) தொட்டியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை; மாறாக, உடல் எடையானது கால்கள் மூலமாக பரவி (பூமிக்கு) சென்று விடுகிறது.

ஆனால், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், பீங்கான் தொட்டியின் வளைவின் மேல் முறையற்று ஏறி, 'குத்த வச்சி' அமரும்போது உடல் எடையானது  (பீங்கான்) தொட்டியின் மீது குவிந்து  கூடுகின்ற அதே சமயம், 'குத்த வச்ச' இரு கால்களின் மூலம் ஏற்படும் விசையானது, கீழ்நோக்கி வெளிப்பக்கமாக, உந்தித்தள்ளுவதால், என்னதான் ISI பெற்ற முதல் தரம் வாய்ந்த Branded  Sitting Type Toilet -ஆக இருந்தாலும், நாளடைவில் பலம் குன்றிப்போய்விட வாய்ப்புள்ளது. அதோடு, தொட்டியை சுத்தப்படுத்தும் Brush போன்ற கருவிகளால், எங்கேனும் இடிபட்டு, கண்களுக்கு தெரியாத சிறு விரிசல் போன்றவை ஏற்பட்டும் இருக்கலாம். இப்படி, முறையற்று அமர்வதால் அந்த Sitting Type Toilet எந்நேரத்திலும் இருதுண்டாகவோ அல்லது பல துண்டு, துகள்களாகவோ ... கீழுள்ள படத்தில் உள்ளவாறு உடையலாம்..!


அப்படி உடைவதால் அந்த Sitting Type Toilet -இல் 'குத்த வச்சி' அமர்ந்தவரின் கதி எப்படி இருக்கும்? எசகுபிசகாக உடையும் அந்த Toilet பீங்கானின் கூரான பகுதிகளோ அல்லது அதன் சில்லுகளோ, கால்களை பரப்பி விழுகின்ற அவர் சுதாரிப்பதற்குள், எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டு சொல்லத்தான் இயலுமா? எவராலும் எண்ணிப்பார்க்கவே முடியாத பயங்கரத்தை அல்லவா அவர் சந்தித்திருப்பார்!

அப்படி, Sitting Type Toilet -ஐ முறையற்ற வகையில் உபயோகித்த ஒருவருக்கு நடந்ததை  கீழுள்ள ஃபோட்டோவில் பாருங்கள்..! காண சகிக்கலை..!



Source: e mail வழியாக நண்பர் அனுப்பிய இச்செய்தியை சற்று மாற்றங்கள் செய்து   பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  (Thanks நண்பா!!)

Wednesday, 21 March 2012

DOUBLE - களின், 'ரையான் சிக்கன் சென்ட்டர்'


புதிதாக திறக்கப்பட்டுள்ள "ரைய்யான் சிக்கன் செண்டர்"

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பெரிய தெரு முனையில் இரட்டை சகோதரர்களான ஃபக்ருதீன் மற்றும் நாசர் ஆகியோர்களால் ”ரைய்யான் சிக்கன் செண்டர்” திறக்கப்பட்டுள்ளது.


அவர்களின் வியாபாரத்தில் அல்லாஹ் பரகத் செய்வனாக...!

20.03.2012
1 comments:
இந்த (DOUBLE) சகோதரர்களின், 'ரையான் சிக்கன் சென்ட்டர்' நல்ல முறையில் நடந்து, அவர்களின் வாழ்வில் வளம் வர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக!

--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
My BLOG: http://pnonazim.blogspot.com/