Thursday, 4 November 2010

பாபர் மஸ்ஜிதை மீட்க என்ன வழி?

Source: http://goo.gl/SZjoI



பாபர் மஸ்ஜிதை மீட்க என்ன வழி? Aloor Shanavas


1949 டிசம்பர் 22 ஆம் நாள் நள்ளிரவில், பாபர் மஸ்ஜிதின் உள்ளே ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த ராமருக்கு, 60 ஆண்டுகளுக்குப் பின் 'பிறப்புச் சான்றிதழ்' வழங்கி தீர்பளித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம்.

இனி, காசியிலும், மதுராவிலும், நாடு முழுவதிலும் உள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் இந்துக் கடவுள்களைப் பெற்றெடுக்கின்ற பெரிய வேலையை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி விடும்.

அடுத்தடுத்து கிருஷ்ணருக்கும், அனுமாருக்கும், விநாயகருக்கும், இந்துத்துவத்தின் ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வேலையில் நீதிமன்றங்கள் மூழ்கி விடும்.

முஸ்லிம்களின் உரிமைகளைக் காவு கொடுக்கவும், இந்துத்துவ சக்திகளுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கவும் செய்கின்ற வழமையான கடமையை ஆற்றுவதற்கு அரசுகளும், அரசியல் கட்சிகளும் முனைந்து விடும்.

பாபர் மஸ்ஜித் விசயத்தில் அரசுகளும், நீதிமன்றங்களும் தொடர்ந்து முஸ்லிம்களை வஞ்சித்து வருகின்றன என்ற வரலாற்று உண்மை தெரிந்த பிறகும்,
மாற்று வழிமுறைகளைப் பற்றி சிந்திக்காமல், அரசையும், நீதிமன்றத்தையும் நம்பச் சொல்லி முஸ்லிம்களைத் தவறாக வழிநடத்தும் இயக்கத் தலைமைகள்,
'இனி உச்ச நீதி மன்றம் இருக்கிறது; நம்பிக்கை வைப்போம் அமைதி காப்போம்' என்று பழைய பல்லவியையே திரும்பப் பாடும்.

இவ்வாறு, இந்துத்துவ சக்திகளும், நீதி மன்றங்களும், ஆளும் அரசுகளும், அரசியல் கட்சிகளும், அறிவுக் கூர்மையோ, தூரநோக்குப் பார்வையோ இல்லாத முஸ்லிம் தலைமைகளும் அவரவர் வழியில், அவரவர் வேலைகளில் மூழ்கி விடுவார்கள். அப்பாவி முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் நம்முன் இருக்கும் மிகப்பெரும் கேள்வி?

பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் இந்திய முஸ்லிம்கள் முழுக்க முழுக்க தோல்வி அடைந்திருக்கிறோம் என்பது தான் நிதர்சன உண்மை.
''நாம் ஏமாற்றப் பட்டிருக்கின்றோம்; வஞ்சிக்கப் பட்டிருக்கின்றோம்; நம்பவைத்து கழுத்தறுக்கப் பட்டிருக்கின்றோம்'' என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதை விட, நமது தோல்வியை ஒப்புக் கொள்வது தான் நமது மீட்சிக்கான ஒரே வழி.

'இந்துத்துவ சக்திகள் வெற்றியடைந்து விட்டார்களே' என்று புலம்புவதை விட்டு விட்டு, நாம் ஏன் தோல்வியடைந்தோம் என்ற சுய பரிசோதனையில் முஸ்லிம்கள் இனி ஈடுபட வேண்டும்.

பாபர் மஸ்ஜிதை ராமஜென்ம பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு, பரப்புரை செய்து, வியூகம் அமைத்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகால உழைப்புக்குப் பின் இன்றைக்கு இந்துத்துவ சக்திகள் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களது அறுவடைகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிற நாம் எப்போதாவது அவர்களது திட்டமிடுதலையும் உழைப்பையும் கொஞ்சமாவது புரட்டிப் பார்த்திருக்கிறோமா?

பாபர் மஸ்ஜிதை அபகரிக்க அவர்கள் வகுத்த ஆயிரக்கணக்கான வியூகங்களில் ஒன்றையாவது பாபர் மஸ்ஜிதை மீட்க நாம் வகுத்தோமா? நமது பலவீனங்களை மறைத்து விட்டு, எதிரிகள் பலம் பெறுவதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் எப்படி நமக்கு மீட்சி வரும்?
அத்தகைய பலத்தை நாம் அடைவதற்காக வேறு என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? நம்மிடம் ஒரு புண்ணாக்கும் கிடையாது என்பது நமக்குத் தெரிகிறதோ இல்லையோ இந்துத்துவ சக்திகளுக்கு அது மிக நன்றாகவே தெரியும்.

''நேற்றைய வரலாற்றைப் படிக்காமல், நாளைய வரலாற்றைப் படைக்க முடியாது'' என்று சொல்வார்கள். நாளைய வரலாற்றை நாம் படைக்க வேண்டுமெனில் நம்மை வீழ்த்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். முள்ளை முள்ளால் அகற்ற வேண்டும் என்பது போல ஆர்.எஸ்.எஸ்ஸின் சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் முறியடிக்க வேண்டும்.

'அரசியலை இந்து மயமாக்கு, இந்து மதத்தை ராணுவ மயமாக்கு' என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படைக் கொள்கை. இந்த இரட்டை வரிகளின் செயல் வடிவத்தைத் தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் நாம் கண்டு வருகின்றோம்.

1922 இல் சாவர்க்கர் எழுதிய 'இந்துத்துவா' என்னும் நூலைப் படித்த ஹெட்கேவார், அந்த நூலில் கூறப்பட்டிருந்த கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
நூலை எழுதிய சாவர்க்கரை சந்தித்து உரையாட வேண்டும் என்று பெரிதும் ஆவல் கொண்டார். 1925 மார்ச்சில் சாவர்க்கரும் ஹெட்கேவாரும் சந்தித்தனர்.
பின்பு ஹெட்கேவாரால் 1925 செப்டம்பரில் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப் பட்டதிலிருந்து ராமர் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்கிற அளவுக்கு அதன் ஒவ்வொரு அசைவுகளிலும் ராமர் இருந்தார். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இதிகாசப் போரில் ராமர் ராவணனை முறியடித்தார் என்று சொல்லப் படும் விஜயதசமி நாளில் தான் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப் பட்டது. இராமர் பிறந்த நாள் என்று சொல்லப்படும் ராம நவமி நாள் அன்றுதான் ஆர் எஸ் எஸ்ஸுக்கு பெயர் சூட்டப்பட்டது. வடிவத்திலும் வண்ணத்திலும் ராமருடைய கொடி என்று கருதப்படும் காவிக் கொடிதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியக் கொடியானது.


இந்தியாவை இந்து நாடாக உருமாற்ற வேண்டுமெனில் ராமரின் பெயரில் கலகத்தை தூண்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் திட்டம் வகுத்தது. தனது திட்டத்தை செயல் வடிவமாக்க ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்த முதல் ஆயுதம் கடப்பாறையல்ல. கடப்பாறைகளை விடவும் பல ஆயிரம் மடங்கு வலிமை உடைய இளைய தலைமுறையை நோக்கிச் சென்றது.20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வளைத்துப் பிடித்து அவர்களின் பிரஷ்ஷான மூளையில் ராமரை நுழைத்தது. 'பள்ளிக் கூடங்களை இந்துத்துவத் தத்துவங்களைப் பரப்புவதற்கான பட்டறைகளாக மாற்றுங்கள்' என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாம் தலைவரான கோல்வால்கர் உத்தரவிட்டார். அவரது கட்டளையை ஏற்று பள்ளிக் கூடங்களை நிறுவுவதில் தனிக் கவனம் செலுத்தியது ஆர்.எஸ்.எஸ்.

1942 இல் 'முதல் இந்துத்துவப் பள்ளிக்கூடம்' தொடங்கப்பட்டது. தற்போது 20,000 க்கும் மேற்பட்ட ஆரம்ப,நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகிறது. இந்த பள்ளிக் கூடங்களில் சுமார் இருபது லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 80,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் இந்தப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

சரசுவதி பால சிசு மந்திர், பாரதீய வித்ய நிகேதன், கீதா வித்யாலயா போன்ற பெயர்களிலும், தமிழகத்தில் தமிழ் கல்விக் கழகம், விவேகானந்தா வித்யாலயா ஆகிய பெயர்களிலும் அவை இயங்கி வருகின்றன. பள்ளிக் கூடங்களைத் தவிர நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் இயங்கும் கல்விக் கூடங்களில் நடத்தப்படும் பாடங்கள் முழுவதிலும் ராமரைப் பற்றிய செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கான பாட நூல்களில் கேள்வி-பதில் வடிவில் ராமர் கோவில் பற்றிய சிந்தனைகள் விதைக்கப் படுகின்றன.

கேள்வி: 1528 இல் எந்த முகலாய ஆக்கிரமிப்பாளரால் ராமர் கோவில் இடிக்கப்பட்டது?
பதில்: பாபர்.

கேள்வி: பாபர் மஸ்ஜித் ஏன் பள்ளிவாசல் இல்லை?
பதில்: இன்று வரை அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை.

கேள்வி: கிபி 1528 முதல் கிபி 1914 வரை ராமர் கோயிலை மீட்பதற்காக எத்தனை ராம பக்தர்கள் தங்கள் உயிரை கொடுத்துள்ளனர்?
பதில்: மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பக்தர்கள்.

இப்படி பட்டியலிட முடியாத அளவுக்கு நீளுகின்றன கேள்வி-பதில்கள்.

பாபர் மஸ்ஜித் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தரம் வீர் சர்மா, எந்தப் பள்ளிக் கூடத்தில் எந்தப் பாடத்திட்டத்தைப் படித்திருப்பார் என்று இப்போது விளங்க முடிகிறதா?

1942 லேயே பள்ளிக் கூடங்களை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி விட்டது என்னும் போது, இன்றைக்கு நீதிபதிகளாகவும், உயர் அதிகாரிகளாகவும், தொல்லியல் ஆய்வாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் இந்தியா முழுவதும் கோலோச்சி இருப்பவர்கள் எங்கே உற்பத்தியானவர்கள் என்பது தெரிகிறதா?

பாபர் மஸ்ஜித் வழக்கின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிக்கின்ற அதிகார பலமுள்ள சக்திகள் யார் என்பதும், அவர்களை உருவாக்கிய பாசறை எது என்பதும் இப்போது புரிகிறதா?

1925 இல் ராமர் கோயில் கனவோடு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், 1926 இல் அதை வென்றடைந்து விடலாம் என்று அவசரப் படவில்லை. இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்து விட வேண்டும் என்று நாம் துடிப்போமே அது போல ஆர்.எஸ்.எஸ் துடிக்கவில்லை.
நிதானத்தோடும் தொலைநோக்குத் திட்டத்தோடும் அது தன் இலக்கை நோக்கிப் பயணித்தது..

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின் நாடு முழுவதும் முஸ்லிம்களிடையே மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது.தென்னகத்தில் அதன் எதிரொலியாக பலமான இயக்கங்கள் கட்டப்பட்டன.குறிப்பாகத் தமிழகத்தில் பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டமும், முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியும் உச்சத்தை அடைந்தன. பாபர் மஸ்ஜிதை திரும்பக் கட்டக்கோரி டில்லிக்கே சென்று போராடியதன் மூலம், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய பெருமை தமிழகத்தையே சாரும். அப்படிப்பட்ட தமிழகத்தை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்..

தமிழகத்தில் பாபர் மஸ்ஜித் மீட்பு இயக்கத்தின் இன்றைய கதி என்ன?

டிசம்பர் 6 அன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் ஒரு அமைப்பும், 12 மணிக்கு மெமோரியல் ஹால் முன்பு இன்னொரு அமைப்பும், மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மற்றொரு அமைப்புமாக போராட்டம் நடத்துகின்றன.ஒரே குரலில் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டியவர்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நின்று போராட்டத்தின் வலிமையை சிதைத்து விட்டனர்.

டிசம்பர் 6 போராட்டம் என்பதே ஏதோ 'வருஷம் பாத்திஹா' சடங்கு போல ஆக்கப்பட்டு விட்டது. இத்தகைய வழிமுறைகளால் மக்களிடம் எப்படி உணர்வு தங்கும்? மக்கள் சலிப்படைவார்களா மாட்டார்களா? வழக்கம் போல இயக்கவாதிகள் மட்டுமே கூடுவதும், கடமை முடிந்தது என்று கலைந்து விடுவதும் தானே இன்று டிசம்பர் 6 இல் நடந்து வருகிறது. இதைத் தாண்டி பாபர் மஸ்ஜிதிற்காக நாம் செய்தது என்ன?

17 ஆண்டு காலமாக ஒரே மாதிரியான போராட்டத்தை மட்டுமே நடத்தி வந்த நாம், பாபர் மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு உரியது என்ற பொதுக்கருத்தை ஏற்படுத்தியிருக்கிறோமா? ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை உருவாக்கி லட்சக்கணக்கான குழந்தைகளிடமும், அவர்களின் மூலம் அவர்களது பெற்றோர்களிடமும், அந்தப் பெற்றோர்களின் மூலம் அந்தக் குடும்பத்தினரிடமும்,அதன் மூலம் அண்டை வீட்டாரிடமும், அண்டை வீட்டார் மூலம் தெரு மக்களிடமும், தெரு மக்கள் மூலம் ஊர் மக்களிடமும் இப்படி சங்கிலித் தொடராக ராமஜென்ம பூமி பற்றிய கருத்தியலைப் பரப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ் அடித்தளமிட்டது போல் நாம் என்ன தளம் போட்டோம்?

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றனவே, நமது முஸ்லிம் அமைப்புகளின் கீழ் எத்தனைப் பள்ளிக்கூடம் இயங்குகின்றன? எங்கள் அமைப்பில் இத்தனை ஆம்புலன்சுகள் இருக்கின்றன என்று பெருமையாக பட்டியல் வாசிக்கும் அமைப்புகளிடம் எத்தனை பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன? ஒரு மாவட்ட நிர்வாகத்திற்கு இரண்டு பள்ளிக்கூடம் என்ற அடிப்படையில் உருவாக்கி இருந்தால் கூட, தமிழகத்தில் இன்று பிரதானமாக செயல்படும் ஐந்து அமைப்புகளின் மூலம் குறைந்தது 250 பள்ளிக்கூடங்கள் உருவாகி இருக்க வேண்டுமே.

அப்படி உருவாக்கி இருந்தால் அதில் படிக்கும் குழந்தைகளுக்கு பாபர் மஸ்ஜித் பற்றிய வரலாற்றை பாடமாக்கி இருக்கலாமே. ஒரு பள்ளிக்கு ஐநூறு குழந்தைகள் என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையை பாபர் மஸ்ஜிதின் வரலாறு தெரிந்த தலைமுறையாக உருவாக்கி இருக்கலாமே. அந்தக் குழந்தைகள் மூலம் அவர்களின் பெற்றோருக்கும் புரிதலை ஏற்படுத்தி இருக்க முடியுமே. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை பல்கிப் பெருகி இருக்குமே.

ஒரு டிசம்பர் 6 போராட்டத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் நடக்கின்றன. சுவர் எழுத்துக்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் என ஏராளமான செலவுகள் செய்யப்படுகின்றன. பாபர் மஸ்ஜித் மீட்பில் அந்தப் போராட்டமும் ஒரு வழிமுறையே தவிர, அது மட்டுமே போதாதே..அந்தப் போராட்டத்திற்கு மட்டும் செலவிட்ட பொருளாதாரத்தையும், மனித உழைப்பையும் நாம் ஆக்கப்பூர்வமாகத் திருப்பி இருந்தால் இந்த 17 ஆண்டுகளில் அரசியல்,சமூக,கருத்தியல் தளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமே?
சரி, ஏதாவது ஒரு அமைப்பு, அடையாளத்துக்கு அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி விட்டு மற்ற அமைப்புகளாவது வேறு வகையில் சிந்தித்திருக்கலாமல்லவா?

பாபர் மஸ்ஜித் இடத்தை ராமஜென்ம பூமியாக மாற்றுவதற்கும், அதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்குவதற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் விஷ்வ ஹிந்து பரிஷத்.
வி.ஹெச்.பி தனது இலக்கை அடைவதற்காக காட்டிய வேகமும், கையாண்ட வியூகமும் சாதாரணமானதல்ல. வி.ஹெச்.பி யின் கட்டமைப்பிலும் களப்பணியிலும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் செய்திகள் இருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் இடத்தை கபளீகரம் செய்யும் தமது குறிக்கோளை அடைவதற்காக எல்லா தளத்திலும் வி.ஹெச்.பி திட்டமிட்டு வேலை செய்தது. 18 க்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கை அமைத்து செயலாற்றியது. ஆர்.எஸ்.எஸ் பள்ளிக்கூடங்களைத் திறந்து இளம் தலைமுறையினரை ராமரின் பக்கம் ஈர்த்தது போல, வி.ஹெச்.பி இந்து சமூகத்தில் அதிகார மைய்யமாக விளங்கும் சாமியார்களையும் மடங்களையும் ஈர்த்தது.

'பசு பாதுகாப்புப் பிரிவு' என்னும் தனிப்பிரிவை தொடங்கி பசுக்களைப் பராமரிக்கும் நிலையங்களைத் திறந்து இந்துச் சாமியார்களின் அபரிமிதமான நன்மதிப்பை விஹெச்பி பெற்றது. நிர்வகிக்கப்படாத ஆலயங்களில் பணி செய்வதற்கு பூசாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் 'குருமார்கள் பிரிவு' என்னும் தனிப் பிரிவைத் தொடங்கியது. ஆலயங்களில் பஜனைகளை ஏற்பாடு செய்ய 'தர்ம அனுஷ்டானப் பிரிவு' என்று மற்றொரு பிரிவைத் தொடங்கியது. இத்தகைய பிரிவுகளின் மூலம் சாமியார்களையும், பூசாரிகளையும் தன் இயக்கத்தின் கீழ் கொண்டு வந்த விஹெச்பி, கோவில்களில் தனது அதிகாரத்தை நிறுவியது. அக்கோவில்களின் மூலம் கோடிக்கணக்கான இந்து பக்தர்களிடம் ராமர் கோவிலைப் பற்றிய உணர்வை ஊட்டியது.

விஹெச்பி யின் இந்த வியூகம் நமது இயக்கங்களிடம் துளியாவது இருக்கிறதா? பாபர் மஸ்ஜித் மீட்பு என்னும் முழக்கத்தை முன்வைத்து தொடங்கப்பட்ட நமது இயக்கங்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் இடையே இங்கு எத்தகைய உறவு இருக்கிறது? பாபர் மஸ்ஜித் மீட்பைப் பற்றி பேசுகிற இயக்கங்கள் தவ்ஹீத் பேசுகிற இயக்கங்களாக இங்கு அடையாளப்பட்டுள்ளதால், பாரம்பரிய முஸ்லிம்களான சுன்னத் ஜமாத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாசல்களில் இந்த இயக்கங்களின் குரல் எடுபடுவதில்லை என்பது தானே நிதர்சன உண்மை.

தவ்ஹீத் பேசுகிற பள்ளிவாசல்களில் கூட வெளியே சொல்ல முடியாத அளவு, இவர்களுக்குள்ளேயே பகையை வளர்த்து ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருக்கும் போக்குதானே நிலவுகிறது. டி.என்.டி.ஜே பள்ளிவாசலில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றவோ, ஜாக் பள்ளிவாசலில் பிஜே உரையாற்றவோ முடியாது என்னும் போது, ஒத்தக் கருத்துடையவர்களிடமே இவ்வளவு முரண்பாடும், பகையும் இருக்கும் போது, மாற்றுக் கருத்துடைய முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் எப்படி இவர்கள் மதிப்பு மிக்கவர்களாக நுழைய முடியும்?
உலமாக்களையும், பள்ளிவாசல்களையும், ஜமாத்துகளையும் ஈர்க்காத இயக்கங்களால் எப்படி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஈர்க்க முடியும்?

இன்றைக்கு அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எத்தனை பள்ளிவாசல் ஜும்மாக்களில் பேசப்பட்டது? அதைப் பேசினாலே சமூக அமைதிக்கு பங்கம் வந்துவிடும் என்கிற அச்ச உணர்வில்தானே இன்று வரை நமது பள்ளிவாசல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன? முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய நிறுவனங்களிடமே இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லை என்னும் போது முஸ்லிம்களிடம் எப்படி விழிப்புணர்வு வரும்?

ராமர் கோவிலைக் கட்டுவதற்காக விஹெச்பி யால் தொடங்கப்பட்ட பல பிரிவுகள் தமது இலக்கை அடைய ஒன்றிணைந்து நிற்பதையும், பாபர் மஸ்ஜித் மீட்புக்காகத் தொடங்கப்பட்ட நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நிற்பதையும் தான் நம்மால் கான முடிகிறது.

விஹெச்பி கையிலெடுத்த மற்றொரு மிக முக்கியமான வியூகம், அது தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் தனது திட்டத்தைக் கொண்டு சேர்த்ததாகும். காடுகளிலும்,மலைகளிலும் வசிக்கக் கூடிய பழங்குடியின மக்களுக்கும், சேரிகளில் வசிக்கும் தலித் மக்களுக்கும் ராமர் சிலைகளை இலவசமாகக் கொடுத்து இந்து மதச் சடங்குகளைப் பரப்பியது விஹெச்பி. அம்மக்களின் குல தெய்வ வழிபாட்டு முறைகளை மறக்கடிக்கச் செய்து ராமரை கடவுளாக வணங்கும் நிலையை விஹெச்பி உருவாக்கியது.

அம்மக்கள், முஸ்லிம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ மதம் மாறி விடாமல் தடுக்கவும், மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதம் திருப்பவும் தர்ம பிரச்சாரப் பிரிவு என்னும் பிரிவைத் தொடங்கி விஹெச்பி வேலை செய்தது. இந்தியாவின் பெரும்பான்மைச் சமூகமான தலித் மக்களிடம் ராமரைக் கொண்டு சேர்த்ததன் மூலம் விஹெச்பி யின் வேலை மிக எளிதாகி விட்டது.

ஆனால் நமக்கும் தலித் மக்களுக்குமான தொடர்பு என்ன? பழங்குடியினர் வாழ்கின்ற காடுகளுக்கும் மலைகளுக்குமான நமது உறவு என்ன? எத்தனை தலித் சேரிகளில் பாபர் மஸ்ஜித் பற்றிய பொதுக் கூட்டத்தை நாம் நடத்தியிருக்கிறோம். நமது தலைவர்களில் எத்தனை பேர் காடுகளுக்கும் மலைகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு ஒவ்வொரு முஸ்லிம் ஜமாத்துகளுக்கும் திருமாவளவன் உள்ளிட்ட தலித் சமூகத் தலைவரைத் தெரியும். ஆனால் எத்தனை சேரிகளுக்கு நமது முஸ்லிம் தலைவர்களைத் தெரியும்? முஸ்லிம்களை நோக்கி ஓடோடி வருகின்ற திருமாவின் வீரியமிக்க செயல்பாடு ஏன் நம் தலைவர்களிடம் இல்லை? சேரிகளை நோக்கி திட்டத்தோடு பயணிக்கின்ற விஹெச்பி யின் வியூகம் ஏன் நம் அமைப்புகளிடம் இல்லை?

ராமர் கோவிலை மக்கள் மயப்படுத்துவதற்காக பதிப்புத்துறையிலும் பரப்புரையிலும் விஹெச்பி காட்டிய வேகம் குறிப்பிடத்தக்கது. பாபர் மஸ்ஜித் பற்றிய உண்மை செய்திகளும், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிரான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளி வருவதால் அவை வெகு மக்களிடம் பெரிய அளவில் சென்றடைவதில்லை. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விஹெச்பி பிராந்திய மொழிகள் அனைத்திலும் பல வெளியீடுகளைக் கொண்டு வந்து பரப்புரை செய்தது. ராமர் பற்றிய கதைகளையும், பாபர் மஸ்ஜித் பற்றிய அவதூறுகளையும் அச்சடித்து விநியோகித்தது. விஹெச்பி யின் வெளியீடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதுதான் இங்கே கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம். ஆனால் நாம் என்ன செய்தோம்?

இங்கே ஒரு வேதனையான விசயத்தைக் குறிப்பிட வேண்டும். பாபர் மஸ்ஜித் ராம ஜென்ம பூமியா? என்ற தலைப்பில் பேராசிரியர் இ.அருட்செல்வன் எழுதிய ஒரு புத்தகம் 1990 களிலேயே தமிழில் வெளியிடப்பட்டது. பாபர் மஸ்ஜித் பிரச்சனை பற்றிய ஆழமான ஆய்வுகளோடு, மூவாயிரம் பிரதிகளோடு 1990 இல் வெளிவந்த அந்தப் புத்தகம், இந்த 20 வருட காலத்தில் இரண்டாவது பதிப்பே வெளிவராத அளவுக்கு முடங்கிப் போனது தான் மிகப்பெரும் சோகம்.

பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தில் 17 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான இயக்கவாதிகளில் எத்தனைப் பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்கள்? 1990 களுக்குப் பிறகு பிறந்த இன்றைய 20 வயது முஸ்லிம் இளைஞனுக்கு, மறு பதிப்பே செய்யப்படாத அந்தப் புத்தகம் எப்படித் தெரியும்? இயக்கவாதிகளும், இளைஞர்களுமே படிக்கவில்லை என்றால்; அவர்களையே அது சென்றடையவில்லை எனில், பாமர முஸ்லிம்களுக்கு எப்படி பாபர் மஸ்ஜிதின் வரலாறு தெரியும்? முஸ்லிம்களுக்கே தெரியவில்லை என்றால் முஸ்லிமல்லாத மக்களுக்கு எப்படி நமது கருத்து சென்றடையும்? முஸ்லிமல்லாத மக்களை ஈர்க்காத வரை, அவர்களுக்கு நமது நியாயங்கள் புரியாத வரை நம்மால் எப்படி மஸ்ஜிதை மீட்க முடியும்?

இன்றைக்கும் கலைஞரையும் ஜெயலலிதாவையும் பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கச் செல்லும் போதெல்லாம், நம் சமுதாயத் தலைவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும், நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பையும் கொண்டு போய் கொடுக்கின்றனர். ஒரே குரானை ஒரே தலைவருக்கு எத்தனை முறை கொடுப்பார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். குரான் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவராவது அருட்செல்வன் எழுதிய அந்தப் புத்தகத்தை கருணாநிதிக்கும்,ஜெயலலிதாவுக்கும் கொடுத்திருக்கலாமல்லவா?
நாம் கொடுக்கும் குரானும் ஹதீசும், மீலாது நபிக்கும் ரம்ஜானுக்கும் அவர்கள் வாழ்த்து அறிக்கை விடவே பயன்படுகிறது.

வெகுமக்களின் சுவாசமாக விளங்குகின்ற ஊடகங்களில் நமது நிலை என்ன என்பதை ஏற்கனவே பலமுறை பேசி விட்டோம்.அத்தகைய ஊடகங்களில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பு என்ன என்பதை இப்போது சற்று அலசுவோம். தனியார் தொலைக்காட்சிகளின் பெருக்கம் இல்லாத காலத்தில், அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தொலைக்காட்சியான தூர்தர்சன் மட்டுமே காட்சி ஊடகமாக இருந்த நேரத்தில், அந்த ஒற்றை ஆயுதத்தையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது விஹெச்பி.

1990 களில் தூர்தர்சனில் ஒலிபரப்பப் பட்ட ராமாயணம் தொடர் ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் விவாதப் பொருளானது. அதிகாரத்தை இழந்து, தந்தையை இழந்து, மனைவியை இழந்து துயரத்தால் தத்தளிக்கிற ராமரை காட்சிப் பொருளாக்கி, இந்தியப் பெண்களின் செண்டிமெண்டை தூண்டி விட்டனர்.
அரசுத் தொலைக் காட்சியின் மூலம் இப்படி ராமர் கதையை பரப்பியவர்கள், தமது இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஒளிப்படங்களின் மூலம் இந்து இளைஞர்களை உசுப்பி விட்டனர்.
முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் வன்முறையாளர்கள், வாழத்தகுதியற்றவர்கள், தேசத் துரோகிகள் என்னும் விஷமக் கருத்துக்களைத் தாங்கிய ஒளிப்படங்களையும் ஓலிநாடாக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டது விஹெச்பி.

பாபர் மஸ்ஜிதை எப்படி இடிக்க வேண்டும் என்பது பற்றி காட்சி ரீதியாக வகுப்பு எடுக்கும் வகையில் படங்களை உருவாக்கி மூலை முடுக்கெல்லாம் அவற்றை போட்டுக் காட்டி வெறியூட்டினர்.
மிகப்பெரும் செய்தி நிறுவனங்களில் உயர் பொறுப்புக்களில் இருந்தவர்களை தன் வலையில் விழ வைத்ததோடு, எல்லா ஊடகங்களிலும் இந்துத்துவ சிந்தனை உடையவர்களை ஊடுருவச் செய்தது விஹெச்பி.

பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்ட போது கரசேவையில் பல வட இந்தியப் பத்திரிகையாளர்கள் பங்கேற்றதையும், அத்வானியின் ரதயாத்திரை செய்திகளை ஊடகங்கள் பிரதானப் படுத்தி வெளியிட்டதையும், வகுப்புக் கலவரங்களினால் ஏற்பட்ட முஸ்லிம்களின் இழப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதையும் வைத்துப் பார்க்கும் போது ஊடகங்களில் விஹெச்பியின் ஊடுருவல் விளங்கும்.

ராமர் கோவில் திட்டத்தை செயல் படுத்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் வி.ஹெச்.பி க்கும் மிகப்பெரும் அளவில் பொருளாதாரம் தேவைப் பட்டிருக்குமே.,அதை எங்கிருந்து எப்படித் திரட்டினார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.

இந்தியாவில் செயல்படும் அமைப்புகளில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறுபவை இந்துத்துவ அமைப்புகள் தான் என்று, பல புள்ளிவிபரச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. 1973 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் மட்டும் அமெரிக்காவில் செயல்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் 5300 கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு அனுப்பியதாக அமிர்தா பாசு என்கிற அமெரிக்க ஆய்வாளர் அம்பலப்படுத்தி உள்ளார். இந்தக் காலகட்டத்தில் தான் ராமர் கோவிலை முன்னிறுத்தி இந்தியாவில் விஹெச்பி கோரத்தாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

விஹெச்பி மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு வரும் பணம் குறித்து இந்தியாவில் சரியான தணிக்கை நடைபெறுவதில்லை. தணிக்கைத் துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதும், அமெரிக்காவில் செட்டிலானவர்கள் ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்து விட்டுச் சென்ற பார்ப்பனக் குஞ்சுகள் என்பதும் தான், இந்துத்துவ சக்திகளின் கட்டற்ற பொருளாதார பலத்திற்கு காரணமாகும்.

இந்தியாவில் முஸ்லிம்கள் உயர் அதிகாரங்களை அடையாததும், வெளிநாட்டில் கூட கூலி வேலை செய்யும் உடலுளைப்புக் காரர்களாக முஸ்லிம்கள் இருப்பதுமே நமது அமைப்புகளின் பொருளாதார பலமின்மைக்குக் காரணம். அதையும் மீறி வசூலாகின்ற கொஞ்சப் பணத்தையும் நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிரிந்து பயனற்ற வகையில் செலவழித்து விரயமாக்குவது தனிக் கதை.

சர்வதேசத் தளத்தில் இருந்து நமக்கு பொருளாதாரம் தான் திரளவில்லை..ஆதரவாவது கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீன் பிரச்சனைக்காகவும், இராக் மக்களின் விடிவுக்காகவும், ஆப்கான் சூறையாடப் படுவதை எதிர்த்தும் இங்கே நாம் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகத்தின் எந்த மூலையிலாவது பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்காக போராட்டம் நடந்ததுண்டா?

பாபர் மஸ்ஜித் பிரச்சனை என்பது வெறும் ஒரு பள்ளிவாசல் பிரச்சனை அல்; அது இந்திய முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையையும் வாழ்வுரிமையையும் கேள்விக்குள்ளாக்கிய பிரச்சனை என்கிற புரிதலை உலக நாடுகளுக்கு நாம் எடுத்துச் சென்றிருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? குறைந்த பட்சம் முஸ்லிம் நாடுகளின் கவனத்தையாவது ஈர்த்திருந்தால் இந்தியாவுக்கு ஏதாவது ஒரு வகையில் சின்ன அழுத்தமாவது ஏற்பாட்டிருக்குமே? அப்படி சர்வதேசத் தளத்திலிருந்து எந்தவொரு நெருக்கடியும் இல்லாததால் தானே அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்படி கேவலமாகத் தீர்ப்பளிக்கிறது. இந்திய அரசு சிறு உறுத்தல் கூட இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டது..

இப்படி தொடர்ச்சியாகப் பல வகைகளிலும் நமது இழப்புகளுக்கு நாமே காரணமாய் இருக்கிறோம்.நமது பலவீனங்களே எல்லா வகையிலும் இந்துத்துவ சக்திகளின் பலமாகி விட்டது.

1925 இல் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தொடங்கிய ஹெட்கேவார், தான் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு குறுகிய எண்ணத்தோடு காய் நகர்த்தவில்லை. தொலைநோக்குப் பார்வையோடு இயக்கத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தி திட்டமிட்டு செயலாற்றினார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தலைமுறையைச் சேர்ந்த வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

ஆர்.எஸ்.எஸ் ஐப் போலத் திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் நாமும் பிற மக்களிடம் வெறுப்பை வளர்க்க வேண்டியதில்லை. பிற வழிபாட்டுத் தளங்களை இடிக்க வேண்டியதில்லை. நம்முடைய திட்டமிடுதலும், உழைப்பும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், அரசியல் அதிகாரத்தை நோக்கி நாம் எழுச்சி பெறும் வகையிலும் அமைய வேண்டும்.

இனியாவது யோசிப்போமா?

[சமநிலைச் சமுதாயம் நவம்பர்-2010 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]

Monday, 25 October 2010

Tony Blair's sister-in-law converts to Islam

Tony Blair's sister-in-law Lauren Booth converts to Islam

Source: http://www.dailymail.co.uk/news/article-1323278/Tony-Blairs-sister-law-Lauren-Booth-converts-Islam-holy-experience-Iran.html#ixzz13GlYjK00


Convert: Cherie Blair's sister Lauren Booth

Convert: Cherie Blair's sister Lauren Booth

Tony Blair’s sister-in-law has converted to Islam after having a ‘holy experience’ in Iran.

Broadcaster and journalist Lauren Booth, 43 – Cherie Blair’s half-sister – said she now wears a hijab head covering whenever she leaves her home, prays five times a day and visits her local mosque ‘when I can’.

She decided to become a Muslim six weeks ago after visiting the shrine of Fatima al-Masumeh in the city of Qom.

‘It was a Tuesday evening and I sat down and felt this shot of spiritual morphine, just absolute bliss and joy,’ she told The Mail on Sunday.

When she returned to Britain, she decided to convert immediately.

‘Now I don’t eat pork and I read the Koran every day. I’m on page 60.

‘I also haven’t had a drink in 45 days, the longest period in 25 years. The strange thing is that since I decided to convert I haven’t wanted to touch alcohol, and I was someone who craved a glass of wine or two at the end of a day.’

Refusing to discount the possibility that she might wear a burka, she said: ‘Who knows where my spiritual journey will take me?’

Before her awakening in Iran, she had been ‘sympathetic’ to Islam and has spent considerable time working in Palestine. ‘I was always impressed with the strength and comfort it gave,’ she said of the religion.

Miss Booth, who works for Press TV, the English-language Iranian news channel, has been a vocal opponent of the war in Iraq.

In August 2008 she travelled to Gaza by ship from Cyprus, along with 46 other activists, to highlight Israel’s blockade of the territory. She was subsequently refused entry into both Israel and Egypt.

In 2006 she was a contestant on the ITV reality show I’m A Celebrity .  .  . Get Me Out Of Here!, donating her fee to the Palestinian relief charity Interpal.

She said she hoped her conversion would help Mr Blair change his presumptions about Islam.

Monday, 18 October 2010

ஹாய் மதன்- கீழ்தர புத்தி

என்னவொரு "மட(மிருக)த்தனமான" பதிவை - ஹாய் மதன் - பகுதியில் ஆனந்த விகடன் எழுதி அசிங்கம் செய்துள்ளது. கீழே சிவப்பு எழுத்துகளில் அப்பதிவை paste செய்துள்ளேன். என்னவொரு கீழ்தர புத்தி இந்த 'கேவல பிறப்பு' மதனுக்கு!

"கொலையை ஆங்கிலத்தில் Murder , Assassination என இரண்டாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் . இரண்டுக்கும் உள்ள வேறுபாடு :
முடிவாக ( ! ) ஒரே அர்த்தம்தான் . ' மர்டர் ' என்கிற ஆங்கில வார்த்தை பண்டைய சமஸ்கிருத ' மர் ' என்கிற வார்த்தையில் இருந்து வந்தது . ( இந்தியில்கூட ' மர்கயா ' என்றால் இறந்துபோய் விட்டதாக அர்த்தம் ! ). Assassination என்கிற வார்த்தையை இப்போது வி. ஐ. பி -- க்களுக்குத் தான் பயன்படுத்துகிறோம்.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், புனிதப் போரில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களைக் கொல்ல அரேபியர்கள் ' கெரில்ல ' ப் படை அமைத்தனர் . அந்த வீரர்கள் கொலை செய்யக் கிளம்புவதற்கு முன்பு Hashish என்கிற ஒரு வகை கஞ்சாவை மென்று போதை ஏற்றிக்கொள்வார்கள் . ( அப்போதுதான் வெறி அதிகமாகும்!). அந்த வீரர்கள் Hashshashins என்று அழைக்கப்பட்டார்கள்
.

அது இங்கிலீஷில் பிறகு Assassin என்று ஆகிவிட்டது !"

--- ஹாய் மதன் . ஆனந்த விகடன் , 28. 04. 2010.

Source: http://santhanamk.blogspot.com/2010/10/murder-assassination.html

Tuesday, 12 October 2010

புண்ணுக்குப் புனுகு பூசுவதா?

புண்ணுக்குப் புனுகு பூசுவதா?
அலகாபாத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர்

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (8.10.2010) இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் புதிய நீதி தேவன்களின் மயக்கம் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சாரப் பிழிவு.
தொடக்கத்திலேயே இவ்வாரம் வெளிவந்த அவுட் லுக் (11.10.2010) இதழினைக் கையில் எடுத்துக்கொண்டு தமது விவாதத்தினைத் தொடங்கினார்.

First or Last? எனும் தலைப்பில் வினோத் மேத்தா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதியை எடுத்து விளக்கினார்.

ராமஜென்ம பூமியை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தலாம் என்ற நப்பாசையுடன் காய் களை நகர்த்திய சங் பரிவார்க் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு படிப்படியாகக் குறைந்தே வந்திருக்கிறது. அதன் ஆசையை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர்.

1999 இல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது அது வாங்கிய வாக்குகள் 23 சதவிகிதம்; இதன் பொருள்- 77 சதவிகித மக்கள் ராமன் கோயில் பிரச்சினையில் எதிராக இருந்தனர் என்பதே! 2009 ஆம் ஆண்டில் பி.ஜே.பி. பெற்ற வாக்குகள் வெறும் 18 விழுக்காடுதான்; இதன் பொருள்- 82 விழுக்காடு மக்கள் ராமன் ஜென்மபூமிக்கு எதிராக வாக்களித்து விட்டனர்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையி லான பிரச்சினை என்று பெரிதுபடுத்தி குளிர் காயலாம் என்று நினைத்தார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது முஸ்லிம்களுக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே உள்ள பிரச்சினை தான் என்று அவுட்லுக் எழுதியுள்ளதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.

(உண்மையைச் சொல்லப்போனால், பி.ஜே.பி.யோ, சங் பரிவார் வட்டாரமோ அனைத்து இந்துக்களுக்கும் பிரதிநிதிகள் என்று யார் சொன்னார்கள்? யார் ஏற்றுக் கொண்டனர்? கோடானு கோடி தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிவிட்டு, அவர் களுக்கும் சேர்த்து இவர்கள்தான் பிரதிநிதிகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா? இந்து என்று சொல்கிறார்களே, அதில்தான் எத்துணை எத்துணைப் பிரிவு! பாபர் மசூதிப் பிரச்சினையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையிட்டு சமரசம் செய்யச் சென்றபோது நீ சைவப் பிரிவைச் சேர்ந்த ஆசாமி; ராமர், வைணவர் பற்றிய சமாச்சாரம் - உம் வேலையைப் பாரு! என்று ராம் ஜென்மபூமி நியாஸ் தலைவர் கூறவில்லையா? இந்த நிலையில், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று பி.ஜே.பி.யோ, சங் பரிவார்களோ எப்படி மார் தட்டிக்கொண்டு முன்வர முடியும்?)

ராமனைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்பது இனி நடக்காத காரியம். நீதிபதி களுக்குத்தான் மயக்கம்; சில அரசியல் தலை வர்களுக்கோ தயக்கம். ஆனால், மக்கள் தெளி வாகத்தான் இருக்கிறார்கள் - மக்களைத் தெளிவுபடுத்த எங்களைப் போன்ற இயக்கம் இருக்கிறது.

1992 இல் பாபர் மசூதியை இடித்துக் கலவரத்தை உண்டாக்கியதுபோல இப்பொழுதும் செய்யலாம் என்று நினைத்தால், அதில் தோல்வி நிச்சயம். அப்பொழுது இருந்ததைவிட இப் பொழுது மக்கள் முதிர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றார் தமிழர் தலைவர்.
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா - சகோ தரத்துவத்துடன் வாழ்கின்றனர். அதிலும் குறிப் பாகத் தமிழ்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமா னது என்றும் சட்ட ரீதியாக எடுத்துக்காட்டினார்.

We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic என்று கூறப்பட்டுள்ளது.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானமாகும். இதில் யாரும் கை வைக்க முடியாது.

ஆனால், அலகாபாத் நீதிபதிகளின் தீர்ப்பு இதனைத் தகர்க்கும் நிலையில் உள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந் தான் என்று ஒரு நீதிபதி கூறலாமா? அதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் தீர்ப்பு அளிப்பதற்கு ஆவணங்கள் காட்டப்பட்டனவா? சட்டப்படியான முறையில் (Court of Law) செயல்படவேண்டிய நீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் (Court of Faith) மத ரீதியில் ராமன் பிறந்த இடம் என்று கூறியிருப்பது கண்டிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு எதிரான செயலேயாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞரான தமிழர் தலைவர்.

8700 பக்கங்களைக் கொண்டது மூவரின் தீர்ப்பு. தீர்ப்புகள் அதிக பக்கங்களில் இருந்தாலே அதில் குழப்பங்கள் அதிகம் என்று பொருள் - தடுமாற்றங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தையும் எடுத்துக்காட்டத் தவற வில்லை தமிழர் தலைவர். நீதிமன்றங்கள் சட்ட கோர்ட்டுகளே தவிர, நியாயக் கோர்ட்டுகள் அல்ல என்பார். இப்பொழுது அந்த நிலைக்கும் ஆபத்து வந்து நீதிமன்றம் நம்பிக்கை அடிப்படை யானதாக ஆகிவிட்டது என்று தமிழர் தலைவர் சொன்னபோது அரங்கம் மிகவும் ரசித்தது.

பாபர் மசூதி பிரச்சினையாக்கப்பட்டு சிக்க லாக்கிய பின்னணி என்ன? அதற்குக் காரணம் யார் என்பதை சர்வபல்லி டாக்டர் கோபால் (மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் மகன்) ‘‘Anatomy of a Confrontation’’ (1990) என்ற நூலை ஆதாரப்படுத்தி அதிலிருந்து பல தகவல்களை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.
1528 ஆம் ஆண்டிலேயே பிரச்சினை கிளப் பப்பட்டது (1853-இல் அயோத்தியில் முதன் முதல் வன்முறை வெடித்தது - 75 பேர் பலி!).

1949 இல் மிக மோசமான அத்துமீறல் என்பது பாபர் மசூதிக்குள் அவ்வாண்டு டிசம்பர் 22 இரவு நேரத்தில் குழந்தை ராமன் பொம்மையைக் கொண்டு போய் வைத்தது ஒரு கும்பல்.
பிரதமர் நேரு அதிர்ந்து போனார்; உடனடி யாக அந்தப் பொம்மைகளைத் தூக்கி எறியச் சொன்னார். அப்பொழுது துணைப் பிரதமராக சர்தார் பட்டேல், உ.பி. முதல் அமைச்சராக இருந்த கோவிந்த வல்லபாய் பந்த் அதற்கு ஒத்து ழைப்புக் கொடுக்கவில்லை. மாவட்ட மாஜிஸ்டி ரேட்டாக இருந்த நய்யார் என்பவர் ராமர் சிலையை எடுத்தால் பிரச்சினைகள் ஏற்படும், கலவரம் வெடிக்கும் என்று கூறினார். (ஆதாரம்: சர்வபல்லி டாக்டர் கோபால் நூல் - ஏ.ஜி. நூராணி கட்டுரை).

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தப்பும் வாய்ப்பு

அலகாபாத் தீர்ப்பின் காரணமாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிகளானவர்கள் தண்டனையி லிருந்து தப்பித்து விடக்கூடிய ஆபத்து இருக் கிறது என்பதைத் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினார்.

தாம் நடத்திய ர(த்)த யாத்திரையை அத்வானி நியாயப்படுத்திப் பேச ஆரம்பித்துவிட்டார்.
(லிபரான் ஆணையம், முன்னாள் பிரதமர் வாஜ்பேயி உள்பட 68 பேர்களை குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளது) நாடாளுமன்றத்தி லேயே பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர், சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாக ஆமாம், நாங்கள் தான் இடித்தோம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று பேசும் துணிவு ஏற்பட்டுவிட்டதே!

பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமன் பிறந்த இடம் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார் என்றால் என்றால், அதனை ஆதாரமாகக் கொண்டு, பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்த மாட்டார் களா குற்றவாளிகள்? இதற்கு இடம் அளித் துள்ளதா, இல்லையா அலகாபாத் உயர்நீதிமன் றம்? 1994 இல் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
It was an act of National shame தேசிய அவமானம் என்று சொல்லவில்லையா?

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங் களைக் கொண்ட தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டியபோது, அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் அப்படியே அதிர்ந்து போனார்கள்.

இதுபற்றி நான் மட்டுமல்ல, பிரபல வழக்கறி ஞர்கள் எல்லாம் சுட்டிக் காட்டியும் உள்ளார்கள்.

அத்துமீறி இரவோடு இரவாக இன்னொரு மத வழிபாட்டு இடத்தில் தமது கடவுள் சிலை களை வைப்பதும், அந்தக் குற்றத்தைக் கண்டு கொள்ளாமல், அப்படி வைக்கப்பட்ட சிலையை வழிபடுவதற்கு வழி செய்து கொடுப்பதும், அதற்குப் பின்னர் அந்த சிலை வைக்கப்பட்ட இடம்தான் அவர் பிறந்த இடம் என்று அடம் பிடிப்பதும் எந்த வகையில் சட்ட சம்மதமானது - நியாய வழிப்பட்டது என்பதைத் தமிழர் தலைவர் மிகவும் நேர்த்தியாக, கல்லும் உருகும் வண்ணம் எடுத்துக் கூறினார்.

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ரொமீலா தாப்பர் இந்து ஏட்டில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை முக்கியமாக எடுத்துக்காட்டினார்.

தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏ.எஸ்.ஏ) நடத்திய அகழ்வு ஆய்வுகளும், அதனுடைய முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பிற தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் இதனைப் பலமாக மறுதலித்துள்ளனர் என்று ரொமீலா தாப்பர் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டினார்.

இந்த வரலாற்றுப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ள இன்னொரு முக்கிய கருத்தையும் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.

அலகாபாத் தீர்ப்பு நீதிமன்றத்தில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது தங்களை ஒரு சமூகம் என்று கூறிக் கொள்ளும், ஒரு வணங்கப்படும் ஒரு புனிதமான அல்லது ஓரளவு புனிதமான ஒரு நபரின் பிறந்த இடம் என்று கூறி, அந்த நிலத்தின் மீது உரிமை கொண் டாடுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்து கிறது. ஒரு பொருத்தமான சொத்து காணப் பட்டால், அல்லது தேவைப்படும் ஒரு தகராறை உருவாக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய பல ஜென்ம பூமிகள் இப்பொழுது தோன்றும். வரலாற்று நினைவுச் சின்னங்களை திட்டமிட்டுத் தகர்ப்பது கண்டனம் செய்யப்படாததால், மேற்கொண்டு அத்தகையவற்றை தொடர்ந்து தகர்ப்பதை எது தடுத்து நிறுத்த முடியும்? என்று வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் கூறியது உண்மையிலும் உண்மையே!

இப்பொழுது அடுத்த கலவரத்துக்குக் கத்தியைத் தீட்ட ஆரம்பித்துவிட்டனர். சுப்பிரமணிய சாமி என்ற அரசியல் தரகர் அடுத்து எங்களது பயணம் மதுரா, காசி என்று கூறியுள்ளாரே - கிருஷ்ண ஜென்ம பூமி, விசுவநாதர் ஜென்மபூமியை மீட்போம் என்று வி.எச்.பி. தயாராகி விட்டதே! இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணத்தைத் தந்ததுதான் அலகாபாத் தீர்ப்பு என்றார் விடுதலை ஆசிரியர்.

இந்தத் தீர்ப்பின்மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட உள்ள ஒரு பெரிய ஆபத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ராமன் பெயரைச் சொல்லி முடக்கப்பட்டுள்ளது. அலகாபாத் தீர்ப்புக்குப் பின் அதன் நிலை என்னவென்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நீதிபதிகளே கடவுள்கள் தானாகத் தோன்றும் (சுயம்பு) என்று கூறும் நிலையில், சட்டத்துக்கும், ஆதாரங்களுக்கும் என்னதான் மரியாதை?
மசூதிக்குரிய இலக்கணத்தில் கட்டப்படவில்லை என்று ஒரு நீதிபதி சொல்கிறார் என்றால் என்ன பொருள்?

மெயின் வழக்கைத் தள்ளுபடி செய்தபின் நிலத்தைப் பங்கீடு செய்து கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

பிரபல எழுத்தாளர் ஏ.ஜி. நூராணி சொல்கிறார் - 17 ஆம் நூற்றாண்டுவரை எந்த இடத்திலும் ராமன் கோயில் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். அப்படியிருக்கும் பொழுது ராமர் ஜென்மபூமியில் கோயில் எங்கே இருந்து வந்து குதித்தது?
1993 இல் என்ன முடிவு எடுக்கப்பட்டது - ஏற்கெனவே எந்த நிலையில் வழிபாட்டு நிறுவனங்கள் இருந்தனவோ அதில் மாற்றம் கூடாது என்று எடுக்கப்பட்ட முடிவு என் னாயிற்று? அதைச் சரியாக மத்திய அரசு கடைபிடித்தி ருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.
இன்னொரு முக்கியமான தகவலை நினைவுபடுத்திப் பேசினார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 146 இன்படி குடியரசுத் தலைவரால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலைப்பாடுபற்றி கருத்துக் கேட்கப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன கூறினார்கள்? இது போன்ற பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளிக்கப்பட்டதே. உச்சநீதிமன்றமே மறுத்துவிட்ட ஒன்றின்மீது ஒரு உயர் நீதிமன்றம் எப்படி தீர்ப்புச் சொல்லலாம் என்று ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வினா எழுப்பினார் ஆசிரியர்.

அரசமைப்புச் சட்டம் 25 ஆவது பிரிவையும் தவறான முறையில் நீதிபதிகள் பயன்படுத்தியதையும் திராவிடர் கழகத் தலைவர் விளக்கினார். மொத்தத்தில் புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் செய்துள்ளது.
இறுதியாக தமிழர் தலைவர் கூறியது:

எந்த மதத்துக்காகவும் வக்காலத்து வாங்கி நாங்கள் பேச வரவில்லை. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள் நாங்கள். நாட்டின் நலன் கருதி ஒரு தீர்ப்பு, பிற்காலத்தில் புதிய அபாயம் ஏற்படும் வகையில் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி யோடும்தான் பேச முன்வந்தோம். உச்சநீதிமன்றம் - ஏற்பட்டுள்ள ஒரு இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அந்தக் கடமையைச் செய்யவேண்டும் என்று கூறி முடித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தொடக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், மறுநாளே திராவிடர் கழகத் தலைவர் விடுத்த அறிக்கையையும், அலகாபாத் தீர்ப்பு வெளியானதற்கு மறு நாளே காலந் தாழ்த்தாது தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையையும் எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார்.

பல துறைகளைச் சார்ந்த பெருமக்கள் ஏராளம் வந்திருந்தனர். நடிகவேள் ராதா மன்றமே நிறைந்து வழிந்தது.

------------------- நன்றி விடுதலை (09-10-2010)

Thursday, 30 September 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

பதிவேற்றியது ஆர்வலர் Wednesday, 29 September 2010 22:16 புதிய ஜனநாயகம்
2009

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.

இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுகள் " தேவைப்பட்டிருப்பதை ' எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.

பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அத்வானியின் ரத யாத்திரை; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் பஜ்ரங் தள் தலைவர் வினய்கத்தியாரின் வீட்டில் நடந்த சதி ஆலோசனை; அதில் கலந்துகொண்ட அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பங்கு; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றி விட்டு, அன்றிரவு ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் பரமஹம்ஸர் வீட்டில் நடந்த "கலந்துரையாடலில்' கலந்துகொண்டுவிட்டுச் சென்ற வாஜ்பாயின் பங்கு; பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்; அக்கிரிமனல் நடவடிக்கையைத் தடுக்காமல், அதனை ரசித்துப் பார்த்துப் பெருமிதம் கொண்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பல குட்டித் தலைவர்களின் இந்து மதவெறி வக்கிரம்; சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் இத்துணை அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் பொழுது, மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிப் பாசிசக் கும்பலும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களும் இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், லிபரானோ மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக, 16 ஆண்டுகள் கழித்துதான் 27 தொகுதிகள் கொண்ட அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். மைய அரசோ அந்த அறிக்கையை வெளியிட "நல்ல நாள்' பார்த்துக் கொண்டிருக்கிறது. கள்வனிடமே பெட்டிச் சாவியைக் கொடுத்தது போல, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து நின்ற கயவாளி காங்கிரசு கும்பலிடம் லிபரான் அறிக்கை போய்ச் சேர்ந்திருக்கிறது. இதைவிட இந்து மதவெறிக் கும்பலுக்கு வேறு பாதுகாப்பு தேவையில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் வழக்கும் 16 ஆண்டுகளாக விசாரணை வாய்தா மேல்முறையீடு என்ற இழுத்தடிப்புகளைத் தாண்ட முடியாமல் முடங்கிப் போய்க்கிடக்கிறது.

லிபரான் கமிசனில் அரசு தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அனுபம் குப்தா, "நீதிபதி லிபரான் விசாரணையின் பொழுது அத்வானிக்கு அதிகபட்ச சலுகைகள் காட்டியதாக''க் குற்றம் சுமத்தி வருவதோடு, மசூதி இடிப்பில் அத்வானியின் பங்கு குறித்து நீதிபதி லிபரானுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கமிசனில் இருந்து தான் விலகுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி வருகிறார்.

அனுபம் குப்தா அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, "நாடு சுதந்திரமடைந்த பின் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு எப்படிக் கையாண்டார்'' என்பது தொடர்பாக அத்வானியிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தக் கேள்வியினால் அத்வானியை விட லிபரான் தான் அதிகப் பதற்றமடைந்ததாகவும், அதனால் அத்வானியிடம் தன்னை மன்னிப்புக் கேட்கக் கோரி லிபரான் நிர்பந்தித்தாகவும் அனுபம் குப்தா கூறி வருகிறார்.

இதே போன்று, மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் துறை அறிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி அத்வானியை, தான் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அத்வானி ஆத்திரமடைந்ததாகவும், அதனால், அந்தக் கேள்விக்கு லிபரான் தடை விதித்துவிட்டதாகவும் அனுபம் குப்தா கூறுகிறார். "அத்வானி, ஜோஷி ஆகியோரின் கண் முன்னே மசூதி இடிப்பு நடந்தபோதும், அவர்கள் அதற்குப் பொறுப்பல்ல; நிலைமை அவர்களின் கையை மீறிப் போய் விட்டது'' என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டைத்தான் லிபரான் கொண்டிருப்பதாக அனுபம் குப்தா குற்றம்சாட்டி வருகிறார்.

லிபரான் கமிசன் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிசுகிசு செய்திகளைப் போல அல்லாமல்,"அவுட் லுக்'' என்ற ஆங்கில வாரஇதழில் அனுபம் குப்தாவின் நேர்காணலாகவே வெளிவந்திருக்கிறது. இதனால், நீதிபதி லிபரான் "நடுநிலையாக' விசாரணையை நடத்தி அறிக்கை கொடுத்திருப்பாரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இந்தசந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி லிபரான் நேர்மையாகவே விசாரணையை நடத்தியிருப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், அதனால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும்?

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த சிறீகிருஷ்ணா கமிசன்,1982இல் நடந்த மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த வேணுகோபால் கமிசன், 1969இல் குஜராத் அகமதாபாத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த ஜக்மோகன்ரெட்டி கமிசன் ஆகியவற்றுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதேநிலை லிபரான் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

லிபரான் கமிசன் அளித்துள்ள அறிக்கை ஒருபுறமிருக்கட்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத்துறை நடத்தி வரும் இரு வழக்குகளில், ஒன்றில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வீ.எச்.டால்மியா, சந்நியாசினி ரிதம்பரா ஆகிய எட்டு பேர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்குப் பூர்வாங்க ஆதாரம் இருப்பதைக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஜகதீஷ் பிரசாத் சிறீவத்ஸவா உறுதி செய்துள்ளார்.

எனினும், காலப்போக்கில் இந்து மதவெறிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், தலித் "சகோதரி' மாயாவதியின் நட்பையும் பயன்படுத்திக் கொண்டும் அந்த எட்டு பேர் மீதான சதிக் குற்றச்சாட்டை உடைத்தெறிந்து விட்டது. அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி வழக்கு நடத்துவதற்கு சட்டப்படியே வாய்ப்புகள் இருந்தும்கூட, அதை காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது அவர்கள் மீது மதக் கலவரத்தைத் தூண்டிவிடும்படி நடந்து கொண்டார்கள் என்ற உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான 23 கோப்புகளைக் காணவில்லை என உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்டு மாத இறுதிக்குள் அறிக்கை தரும்படி மையப் புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது, அலகாபாத் உயர்நீதி மன்றம். இந்தக் கோப்புகள் எப்பொழுது, எப்படி காணாமல் போயின என்பது கூட "மர்மமாக'த் தான் உள்ளது.

உ.பி.மாநில அரசின் மதக் கலவர தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி சுபாஷ் பஹ்ன் சாத், அலுவல் வேலைதொடர்பாக தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது, தில்லியில் உள்ள திலகர் பாலம் தொடர்வண்டிநிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். சுபாஷ் சாத் இறந்துபோய் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், அவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தடுமாறி விழுந்து இறந்து போனாரா என்பதும் மர்மமாகவே உள்ளது. லிபரான் கமிசன் விசாரணை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சுபாஷ் சாத்திடம்தான் இருந்துள்ளது என்பதும், அவர் "இறந்து' போன சமயத்தில் மைய அரசில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது காணாமல் போன கோப்புகளை லிபரான் கமிசனிடம் கொடுப்பதற்காக சுபாஷ் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது, உ.பி. மாநில அரசு. இது உண்மையென்றால், அந்தக்கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே "தொலைந்து'போய்விட்டன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உ.பி. மாநில அரசோ, லிபரான் கமிசன் தனது அறிக்கையை அளித்த பிறகுதான் கோப்புகள் தொலைந்துபோன விவகாரத்தை வெளியே சொல்லுகிறது. இதனை இவ்வளவுகால தாமதமாக சொல்ல வேண்டிய பின்னணி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.

லிபரான் கமிசனோ தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளை அந்தச் சமயத்தில் சுபாஷ் சாத்தை எடுத்துவரச் சொல்லி எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனக்கூறுகிறது. சுபாஷ் சாத் ஓடும் ரயிலில் இருந்து "விழுந்த' இடத்தைப் புலனாய்வு செய்த டெல்லி போலீசாரோ, "அந்த இடத்தில் சில வெற்றுத் தாள்களையும், அடையாள அட்டைகளையும் தவிர வேறெதுவும் இல்லை'' எனக் கூறிவிட்டனர். சுபாஷ்சாத்தின் தந்தை பிர் பஹ்ன் சாத், தனது மகன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றபொழுது தன்னுடன் இத்துணை கோப்புகளை எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார். பாபர்மசூதி வளாகத்தினுள் ராமபிரான் ஜெனிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அகழ்வராய்ச்சி நடத்தியதைப் போல, இந்தக்"காணாமல்' போன கோப்புகளைக் கண்டுபிடிக்கவும் அகழ்வராய்ச்சி நடத்த வேண்டியிருக்குமோ?

பாபர் மசூதி பிரச்சினையில் முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இந்து மதவெறி பாசிசக் கும்பல் குறியாக இருந்து வருவதைப் பாமரர்கள் கூடப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம், தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் மட்டுமின்றி, சி.பி.ஐ.,போலீசு, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புகளும் கூட இந்தவழக்கை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்க வேண்டிய பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் பொழுதுதான், மதச்சார்பற்ற இந்திய அரசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும். மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக மட்டுமல்ல; இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடினால் மட்டுமே பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிபாசிசக் கும்பலைத் தண்டிக்க முடியும்.

· செல்வம்

Thursday, 23 September 2010

கொலைக்கள குவாண்டனாமோ!

Source: http://www.muslimleaguetn.com/news.asp?id=1862
Thursday, September 16, 2010
கொலைக்களம் குவாண்டனாமோ! - வெ. ஜீவகிரிதரன்

அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’’ - பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம். ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.

அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா.

ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’’ தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. (F. B. I) இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493 - எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434 பேர் இதற்கு பதிலனுப்பினர்.

தங்கள் பதிலில், தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதிகாரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பி.ஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது.

2004 - டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.

சித்ரவதைகள்:

இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பது. அவை யாவை?

1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)

2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.

3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.

4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.

5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.

6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54 - நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).

7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.

8. அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)

9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் "லேப் டான்ஸ்’’ எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.

10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-

11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.

12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).

13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.

14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.

15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.

இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.

அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34 - 52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?

1.
ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.

2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.

3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.

4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.

5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.

6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.

7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.

8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.

இந்த உத்திகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது.

அக்கிரமங்கள் மூடி மறைப்பு!:

இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.

1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.

2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.

3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.

இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கொலைக் களமே நீதிமன்றம்; கொலைகாரர்களே நீதிபதிகள்!!:

2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.

இன்றுவரை குவாண்டனாமோ சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை 13.8.2010ல் தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான். இங்கு கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!!


- நன்றி பிறைமேடை செப்டம்பர் - 1-15

Wednesday, 22 September 2010

அமெரிக்க எண்ணெய் வெறி

Source: http://www.muslimleaguetn.com/news.asp?id=1863

Thursday, September 16, 2010
அமெரிக்காவின் எண்ணெய் வெறி ஆப்கனும் ஈராக்கும் களப் பலி! - வெ. ஜீவகிரிதரன்

உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பி.பி.சி., கடந்த 29-1-2001 அன்று ஒரு சிறிய செய்தியினை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி இந்த உலகின் மிகப் பெரிய அழிவுகளுக்கு கட்டியம் கூறும் செய்தி என்பது தெரியாமலே போனது. சுமார் 5 லட்சம் மக்கள் உயிர் உடமைகளை இழக்கவும், அடிமைப்பட்டுப் போகவும் காரணமாக அச் செய்தி இருக்கப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை.

2001-ல் அமெரிக்க அதிபர் புஷ் அமைத்த அமைச்சரவை பற்றிய செய்தி அது. அமெரிக்க செனட்டின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகள்; பெரும் பணக்காரர்கள். அதிபர் புஷ் பெட்ரோலிய கம்பெனிகள் மூலம் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர். துணை அதிபர் டிக் செனாய் ஹாரிபர்ட்டன்’’ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து சுமார் 5 முதல் 6 கோடி டாலர்கள் ஈட்டியவர். டாம் பிரௌன்’’ என்ற எண்ணெய் கம்பெனியில் அதிபராக இருந்த டொனால்ட் இவான்ஸ் - பல கோடிகளின் அதிபதி - வர்த்தகத் துறை அமைச்சர். தேசிய பாதுகாப்பு செயலர் கொண்டலிசாரைஸ் ஹசெவ்ரான்’ என்ற புகழ் பெற்ற எண்ணெய் கம்பெனியின் இயக்குநர். இவ்வாறு "புஷ் அரசாங்கம் - எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்’’ ஆக உள்ளது என்று அச் செய்தியில் விமர்சிக்கப்பட்டது.

ஒட்டு மொத்த அமைச்சர்களும் - துணை அதிபர், அதிபர் உட்பட - பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு பல இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்களின் அரசு என்ன செய்யும் என யூகிக்க முடியாதா என்ன?

உலகின் எந்த மூலையில் பெட்ரோல் வளம் இருந்தாலும் அங்கே படையெடுப்பதுதானே இவர்களின் குறிக்கோள்! படையெடுப்புக்கு ஏதேனும் ஒரு காரணத்தை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். அப்படி சொல்லப்பட்ட வெற்றுக் காரணம்தான் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’’ - என்பது.

உலகிலேயே அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் இராக்கும் ஒன்று. அதேபோல் பல நாடுகளுக்கும் பெட்ரோலியத்தை குழாய்கள் வழியாக கொண்டு செல்லும் முக்கிய கேந்திரமாகவும், பெட்ரோலிய வளம் கொண்ட நாடாகவும் உள்ளது ஆப்கனிஸ்தான். இந்த இரு நாடுகள் மீதான பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’’ செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? முதலில் ஆப்கனிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை காண்போம்.


கேஸ்பியன் கடல் எண்ணெக் குழாய் திட்டம்:

ஆப்கன் வழியாக குழாய்கள் பதித்து துர்க்மேனிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயுவை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்ல "கேஸ்பியன் கடல் எண்ணெய்க் குழாய் திட்டம்’’ - உருவாக்கப்பட்டது. இத் திட்டத்திலே "அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், பாகிஸ்தானும் மிகுந்த ஆர்வம் காட்டியதாக’’ 29-12-1997-ல் பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழாய் திட்டத்தை நிர்மாணிக்க "சென்ட்கேஸ்’’ என்ற அமைப்பு 1997-ல் உருவாக்கப்பட்டது. சென்ட்கேஸ் அமைப்பின் முக்கிய பங்குதாரராக சுமார் 46.5 சதவிகிதம் பங்குகளை கொண்ட "யூனோகால்’ என்ற அமெரிக்க எண்ணெய் கம்பெனி இருந்தது. இந்த கம்பெனியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் ரைஸ். இவர் அதிபர் புஷ் நிர்வாகத்தில் வான்படை செயலராக பதவி வகித்தவர். அதற்கு முன்னர் அமெரிக்க ராணுவத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்..


அமெரிக்க ஆதரவு அரசு:

இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதும் காட்டாமல் துணை நிற்க வேண்டும் என்பதற்காக தாலிபான் அமைப்புக்கு இந்த யூனோகால் நிறுவனம் வருடம் ஒன்றுக்கு சுமார் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொடுக்க முன் வந்துள்ளது. 1998-ல் அமெரிக்கா வெளிப்படையாக தன் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தது. ஆப்கனில் அமெரிக்க ஆதரவு அரசு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 12-2-1998-ல் நடைபெற்ற "அமெரிக்க அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கான கமிட்டியின்’’ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி யிடப்பட்டது. அது- "யூனோகால் - எரிவாயு குழாய் திட்டம் உட்பட பல்வேறு எண்ணெய் குழாய் திட்டங்களை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது. ஆனால், குழாய் வரும் வழியில் உள்ள நாடான ஆப்கனிஸ்தானில் தற்போதுள்ள அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. ஆனால் குழாய் திட்டத்தை ஆதரிக்கிறோம்’’.

"இந்த குழாய் திட்டத்துக்கான சாத்தியப்பட்ட ஒரே வழி ஆப்கனிஸ்தான் வழியாக வருவதுதான். ஆனால், ஆப்கனிஸ்தானில் நமக்கு சவால்கள் காத்திருக்கின்றன. சர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ளும் ஒரு அரசு ஆப்கனில் அமையும் வரை 'சென்ட்கேஸ்’ நிறுவனம் கட்டுமானங்களை துவக்க முடியாது’’ - என குறிப்பாக ஆப்கனில் உள்ள அரசை நீக்கிவிட்டு புதிய அமெரிக்க ஆதரவு - பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது.

1998 நவம்பர் 3-ம் தேதி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. "அமெரிக்க எண்ணெய் நிறுவனமான 'யூனோகால்’ நிதியுதவிடன் ஆப்கனில் ஒரு பயிற்சித் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 3-11-98 அன்று அமெரிக்காவின் ராணுவம் 80-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஆப்கனிஸ்தான் மீதும் சூடான் மீதும் ஏவியது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் யூனோகால் நடத்தி வந்த பயிற்சி திட்டம் மூடப்பட்டது. இந்த ’’யூனோகால்’’ நிறுவனம்தான் துர்க்மேனிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானுக்கு, ஆப்கன் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனம்’’ . இதுதான் அந்த செய்தி.

அமெரிக்கா தன் தாக்குதலை 1998லேயே தொடங்கி விட்டது. தொடர்ந்து 2-1-1999 அன்று ஆப்கனில் உசாமா பின்லேடனின் அமைப்பினர் தங்கியுள்ள முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி குண்டு மழை பொழிந்தது. 15-3-2001-ல் ரஷ்யா, அமெரிக்கா ஈரானுடன் இந்தியாவும் இணைந்து கொண்டது. ஆப்கனின் தாலிபான் அரசை வீழ்த்துவதுதான் இந்த நாடுகளின் உடனடி திட்டம். இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டதாலேயே ராணுவ நடவடிக்கைகளின் முக்கிய கேந்திரமான பாமியன் நகரை கைப்பற்ற முடிந்தது என டெல்லி ராணுவ வட்டாரங்கள் பெருமிதப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஊடகங்கள் வெளிப்படுத்திய உண்மை

2001 செப்டம்பர் 3-ம் தேதியே பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மத்திய கிழக்கு பகுதிக்கு, இங்கிலாந்தின் ராணுவமும், போர்க் கப்பல்களும் விரைவதாக செய்தி சொன்னது. 24 போர்க் கப்பல்கள், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள், "எச்.எம்.எஸ். இல்லஸ்ரியஸ்’’ என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலின் தலைமையிலே இங்கிலாந்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகக்கு விரைகிறது.

"கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக மிகப் பெரும் பேரழிவு நடவடிக்கைகளை இந்த ஆபரேஷன் மேற்கொள்ளும். இதனால் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் அரசுக்கு செலவாகும்’’ என அச் செய்தி கூறியது. சரியாக ஒரு வாரத்தில் (செப்டம்பர் 11) இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்கா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’’ - பிரகடனம் செய்தது. உடனடியாக ஆப்கனில் நுழைந்த அமெரிக்க ராணுவம் தாலிபன் அரசை தூக்கி எறிந்தது. 'சர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ளும் அரசை’ நிறுவியது. இடைக்கால அரசு ஹமீத் கார்சாய் தலைமையிலே நிறுவப்பட்டது. இந்த ஹமீத் கர்சாய் 'யூனோகால்’ எண்ணெய் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர். 'யூனோகால்’’ சார்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த 'யூனோகால்’ நிறுவனம்தான் ஆப்கனில் எரிவாயு குழாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தவர்கள். இப்போது அந்த நிறுவனத்தின் ஆலோசகரே ஆப்கனின் அதிபராக அமர்த்தப்பட்டு விட்டார். ஆப்கனில் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களை பதிக்கும் அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரசை தூக்கி எறிந்து விட்டு, அமெரிக்காவின் பொம்மை அரசை நிறுவுவதற்காகவே ஆப்கன் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் நடந்தது என்பதற்கு இதைவிட சான்று ஏதும் தேவையா? ஆப்கன் ஆக்கிரமிப்பு 12-2-1998லேயே திட்டமிடப்பட்டு, சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. "11-9-2001 இரட்டை கோபுர தாக்குதலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்’’ வெறும் பம்மாத்துகளே என்பதை உலகமே அறியும்.


முன்னரே திட்டமிடப்பட்டது:

அடுத்ததாக ஈராக் ஆக்கிரமிப்பு. இரட்டை கோபுர தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஈராக் ஆக்கிரமிப்பு போரை அமெரிக்கா திட்டமிட்டு விட்டது. 2001 ஏப்ரலில் நடந்த அதிபர் புஷ்ஷின் அமைச்சரவை, "சர்வதேச சந்தையிலே எண்ணெய் வரத்து - நிலைகுலைவதற்கு ஈராக் எண்ணெய் சப்ளை காரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. எனவே, ராணுவ நடவடிக்கை உடனடித்தேவை’’ - என தீர்மானித்தது. இதை சண்டே ஹெரால்டு என்னும் இங்கிலாந்து செய்திப் பத்திரிகை 6-10-2002-ல் அம்பலப்படுத்தியது.

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" பேரழிவு ஆயுதங்கள், இரட்டை கோபுர தாக்குதல், ஐ.நா.வின் பேரழிவு ஆயுத ஆய்வு, இராக்கிய மக்களின் மனித உரிமை மீறல் - இவை எதுவும் ஈராக் மீதான போருக்கு காரணமே அல்ல. புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்த எண்ணெய் கம்பெனிகள் மற்றும் புஷ்ஷின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எண்ணெய் கம்பெனி அதிபர்கள் விருப்பத்துக்கு இணங்கவே ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் துவங்கியது. 2002 செப்டம்பர் 12-ல் அமெரிக்க அதிபர் புஷ், ஐ.நா.வுக்கு சொன்னது, "ஈராக் தன்னிடமுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிக்கவோ, அகற்றவோ, வெளிப்படையாக எடுத்துக் காட்டவோ மறுத்தால் அமெரிக்கா தாக்கியே தீரும்’’. ஆனால் ஈராக் தன்னிடம் அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தது.

1998-ல் ஐ.நா.வின் ஆயுத ஆய்வுக்குழுவில் பணியாற்றி பின்னர் பதவி விலகிய ஸ்காட் ரிட்டர் 2002 செப்டம்பர் 8-ம் தேதியே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம்கூட உண்மையே இல்லை என்றும், குறிப்பாக ஈராக், இரட்டை கோபுரங்களை தகர்த்த சக்திகளுக்கு எதிராக நிற்கிறது என்றும், ஈராக்கிய பாராளுமன்றத்திலே உரை நிகழ்த்தினார்.

ஆனாலும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டு சேர்ந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை தொடர முடிவு செய்து விட்டன. மிகப் பெரிய எண்ணெய் கம்பெனிகளும், ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளும் இதன் பின்புலமாக நின்றனர். காரணம் ஈராக் உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால், அதை முழுக்க முழுக்க தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான். மேலும் போர் என ஆரம்பித்து விட்டால், அண்டை நாடுகள் மற்றும் அந்த பிராந்தியம் முழுவதமே போர் பதற்றம் நிலவும். அதனால் பல இலட்சம் கோடிகளில் ஆயுத வியாபாரமும் செழிப்பாக நடக்கும் என்பதுதான் இரண்டாவது காரணம்.

அமெரிக்காவின் எரிசக்தி துறை 1999-ல் ஒரு மதிப்பீட்டை செய்தது. "ஈராக், தன்வசம் 112 பில்லியன் ( 1 பில்லியன் என்பது 100 கோடி) பேரல்கள் பெட்ரோலும், 110 டிரில்லியன் (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) கனஅடி எரிவாயுவும் வைத்துள்ளது. உலக அளவிலே எண்ணெய் வளத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஈராக் சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டிலே ஒரு தீர்மானகரமான சக்தி’’ என அறிக்கை அளித்தது.

"அதிபர் புஷ், ஈராக் சம்பந்தமாக என்ன முடிவு செய்தாலும் சரியே. அது அமெரிக்காவின் எரிசக்தி துறையை பிரகாசமாக மாற்றுவதாகவே இருக்கும்’’ என்றார் - வௌளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் ஆரி பிளசர்.

அமெரிக்க இராணுவப் போரின் போது அழிக்கப்படும் ஆபத்து உள்ள எண்ணெய் கிணறுகளை முதலில் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என வெளியுறவுக்கான கவுன்சில் அமெரிக்க அரசுக்கு டிசம்பர் 2002-ல் பரிந்துரை செய்தது.

2001 ஜனவரியில் அதிபர் புஷ் பதவியேற்ற 10 நாட்களுக்குள்ளாகவே ஈராக்கின் சதாம் உசேன் அரசை தூக்கியெறிவதற்கான வழிவகைகளை வகுக்குமாறு தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார்.

"சதாம் வீழ்த்தப்பட்ட பிறகான ஈராக்’’ என்று பெயரிடப்பட்ட திட்டம் 2001 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் "ஈராக் எண்ணெய் வயல்களுக்கான ஒப்பந்ததாரர்கள் பட்டியல்’’ ஈராக்கில் வளமான எண்ணெய் வயல்கள் இருக்கும் வரைபடத்தை உள்ளடக்கியதாக 5-3-2001-ல் தயாரிக்கப்பட்டது.


சண்டே ஹெரால்டு செய்தி:

'சண்டே ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் 6-10-2002-ல் "மேற்குலகின் எண்ணெய்க்கான போர்’’ என்ற தலைப்பில் "செப்டம்பர் 11-க்கு முன்னமே ஈராக்கின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ஈராக் மீதான தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது’’ என எழுதியது.

29-1-2001 பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட "எண்ணெயும் புஷ் நிர்வாகமும்’’ என்ற செய்தியில், "இதற்கு முன்பிருந்த அரபுகளுக்கும் புஷ் தலைமையிலான அமைச்சரவைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இவர்களில் பெரும்பான்மையினர் எண்ணெய் கம்பெனிகளுடன் வியாபார தொடர்புள்ளவர்கள்’’ - எனக் கூறியது.

அதே பி.பி.சி. 18-01-2001-ல் "புஷ் எண்ணெய் வர்த்தகத்தில் மிக நெருக்கமான நீண்ட கால உறவை வைத்துள்ளனர். அவர் மட்டுமல்ல. அவர் அமைச்சரவையில் பலர் அப்படித்தான் உள்ளனர். இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் நிறுவனங்கள் மறைமுகமாக பல்லாயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளன’’ என செய்தி வெளியிட்டது.

இந்த பின்னணியிலேதான் அதிபர் புஷ், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிர்க்கொல்லி, நச்சுக்கிருமி ஆயுதங்கள் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஈராக் ஒப்படைக்காவிடில் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் சர்வதேச சட்டங்கள், விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு ஆக்கிரமிப்புப் போருக்கு தயாராகின.

அடாவடி நடவடிக்கை:

இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் இருவரும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேய்ரை எச்சரித்தனர்.

ஈராக்கின் அமைச்சரவையிலேயே தனக்கு உளவு சொல்லும் ஒருவரை அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. வைத்திருந்தது. அவரை தொடர்பு கொண்டு சி.ஐ.ஏ. உளவுத் தகவல் சேகரித்தது. அத்துடன் ஈராக் வந்திறங்கிய சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈராக்கின் "பேரழிவு ஆயுதங்கள்’’ குறித்த தகவல்களை மும்முரமாக சேகரித்தனர். இறுதியில் சி.ஐ.ஏ. வின் தலைவர் ஜார்ஜ் டெனட், 'ஈராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை' யென அமெரிக்க அரசுக்கு தகவல் அளித்தார். சி.ஐ.ஏ.வும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து ஈராக் மேற்குலகிற்கு ஒரு பயமுறுத்தல் அல்ல என்றும், அதனிடம் எவ்வித பேரழிவு ஆயுதமும் இல்லை என்றும், அதி காரப் பூர்வமாக அறிவித்தன. மேலும், ஈராக் மீது தாக்குதல் தொடுப்பது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு கேடாக முடியும் எனவும் சி.ஐ.ஏ. எச்சரித்தது.

ஆனால், துணை அதிபர் டிக்செனாய் மற்றும் ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இருவரும் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தை ஓரங்கட்டினர். ராணுவத்தின் துணை அமைச்சர் பால் உல்ப்ஹோவிட்ஸ் மேற்பார்வையில் டக்ளஸ்பைத் தலைமையில் சிறப்பு திட்டக் குழுவை உருவாக்கினர். இந்த குழு உளவுத் தகவல்கள் என்ற பெயரில் தாக்குதலுக்கு சாதகமான விஷயங்களை செனட்டுக்கும், அமைச்சரவைக்கும் அளித்தது. சில தகவல்களை வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசிய விட்டது. இதன் மூலம் தாக்குதல் தொடுக்க வேண்டியது நியாயமே என்ற பொதுக் கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது.

கடைசியாக 20-03-2003-ல் அமெரிக்க ராணுவம் அதிகாரப் பூர்வமான ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. 1-5-2003-ல் சதாம் அரசு தூக்கியெறியப்பட்டு ஈராக் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதாக அறிவித்தது. இராக்கின் அதிகாரப்பூர்வ ராணுவமும் கலைக்கப்பட்டது. சதாமின் மகன்கள் உத்தய் மற்றும் குசாய் இருவரும் 22-6-03-ல் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் உசேன் 14-2-2003-ல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வருடம் தேடியும் அமெரிக்கா சொன்ன பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே ஈராக்கில் இல்லை என்பதால் அவற்றை தேடும் திட்டம் 24-1-2004-ல் நிறுத்தப்பட்டது.

அடுத்த குறி ஈரான்:

உலகின் இயற்கை எரிவாயுவில் மொத்தம் 40 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஈரான்- அமெரிக்காவின் அடுத்த குறி. ஈரான் பேரழிவு ஆயுதமான அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா பிலாக்கனம் பாட ஆரம்பித்து விட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் ஏற்கனவே குவித்து வைத்துள்ளது. ஈரானின் இருபுற எல்லைகளான ஈராக்கும், ஆப்கனும் தற்போது அமெரிக்காவின் பிடியில்.

இன்னுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கூடிய விரை வில் ஒரு "பயங்கர வாத எதிர்ப்பு போர்’’ அல்லது "பேரழிவு அணு ஆயுத எதிர்ப்பு போர்’’ என அமெரிக்கா பரணி பாடும். கொலைக்கார கூட்டத்தின் குரல் வளையை நெறிக்கும் வரை அதன் வெறியாட்டம் ஓயாது.

என்ன செய்யப் போகிறோம்???


- நன்றி பிறைமேடை - செப்டம்பர் - 16-31

Monday, 13 September 2010

பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்: தமிழக கடலோரப்பகுதி வளர்ச்சி பெற தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படுமா?

பக்கிங்காம் கால்வாயை சென்னை திருவான்மியூரில் இருந்து, தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும். பக்கிங்காம் கால்வாய், இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரம் காக்கிநாடாவில் (ஆந்திரா) இருந்து, தெற்கே மரக்காணம் (புதுச்சேரி) வரை அமைந்துள்ளது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட இக்கால்வாய் மூலம், கட்டுமானம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் இடையே கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளுக்கு முன், இக்கால்வாய் நீர்வற்றி தூர்ந்து போய், இக்கடலோர நீர்வழிப் பாதை முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. மூன்று காரணங்களால் இந்நீர் வழிப்பாதை தூர்ந்து போனது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதாலும், அதனால் எண்ணூர் மற்றும் கோவளம் கிரீக் (கடல் நீர்நிலத்தில் உட்புகும் ஓடைகள்) மூலம் கால்வாய்க்கு வந்த நீர் குன்றியது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதால், இந்நீர் வழிப்பாதைக்கு மேற்கு பகுதியிலிருந்து கிழக்கே, வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகள் மற்றும் ஓடைகள் அதிகமாக மண்ணைக் கொண்டு வந்து கொட்டி, இக்கால்வாய் மண் செரிமானம் அடைந்தது.

* கடலோரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சித் திட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு ஆகியவை. ஆனால், பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே மரக்காணம் வரை புதுப்பிப்பதோடு, இக்கால்வாயை கடற்கரையோரமாக மரக்காணத்தில் (புதுச்சேரி) இருந்து, காரைக்கால், வேளாங்கண்ணி, வேதாரண்யம், ராஜாமடம், மணமேல்குடி, ராமநாதபுரம் மற்றும் வைகை கடல்கரையோரமாக தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அதற்கான நிலவியல் சாத்தியங்கள் இருப்பதாகவும், செயற்கைக் கோள்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் காண்பிக்கின்றன.

அப்படி அமைப்பதற்கு ஏதுவாக, வடக்கே மரக்காணத்திலிருந்து தெற்கே தூத்துக்குடி வரை, கடந்த கால கடல்மட்ட மாறுதல்களால் உருவாக்கப்பட்ட நீளமான கால்வாய் போன்ற களிமண்ணால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளங்களும், அப்பள்ளங்களின் இருபுறங்களிலும் நீளமான மணல்மேடுகளும் உள்ளன. இப்பள்ளங்களை ஆராய்ந்து, அதன் மூலம் தக்க பாதையைக் கண்டறிந்து, அதன் வழியே பக்கிங்காம் கால்வாயை தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அவ்வாறு நீட்டிப்பதற்கு, கடல்நீர் நிலத்தில் உட்புகும் ஓடைகள் (கிரீக்) மூலம், கடல் நீரை உள்ளே கொண்டு வந்து, நீரோட்டத்தை உருவாக்கலாம்.

உதாரணமாக, வேதாரண்யம் பகுதியில் கிரீக் (1), (2) மற்றும் (3) வழியாக கடல்நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு வரலாம். இந்நீரை வேதாரண்ய பகுதியை பொருத்தவரை, இரண்டு பாதையில் பக்கிங்காம் கால்வாயை தோண்டி ஓடச் செய்யலாம். ஒன்று: தில்லை விளாகம் (4) வழி, மற்றொன்று: வேதாரண்யம் கடலோர நீர்நிலை வழி (5). அப்படி கொண்டு செல்வதால், தில்லைவிளாகப் பகுதியில் (4) இக்கால்வாய் நீரை தில்லைவளாகம் பகுதியில் உள்ள வறண்ட சதுப்பு நிலத்தில் பரப்பி, அதன் மூலம் மீன்வளர்ப்பு, மீன் உணவு வகை தயாரித்தல், உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை உருவாக்க முடியும்.

அதுபோலவே வேதாரண்யம் கடலோரத்தில், தற்போது மண் செரிமானம் அடைந்து, மறைந்து போய் கொண்டிருக்கும் கடலோர நீர்நிலை (5) மூலம், பக்கிங்காம் கால்வாயின் மறுகிளையை கொண்டு சென்று, மண் செரிமானத்தால் மறைந்து விட்ட கடலோர இந்நீர் நிலையை மறுபடியும் உருவாக்கி, கடல்சார் வேதியியல் பொருட்கள், மீன்வளர்ப்பு, மீன் உணவு தயார் செய்தல், புன்னைக்காடுகள் வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்தலாம். இதேபோன்று இக்கால்வாயை நீட்டிப்பதன் மூலம், தமிழகக் கடலோரத்தில் பல இடங்களில், புன்னைக் காடுகளை உருவாக்கலாம்.

உதாரணத்திற்கு, ராஜாமடம் பகுதியில் (6) கடலில் கலக்கும் நதிநீரை கால்வாய்க்கு மேற்கே தேக்கி, (7) கடல்நீரை டர்பைன் மூலம் (8) அலை அலையாக நதிகளின் முகத்துவாரத்தில் செலுத்தி கடல்நீரும், நதிநீரும் கலக்கும் தன்மையை உருவாக்கி, பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளில் காணப்படும் நதிகளின் கழிமுகத்தில் புன்னைக் காடுகளை உருவாக்க முடியும். இதுபோன்ற புன்னைக் காடுகளை உருவாக்குவதன் மூலம், சுனாமி மற்றும் புயல் அலை எழும்பும் காலங்களில், கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிறுத்த உதவும்.

இதுபோன்று பக்கிங்காம் கால்வாயை மேற்கூறியவாறு நீட்டிப்பதால், பல அரிய நன்மைகள் உள்ளன. அவை

* கேரளா மாநிலத்தில் உள்ளது போல, கடலோர நீர்வழிப் பாதையின் மூலம் போக்குவரத்து.

* சீர்காழி, சிதம்பரம், நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், காரைக்கால், திருநள்ளார், தேவிபட்டினம், ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களை இணைத்தல்.

* கடலோரப் பகுதிகளில், பல சிறு துறைமுகங்களை அமைத்தல்.

* கால்வாயின் இருமருங்கிலும் உள்ள சதுப்பு நிலத்தில், சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத மீன் வளர்ப்பு மற்றும் உப்பளங்கள்.

* புன்னைக் காடுகள் வளர்த்தல் போன்ற, பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும்.

உண்மையிலேயே தமிழகக் கடலோர அமைப்பு, இயற்கை நமக்கு தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆகவே, பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை உருவாக்க முடியும். இதற்கு செயற்கைக்கோள் தொழில் நுட்பம் சார் நிலவியல் ஆய்வு தேவை.


- சோம. இராமசாமி (துணைவேந்தர், காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்)

"நிறைய சம்பாதித்தும் சந்தோஷம் இல்லை"

"நிறைய சம்பாதித்தும் சந்தோஷம் இல்லை" - ஆய்வு


அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

“பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

இருபது வயது குறைய - இதோ ஒரு வழி

இருபது வயது குறைய - இதோ ஒரு வழி


தினசரி அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் வயதானவர்களின் மூளை செயல்பாடு 20 ஆண்டுகள் வரை இளமையாகும் என அமெரிக்க ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. உடற்பயி ற்சிகளுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

59 முதல் 80 வயது வரை யுள்ள 65 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். அவர்களை தொட ர்ந்து ஒரு மாதத் துக்கு தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய கேட்டுக் கொள்ளப் பட்டது. அதற்கு முன்ன தாக, அவர்களது மூளை இயக்கத்தை சோதனை செய்து நிபுணர்கள் குறித்து வைத்துக் கொண்டனர். 18 முதல் 35 வயது வரையுள்ள 35 பேரை தேர்வு செய்து அவர்களின் உடற் பயிற்சி வழக்கம், மூளையின் செயல் பாடுகளை குறித்துக் கொண்டனர்.

ஒரு மாதம் கழித்து, கடுமை யான உடற் பயிற்சி செய்து வந்த இளைஞர்களின் மூளை செயல் பாட் டையும், தினசரி நடை பயிற்சி செய்த வயதானவர்களின் மூளை இயக்கத்தையும் சோதித்த னர்.

கடுமையான உடற் பயிற்சிகளை விட நடை பயிற்சியால் மூளையின் முக்கிய நரம்பு கள் சுறுசுறுப்படைந்தது தெரிய வந்தது. நடைபயிற்சி செய்தவர்களின் உடல் சுறுசுறுப்பு, வாழ்க்கைத்தரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இருந்தது. எனவே, நடுத்தர, வயதான வர்களுக்கு நடைபயிற்சி சிறந்த பலன் அளிக்கும் என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர்

Saturday, 11 September 2010

Photos: Eid Al Fitr 2010 - Around the world

Eid Al Fitr 2010 - Around the world
Prayer and its celebration

1. New moon: A crescent - marking the start of a new lunar (Shawwal) month and the symbol of Islam - is seen in the sky from Silver Spring, in the U.S. state of Maryland

New moon: A crescent - marking the start of a new lunar month and the symbol of Islam - is seen in the sky from Silver Spring, in the U.S. state of Maryland


2. All pray to Mecca: Tens of thousands of Muslim pilgrims inside the Grand Mosque in Saudi Arabia

All pray to to Mecca: Tens of thousands of Muslim pilgrims inside the Grand Mosque in Saudi Arabia


3. Happy: Palestinian look joyful as they gather outside the Al-Aqsa Mosque in Jerusalem's Old City

Happy: Palestinian look joyful as they gather outside the Al-Aqsa Mosque in Jerusalem's Old City


4. Packed: Muslims offer Eid al-Fitr prayers in front of the Taj Mahal in India

Packed: Muslims offer Eid al-Fitr prayers in front of the Taj Mahal in northern India


5. Devout: Worshippers in neat rows fill every part of the National Mosque in Dhaka, Bangladesh

Devout: Worshippers in neat rows fill every part of the National Mosque in Dhaka, Bangladesh


6. The place to be: Hundreds of thousands fill a field for Eid prayer in Bhopal, India

The place to be: Hundreds of thousands fill a field to say prayers in Bhopal, India


7. Smaller gathering: Pakistani flood victims pray outside the damaged mosque in the village of Sadikiya

Smaller gathering: Pakistani flood victims pray outside the damaged mosque in the village of Sadikiya


8. Mountain of prayers: Tens of thousands of Muslims attend the Eid al-Fitr prayers in Dashaping, near Lanzhou city, China's Western Gansu Province.

Mountain of prayers: Tens of thousands of Muslims attend the Eid al-Fitr prayers in Dashaping, near Lanzhou city, China's Western Gansu Province


9. Covered: Thai Muslim women pray outside Pattani central mosque

Covered: Thai Muslim women pray outside Pattani central mosque


10. In need of shade: Muslims shield their eyes from the sun at the King Hassan II Mosque in Casablanca, Morocco

In need of shade: Muslims shield their eyes from the sun at the King Hassan II Mosque in Casablanca, Morocco


11. Hallowed ground: Indian Muslim devotees offer Eid al-Fitr prayers in the rain amongst the ruins of the Ferozshah Kotla fort and mosque in New Delhi

Hallowed ground: Indian Muslim devotees offer Eid al-Fitr prayers in the rain amongst the ruins of the Ferozshah Kotla fort and mosque in New Delhi


12. Troubled land: Afghan Muslims outside a mosque in Kabul

Troubled land: Afghan Muslims outside a mosque in Kabul


13. Time to eat: Residents of Peshawar, Pakistan enjoy breaking their fast once again eating in daylight

Time to eat: Residents of Peshawar, Pakistan enjoy breaking their fast once again eating in daylight


14. Celebration: A Muslim family in New Delhi, India, buys balloons as they leave after offering prayers

Celebration: A Muslim family in New Delhi, India, buys balloons as they leave after offering prayers