நம்மிடையே மிகவும் பிரபல்யமாக இருக்கின்ற Yahoo! Mail பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை! Yahoo! Mail
இல், பலருக்கு பயனர் கணக்கு(கள்) இல்லாமல் இருக்க வாய்ப்புகளும் இல்லை!!
அந்தளவுக்கு நம்முடன் ஐக்கியமாகி விட்ட Yahoo! Mail லின், பயனர் கணக்கு(களை),
பலவித காரணங்களால் நிர்வகிக்க இயலாத நிலையிலும் இருப்போம்.
அப்படி
நிர்வகிக்க இயலாத / Unused ... Yahoo Mail ID -களை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
முதலில், http://edit.yahoo.com/config/delete_user
என்னும் Link -லிருந்து, அழிக்க வேண்டிய Mail -லின் ID மூலம், அக்கணக்கில் நுழைந்ததும் கீழுள்ள படத்தில் உள்ளது போல் திறக்கும் Window -வின்
அடிப்பாகத்தில்,
Are you sure you want to terminate your Yahoo! Account? என்று
கேட்கப்பட்டு இருப்பதில் மீண்டும் Password -ஐ உள்ளீடு செய்து, மற்றும்
அங்கு ஏற்கெனவே உள்ள Verification Code -ஐயும் சரியாக உள்ளீடு செய்துவிட்டு
'Terminate this Account' என்பதில் 'YES' கொடுக்கவும்.
இப்பொழுது, இந்த கணக்கு Yahoo! வினால் தற்காலிகமாக Deactivate செய்யப்பட்டு விடும். மேலும், இந்த கணக்கு சம்பந்தப்பட்ட (அதாவது Yahoo Profile, Mail, Address Book etc.. போன்ற) அனைத்து விவரங்(service)களையும் 90 நாட்களுக்கு Yahoo! தன் வசம், தற்காலிகமாகவும், வைத்திருக்கும்.
இந்த 90 நாட்களுக்குள் இக்கணக்கை, பயனாளருக்கு தேவைப்படும் பட்சத்தில், மீண்டும் Re-activate செய்து கொள்ளவும் முடியும்.
இருப்பினும், இந்த 90 நாட்கள் முடியவும், இப்பயனர் கணக்கு மற்றும் அது தொடர்பான அனைத்து விவரங்(service)களும் Yahoo! விலிருந்து நிரந்தரமாக அழிக்கப்பட்டு விடும்.
No comments:
Post a Comment