நம்ம ஊரு தாய்க்குலங்கள் கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போயிட்டாலும், இந்த கடவுள், அந்த கடவுள்னு பல டிசைன் களில் கலர் ஏற்றி இ மெயில்-ல அனுப்பிட்டே இருக்காங்க! இதை உடனே பார்வர்ட் பண்ணுனா நாளைக்கு காலைல பதினொரு மணிக்கு உன் வாழ்க்கையே மாறிடும், பெரிய அதிசயம் நடக்கும், அப்படி பண்ணலைன்னா
"இனிமே நீ என் நண்பன் இல்லை" (இப்போ மட்டும் நான் உன் நண்பன்-ன்னு யாரு சொன்னது?)
"உன் வாழ்க்கையில பல கெட்டசம்பவங்கள் நடக்கும்" (இனிமே வேற நடக்கணுமா?!?)
அடப் பன்னாடைங்களா, இதைத் தானேடா பல வருஷத்துக்கு முன்னாடி நோட்டீஸ் அடிச்சு கொடுத்து, "இதை காபி பண்ணி இன்னும் இருபது பேருக்கு அனுப்பலைன்னா உன் வாழ்க்கை நாசமாப் போய்டும்னு" சொன்னீங்க. இப்போ டெக்னாலஜி முன்னேறினவுடனே இ மெயில் லே டார்ச்சர் கொடுக்கிறீங்களே?
அதெப்படி அடுத்த நாளு பதினொரு மணிக்கு சரியா ஒரு அதிசயம் நடக்கும்? இந்த மெயில் அனுப்பினவுடனே சொர்க்கத்துக்கு ஒரு மெயில் bcc-ல தானா போயிடுமோ? அந்த அதிசயம் இன்னைக்கே நடக்கக் கூடாதா? Come on, expedite the bloody miracle, I say! . நாளைக்கு வரைக்கும் காத்திருக்க நமக்கெல்லாம் பொறுமையில்ல.
இன்னொரு வகை, நமக்கு பல கோடி பணம் அனுப்ப முயலும் புண்ணியகோடிகள்! இந்த யாஹூ-ல எத்தனை தடவை இந்த மாதிரி மெயில் எல்லாம் ஸ்பாம்-ன்னு சொன்னாலும் தினமும் ஒரு பரதேஷி வந்திடுரான்யா! "ஆப்ரிக்கா-ல ஒருத்தர் செத்துப் போயிட்டாரு, (செத்தா புதைக்கவோ, எரிக்கவோ வேண்டியது தானே, என் கிட்ட ஏன் சொல்றே?) அவரு நூறு கோடி டாலர் விட்டுட்டுப் போயிட்டாரு, உங்க ஊரு பேரு, வங்கி கணக்கு எண்ணைச் சொன்னா உங்களுக்கு 60%, எனக்கு 40% போட்டு பிரிச்சிக்கலாம் (அடடா, என்னவொரு தாராளம்! உங்களை விட எனக்கு அதிகமாண்ணே? உங்க தயாள குணத்தை நினைச்சா உடம்பெல்லாம் புல்லரிக்குதுண்ணே! இருந்தாலும் உள்ளூரிலேயே கஷ்டப்படுற ஏழைங்களுக்கு நீங்க கொடுக்கக் கூடாதா? இந்த நாட்டிலே தான் ஓசியில எதைக் கொடுத்தாலும் நாயா அலைவானுங்கன்னு குறி பார்த்து இங்க அனுப்புறீங்களோ?)
இப்படியே பல scams நடந்து மக்கள் சுதாரிச்சிட்டதாலே கடைசியா இப்படி ஒண்ணு "நைஜீரியா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து இது போன்ற மோசடிகளில் சிக்கியவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முடிவு செய்துள்ளன. உடனே நீங்கள் பெயர், முகவரியுடன், ஏமாற்றப்பட்ட தொகையையும் அனுப்பினால் நாங்கள் உடனே அந்த தொகையை உங்களுக்கு அனுப்பி வைப்போம்!" இது எப்படி இருக்கு?
"உங்க மெயில் அட்ரஸ் இங்கிலாந்து லாட்டரி குலுக்கல் முறையில போட்டப்போ, 50 கோடி பிரிட்டிஷ் பவுண்ட் பரிசு உங்களுக்கு கிடைச்சிருக்கு" அப்படின்னு ஒரு மெயில் வரும், பதில் போட்டா முடிஞ்சுது, தபால் செலவுக்கு ஒரு ஆயிரம் பவுண்ட் அனுப்புங்க-ன்னு உடனே பதில் வரும். "என்னண்ணே, இதுக்குப் போயி என் கிட்ட பணம் கேக்கலாமா? அந்த அம்பது கோடில நீங்களே ஒரு ஆயிரத்தை கழிச்சிட்டு தபால்ல அனுப்பிடுங்கன்னு" பதில் போடுங்க, உங்க பக்கமே வர மாட்டாங்க!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னடான்னா, அமெரிக்காவில ஏற்கனவே மாசம் அஞ்சாயிரம் டாலர் சம்பளம் வாங்குற பய புள்ளைகளும் 250$ ஓசியில கிடைக்கிதுன்னு மாசா மாசம் உங்களுக்கு மெயில் அனுப்புறது தான்!
அதுவும் எப்படி, இந்த மெயில் பார்வர்ட் பண்ணினா மைக்ரோசாப்ட் உடனே உங்களுக்கு செக் அனுப்பும்னு ஒரு ஸ்கேன் காபி வேற போட்டு அனுப்புவானுங்க!
மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் ரொம்ப நல்லவரு, நிறைய தான தர்மம் பண்றாரு, அதுக்காக உங்களை மாதிரி வெட்டியா ஒக்காந்து பார்வர்ட் மெயில் அனுப்புரதுக்கெல்லாம் காசு கொடுக்க அவரு என்ன கேனையா? ஏன்டா உங்க மூளை என்ன முட்டியிலேயா இருக்கு?
போங்கய்யா, போய்ப் பொழப்பப் பாருங்க, புள்ளைக் குட்டிகள படிக்க வையிங்க!
1 comment:
//போங்கய்யா, போய்ப் பொழப்பப் பாருங்க, புள்ளைக் குட்டிகள படிக்க வையிங்க//
இதுவும் சரிதான்.
ஆனாலும் நிறையபடித்துப்புட்டாலும் இப்படியேதானிருக்காங்களே என்ன செய்ய.
தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment